Friday, February 28, 2020

Thursday, February 27, 2020

தும்பேரி சிக்கனாங்குப்பம் கிராமங்களில் மழைநீர் அறுவடை கட்டமைப்புகள் -- வீடியோ - RAIN HARVESTING IN VILLAGES - VIDEO



தும்பேரி சிக்கனாங்குப்பம் 

கிராமங்களில் 

மழைநீர் அறுவடை 

கட்டமைப்புகள் - வீடியோ 



RAIN HARVESTING 

IN VILLAGES - THUMBERY &

CHIKKANANGKUPPAM 




சீமை கருவை ஒரு தொழில் மரமாக மாறும் அதிசயம் – பகுதி 3 - SEEMAIKKARUVAI A TREE OF INDUSTRIES - 3



சீமைக் கருவைஒரு தொழில் மரமாகமாறும் அதிசயம்
பகுதி 3



SEEMAIKKARUVAI

A TREE OF  INDUSTRIES



சீமைக் கருவை  அழிக்கப்பட வேண்டிய ரம் என்று உலக அளவில் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டு தடை செய்யப்பட்ட ஒரே மரம். சபிக்கப்பட்ட பழம் என்று சொல்வது மாதிரி இது சபிக்கப்பட்ட மரமோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. ‘இனாமாக வந்த மாட்டை நிலாவில் கட்டி அடிப்பார்கள் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதுதான் எனக்கு நினைவுக்கு வருகிறது. அப்படி நம் நாட்டிற்கு இனமாக வந்த மரம். நமது விறகு பஞ்சத்தை இனாமாக தீர்த்த மரம்.  இந்தியாவில் காடுகள் அழிவதை இனாமாக தடுத்த மரம். இப்படிப்பட்ட பெருமைகளுக்குரிய மரம் இந்த சீமைக்கருவை மரம்.

சீமைக்கருவை
பலபயன் தரும்
பலநோக்கு மரம்


SEEMAIKARUVAI
A MULTI PURPOSE
TREE


தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வண்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பல ஆண்டுகளாக வாழ்வாதாரம் அளித்துவந்த மரம். காகிதம் செய்ய மரக்கூழ் தரும் மரம். வறண்ட பருவத்தில் கூட பூத்துக்குலுங்கி தேன் சேகரிக்க உதவும் மரம். தோல் பதனிட தனது பட்டைகள் மூலம் டானின் தரும் மரம். பருத்தி மற்றும் கம்பளித் துணிகளுக்கும் சாமேற்ற உதவும் மரம்.  மிட்டாயும் மாத்திரையும் செய்ய பிசின் தரும் மரம். வாகனங்களுக்கான எரிபொருள் எத்தனால் தயாரிக்க உதவும் மரம்.  களர் மற்றும் உவர் நிலங்களில் அந்த நிலங்களின் தன்மையை மேம்படுத்தும் மரம். கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படும் மரம். இவற்றின் நெற்றுக்களின் மூலம் சத்து மாவு, காப்பித்தூள் உட்பட பலவிதமான உணவுப்பொருட்களையும் தயாரிக்க உதவும் மரம். சீமைக்கருவை மாவை புளிக்க வைத்தால் பீர் தயாரிக்கலாம்.


சீமைக்கருவையை
பயன்படுத்தி
காலநடைத் தீவனம்
தயாரிக்கும் தொழில்
தொடங்கலாம்.


இதன் இலைகளை பச்சையாகவும் காயவைத்தும் கால்நடைகளுக்குத் தீவனமாகக் கொடுக்கலாம்.


ஒரே ஒரு மரம் தோட்டத்தில் இருந்தால் போதும் நாங்கள் ஐந்து குதிரைகளை வளர்ப்போம் என்கிறார்கள் அமெரிக்கர்கள். உலகம் முழுவதும் சீமைக்கருவேல் அதிகம் வளர்ந்து இருக்கும் அத்தனை நாடுகளிலும் இதனை கால்நடை தீவனமாக பயன்படுத்துகிறார்கள். 1926 ஆம் ஆண்டிலேயே ஹவாய் தீவில் மதிப்புமிக்க கால்நடை தீவனமாக அங்கீகாரம் பெற்றது சீமைகருவை. இதன் நெற்றுகளை,  1954-ல் தமிழகத்தில் ஆய்வு செய்து பார்த்ததில் நச்சுக்கள் இல்லை என கண்டுபிடித்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் இது பற்றி பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.


நெற்றுக்களில் உள்ள சத்துக்களைப் பற்றி பார்க்கலாம். இதில் உள்ள மொத்த புரதம் 12.4 8 சதம் கொழுப்பு 3.5 9 சதம் நார்ப்பொருள் 25.5 சதம். இவை தவிர பாஸ்பரஸ், கால்சியம், தாமிரம், மாங்கனீஸ், துத்தநாகம், இரும்பு ஆகியவை அடங்கியுள்ளன. இதை இதில் மொத்த ஜீணிக்கும் பகுதி என்பது 75 சதம் என்பது குறிப்பிடத்தக்கது. இது மிகவும் அதிகமான அளவு என்பதைப் பார்க்க வேண்டும். சீமை கருவை நெற்றுகளில் மாடுகளை கொழுக்க வைக்கும் சக்தி நிரம்ப இருக்கிறது.

குஜராத்தில் செய்யப்பட்ட ஆய்வுகளில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இது தீவனச் செலவை 15 முதல் 16 சதம் குறைத்துள்ளது. இத்துடன் கலப்புத்தீவனம் 30 முதல் 40 சதம் கலந்து அளிக்கப்பட்டது. கன்றுகளுக்கு இதனை 20 சதம் கலந்தாலே நல்ல வளர்ச்சி அடைய உதவுகிறது.  கறவை மாடுகளுக்கு கலப்பு தீவனம் 30 சதம் கலந்து தந்தபோது பால் உற்பத்தி செலவு கணிசமாகக் குறைந்தது. தமிழகத்தில் கால்நடை துறையில் உயர் மருத்துவராக இருந்த  டாக்டர் மரியதாஸ், சீமைக்கருவை நெற்றுக்களை கறவை மாடுகளுக்கு  கொடுக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளார்.


கிராமங்களில்
விவசாயக் கருவிகள்
செய்யும் தொழில்
தொடங்கலாம்.

AGRICULTURAL
IMPLEMENTS &  FURNITURES
MAY BE MADE


இதன் மரக்கட்டைகள் தரத்தில் ரோஸ்வுட்டுக்கு  இணையானது. எல்லவிதமான  மரச்சாமான்களையும்  இந்த மரத்தில் செய்யலாம். நிறைய மரங்களுடன் தோப்பாக இருக்கும் இடங்களில் இவற்றைப்பயன்படுத்தி மின்சாரம் கூட தயாரிக்கலாம்.


சீமை கருவை பட்டைகளை தோல் பதனிடப் பயன் படுத்தலாம். இதன் பட்டைகளில் 8.4 சதம் வரை டேனின் உள்ளது. மரங்களை  மிகவும் வலுவான வேலைகளுக்கு ஏற்ற விவசாய கருவிகள், கட்டிடச் சாமான்கள் ஆகியவற்றை செய்யலாம்.தன் மரக்கூழில் பேப்பர் தயாரிக்கலாம். கடினமான முரட்டு அட்டைகள் தயாரிக்க முடியும்.


இது மண்வளத்தை கூட்டும் சக்தி கொண்டது. வேர் முடிச்சுகளில் உள்ள பாக்டீரியாக்கள் மூலம் நைட்ரஜன் சத்தினை நிலைநிறுத்தவும், மண்ணில் அங்ககச்த்தினை அதிகரிக்கவும் கூடியது. சீமை கருவேல மரங்களைச் சுற்றி உள்ள மண்பரப்பை  ஆய்வு செய்து பார்த்தால் அதில் 2 முதல் 3 சதம் நைட்ரஜன் சத்து கூடுதலாக இருக்கும். அதாவது மற்ற இடங்களில் உள்ள மண்ணை விட இந்த சீமைக் கருவேல மரங்களின் அடியில் உள்ள மண்ணில் தழைச்சத்து கூடுதலாக இருக்கும்.  அதற்குக் காரணம் இந்த கருவை மரங்களிலிருந்து உதிரும் இலைகள் தான். அந்த இலைகள் உதிர்ந்து உலர்ந்து  மக்கி மண்ணோடு மண்ணாக  சேரும்போது அந்த இலைகளில் இருக்கும் தழைச்சத்தும், அங்ககச்சத்துக்களும், இதர நுண் சத்துக்களும் மண்ணில் சேருகின்றன.  அதனால் கூடுதலான கார அமில நிலை உள்ள மண்ணில் கூட அது நன்கு வளர்ந்து அதன் கார அமில நிலையை சமப்படுத்தக்கூடியது.  களர் உவர் தன்மை உடைய நிலமாக இருந்தால்கூட  அதில் நீ சீமை கருவை மரங்கள் நங்கு வளர்ந்து அந்த நிலங்களை நல்ல நிலமாக மாற்ற கூடிய சக்தி இந்த சீமை கருவை மரங்களுக்கு உண்டு.


உத்தரப் பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் களர் உவர் நிலங்களில் நன்கு வளர்த்து நல்ல வருவாய் தந்து வருகிறது. இந்த சீமை கருவேல மரங்கள். நம் நாட்டில் மூன்றில் ஒரு பங்கு மரம் வேண்டும் என்று திட்டமிட்டால் நமக்கு விரைவில் உதவக்கூடிய ஒரே மரம் சீமைக்கருவைதான். ஆண்டுக்கு 250 மில்லி மீட்டர் மழை தரக்கூடிய இடங்களில் கூட இந்த மரம் வளரும். எந்த மரமும் வளர முடியாது என்ற நிலையை உடைய நிலங்களில் கூட இந்த மரங்கள் செழித்து வளரக்கூடியது.


எந்த இடத்தில் சீமை கருவை மரங்களை வளர்த்தாலும்  அந்த இடத்தில் மண் அரிப்பை கட்டுப்படுத்தும். குறிப்பாக ஆற்றங்கரைகளில் அல்லது அல்லது குளத்தின் கரைகளில் அல்லது நீர்வரத்துடைய ஏரிக்கரைகளில் எல்லாம் இந்த மரங்களை நடுவதன் மூலம் மண் அரிமானத்தை கட்டுப்படுத்த முடியும். மணற்பாங்கான நிலங்களில் இது காற்றரிப்பைத்  தடுக்கும். அதாவது காற்றினால் ஏற்படக் கூடிய மண் அரிமானத்தை தடுத்து அந்த நிலத்தை நிலை படுத்தக்கூடிய தன்மை உடையது.  


1950 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் பாறைப் பகுதிகளில் அதாவது மனதை பாங்கான நிலப்பகுதிகளில் கிட்டத்தட்ட 700 ஏக்கர் நிலப்பரப்பில் விமானம் மூலமாக இந்த சீமைக் கருவேல் விதைகளை தூவி விதைக்கப்பட்டது. இதற்கு முக்கியமான காரணம் அந்த மரங்கள் மணற்சாரியான நிலங்களிலும் வளரக் கூடியவை என்பதுதான். சீமைகருவேல் மரங்கள் அந்த மண்அரிமானத்தை தடுக்கும் என்பதுதான்.
உலகிலேயே மிகவும் குறைவாக மழை பெறக்கூடிய இடம் அட்டகாமா பாலைவனம். இது  ஒரு வருஷத்தில் 10 மில்லி மழை மட்டுமே பெய்யக்கூடிய இடம். இந்த அட்டகாமா சிலி நாட்டில் உள்ள ஒரு பாலைவனம் அல்லது மணல் பிரதேசம். இங்கு உணவுப்பொருட்கள்,  தீவனம்,  இதர கட்டிடச் சாமான்கள் எல்லாவற்றையும் அந்த பகுதியிலேயே தருவது இந்த மரங்கள்தான். மிகவும் குறைவாக வசிக்கக்கூடிய மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குவது இந்த சீமை கருவேல மரங்கள்தான்.

மக்காச்சோள ரொட்டிக்கு ஈடானது இந்த சீமைக் கருவை மாவு ரொட்டி என்று கொண்டாடுகிறார்கள் செவ்விந்தியர்கள். அதாவது செவ்விந்தியர்கள் வசிக்கும் பகுதியில் அவருடைய முக்கியமான வாழ்வாதாரமாக விளங்குவதே இந்த சீமைகருவை மரங்கள்தான். இந்த நெற்றுக்களிலிருந்து எடுக்கும் மாவினை தயாரித்து அதிலிருந்து ரொட்டி தயாரித்து சாப்பிடுகிறார்கள்.  இதுதான் அவர்களுடைய முக்கியமான உணவாக இருக்கிறது.


FOR FURTHER READING
ON THE RELATED TOPICS

1. மதிப்பு கூட்டுதல் மூலமாக தொழில் தொடங்குவதுதான் இன்றைய இந்தியாவின் முக்கிய தேவை - FOOD PROCESSING  INDUSTRIES - INDIA’S NEED OF THE HOUR – Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/food-processing-industries-indias-need.html

2. உணவு பதப்படுத்தும்  தொழில் இன்றைய இந்தியாவின்  தேவை - FOOD PROCESSING  INDUSTRIES -  IMMEDIATE NEED  FOR INDIA – Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/food-processing-industries-immediate.html

3. இந்திய உணவு சரித்திரத்தில்  இடம்பெற்ற  பதப்படுத்தும் வியாபார  நிறுவனங்கள்  - PRIMARY PROCESSING CUM  BUSINESS INDUSTRIES OF  INDIAN FOOD HISTORY Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/primary-processing-cum-business.html

4. இந்தியாவின் 5 பிரதானமான  உணவு பதப்படுத்தும்    நிறுவனங்கள்  - FIVE PROMINENT FOOD PROCESSING  INDUSTRIES IN INDIA /  Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/5-five-prominant-food-processing.html

5. இந்தியாவின்  உணவு பதப்படுத்தும்  தொழில்கள் - பகுதி 2 - FOOD PROCESSING  INDUSTRIES OF INDIA - PART – 2 /  Date of Posting: Feb 12th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/2-food-processing-industries-of-india.html

6. MAIZE  BASED INDUSTRIES - மக்காச் சோளத்தில்  என்னென்ன  தொழில்கள் செய்யலாம் ? /  Date of Posting: Dec  29th 2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/12/agro-based-industry-maize.html



உங்கள் வீட்டு கூரை மூலம் 30000 லிட்டர் நீரை அறுவடை செய்யலாம் - ROOF WATER HARVEST YOU CAN DO IT




RAIN  HARVESTING POTS OF PAZHAVERKADU






உங்கள் வீட்டு
கூரை மூலம்
30000 லிட்டர் நீரை
அறுவடை செய்யலாம் 

எப்படி ?

இந்த வீடியோ
பாருங்கள் !


ROOF WATER HARVEST

 YOU TOO CAN DO

HARVEST
30000 LITRES
OF WATER
FROM YOUR
ROOF

IN ONE SINGLE DAY


LOOK AT THIS 

TINY
VIDEO FILM



FOR FURTHER READING LISTFROM VIVASAYA PANCHANGAM



1. பழவேற்காடு பகுதியில் பாரம்பரிய கூரைநீர் அறுவடை  -  TRADITIONAL ROOF WATER HARVESTING IN PAZHAVERKADU – Date: 21.12.2019 https://www.gnanasuriabahavan.com/2020/02/30000-roof-water-harvest-you-can-do-it.html

2. பள்ளிக்கூடங்களில்   மழைநீர் சேகரிப்பு - RAINWATER HARVESTING IN SCHOOLS  - Date: 19.12.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2019/12/rainwater-harvesting-in-schools.html

3. மழைநீர்   சேகரிக்க  சில வழிமுறைகள்    - RAINWATER   HARVESTING  - TEN GUIDELINES – Date:19.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/roof-water-harvesting.html

4. தண்ணீரினால்  பரவும்  நோய்கள் -  WATERBORNE  DISEASES – Date of Posting: 19.12.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2019/12/waterborne-diseases.html

5. மழைநீரை சுத்தம் செய்வது      எப்படி ?    HOW TO CLEAN  RAINWATER TO DRINK ? Date of Posting: 18.12.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2019/12/rain-water.html
6. இன்று ஒரு  குறுஞ்செய்தி - கூரைநீர்  அறுவடை - NEWS TODAY - ROOFWATER  HARVESTING / Date of Posting: 13.08.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2019/08/news-today-roofwater-harvesting.html

7. சென்னையில் மழை அறுவடை  விழிப்புணர்வு - ROOFWATER HARVESTING AWARENESS PROGRAMME IN CHENNAI - Date of Posting: 07.07.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2019/07/roofwater-harvesting-awareness.html

8. மழைநீரை  சேகரித்து      சுத்தம் செய்து      குடிக்கலாம்  -   RAINWATER HARVEST CLEAN DRINK/ Date of Posting: 20.08.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/08/rainwater-harvest-clean-drink.html

9. 38000 கோவில்களில்   மழை அறுவடை செய்ய   அரசுக்கு கோரிக்கை !    38000 TEMPLES  NEED    RAINWATER HARVEST / Date of Posting: 12.08.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/08/38000-request-for-rainwater-harvest-in.html

10. இஸ்ரேல்  நாட்டின்  மழை அறுவடை   வாத்தியார்  -   RAIN MAN OF ISRAEL/ Date of Posting: 07.07.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2017/07/water-rain-man-of-israel.html

11. உங்கள் வீட்டு  கூரை மூலம்  30000 லிட்டர் நீரை அறுவடை செய்யலாம்  - ROOF WATER HARVEST  YOU  CAN DO IT / Date of Posting: 27.02.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/02/30000-roof-water-harvest-you-can-do-it.html

12. மழைநீரை  சுத்தப்படுத்த பிளீச்சிங் பவுடர்  CLEAN RAINWATER  BY BLEACHING POWDER / Date of Posting: 19.12.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2019/12/bleaching-powder-cleans-water.html

13. கூரை நீர்   அறுவடை  சில கேள்விகளும்   பதில்களும்     ROOFWATER  HARVESTING QUESTIONS  & ANSWERS / Date of Posting: 19.12.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2017/08/roofwater-harvesting-questions-answers.html


SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...