Saturday, February 1, 2020

உலகை மிரட்டும் 2019 புதிய கொரோனா வைரஸ் - 2019 NEW CORONA VIRUS & ITS FAMILY







உலகை மிரட்டும்
2019 புதிய கொரோனா 
வைரஸ் 

2019 NEW CORONA 
VIRUS & ITS FAMILY


எந்த சமயம் என்ன நடக்கும், ? கொரோனா வைரஸ்சால் ஏற்படும் உயிர்ப்பலி இனியும் தொடர்ந்தால் என்ன செய்வது ? சீனாவிலும் பிற நாடுகளிலும் நடக்கும் ஆராய்ச்சிகள் இதற்கான தடுப்பூசியை எப்போது கண்டுபிடிக்கப்போகின்றன ? இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸ் நுழைந்துவிட்டதா ? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை தெரியாமல் உலகமே திணறிக்கொண்டுள்ளது.


இந்த கேள்விகளை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு கொரோனா வைரஸ் என்றால் என்ன ? அது எப்படி தாக்கும் ? அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும் ? அது எப்ப்டி எங்கு அதன் பாதிப்பை தொடங்கி இருக்கிறது ? இதுபற்றி எல்லாம் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டியது  அவசியம் என்று சொல்லுகிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.


அதனால் அதுபற்றியெல்லாம் கொஞ்சம் தகவல்களை சேகரித்து இங்கு தந்துள்ளேன். ஓரளவு கொரோனா வைரஸ்சை புரிந்துகொள்ள அவை உதவும்.

இந்த வைரஸ்சின் பெயர் என்ன ?(NAME OF THE VIRUS)


2019  நியூ கொரோனா வைரஸ் (2019 NEW CORONA VIRUS) என்பது இதன் பெயர். இதில் இந்த வைரஸ் பாலூட்டி பிராணிகள் மற்றும் பறவைகளைத் தாக்கும். இது ஒரே ஒரு வைரஸ் அல்ல.


நமக்கு தெரிந்த சளி ஜலதோஷம் வைரஸ்(COMMON COLD VIRUS)



மனிதர்களில் சளி ஜலதோஷம் போன்றவற்றை ஏற்படுத்தும் வைரஸ் கூட இந்த குழுவை சேர்ந்ததுதான். இவை பெரும்பாலும் சுவாச மண்டலத்தை தாக்கும்.வற்றால் ஏற்படும் பாதிப்புகள் கடுமையாக இருக்காது.
ஆனால் இந்த வைரஸ் குடும்பத்தில் சில மோசமான வைரஸ்களும் அடங்கி இருக்கின்றன. அவை எஸ் ஆர் எஸ் (S A R S) வகை வைரஸ் மற்றும் எம் இ ஆர் எஸ் வகை.


இவை கால்நடை மற்றும் பன்றிகளில் கழிச்சல் நோயை உண்டாக்கும். கோழிகளின் சுவாச மண்டலத்தை கடுமையாக தாக்கும். இந்த நோய்களைத் தடுக்கக்கூடிய தடுப்பூசிகள் ஏதும் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை.

எஸ் ஆர் எஸ் வகை வைரஸ் SEVERE ACUTE RESPIRATORY SYNDROME


எஸ் ஆர் எஸ் என்றால் சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் வைரஸ் (SEVERE ACUTE RESPIRATORY SYNDROME) என்று பெயர்.

எஸ் ஏ ஆர் எஸ் வகை வைரஸ் 2003ம் ஆண்டில் அறிமுகமானது. இந்த வைரஸின் பெயர் சிவியர் ஆக்யூட் ரெஸ்பிரேடரி சிண்ட்ரோம் (SEVERE ACUTE RESPIRATORY SYNDROME)என்பது. 2002 – 03  ம் ஆண்டுகளில் சீனாவில் பரவிய இந்த நோயினால் சுமார் 8000 பேர் பாதிக்கப்பட்டார்கள். அதில் 774 பேர் இறந்து போனார்கள்.  


எம் இ ஆர் எஸ் வகை வைரஸ்MIDDLE  EAST  RESPIRATORY SYNDROME


எம் இ ஆர் எஸ் வகை என்றால் மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேடரி சிண்ட்ரோம் (MIDDLE  EAST  RESPIRATORY SYNDROME) வைரஸ் என்பது இன்னொரு வகை வைரஸ். இதனை சுருக்கமாக எம் இ ஆர் எஸ் (M E R S)என்பார்கள். மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேடரி சிண்ட்ரோம்  வைரசுக்கு கேமல் புளூ என்ற பெயரும் உண்டு.


2012ஆம் ஆண்டு இந்த வைரஸ் வகையைக் கண்டுபிடித்தனர்.  ஆனால் இது ஒருவரிடமிருந்து அடுத்தவருக்கு பரவாது என்று கருதினார்.  ஆனால் 2013ம் ஆண்டு மனிதருக்கு மனிதர் பரவும் என்பது பிரான்ஸ் நாட்டில் உறுதி செய்யப்பட்டது.  2015 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் இந்த வைரஸால் கிட்டத்தட்ட 2,449 பேர் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில்  861 இறந்து போனார்கள்.


இந்த கொரோனா வைரஸ் முதன்முதலாக 1960 ஆம் ஆண்டுதான் கண்டுபிடிக்கப்பட்டது. கோழிகளை தாக்கிய இந்த வைரஸ் மனிதர்களையும் தாக்கியது. அப்போது அதற்கு ஹ்யூமன் கொரோன வைரஸ் (HUMAN CORONA VIRUS) என்று பெயரிடப்பட்டது.


மனிதர்களை தாக்கக் கூடிய கொரோனா வைரஸ்களில் மொத்தம் ஏழு வகைகள் உள்ளன.


இவற்றில் HCOV -229E, NL63, OC43, HKU1 என்பவை உஅகம் முழுவதும் உள்ள குழந்தைகள் மற்றும்  பெரியவர்களுக்கு, சுவாசம் தொடர்பான பாதிப்புகளை (RESPIRATORY INFECTIONS) ஏற்படுத்தி வருகின்றன. 


2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாநிலத்தில் நிமோனியா வடிவத்தில் கொரோனா வைரஸ் நோய் தனது  மனித வேட்டையை தொடங்கியது. உலக சுகாதார நிறுவனம் இதற்கு ‘2019 – N COV’ என பெயரிட்டுள்ளது.


சில மருத்துவ  நிபுண்ர்கள் இதனை சூனாட்டிக் நோய் (ZOONOTIC DISEASE) என்று சொல்லுகிறார்கள். சூனாட்டிக் நோய் என்றால் மனிதர்கள் மற்றும் பிராணிகளையும் பாதிக்க கூடிய ஒரு நோய் என்று அர்த்தம்.


இந்த நோய்க்கிருமிகள் கொஞ்சகாலம் மனிதனின் உடலில் வளரும். கொஞ்சகாலம் பிராணிகளின் உடலில் வளரும். அப்போதுதான் அவை முழு வளர்ச்சி அடையும்.  இந்த நோய் கிருமிகளால் ஏற்படும் நோய்களை சூனாடிக் நோய்கள்  என்று சொல்லுகிறார்கள்.


மருத்துவர்கள் இந்த நோய் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனம் தற்போது இந்த வைரஸ் குறித்து அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. உலக நாடுகளில் இது குறித்து எச்சரிக்கையாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளது.

தமிழ் மூலிகைகள்  கைகொடுக்குமா  ?


சீனாவில் பூதாகரமாக கிளம்பியுள்ள கொரோனா வைரஸ் மனிதர்கள், பிராணிகள் மற்றும் பறவைகளையும் தாக்கும் ஒரு நோய். நெருக்கமாக பழகுபவர்கள் இடையே சுலபமாக பரவும். இது வைரஸ் நோயாக இருப்பதால் இதற்கு மருந்துகள் ஏதும் கிடையாது. தடுப்பூசிகள் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் பல நாடுகளில் நடந்து வருகின்றன. சீனாவிற்கு சமீபத்தில் பயணம் செய்தவர்கள் மூலமாக இந்த நோய் பல நாடுகளுக்களுக்கும் பரவி வருவதாக செய்திகள் வருகின்றன. இந்த வைரஸ் நோயை மூலிகை மூலம் குணப்படுத்த முடியும் என்று ஒரு செய்தி வாட்ஸ்அப் செய்திகளில் ஒரு செய்தி வலம் வருகிறது.


TO GET INFORMATION
ON RELTED  TOPICS

1. கொரோனா வைரஸ்சுக்கு தடுப்பூசி தயார் -  CORONA VIRUS -  VACCINE IS READY  FOR CONTROL /30.01.2020 /  https://vivasayapanchangam.blogspot.com/2020/01/corona-virus-vaccine-is-ready-for.html

2. கொரோனா வைரஸ்  தாக்குதல் அறிகுறிகள் - SYMPTOMS OF  CORONA VIRUS /02.02.2020 /

3. கொரோனாவைரஸ்சை  ஹோமியோபதி மற்றும்  யுனானி மருத்துவத்தின் மூலம்  கட்டுப்படுத்த முடியும்  -   CORONAVIRUS COULD BE   CONTROLLED BY  HOMEOPATHY & UNANI  MEDICINES /03.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/coronavirus-could-be-controlled-by.html

4. கொரோனாவை பார்த்து குலை நடுங்க  வேண்டாம்  - நம்புங்கள் -  DO NOT FEAR ABOUT  CORONAVIRUS  /05.02.2020 /  https://vivasayapanchangam.blogspot.com/2020/02/do-not-fear-about-coronavirus.html

5. கொடூரமான  கொரோனா வைரஸ்சை பரப்பும் சாதுவான  பங்கோலின்கள்  -   KILLER VIRUS CORONA'S  DOCILE VECTOR PANGOLIN / 10.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/docile-pangolin-may-be-vector-to.html

6. கொரோனா வைரஸ்  இன்று - CORONA VIRUS TODAY / 10.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/corona-virus-today.html




No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...