Thursday, February 20, 2020

இந்தியாவின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் - பகுதி - 3 FOOD PROCESSING INDUSTRIES OF INDIA - PART -3


இந்தியாவின் 

உணவு பதப்படுத்தும் 

தொழில்கள் - பகுதி - 3


FOOD PROCESSING INDUSTRIES OF INDIA - PART -3  



இந்தியாவின் உணவு பதப்படுத்தும் தொழில் முக்கியமானவை என ஐந்து தொழில்களை சொல்லலாம். அவை உணவு தானியங்கள் தொடர்பானவைசர்க்கரை, உணவு எண்ணெய், குளிர்பான்ங்கள் மற்றும் பால் பொருட்கள். 

உணவு பதப்படுத்தும் தொழிலில் இரண்டாம் நிலையில் முக்கியமான சிலவற்றைக் குறிப்பிடுகிறார்கள். அவை பால் பொருட்கள் தொடர்பானவை, பழங்கள் மற்றும் காய்கறிகள் தொடர்பானவை, கோழிப்பண்ணை மற்றும் இறைச்சி பதப்படுத்தும் மீன் உணவுகள், உணவுப்பொருள் சில்லரை வியாபாரம் ஆகியவை.

வருங்காலத்தில் உணவு பதப்படுத்தும் தொழிலில் மிகப்பெரிய மாற்றங்கள் வர இருக்கின்றன என்பது தெரிகிறதுஇந்த காலகட்ட்த்தில் ஏற்கனவே கொடிகட்டி பறக்கும் நிறுவனங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம்

இந்த கட்டுரையில் 4 முக்கியமான நிறுவனங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்அவை ஹட்சன் அக்ரோ புரோடக்ட்ஸ், ஹெரிட்டேஜ் ஃபுட்ஸ் லிமிடெட், பதஞ்சலி ஆயுர்வேத லிமிடெட், சன் ஃபீஸ்ட் கம்பெனி ஆகியவை.



ஹட்சன் அக்ரோ புரோடக்ட்ஸ் லிமிடெட்(HATSON AGRO PRODUCTS LIMITED)


ஹட்சன் அக்ரோ புரோடக்ட்ஸ் லிமிடெட் கம்பெனியின் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ளது. இதுவரை நாம் பார்த்த 17 கம்பெனிகளில் இதுதான் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. சென்னையில் ராஜீவ்காந்தி சாலையில் காரம்பாக்கம் என்னுமிடத்தில் உள்ளது.  பியூர் கி மேனுஃபேக்சரஸ் என்று அறிவித்தாலும் விதவிதமான பால் பொருட்களை தயார் செய்து விற்பனை செய்கிறார்கள் இந்த நிறுவனத்தினர். 

உதாரணமாக ஸ்கிம்டு மில்க் பவுடர், பட்டர் மில்க், பாஸ்சுரைஸ்டு பட்டர்,  பாதாம் மில்க், டிரைஃப்ரூட்,  ஐஸ்கிரீம், பிளேவர்டு டீ, மற்றும் லீஃப் டீ,  ஆகிய உணவு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்கிறார்கள். இவை தவிர யோகர்ட், பசுநெய், ஆர்கானிக் மில்க் ஆகியவற்றையும் தயார் விற்பனை செய்கிறது.  அமெரிக்கா உட்பட 38 நாடுகளுக்கு தங்களின் உணவு பொருட்களை ஏற்றுமதி செய்கிறது இந்த நிறுவனம்.


அருண் ஐஸ் கிரீம், ஆரோக்கியா மில்க், ட்சன் தயிர்,  ட்சன் பனீர்,  ட்சன் கீ,  ட்சன் டைரி ஒயிட்னர்,  இபாகோ,  மற்றும் ஓயாலோ ஆகியவை ட்சனின் முக்கியமான பிராண்ட்கள். தங்கள் உற்பத்திப் பொருட்கள் கிட்டத்தட்ட 96% நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்கிறது ஹட்சன் அக்ரோ புராடக்ட்ஸ் கம்பெனி.



ஹெரிட்டேஜ் ஃபுட்ஸ் லிமிடெட் 

HERITAGE FOODS LIMITED


ஹெரிட்டேஜ் ஃபுட்ஸ் லிமிடெட் கம்பெனி  1992 ஆம் ஆண்டு   நாரா சந்திரபாபு நாயுடுவால் தொடங்கப்பட்டது. இந்தியாவில்  மிக வேகமாக வளரும் கம்பெனிகளில் ஒன்று. இது முக்கியமான இரண்டு பெரும் பிரிவுகளைக் கொண்டது.  பால் பொருள் தயாரிக்கும் பிரிவு ஒன்று.  ரினிவபிள் எனர்ஜி இரண்டாவது. 2018 19 ஆம் ஆண்டில் இதன் வியாபாரம் 2482 கோடியை தாண்டியுள்ளது.


இந்தியாவில் பரவலாக கிட்டத்தட்ட 15 மாநிலங்களில் மேலாக இடையில் தனது வியாபாரத்தை விஸ்தரித்துள்ளது. பால், யுஎச்டிபால், தயிர், வெண்ணெய், ஐஸ்கிரீம், ஃபுரோசன் டெசர்ட்ஸ், லஸ்ஸி, ஃபிளேவர்டு மில்க், ஆகியவை ஹெரிடேஜின் முக்கியமான உற்பத்தி பொருட்கள்.


சூரியசக்தி மற்றும் காற்று சக்தி மூலம் மின்சார உற்பத்திக்கான 11 மையங்களை தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், மற்றும் கர்நாடகாவில் உற்பத்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஹெரிடேஜ் நிறுவனத்தின்  தலைமையகம் ஹைதராபாத்தில் பஞ்சகுட்டா என்ற இடத்தில் அமைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 1.25 மில்லியன் லிட்டர் பாலை குளிர வைக்கும் அளவுக்கு இந்த வசதிகள் உள்ளன. அதே போல 2.57 மில்லியன் லிட்டர் பாலை பப்படுத்தவும் 1.75 மில்லியன் லிட்டர் பாலை பேக்கிங் செய்யவும் போதுமான வசதிகள் உள்ளன.


தினமும் ஹெரிடேஜ் பால் ஒரு லட்சத்து 25 ஆயிரம் சில்லரை விற்பனை மையங்கள் மூலமாக ஹெரிடேஜின் பால் பொருட்கள் விற்பனை ஆகின்றது. சுமார் மூன்று இலட்சம் விவசாயிகள் காலை மாலை இருவேளையும் ஹெரிடேஜுக்கு பால் சப்ளை செய்கிறார்கள். சிறியதும் பெரியதுமான 188 குளிர்பதனக் கிடங்குகள், தாங்கள் கொள்முதல் செய்யும் பாலை குளிர்விக்கின்றன.


பதஞ்சலி ஆயுர்வேத லிமிடெட்

PATHANJALI AYURVED LIMITED



பதஞ்சலி ஆயுர்வேத லிமிடெட் 2006 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த பதஞ்சலி கம்பெனி கிராமங்கள் மற்றும் நகர்ப்புற மேம்பாடு என்ற இரண்டு நோக்கங்களை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்டது.  இது வெறுமனே ஒரு வியாபார கம்பெனி அல்ல. ஆயுர்வேதம் மற்றும் யோகா மூலமாக ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது இந்த பதஞ்சலி ஆயுர்வேத கம்பெனி. 


பதஞ்சலி நிறுவனத்திற்கு தேவைப்படும் இயற்கையான கச்சாப்ப் பொருட்களை தருவது விவசாயிகள்தான். அவர்களுக்கு தேவையான மூலிகைகளையும் அவர்கள் தான் உற்பத்தி செய்து தருகிறார்கள். அவர்கள் ஒப்பந்த விவசாயம் மூலமாக இந்த பொருட்களை உற்பத்தி செய்து தருகிறார்கள். விவசாயிகளுக்கு தேவைப்படும் தொழில் நுட்ப உதவிகளை செய்து அவர்களின் வருமானத்தை அதிகரிக்க உதவுகிறது பதஞ்சலி. 


பதஞ்சலி கம்பெனியின் தலைமை அலுவலகம்  உத்தரகாண்டில் ஹரித்துவாரில் உள்ள தொழிற்பேட்டையில் உள்ளது. ஆனால் இதன் பதிவு செய்யப்பட்ட தலைமை அலுவலகம் புதுடில்லியில் உள்ளது. பதஞ்சலி மிக வேகமாக வளரும் நுகர்பொருள் வியாபார நிறுவனம்.


உதாரணமாக பேக்கேஜிங் புரோடக்ட்ஸ்,  பெவரேஜஸ்,  டாய்லட்ரீஸ்,  மருந்துப் பொருட்கள் மற்றும் இதர நுகர் பொருட்கள் அனைத்தும் இதன் வியாபாரப் பொருட்கள்.


2015 16 ல் ரூபாய் 3000 கோடியாக இருந்த இதன் வியாபாரம்,  2016- 17 ல் ரூபாய் 10711 கோடியாக வளர்ந்துள்ளது.ண்மைக்காலத்தில் இவ்வளவு வேகமாக வளர்ந்துள்ள நிறுவனம் வேறெதுவும் இல்லை என்று சொல்லுகிறார்கள். நோய்டா, நாக்பூர்,  இந்தூர்,  ஆகிய இடங்களில் இதன் உற்பத்தி ஃபேக்டரிகள் அமைந்துள்ளன. இது போன்ற இன்னும் பல பேக்டரிகளை இந்தியா மற்றும் நேபாளத்தில் தொடங்க இவர்கள் திட்டமிட்டு உள்ளார்கள்.


சன் ஃபீஸ்ட் கம்பெனி

SUNFEAST COMPANY – I T C



சன் ஃபீஸ்ட் சன் ஐடிசி கம்பெனியின் ஒரு அங்கம் இது.  ஆனால் ஐடிசி இந்தியாவில் புராதனமான கம்பெனி .1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஐடிசி என்றால் இம்பீரியல் டோபாக்கோ கம்பனி (IMPERIAL TOBACCO COMPANY) என்று அர்த்தம். 1975 இல் இந்த கம்பெனி ஹோட்டல் இண்டஸ்ட்ரிஸ்சில் கால் பதித்தது. அதற்கு ஐடிசி வெல்கம் குரூப் ஹோட்டல் சோழா என்ற பெயரில் சென்னையில் தொடங்கப்பட்டது.


2003 ஆம் ஆண்டு ஐடிசி கம்பெனியின் சன்ஃபீஸ்ட் என்ற பெயரில் பிஸ்கட்டுகள் உற்பத்தியில் இறங்கியது. மேரிலைட், மில்க் பிஸ்கட் குளுகோஸ், சிநேக்கி,  நைஸ்,  டார்க் ஃபேண்டசி,  யும்பில்ஸ், பவுன்ஸ், டிரீம் க்ரீம்,  பார்பான் பிலிஸ்,  ச் ஐ எல் , கூக்கிஸ், மாம்ஸ் மேஜிக் ஆகியவை சன்ஃபீஸ்ட்டின்  பிரபலமான பிராண்டுகள்.ன்ஃபீஸ்டின்ன் தொடர்பு அலுவலகத்தை பெங்களூரில் வைத்துள்ளார்கள்.  


ஐடிசி என்பது ஒரு தனியார் நிறுவனம்.  அது மட்டுமல்ல அது ஒரு சிகரெட் கம்பெனி. அதனை இந்தியன் காங்லோமேரட் (CONGLOMERATE) என்கிறார்கள். காங்லோமேரட் என்றால் சகலகலா வல்லவன் என்ற அர்த்தம். அதாவது பல தொழில் செய்யும் கம்பெனி என்று அர்த்தம். 


சிகரெட் மட்டுமின்றி ஹோட்டல் பிசினஸ், பேப்பர் போர்ட்,   பேக்கேஜிங், அக்ரி பிசினஸ், பேக்கேஜ்டு புட்ஸ்,  கன்பெக்ஷனரி,  பிராண்ட் அப்பேரல்ஸ்,  கிரீட்டிங் கார்ட்ஸ் மற்றும் மிக விரைந்து விற்பனையாகும் நுகர்பொருட்கள் (FAST MOVING CONSUMER GOODS) ஆகியவற்றிலும் ஐடிசி வியாபாரம் செய்து வருகிறது.


FOR FURTHER READING

ON RELATED TOPICS


1. மதிப்பு கூட்டுதல் மூலமாக தொழில் தொடங்குவதுதான் இன்றைய இந்தியாவின் முக்கிய தேவை - FOOD PROCESSING  INDUSTRIES - INDIA’S NEED OF THE HOUR – Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/food-processing-industries-indias-need.html

2. உணவு பதப்படுத்தும்  தொழில் இன்றைய இந்தியாவின்  தேவை - FOOD PROCESSING  INDUSTRIES -  IMMEDIATE NEED  FOR INDIA – Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/food-processing-industries-immediate.html

3. இந்திய உணவு சரித்திரத்தில்  இடம்பெற்ற  பதப்படுத்தும் வியாபார  நிறுவனங்கள்  - PRIMARY PROCESSING CUM  BUSINESS INDUSTRIES OF  INDIAN FOOD HISTORY Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/primary-processing-cum-business.html


4. இந்தியாவின்  உணவு பதப்படுத்தும்  தொழில்கள் - பகுதி 2 - FOOD PROCESSING  INDUSTRIES OF INDIA - PART – 2 /  Date of Posting: Feb 12th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/2-food-processing-industries-of-india.html

5. MAIZE  BASED INDUSTRIES - மக்காச் சோளத்தில்  என்னென்ன  தொழில்கள் செய்யலாம் ? /  Date of Posting: Dec  29th 2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/12/agro-based-industry-maize.html

6. இந்தியாவின்  உணவு பதப்படுத்தும்  தொழில்கள் - பகுதி - 3  FOOD PROCESSING  INDUSTRIES OF INDIA -  PART -3  -  Date of Posting: 20.02.2020 - https://vivasayapanchangam.blogspot.com/2020/02/3-food-processing-industries-of-india.html


தே.ஞானசூரிய பகவான், போன்: +91-8526195370, Email: gsbahavan@gmail.com





No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...