Saturday, February 15, 2020

இந்தியாவின் 5 பிரதானமான உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் - PROMINENT FOOD PROCESSING INDUSTRIES



இந்தியாவின் பிரதானமான உணவு பதப்படுத்தும்   நிறுவனங்கள் 

FIVE PROMINENT FOOD PROCESSING INDUSTRIES IN INDIA

இந்தியாவின் உணவு பதப்படுத்தும் தொழில் முக்கியமானவை என ஐந்து தொழில்களை சொல்லலாம். அவை உணவு தானியங்கள் தொடர்பானவை, சர்க்கரை, உணவு எண்ணெய், குளிர்பானங்கள்,  மற்றும் பால் பொருட்கள்.


உணவு பதப்படுத்தும் தொழிலில் இரண்டாம் நிலையில் முக்கியமான சிலவற்றைக் குறிப்பிடுகிறார்கள். அவை பால் பொருட்கள் தொடர்பானவை, பழங்கள் மற்றும் காய்கறிகள் தொடர்பானவை, கோழிப்பண்ணை மற்றும் இறைச்சி பதப்படுத்தும் மீன் உணவுகள், உணவுப்பொருள் சில்லரை வியாபாரம் ஆகியவை.


இந்த தொழில்கள் எல்லாமே பெரும்பாலானவை விவசாய விளை பொருட்களை மதிப்புக் கூடியவைதான். வருங்காலத்தில் உணவு பதப்படுத்தும் தொழிலில் மிகப்பெரிய மாற்றங்கள் வர இருக்கின்றன என்பது தெரிகிறது. ஆன்லைன் வியாபாரம் உலகம் முழுவதும் சூடு பிடித்து வருகிறது. இனி மிகச் சிறிய அளவில் பொருட்களை உற்பத்தி செய்தால் கூட ஆன்லைன் உதை கொண்டு உலகம் முழுவதும் விற்பனை செய்ய முடியும்.


படித்த இளைஞர்கள் பலரும் மாதச்சம்பளத்திற்கு போவதைக்காடிலும் சுய தொழில் செய்வதை பெரிதும் விரும்புகிறார்கள். கிராமங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மத்திய மானில அரசுகளும் இதுபோன்ற உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைக்க பல விதத்திலும் உதவி வருகின்றன.


இந்த காலகட்டத்தில் ஏற்கனவே கொடிகட்டி பறக்கும் நிறுவனங்கள் பற்றி தெரிந்துகொள்வது தொழில் முனைவோருக்கு உதவியாக இருக்கும் என்ற் நான் நம்புகிறேன்.  இந்த கட்டுரையின் முதல் இரண்டு பகுதிகளில் நெஸ்லே இந்தியா, பார்லே இந்தியா, பிரிட்டானியா, கேட்பரி, அமுல், வடிலால்,  எம் டி ஆர் புட்ஸ், ஹால்டிராம்ஸ், கே ஆர் பி எல் லிமிடெட், மதர் டயரி, இந்துஸ்தான் யூனி லீவர்  ஆகிய 11 நிறுவனங்கள் பற்றி பார்த்தோம்.


இந்த கட்டுரையில் 5 முக்கியமான நிறுவனங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். அவை மெக்கெயின் புட்ஸ் இந்தியா, கிஸ்சான் பிரைவேட் லிமிடெட், காட்ரெஜ்,  பெப்சிகோ இந்தியாமற்றும் குவாலிட்டி டெய்ரி இந்தியா.



12. மெக்கெயின்
புட்ஸ் இந்தியா
லிமிடெட்


MCCAIN FOODS(INDIA) PRIVATE LTD


மெக்கெயின் புட்ஸ் பிரைவேட் லிமிடெட் உலக அளவில் செயல்படும் ஒரு வியாபார நிறுவனம். அதன் தலைமை செயல் அலுவலர் மேக்ஸ் கொயூன் என்பவர். 2012ஆம் ஆண்டின் கணக்குப்படி ஏறத்தாழ 50 ஆயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள். 1998ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. ஏறத்தாழ 20 ஆண்டுகளாக இங்கு சுறுசுறுப்பாக இயங்குகிறது மெக்கெயின் நிறுவனம்.

குறிப்பாக வேளாண்மை பொருட்கள் குறித்த வியாபாரத்தை இது செய்து வருகிறது.  1957 ஆம் ஆண்டு ஹேரிசன் மெக்கெயின் மற்றும் வாலஸ் மெக்கெயின் என்ற இரண்டு சகோதரர்களால் வெறும் 30 தொழிலாளர்களை கொண்டு தொடங்கி 1.5 லட்சம் டாலர் வருமானம் பார்த்தார்கள்.

1970 முதல் சுமார் 20 ஆண்டுகளில் புரோன் பீசா மற்றும் காய்கறிகளில் தனது வியாபாரத்தை விரிவாக்கம் செய்து உணவு சந்தையிலும் கால் பதித்தது. 2014ம் ஆண்டில் கனடாவில் விற்பனை அடிப்படையில் 19 ஆவது மிகப்பெரிய கம்பெனியாக உருவெடுத்து. புரோசன் புட் இண்டஸ்ட்ரியில் சர்வதேச அளவில் மிகப் பெரிய கம்பெனிகளில் ஒன்று.  பிரென்ச்பிரைஸ் மற்றும் உருளைக் கிழங்கு தொடர்பான உணவுப் பொருட்களை தயார் செய்வதில் உலகின் மிகப்பெரிய நிறுவனம் இது.

மெக்கெயின் பிரென்ச்பிரைஸ், மெக்கெயின் பிரென்ச் ஸ்மைல்ஸ், மெக்கெயின் ஆலு டிக்கி  ஆகியவை எல்லாம் மிகவும் பிரபலமான பிராண்டுகள். உலகின் தரமிக்க உருளைக்கிழங்கு பதப்படுத்தும் தொழிலகம் குஜராத்தில் மெக்ஸானா மாவட்டத்தில் இது இயங்குகிறது. இதன் பொருட்கள் சுமார் 160 க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை ஆகிறது.  3 பிரெஞ்சு ப்ரைஸ் பாக்கெட்டுகள் உலகத்தில் எந்த மூலையில் விற்பனை ஆனாலும் அதில் ஒன்று மெக்கெயின் தயாரிப்பாக இருக்கும்.

13. கிஸ்சான் - யூனிலீவர் 
லிமிடெட்


KISSAN - HINDUSTAN UNILEVER LIMITED


உள்ளூர்க்காரர்கள் ஸ்பாட்கிஸ்சான் (SPOT KISSAN) என்று சொல்லுகிறார்கள். 1993ல் இதனை புரூக்பாண்ட் கம்பெனி கையகப்படுத்தியது. ஆனால் இன்று அது ஹிந்துஸ்தான் யூனிலீவர் கம்பெனியின் ஒரு அங்கமாக உள்ளது. இந்துஸ்தான் யூனி லீவர் கம்பெனி பிரிட்டிஷ் -ட்ட்ச் கம்பெனி என்பது நமக்கு தெரியும். இந்தியாவில் செட்டில் ஆன வெள்ளைக்காரர்களுக்காக 1935 இல் தொடங்கப்பட்ட கம்பெனி கிஸ்சான். 

ஒரு சமயம் விட்டல் மல்லையா மற்றும் மிச்சல் பிரதர்ஸ்களுக்கும் சொந்தமாக இருந்தது. வெள்ளைக்காரர்கள் அரசாண்ட சமயம் பஞ்சாப் வழியாக ரயில் செல்லும் சமயங்களில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விவசாயிகள் தங்களுடைய பழங்கள் மற்றும் காய்கறிகளை ரயில் பயணம் செய்பவர்களுக்கும் விற்பனை செய்வார்கள். அந்த இடத்தை கிஸ்சான் ஸ்பாட்   என்று சொல்லுவார்கள். அந்த பெயரைத் தான் புரூக் பாண்ட் தனது பிராண்டாக அறிவித்தது. 

கிஸ்சான் பிராண்ட் பொருட்களில் மிகவும் பிரபலமானவை கிஸ்சான் ஜாம்,  கிஸ்சான் டொமேட்டோ கெட்ச்அப் ஆகியவை. ஜாம் மற்றும் கெட்ச்அப் தயாரிப்பில் இந்தியாவில் முதன்மையான இடத்தில் இருப்பது கிஸ்சான் பிராண்ட்.


நமது சேலம் தருமபுரி கிருஷ்ணகிரி பகுதிகளில் விவசாயிகள் தக்காளிக்கென  ஒரு பிராண்ட் உருவாக்கினால் நிச்சயமாக அது சக்கைப்போடு போடும். அறுவடை காலத்தில் டன் கணக்கில் வீணாகப்போகும் தக்காளியை லாபகரமாக பயன்படுத்தலாம்.

அறுவடை காலத்தில் இந்த பகுதிகளில், கட்டுப்படியாகாத விலையினால் அறுவடை  செய்த தங்கம்போன்ற தக்காளியை சாலைகளில் கொட்டிவிட்டு போவதை பலமுறை நான் பார்த்திருக்கிறேன். இதற்கெல்லாம் ஒரே தீர்வு இப்படி கெட்ச்அப் மாதிரி மதிப்பு கூட்டி விற்பதுதான்.

14. காட்ரேஜ் ஒரு
பல்தொழில் செய்யும்
இந்திய கம்பெனி இது

 

GODREJ GROUP OF COMPANY


காட்ரேஜ் ஒரு பல்தொழில் செய்யும் இந்திய கம்பெனி. இது மகாராஷ்டிராவில் மும்பையை தலைமையாகக் கொண்டு செயல்படுகிறது. 1897 ஆம் ஆண்டு காட்ரெஜ் கம்பெனி தொடங்கப்பட்டது. லீவர் தொழில்நுட்பத்தில் பூட்டுகள் தயாரிக்கும் தொழிலை 1897 ஆம் ஆண்டில் தொடங்கியது. காட்ரெஜ் பூட்டுகள் தொங்காத வீடுகளையோ கட்டிடங்களையோ இந்தியாவில் பார்ப்பது கடினம். 1918 ஆம் ஆண்டில் கம்பெனி சோப்புகளை தயாரிக்க தொடங்கியது.  

1955 ஆம் ஆண்டு டைப்ரைட்டர் மெஷின்களை தயாரித்தது.  1971 ல் கால்நடைத் தீவனங்களை தயாரிக்கத் தொடங்கியது. 1961 ல் டிரக்குகள் செய்தது.  1989 ஆம் ஆண்டு பாலி யூரித்தேன்போம் என்னும் நுரை ரப்பரை தயார் செய்தது. 1991இல் உணவுப் பொருட்கள் வியாபாரத்தைத் தொடங்கியது. 


1999 ல் காட்ரேஜ் இன்போடெக் என்ற தகவல் தொழில்நுட்ப கம்பெனியை தொடங்கியது.  2002 ஆம் ஆண்டில் காட்ரெஜ் டீ கம்பெனியையும், 2003 ல் பி ப்பி ஓ’ ஒன்றையும்,  2004 ல் பெஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் ஒன்றையும், 2007 ல் பெரேஜஸ் அண்ட் புட் லிமிடெட் கம்பெனியையும்,  2014 ஆம் ஆண்டில் நான் வெப் பெய்ட்டு மொபைல் பிரவுசிங் என்ற தொழில் நுட்பத்தையும் உருவாக்கி உள்ளது. இப்படி விதவிதமான தொழிற்சாலைகளைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வரும் ஒரே நிறுவனம் உங்கள் காட்ரெஜ் மட்டுமாகத்தான் இருக்கும்.

அது மட்டுமல்ல ஒரு சேவை நிறுவனமாக பள்ளிகள் மற்றும் மருத்துவ சிகிச்சை மையங்களை நடத்தி வருகிறது. இதற்கென பிரத்தியேகமாக சேவை நிறுவனங்களை இது நிறுவியுள்ளது.


15. பெப்ஸிகோ
இந்தியா நிறுவனம்

 

PEPSICO

லேய்ஸ்,  பெப்சி,  குவாக்கர், டிராபிகானா ஆகியவை பெப்ஸிகோ இந்தியாவின் பிரபலமான பிராண்டுகள். பெப்ஸிகோ தனது கணக்கில் எட்டு பிராண்டுகளை வைத்துள்ளது. இந்தியாவில் இருக்கும் உணவு மற்றும் குளிர்பான வியாபார நிறுவனங்களில் முக்கியமானது பெப்ஸிகோ இந்தியா. 1989ஆம் ஆண்டு தொடங்கி, மிகவும் குறுகிய காலத்தில் தனது வியாபாரத்தை நட்த்தி வந்தாலும் குறிப்பிடும்படியான மல்டி நேஷனல் கம்பெனியாக உருவெடுத்துள்ளது.  இது தனது பேவரேஜஸ் மற்றும் ஸ்நேக்ஸ்சுக்கான பொருட்களை உற்பத்தி செய்வதற்காக இந்தியாவில் 62 இடங்களில் பேட்டரிகளை அமைத்துள்ளது.

பல்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டு நீர்சேமிப்பை செய்து தனது தொழில் கூடங்களில் பயன்படுத்தும் நீரின் அளவை வெகுவாக குறைந்துள்ளது, என்றும் அதற்கான விருதுகளும் இதற்கு வழங்கப்பட்டு உள்ளது. அது போல தனது பாய்லர்களில் நெல் உமியை பயன்படுத்துவதன் மூலமும் விண்ட் டர்பைன்ஸ் பயன்படுத்துவதன் மூலமும் 20145 ஆம் ஆண்டு கர்பன் புட்பிரின்ட் குறைத்துள்ளோம் என்றும் சொல்லுகிறது பெப்ஸிகோ இந்தியா. இவை தவிர வேஸ்ட் டு வெல்த்ன்ற பிளாஸ்டிக் ரீசைக்கிள் போன்ற சுற்றுச்சூழல் தொடர்பான பணிகளையும் செய்து வரும் பெப்சிகோ நிறுவனத்தின் நாம் பாராட்டலாம்.
பெப்சிகோ இந்தியா தனது வியாபாரத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு என 24 ஆயிரம் விவசாயிகளை தனது பங்குதாரர்களாக சேர்த்துக் கொண்டுள்ளது. இந்த இருபத்தி நான்காயிரம் விவசாயிகளில் 45 சதவீதம் பேர் ஒரு ஏக்கர் மற்றும் ஒரு ஏக்கருக்கும் குறைவான நில உரிமை கொண்ட குறு மற்றும் சிறு விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவசாயிகளுக்கு இடுபொருட்கள் மற்றும் இதர தொழில் நுட்பங்களை கையாள வேண்டிய உதவிகளையும் செய்து வருகிறது இந்த பெப்சிகோ நிறுவனம்.

16. குவாலிட்டி
டயரி  இண்டியா
லிமிடெட்


QUALITY DAIRY INDIA LTD


குவாலிட்டி டயரி  இண்டியா லிமிடெட் 1992 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனை 2002 ஆம் ஆண்டு திங்ரா குடும்பம் இதனை கையகப்படுத்தியது. அதன் பிறகு இந்த கம்பெனி மிக வேகமாக வளர்ந்தது. அது தனது டெய்ரி பெஸ்ட் என்ற பிராண்டின் கீழ் லோகொலஸ்ட்ரால் நெய்,  ப்யூர் கீ,  பட்டர், இன்ஸ்டன்ட் டயரி கிரீம், டெயரிமில்க்,  ஸ்கிம்டு ஹோல்மில்க்  பவுடர், மில்க் இன் பவுச்சஸ், கர்ட் இன் பவுச்சஸ்,  பனீர், லஸ்ஸி, டெட்ராபேக் மில்க், ஸ்டெர்லைஸ்டு பிளேவர்டு மில்க், யோகர்ட், சீஸ், ஆகிய பால் பொருட்களை விற்பனை செய்கிறது. ஒரு நாள் ஒன்றுக்கு 3 மில்லியன் லிட்டர் பாலை பதப்படுத்தி பல்வேறு உணவுப்பொருட்களை உற்பத்தி செய்கிறது. வட இந்தியாவில் குறிப்பாக அரியானா பஞ்சாப் உத்தரப் பிரதேசம் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக பாலை கொள்முதல் செய்கிறது. குவாலிட்டி தனது உற்பத்திப் பொருட்களை இந்தியா மட்டுமின்றி 28 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

இனி  தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் கட்டுரைகளும் செய்திகளும் இடம்பெறும். உங்கள் தேவை குறித்து எனக்கு தொலைபேசியில் சொல்லுங்கள். இமெயிலில் எழுதுங்கள்.



TO HAVE MORE INFORMATION
ON THE RELATED TOPICS

1. மதிப்பு கூட்டுதல் மூலமாக தொழில் தொடங்குவதுதான் இன்றைய இந்தியாவின் முக்கிய தேவை - FOOD PROCESSING  INDUSTRIES - INDIA’S NEED OF THE HOUR – Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/food-processing-industries-indias-need.html

2. உணவு பதப்படுத்தும்  தொழில் இன்றைய இந்தியாவின்  தேவை - FOOD PROCESSING  INDUSTRIES -  IMMEDIATE NEED  FOR INDIA – Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/food-processing-industries-immediate.html

3. இந்திய உணவு சரித்திரத்தில்  இடம்பெற்ற  பதப்படுத்தும் வியாபார  நிறுவனங்கள்  - PRIMARY PROCESSING CUM  BUSINESS INDUSTRIES OF  INDIAN FOOD HISTORY Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/primary-processing-cum-business.html


4. இந்தியாவின்  உணவு பதப்படுத்தும்  தொழில்கள் - பகுதி 2 - FOOD PROCESSING  INDUSTRIES OF INDIA - PART – 2 /  Date of Posting: Feb 12th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/2-food-processing-industries-of-india.html

5. MAIZE  BASED INDUSTRIES - மக்காச் சோளத்தில்  என்னென்ன  தொழில்கள் செய்யலாம் ? /  Date of Posting: Dec  29th 2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/12/agro-based-industry-maize.html

6. இந்தியாவின்  உணவு பதப்படுத்தும்  தொழில்கள் - பகுதி - 3  FOOD PROCESSING  INDUSTRIES OF INDIA -  PART -3  -  Date of Posting: 20.02.2020 - https://vivasayapanchangam.blogspot.com/2020/02/3-food-processing-industries-of-india.html




தே.ஞானசூரிய பகவான், போன்: +91-8526195370, Email: gsbahavan@gmail.com



No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...