தே. ஞானசூரிய பகவான் போன்: +91-9526195370 Email:gsbahavan@gmail.com
இந்தியாவின்
உணவு பதப்படுத்தும் தொழில் முக்கியமானவை என ஐந்து தொழில்களை சொல்லலாம். அவை உணவு
தானியங்கள் தொடர்பானவை, சர்க்கரை, உணவு எண்ணெய், குளிர்பான்ங்கள், மற்றும் பால் பொருட்கள்.
உணவு
பதப்படுத்தும் தொழிலில் இரண்டாம் நிலையில் முக்கியமான சிலவற்றைக் குறிப்பிடுகிறார்கள். அவை பால் பொருட்கள் தொடர்பானவை, பழங்கள் மற்றும் காய்கறிகள்
தொடர்பானவை, கோழிப்பண்ணை மற்றும் இறைச்சி பதப்படுத்தும் மீன் உணவுகள், உணவுப்பொருள்
சில்லரை வியாபாரம் ஆகியவை.
வருங்காலத்தில் உணவு பதப்படுத்தும் தொழிலில் மிகப்பெரிய மாற்றங்கள்
வர இருக்கின்றன என்பது தெரிகிறது.
இந்த காலகட்ட்த்தில் ஏற்கனவே கொடிகட்டி பறக்கும் நிறுவனங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
இந்த கட்டுரையின் முதல் பகுதியில் நெஸ்லே இந்தியா, பார்லே இந்தியா, பிரிட்டானியா, கேட்பரி, அமுல், மற்றும் எம் டி ஆர் ஆகிய 6 நிறுவனங்கள்
பற்றி பார்த்தோம்.
இந்த கட்டுரையில்
5 முக்கியமான நிறுவனங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். அவை வாடிலால், ஹால்டிரம்ஸ், மதர் டைரி, கே ஆர் பி எல் பிரைவேட் லிமிடெட், மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர்.
7.
வாடிலால் (VADILAL)
வாடிலால் ஒரு முக்கியமான ஐஸ்கிரீம் தயாரிக்கும்
கம்பெனி இது. 1907 ஆம் ஆண்டு வடிலால்காந்தி என்பவரால் ஆமதாபாத்தில்
தொடங்கப்பட்டது. இப்போது ஐஸ்கிரீம் தயாரிப்பில் இந்தியாவில் மூன்றாவது இடத்தை பிடிப்பது இந்த
கம்பெனிதான். இது தவிர வாடிலால்தான்
தயாரித்த பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை
அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்து
வருகிறது.
வடிலால் ஐஸ்கிரீம் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் 1961
ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1960 ம் ஆண்டுக்கு முன்னால் கோத்திஸ் (KOTHIS)
என்று சொல்லக்கூடிய மரத்தால் செய்யப்பட்ட பாரல்களை பயன்படுத்தினார்கள்.
அதன் பின்னர்தான் ஐஸ்கிரீம் தயாரிக்க இங்கு தானியங்கி இயந்திரங்கள்
வந்தன.
ஒரு காலத்தில் அதாவது
1990 ம் ஆண்டு வாக்கில் ஒரு தனி நபர் ஐஸ்கிரீம் சாப்பிடும்
அளவு யூ எஸ் ஏ வில் 23 லிட்டராகவும், ஆஸ்திரேலியாவில் 18 லிட்டராகவும், சுவீடனில் 14 லிட்டராகவும்
இருந்தது. அந்த சமயம் இந்தியர் ஒருவர் ஐஸ்கிரீம் சாப்பிடும் சராசரி
அளவு 100 கிராமாக இருந்தது. ஆனால் அமுல்
கம்பெனி வந்த பிறகு அது 300 கிராமாக உயர்ந்ததாம்.
8. ஹால்டிரம்ஸ்
ஹால்டிரம்ஸ் இந்தியாவின் பிரபலமான ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்னேக்ஸ் தயாரிக்கும் கம்பெனி. மகாராஷ்டிராவில் நாக்பூரில் அமைந்துள்ளது இதன் தலைமையகம்.
ஹால்டிரம்ஸ்’சின் உற்பத்தி பொருட்கள் யூகே,
யூஎஸ்ஏ, கனடா, யுனைட்டட்
அராப் எமிரேட்ஸ், ஸ்ரீலங்கா உட்பட பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. புரோஸன்மீல்ஸ், ஐஸ்கிரீம், கூக்கிஸ், சிப்ஸ்,
மற்றும் இதர நொறுக்குத்தீனிகள் உட்பட நூற்றுக்கணக்கான உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை
செய்கிறது ஹால்டிரம்ஸ்.
ஆனால் இவை தவிர இந்தியா முழுக்க பரவலாக ரெஸ்ட்டாரெண்டுகளை நடத்துகிறது. 1937 ஆம் ஆண்டு கங்கா பிஷன் அகர்வால் என்பவரால் ராஜஸ்தானில் பீகானீர் என்ற இடத்தில் தொடங்கப்பட்டது.
9.
கே ஆர் பி எல் பிரைவேட் லிமிடெட் – K R B L PRIVATE LIMITED
உலகில் அதிக
அளவில் பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யும் கம்பெனி. மிடில் ஈஸ்ட், ஈரோப், கனடா, மற்றும் ஆப்பிரிக்கா போன்ற பல
நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்கிறது. கே ஆர் பி எல் என்றாலே உலகில் மிகப்பெரிய அரிசி உற்பத்தி மற்றும் பாஸ்மதி அரிசி
ஏற்றுமதி நிறுவனம் என்று அர்த்தம். 1889 ஆம் ஆண்டு,
குஷி ராம் மற்றும் பீகாரிலால் லாலு என்ற சகோதரர்களால் இது தொடங்கப்பட்டது.
கே ஆர் என்பது குஷிராம் என்பதையும்
பி எல் என்பது பீஹாரிலால் என்பதையும் குறிக்கிறது. இந்த கம்பெனி காண்ட்ராக்ட் ஃபார்மிங்கில்
பாசுமதி நெல்லை சாகுபடி செய்தல், சேமித்தல், பதப்படுத்துதல், சாக்குகள் அல்லது பைகளில்
அடைத்தல் போன்ற எல்லா காரியங்களையும் செய்து பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்கிறது.
10. மதர் டைரி
இந்த
கம்பெனியின் பெயர் மதர் டைரி ஆனாலும் இதனை மதர் டைரி புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் பிரைவேட் லிமிடெட் என்றே சொல்லப்படுகிறது. அடிப்படையில்
இது ஒரு இந்தியன் கம்பெனி. இதன் தலைமையகம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. பால் பொருட்கள், உணவு எண்ணெய்கள் புதிய மற்றும் புரோஸன் புரூட்ஸ் அண்ட் புரோஸன் வெஜிடபிள்ஸ், ஜூஸ், யோகர்ட்ஸ், ஜாம், ஊறுகாய் போன்றவை இந்த கம்பெனியின் முக்கிய உற்பத்திப் பொருட்கள். யூஎஸ்ஏ, ரஷ்யா, மிடில் ஈஸ்ட், போன்ற நாடுகள் உட்பட 40
நாடுகளுக்கு தனது பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. 1892 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த கம்பெனி 1993 ஆம் ஆண்டு வாடியா குழுமத்தால் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் தொடக்க காலத்தில் 1974 ஆம் ஆண்டு
நேஷனல் டைரி டெவலப்மன்ட் போர்டினால்
தொடங்கப்பட்டது.
11. ஹிந்துஸ்தான் யூனிலீவர்
இந்துஸ்தான்
யூனி லீவர் கம்பெனி இந்தியாவில் நுகர்வோர்களுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் மிகப்
பெரிய கம்பெனிகளில் ஒன்று.
ஆனால் இது பிரிட்டிஷ்-ட்ட்ச்
கம்பெனியின்
துணை கம்பெனி. யூனிலீவர் என்ற பிரிட்டிஷ் கம்பெனியின் துணை கம்பெனிதான் இந்த இந்துஸ்தான்
யூனி லீவர் கம்பெனி. இது மும்பையை தலைமையாகக் கொண்டு இயங்குகிறது. முக்கியமாக இது
உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்களை உற்பத்தி செய்கிறது. அன்னபூர்ணாசால்ட்,
ஆட்டா, லிப்டன் டீ, புரூகாப்பி, சோப்புகள், நூடுல்ஸ், ஆகியவை ஹிந்துஸ்தான் லீவரின் பிரதானமான உற்பத்திப்பொருட்கள். இவை அனைத்தும் நுகர்வோரிடையே மிகவும் பிரபலமானவை. 1933
ஆம் ஆண்டு லீவர் பிரதர்ஸ் இந்தியா லிமிடெட் என்ற பெயரில் தொடங்கப்பட்டது.
TO HAVE MORE
INFORMATION
ON RELATED TOPICS
1. மதிப்பு கூட்டுதல் மூலமாக தொழில்
தொடங்குவதுதான் இன்றைய இந்தியாவின் முக்கிய தேவை - FOOD PROCESSING INDUSTRIES - INDIA’S NEED OF THE HOUR – Date of
Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/food-processing-industries-indias-need.html
2. உணவு பதப்படுத்தும் தொழில் இன்றைய இந்தியாவின் தேவை - FOOD PROCESSING INDUSTRIES -
IMMEDIATE NEED FOR INDIA – Date of
Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/food-processing-industries-immediate.html
3. இந்திய உணவு சரித்திரத்தில் இடம்பெற்ற
பதப்படுத்தும் வியாபார
நிறுவனங்கள் - PRIMARY
PROCESSING CUM BUSINESS INDUSTRIES
OF INDIAN FOOD HISTORY Date of Posting: Feb
06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/primary-processing-cum-business.html
4. இந்தியாவின் 5 பிரதானமான உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள்
- FIVE PROMINENT FOOD
PROCESSING INDUSTRIES IN INDIA / Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/5-five-prominant-food-processing.html
5. MAIZE BASED INDUSTRIES - மக்காச் சோளத்தில்
என்னென்ன தொழில்கள் செய்யலாம் ? / Date of Posting: Dec 29th 2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/12/agro-based-industry-maize.html
6. இந்தியாவின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் - பகுதி - 3 FOOD PROCESSING INDUSTRIES OF INDIA - PART -3
- Date of Posting: 20.02.2020 - https://vivasayapanchangam.blogspot.com/2020/02/3-food-processing-industries-of-india.html
No comments:
Post a Comment