Tuesday, February 25, 2020

சீமைக் கருவை – ஒரு தொழில் மரமாக மாறும் அதிசயம் – பகுதி 1 SEEMAIKARUVAI - AN INDUSTRIAL TREE – PART 1


சீமைக் கருவை
ஒரு தொழில்
மரமாக மாறும் அதிசயம் –
பகுதி 1


சீமைகருவை தேன்

 SEEMAIKARUVAI -AN INDUSTRIAL TREE – PART 1


சீமைக் கருவை, சீமைக்கருவேல், காட்டுக் கருவை, வேலிக்கருவை என்று பல பெயர்களில் அழைக்கப்படும் மரம் இது. இதன் தாவரவியல் பெயர் புரசா பிஸ் ஜூலிஃபுளோரா (PROSOPIS JULIFLORA). மைமோசி (MIMOSACEAE)என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.  புரசாபிஸ் என்றால் முள்ளுள்ள மரம் என்று அர்த்தம். ஜூலிபுளோரா என்றால் சரம் சரமாகத் தொங்கும் பூக்களை உடைய மரம் என்று பொருள். இதன் சொந்த ஊர் வட அமெரிக்கா. அங்கு இதன் பெயர் மெஸ்கைட் மரம். தடை செய்யப்பட்ட மரமாக, விறகு மரமாக, அடுப்புக்கரி மரமாக அழிக்கவேண்டிய மரமாக நாம் கருதும் மரம் உலகின் பிற பகுதிகளில் ஒரு தொழில் மரமாக உருவாகி வருகிறது. எப்படி என்று பார்க்கலாம்.

வட அமெரிக்காவிலிருந்துஇந்தியாவுக்கு வந்தது



SEEMAIKARUVAI  

ORIGIN OF 

NORTH AMERICA


வட அமெரிக்காவிலிருந்து  1813 ஆம் ஆண்டு ஹவாய் மற்றும் ஆப்பிரிக்காவிற்கு சென்றது . 1876 ஆம் ஆண்டு இந்தியாவில் வட இந்திய பகுதிகளுக்கு  வந்தது. அந்த பகுதியை மேம்படுத்துவதற்காக அன்றைய ராணுவ அதிகாரியாக இருந்த  கர்னல் பெட்டோம் என்பவர் பிரேசில் நாட்டிலிருந்து இதனை இந்தியாவிற்கு அறிமுகம் செய்தார்.


சீமைகருவை மரங்களில் மொத்தம் 43  நாற்பத்தி மூன்று வகைகள் உள்ளன.தன் 6 வகைகளை இந்தியா ஆய்வு செய்தது. ராஜஸ்தானில் பாலைவனங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று செயல்படுகிறது. அந்த நிறுவனம் இந்த ஆய்வுகளை மேற்கொண்டது. இதன் இலைகளில் உள்ள சத்துக்கள்பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

சீமை கருவை
இலைகளில் உள்ள
சத்துக்கள் விவரம்

SEEMAIKARUVAI  LEAF - NUTRIENT CONTENT


நீர் 7.1  %
புரதம் 26.8 %
கொழுப்பு 2.5 %
மாவுப்பொருள் 31.8 %
நார்ப்பொருள் 24.8 %
உலோக உப்புகள் 1.4 %

மேலும் 100 கிராம் இலைகளில் 4.4 மில்லி கிராம் கரோட்டின் சத்து உள்ளது.


சீமைக்கருவையின்
உலர்ந்த இலைகளை
நிலத்திற்கு உரமாகப்
போடலாம்



SEEMAIKARUVAI  

DRIED LEAF - 

CAN BE USED AS 

MANURE



இயற்கை விவசாயத்தில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த இதன் இலைகளை பயன்படுத்துகிறார்கள். இதன் இலைகளை அளவாக தீவனமாகப் பயன்படுத்தலாம். உலர்ந்த இலைகளை நிலத்திற்கு உரமாக போடலாம். சீமை கருவையின் உலர்ந்த இலைகளில் 5.6 சதவீதம் தழைச்சத்தும், மணிச்சத்து   0.9 சதவீதமும்,  சாம்பல்சத்து 3.11 சதவீதமும் உள்ளது என்பது ஆச்சரியமான செய்தி.  

சீமைக்கருவையின் பிசின்
மிட்டாய் செய்ய
மாத்திரைகள் செய்ய
பயன்படும்



SEEMAIKARUVAI  

GUMS - 

CAN BE USED 

IN CONFECTIONERY & 

PHARMACOLOGY



பிசின்: பொதுவாக சில குறிப்பிட்ட மரங்களின் பிசின்களை துணி, கம்பளி,  மற்றும் காகிதங்கள் ஆகியவற்றிற்கு மெருகூட்ட, சாயமேற்ற பயன்படுத்துகிறார்கள். அதுபோல சீமைக்கருவையின் பிசினையும் பயன்படுத்துகிறர்கள். அதேபோல் மிட்டாய் தயாரிப்பில், மருந்து கம்பெனிகளில் மாத்திரைகள் செய்ய என  சிலவகை மரப்பிசின்களை உபயோகப்படுத்துகிறார்கள். அரபிக் கம் (ARABIC GUM)   இதனுடன் சேர்த்து இதனைப் பயன்படுத்துகிறார்கள்.


சீமைக்கருவையின் பூக்கள்
நிறைய தேன் சுரக்கும்



SEEMAIKARUVAI  

FLOWERS - 

OFFER

MORE HONEY




சில மரங்களின் பூக்கள் நிறைய தேன் சுரக்கும். ஒரு மரம் பூத்திருக்கும் சமயம் அதன் அடியில் நின்று மரத்தை உலுக்கினால் தேன்துளிகள் நம் தலையை நனைத்து விடுமாம். இன்னொரு மரத்தின் பூக்கள் ரொம்பவும் விளம்பரமாக அழகாக இருக்கும். ஆனால்  ஒரேஒரு சொட்டு தேங்கூட சுரக்காது. அனேகமாய் முதல் மரம் சில்வர் ஓக். இரண்டாவது மரம் பெருமாள் அரளி.

இதன் பூக்களில் அதிகமான அளவு தேன் இருக்கும். ஹவாய் தீவில் கிடைக்கும் தேனில் மூன்றில் ஒரு பங்கு தேன் சீமைக்கருவை தேன்தான். நவம்பர் டிசம்பர் மற்றும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் இது பூக்கும் தன்மையுடையது. அந்த மாதங்களில் அதிகமான தேனை இந்த மரங்கள் உற்பத்தி செய்கின்றன.

சீமைக்கருவை நெற்றுக்களின் மாவில் பீர் தயார் செய்யலாம்


SEEMAIKARUVAI  

POD FLOUR - 

COULD BE FERMENTED 

AS BEER & BRANDY



ஒரு மரம் சராசரியாக 19 கிலோ வரை நெற்றுகளை உற்பத்தி செய்யும். அர்ஜென்டினாவில் உள்ள பாலைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வறட்சியான காலங்களில் இது தான் சாப்பாடு. இதன் தசைப்பகுதியில் 12 முதல் 13 சதம் சீரணிக்கும் புரதம் உள்ளது. அதனால் இதை உணவாக அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.


நெற்றுக்களின் தசைப்பகுதியை சேகரித்து நொதிக்க வைத்து பீர் உட்பட பலவகையான மதுபானங்கள் தயார் செய்யலாம். அமெரிக்காவின் சில பகுதிகளில் நெற்றுக்களில் இருக்கும் தோல், விதை மற்றும் நாரை நீக்கி உலர்த்தி வைத்துக் கொண்டு அதில் ரொட்டி சுட்டு சாப்பிடுகிறார்கள். சுவை மிக்கவை சீமை கருவையின் ரொட்டிகள் என்கிறார்கள். இனிப்பும் அதிகம் உள்ள ரகங்களை தேர்ந்தெடுத்து அதில் ரொட்டி சுட்டால் குழந்தைகள் கூட சாப்பிடுவார்கள் என்கிறார்கள். தமிழ்நாட்டில் இது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்கிறார் பிஎஸ் மணி அவர்கள்.

சீமைகருவையில் செய்த பொருட்கள்அமேசானில் அலிபாபாவில்
வாங்கலாம் 

SEEMAIKARUVAI  


PRODUCTS - 

SOLD IN 

AMAZON & ALIBABA



சீமைகருவையின் மாவு மெஸ்கைட் பவுடர் என்ற பெயரில் அமேசான் ஆன்லைன் நிறுவனம் விற்பனை செய்கிறது. சீமைகருவையின் மாவு 8.5 அவுன்ஸ், 2332 ரூபாய்க்கு விற்பனை செகிறார்கள். இது தள்ளுபடி விலை. ஒரிஜினல் விலை ஐந்தாயிரம் ரூபாய். ஆன்லைனில் ஆர்டெர் செய்தால் அடுத்த மூன்றுநான்கு நாட்களில் உங்கள் வீட்டில் வந்து இறங்கும் மெஸ்கைட் பவுடர் எனும்  சீமைகருவையின் மாவு.  

உலகில் பல நாடுகளில் கால்நடை தீவனமாக இதை பயன்படுத்துகின்றனர் 1926 ஆம் ஆண்டிலேயே சிறந்த கால்நடை தீவனமாக ஹவாய் தீவில் பயன்படுத்தப்பட்டது. (ஆதாரம்; வளம் தரும் மரங்கள் - ஆசிரியர் டிஎஸ் மணி கூடுதல் வேளாண்மை இயக்குனர்)

சீமைக்கருவை –
தேசியப்பறவை மயில்
கூடுகட்ட தேடும்
அரிய மரம்



SEEMAIKARUVAI  

PET TREE - 

PEACOCK

OUR NATIONAL BIRD



1999 ஏப்ரல் முதல் 1970 மார்ச்சு வரை ஒரு ஆராய்ச்சி செய்தார்கள். இங்கு செய்த ஆராய்ச்சியில் நமது தேசிய பறவை மயில் முட்டையிட்டு குஞ்சு பொறிப்பதற்கு ஏற்புடையதாக உள்ளது என கண்டுபிடித்துள்ளார்கள்.  இந்த ஆராய்ச்சி திருநெல்வேலி மாவட்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் செய்தார்கள். பொதுவாக டிசம்பர் முதல் மார்ச் வரையான காலகட்டத்தில் மயில்கள் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன.


புளி, வாகை, உசிலை, பனை, மஞ்சணத்தி,  தென்னை,  மா,  குடைவேல், சீமைகருவை ஆகிய மரங்களில் கூடு கட்ட மயில்கள் விரும்புகின்றன மேலும் சீமை கருவை மரங்களின் உலர்ந்த சிறு சிறு குச்சிகளை எடுத்துசென்று கூடுகளை கட்டுகின்றன. அந்த கூட்டுக்குள்  ர்ந்த புற்களை, இலைகளைப் பயன்படுத்தி தனது குஞ்சுகளுக்கு மெத்தைகள் தயாரிக்கின்றன. நமது தேசிய பறவை மயில் கூடுகட்டி குடும்பம் நடத்த பிடித்தமான மரம் சீமை கருவேல் என்று சொல்லாமல் சொல்கின்றது இந்த ஆராய்ச்சி.


சீமைக்கருவை 

ஒரு தொழில்மரம்



SEEMAIKARUVAI - 

EMERGING  

INDUSTRIAL TREE



சீமைகருவையை ஒதுக்கித் தள்ளவேண்டிய மரம் என்றுதான் நாம் அறிவோம். ஆனால் அதில் சப்பாத்தி, ரொட்டி சுடலாம், பீர் பிராந்தி வடிக்கலாம், மிட்டாய், கேக் செய்யலாம், இயற்கை எரு, இயற்கை பூச்சி மருந்து தயாரிக்கலாம், பருத்தி கம்பளி துணிகளுக்கு சாயம் ஏற்றலாம், காகிதம் செய்யலாம், செய்த காகிதத்துக்கு  மெருகு ஏற்றலாம், கால்நடைகளுக்கு தீவனம் செய்ய ஆவன செய்யலாம். ஆக சீமைக்கருவை ஒரு தொழில்மரமாக உருவாகி வருகிறது.


FOR FURTHER READING
ON THE RELATED TOPICS

1. மதிப்பு கூட்டுதல் மூலமாக தொழில் தொடங்குவதுதான் இன்றைய இந்தியாவின் முக்கிய தேவை - FOOD PROCESSING  INDUSTRIES - INDIA’S NEED OF THE HOUR – Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/food-processing-industries-indias-need.html

2. உணவு பதப்படுத்தும்  தொழில் இன்றைய இந்தியாவின்  தேவை - FOOD PROCESSING  INDUSTRIES -  IMMEDIATE NEED  FOR INDIA – Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/food-processing-industries-immediate.html

3. இந்திய உணவு சரித்திரத்தில்  இடம்பெற்ற  பதப்படுத்தும் வியாபார  நிறுவனங்கள்  - PRIMARY PROCESSING CUM  BUSINESS INDUSTRIES OF  INDIAN FOOD HISTORY Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/primary-processing-cum-business.html

4. இந்தியாவின் 5 பிரதானமான  உணவு பதப்படுத்தும்    நிறுவனங்கள்  - FIVE PROMINENT FOOD PROCESSING  INDUSTRIES IN INDIA /  Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/5-five-prominant-food-processing.html

5. இந்தியாவின்  உணவு பதப்படுத்தும்  தொழில்கள் - பகுதி 2 - FOOD PROCESSING  INDUSTRIES OF INDIA - PART – 2 /  Date of Posting: Feb 12th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/2-food-processing-industries-of-india.html

6. MAIZE  BASED INDUSTRIES - மக்காச் சோளத்தில்  என்னென்ன  தொழில்கள் செய்யலாம் ? /  Date of Posting: Dec  29th 2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/12/agro-based-industry-maize.html





No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...