ENTERING MOJAVE DESERT |
நீர் பார்க்காத
நான் பார்த்த
மொஜாவ்
பாலைவன மரங்கள் -
WATER STARVING
TREES OF
MOJAVE DESERT
கடுமையான பாலவனப் பயணம்
RISKY TRAVEL ACROSS DESERT TREES
தே. ஞானசூரிய பகவான், போன்: +91- 8526195370Email: gsbahavan@gmail.com
முழுமையாக
ஆறு நாட்கள் நான் மொஜாவ் பாலைவனத்தில் பயணம் செய்தோம். அது மிகவும், கடுமையானதாக
இருந்தது. “கையில் தண்ணீர்
இல்லாமல் பயணம் செய்யாதீர்கள்”. “பதினோரு மணி முதல் மூன்று மணிவரை பயணம்
செய்யாதீர்கள்”: வெய்யிலில் நடந்து
செல்லாதிர்” என்ற எச்சரிக்கை
பலகைகள் சாலை நெடுக வைத்திருந்தார்கள்.
ஆனால் ஆச்சரியப்படும்படியான சாலை வசதி இருந்தது. ஆனால் சாலைகள் மேடும் பள்ளமுமாக இருந்தது. நூற்றுக் கணக்கான அடி உயரத்திலிருந்து “கிடுகிடு” பள்ளத்தில் இறங்க
வேண்டி இருந்தது. மேட்டில் ஏறும்போது, ஏதிரே வரும்
கார்களைப் பார்ப்பது கடினமாக இருந்தது.
என்னுடைய மகன் தகவல் தொழில் நுட்பப் பொறியாளராக இருந்தாலும் அற்புதமான
காரோட்டி.
மொஜாவ் பாலைவனத்தின் முக்கிய மரங்கள் (PRIMARY TREE SPECIES OF MOJAVE DESERT)
மொஜாவ் பாலைவனத்தின் முக்கிய மரங்கள் என்று பார்த்தால் 15 முதல் 20 மரங்கள்
இருக்கும். அவற்றில் முக்கிய மானவை என்று
பார்த்தால் ஆறேழு மரங்கள் தேறும். அவை ஜோஷுPவா ட்ரீ, பீனியன் பைன், மெஸ்கைட், கலிபோர்னியா ஐPனிபர், கலிபோர்னியா ஃபேன் பாம், காட்டன் வுட் மற்றும் டெசர்ட் வில்லோ (JOSHUA
TREE, PINION PINE, MESQUITE, CALIFORNIA JONIPER, AND CALIFORNIA FAN PALM, DESERT WILLOW)
இது கண்ணாடி விரியன் பாம்புகள் வசிக்கும் இடம் (THIS IS THE PLACE FOR RUSSEL VIPER SNAKES)
பாலைவனத்தில் பயணம் செய்யும்போது பார்க்கும் இடங்கள் (VIEW POINTS) இருக்கும். அங்கிருந்து முக்கியமான சிலவற்றைப் பார்க்க முடியும். அதுபோல ஒரு வியூ பாய்ண்ட்டில் ஒர் எச்சரிக்கைப்
பலகை இருந்தது. அதில் உயிருடன், நம்மை தாக்க வருவது போல ஒரு விரியன் பாம்பின் படம். “இந்த பாம்புகள் இருக்கும் இடம் ஜாக்கிரதை” என போட்டிருந்தது.
அதைப் பார்த்ததும் என் மனைவி எனக்கு புத்திமதி சொன்னார். “கண்ட செடியில போய் கையை வைக்காதிங்க. இலையப் பாக்கறேன் செடியப் பாக்கறேன்னு”.
விரியன்
பாம்புகள் பற்றி எங்களுக்கு அனுபவும் ஜாஸ்தி. காரணம் எங்கள் தெக்குப்பட்டு கிராமத்தில்தான் நாங்கள்
தங்கி இருக்கிறோம். அங்கு தினம் ஒரு
விரியன் பாம்புகள் சிறியதும் பெரியதுமாக வந்து போகும். விரியன் பாம்புகளின் விஷம் ரொம்பவும் வீரியமானது. நல்ல பாம்பின்
விஷத்தைவிட அது 20 மடங்கு வீரியமான விஷம் கொண்டவை.
மொஜாவ் பாலைவனத்தின் அடையாளம், ஜோஷுவா மரம் (JOSHUA TREE - A SYMBOL OF MOJAAVE DESERT)
மொஜாவ் பாலைவனத்தில் முக்கியமான ஏழு மரங்களில் மிக
முக்கியமான மரம் ஜோஷு;வா மரம். இந்த மரம் மொஜாவ் பாலைவனத்தின்
அடையளமும் கூட. இந்த ஏழில் இரண்டு மரங்கள்
பற்றி நான் ஏற்கனவே எழுதி உள்ளேன்.
ஆனாலும் சுருக்கமாக இந்த மரங்கள் பற்றிப் பார்க்கலாம்.
1. ஜோஷு;வா மரம் (JOSHUA TREE)
இந்த
மரத்தின் தாவரவியல் பெயர் யூக்கா பிரேவிபோலியா (YUCCA BREVEFOLIA). வட
அமெரிக்காவின் கலிபோர்னியா அரிசோனா, நெவாடா, உட்டா ஆகிய நான்கு மாநிலங்களில் மட்டும்தான் இந்த
மரங்கள் இருக்கின்றன. அதுவும் மொஜாவ் பாலைவனத்தில் மட்டும் இருக்கும் மரம். காஹில்லா (CAHUILLA – NATIVE AMERICANS) என்னும் அமெரிக்க பழங்குடி மக்களின் வாழ்வாதாரமாக இருந்த மரம்.
சராசரியாக 50 அடி உயரம் வளரும். இதன் வயது சுமார் 100 ஆண்டுகள்.
2. கலிபோர்னியா விசிறிப்பனை (CALIFORNIA FAN PALM / PETTICOAT PALM)
WASHINTONIA FILIFERA |
கலிபோர்னியா
விசிறிப்பனைக்கு பாவாடைப் பனை என்னும் பெயரும் உண்டு.
இதன் தாவரவியல் பெயர் வாஷிங்டோனியா பிலிபெரா (WASHINGTONIA FILIFERA). பாலைவனங்களில் உள்ள ஒயாசிஸ் (OASIS) என்னும் சோலைகளில் இந்த மரங்கள்
வளர்ந்துள்ளன. நூறு அடி உயரம்வரை வளரும்
இந்த மரங்களின் வயது 250 ஆண்டுகள்.
3. பீனியன் பைன் மரங்கள் (PYNION PINE TREES)
PINUS EDULIS |
இந்த
மரத்தின் தாவரவியல் பெயர் பைனஸ் எடுலிஸ் (PINUS
EDULIS).
இதன் கொட்டைகள் அமெரிக்கப்பழங்குடி மக்களின் உணவாக இருந்தது. இன்றும் கூட மெடிட்டரேனியன் பகுதி சமையலில் ஒரு முக்கியப் பொருளாக இருக்கிறது இந்த பைன் மரத்தின் கொட்டைகள். இதன் மரங்கள் பல நூறு ஆண்டுகளாக வீடுகள் கட்ட மற்றும், விறகாகவும்
பயன்படுத்தி வந்துள்ளார்கள். பீனியன்
கொட்டைகளில் அதிக அளவு புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, தையமின், ரைபோபிளேவின்,
நயாசின் ஆகியவையும் கணிசமாக உள்ளது என்று
சொல்லுகிறார்கள். நியூ மெக்சிகோ, நெவாடா மாநிலங்கள்
பீனியன் பைன் மரத்தை அரசு மரமாகக் கொண்டாடுகிறார்கள்.
4. சீமைக் கருவை மரம் (MESQUITE TREE)
நம்ம
ஊரில் சீமைக் கருவை என்று சொல்லும் மரம்தான்,
இங்கு பாலைவனங்களில் வளரும் “மெஸ்கைட்” என்னும்
மரங்கள். இங்கு இந்த “மெஸ்கைட்” மரவகையில் மூன்று
மரங்கள் உள்ளன. அவை, ஹனி மெஸ்கைட், (HONEY
MESQUITE – PROSOPIS GLANDULOSA), ஸ்குரு பீன்
மெஸ்கைட்(SCREW BEAN
MESQUITE – PROSOPIS PUBESCENS) மற்றும் வெல்வெட்
மெஸ்கைட்(VELVET MESQUITE –
PROSOPIS VELUTINA). இந்த மரங்களோட நெற்றுக்கள் மற்றும் விதைகள்
பழங்குடி மக்களின் வாழ்வாதரமாக இருந்திருக்கு.
இந்த சீமைக் கருவை மரம் மகோகனி மரத்திற்கு
சமமான தரமுடையது. இழைப்பு மற்றும் கடைசல்
வேலைகள் செய்ய ஏற்றதாக இருக்கிறது. உறுதியான, கடினமான இந்த
மரங்களில் எல்லாவிதமான மரச்சாமான்களையும் செய்யலாம். இதன் நெற்றுக்களின் மாவு மெஸ்கைட் மீல் (MESQUITE MEAL), “நூறு சதவிகிதம், “ஆர்கானிக்” என்று விற்பனை
செய்கிறார்கள். மெஸ்கைட் மீல்
சாப்பிட்டால் ரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தினை குறைத்துவிடும் என்கிறார்கள். அர்nஐன்டினாவில் தயார் செய்யப்படும் ‘மெஸ்கைட் மீல்” 24 அவுன்ஸ் மாவு 34.95 டாலருக்கு விற்பனை
ஆகிறது.
5. கலிபோர்னியா ஜூனிபர் (CALIFORNIA JUNIPER)
இந்த
மரத்தினை டெசெர்ட் ஒயிட் செடார் (DESERT WHITE CEDAR) என்றும் சொல்லுகிறார்கள். இதன் தாவரவியப் பெயர் ஜூனிபெரஸ் கலிபோர்னியா (JUNIPERUS
CALIFORNIA). கலிபோர்னியாவிலிருந்து நெவாடா மற்றும் அரிசோனா
செல்லும் வழியில் குறிப்பாக மலைச்சாலைகளில் அரிசோனா செல்லும் வழியில் குறிப்பாக மலைச்
சரிவுகளில் நான் பல மரங்களைப் பார்த்தேன்.
இந்த மரம், இருந்தால் அந்தப் பகுதியில் ஜோஷுவா மரமும் இருக்கும் என்கிறார்கள். இதன் மரங்கள் நேராக நிமிர்ந்து வளராமல், நெளிந்தும், வளைந்தும்,
புதர்களாகவும், அதிகமான கொடி போன்ற சிம்புகளாகவும், வயதான முதிர்ந்த
மரங்கள் நவீன ஒவியங்கள் போலவும் தோற்றம் தருகின்றன. மரங்களை விறகாக மற்றும் கிறிஸ்மஸ் மரங்களாகப் பயன்படுத்துகிறார்கள்.
ஒரு
காலத்தில் இதன் பழங்கள் அமெரிக்கப் பழங்குடிகளின் உணவாக
இருந்த்து. மரங்களில் வில் அம்பு போன்ற ஆயுதங்கள் செய்கிறார்கள். இதன் மரங்களைப் பயன் படுத்த 100 முதல் 300 ஆண்டுகள்
காத்திருக்க வேண்டுமாம். அந்த அளவில்
நின்று நிதானமாக வளருமாம். சுராசரியாக
மரங்கள் 3 முதல் 15 அடிவரை வளரும்.
எவ்வளவு வேகமாக வளர்ந்தாலும் 40 அடியைத் தாண்டாது. ஒர் ஆண்டில் நான்கு அங்குலத்திற்கு மேல் வளராது.
வளர்ந்த மரங்களைப் பார்த்தால் யாரோ அதன் கழுத்தை திருகிவைத்தைப்போல, இருக்கும். நாம்
இதனை ஜூனிபர் மரங்கள் என்கிறோம். ஆனால் இவற்றை உள்ளுர்வாசிகள் “செடார் மரங்கள்” என்று சொல்லுகிறார்கள்.
6. காட்டன்
வுட்
மரங்கள் (COTTON
WOOD TREES)
காட்டன்
வுட் மரத்தின் தாவரவியல் பெயர் பாப்புலஸ் பிரிமான்டி (POPULUS
FREMONTII). வில்லோ (றுஐடுடுழுறு)
தாவரவகையைச் சேர்ந்தது, நல்ல சூழ்நிலையில், நல்ல மண்ணில், நல்ல நீர் வசதியுடன், நல்ல வெளிச்சத்தின்
உதவியுடன் வளர்ந்தால் அதிகபட்சமாக 35 மீட்டர் உயரம் வரை வளரும். ஒடைக்கரைகள், ஆற்றங்கரைகள், ஈரச் செழிப்புடைய
நிலங்கள் ஆகியவற்றில் வளரும்.
அமெரிக்காவில், கலிபேள்னியா,
நெவாடா, அரிசோனா, நியூமெக்சிகோ
பகுதிகளில் இந்த மரங்கள் அதிகம் இருக்கின்றன.
அமெரிக்காவின் மேற்குப் பகுதி மற்றும் மெக்சிகோவில் வசித்த பழங்குடி மக்கள், மரத்தின் பல பகுதிகளை
மருந்தாகவும், மரத்தில் இசைக்கருவிகள், இதர கருவிகள், மற்றும் கூடை முடைய
இதனை பயன்படுத்தி உள்ளார்கள். அரிசோiனா பகுதியில் வசித்த
பழங்குடிகள் இந்த மரத்தைப் புனிதமான மரமாகக் கருதினர். இதன் வேர் மரங்களில் கடவுள் பொம்மைகளை
செய்தார்கள்.
7. டெசர்ட் வில்லோ (DESERT WILLOW)
இதன் தாவரவியல் பெயர் சீலோப்சிஸ் லீனியாரிஸ்
(CHILOPSIS LINEARIS): முப்பது அடி உயரம் வளரும் சிறுமரம்: இதன் ஊதா
பூக்கள், வெளிர் ஊதா பூக்கள் கவர்ச்சிகர மானவை: இதன் அழகுப்
பூக்களால் இவற்றை ஒரு அழகுமரமாகப் பயன்படுத்துகிறார்கள்: 1930ம் ஆண்டில், சிவிலியன் கன்சர்வேவுன் கார்ப்ஸ்” என்னும் திட்டத்தின்
மூலம் காற்றரிப்பைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள் (SHELTER BELTS) செய்ய இந்த மரத்தைப் பயன்படுத்தினார்கள்.
அமெரிக்காவின்
முன்னாள் அதிபர் பிராங்க்ளின் டிலானோ ரூஸ்வெல்ட் (FRANKLIN DELANO ROOSEVELT) அறிமுகம் செய்த நீயூடில் (NEW DEAL) என்றும் திட்டத்தின் பிரதான அங்கமாக செயல்பட்ட
இளைஞர்களின் படைதான்” சிவிலியன்
கர்சர்வேஷன் கார்ப்ஸ் (CIVILIAN CONSERVATION CORPS). இது
இளைஞர்களின் படை. இது
முழுக்க முழுக்க,
இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டது.
கீழ்கண்ட மரவகைகளும் மொஜாவ் பாலைவனத்திற்கு உரிய மரங்கள்தான். ஆனால் குறைவான முக்கியத்துவம் உடையவை.
1. புளூ பேலோ வெர்டி – செர்சிடியம் புளோரிடம் (BLUE PALO VERDE - CERCIIDIUM FLORIDUM)
2.
டெசர்ட் அயன் வுட் - ஆல்நேயா டெசோட்டா (DESERT
IRON WOOD – OL NEYA TESOTA)
3. கேட்கிளா – அகேசியா கிரிக்கி (CAT CLAW/ WAIT A MINUTE BUSH – ACACIA GREGGII)
4. ஸ்மோக்ட்ரி – டேலியா ஸ்பினோசா (SMOKE TREEALEA SPINOSA)5. மெஸ்கைட் - புரசாபிஸ் ஸ்பீசிஸ் (PROSOPIS SPECIES)
5.
டெசர்ட்பூரும் - பேச்சாரிஸ் சரோத்ராய்டஸ் (ABECHARIS SAROTHROIDES)
6. நெட்லீப் ஹேக்பெரி – செல்டிஸ் ரெடிகுலேட்டா (NET LEAF HACKBERRY – CELTIS RETICULATA)
7. லிட்டில் லீஃப் சுமாக். ரூஸ் மைக்ரோபில்லா (LITTLE LEAF SUMAC - RHUS MICROPHYLLA)
8. அரிசோனா வால்நட் - ஜுக்லன்ஸ் மேஐர் (ARIZONA WALNUT – JUGLANS MAJOR)
9. வெல்வெட் ஆஷ்; - ஃபிராக்சினஸ் வெலூட்டினா (VELVET ASH – FRAXINUS VELUTINA)
10. ஸ்பிட் லீஃப் பிரிக்கெல்லியா – பிரிக்கெல்லியா லேசினியேட்டா (SPIT LEAF BRICKELLIA – BRICKELLIA LACINIATA)
11. அரிசோனா காட்டன் டாப் டிஐpட்டேரியா கலிபோர்னிகா (ARIZONA COTTON TOP –DIGITARIA CALIFORNICA)
12. சவுத்
வெஸ்டர்ன் கண்டேலியா – கண்டேலியா லைகாய்டஸ்(SOUTH WESTERN CONDELIA – CONDALLA
LYCOIDES)
மொஜாவ் பாலைவனம்(MOJAVE DESERT)
நான்
முதன் முதலாக பார்த்த பாலைவனம் இது. ஒரு
பாலைவனம் எப்படி இருக்கும்? எந்த அளவு விரிந்து பரந்திருக்கும் ?. அதன்
நிலப்பரப்பு எப்படி இருக்கும்? அதில் எப்படிப்பட்ட மண்வகை இருக்கும்? எப்படிப்பட்ட மரங்கள்
இருக்கும்? எப்படிப்பட்ட புதர் செடிகள் இருக்கும், எப்படிப்பட்ட புற்கள்
இருக்கும்? கற்கள் இருக்கும்? காலை, மாலை, நடுப்பகல், ராத்திரி
எப்படி இருக்கும்? இங்கு வீசும் காற்று, காயும் வெய்யில் -
இவற்றை எல்லாம் எனக்கு சொல்லித் தந்தது மொஜாவ் பாலைவனம்.
வட அமெரிக்காவின் மிகவும் வறண்ட பாலைவனம் (ONE OF THE DRIEST DESERT OF NORTH AMERICA)
வட
அமெரிக்காவின் மிகுந்த வறட்சியான பாலைவனங்களி;ல் ஒன்று, இது. நான்கு பெரிய பாலைவனங்கள் இருக்கு இங்கு. கிரேட் பேசின் பாலைவனம், மொஜாவ் பாலைவனம்,
சிகுகுவான் பாலைவனம், சொனோரான் - இந்த
நான்கு பாலைவனங்கள்தான் முக்கியமான பாலைவனங்கள்.
இதில் மிகப் பெரிய பாலைவனம், கிரேட் பேசின் டெசெர்ட்.
மொஐhவ் பாலைவனத்தின்
பரப்பு எவ்வளவு தெரியுங்களா? ஒரு சதுர கி.மீ இரண்டு கிலோமீட்டர் இல்லை. ஒரு லட்சத்து 24 ஆயிரம் சதுர கிலோ
மீட்டர் - யோசித்துப் பாருங்கள். அதற்குப்
பிறகுதான் நான் யோசித்தேன். “வட அமெரிக்காவில் எவ்வளவு பரப்பில் பாலைவனங்கள்
இருக்கிறது ? இதனைத் தெரிந்து கொள்ள வேண்டும் எனத்
தோன்றியது.
தோராயமாக வட அமெரிக்காவில் 40 சதவிகித
நிலப்பரப்பில் இருக்கின்றன பாலைவனங்கள்.
இந்த மொஜாவ் பாலைவனத்தின் பெரும்பகுதி கலிபோர்னியா மற்றும் நெவாடா
மாநிலங்களில் பரவியுள்ளது. ஒரு சிறுபரப்பு
அரிசோனா மற்றும் உட்டா மாநிலங்களிலும் பரவியுள்ளது.
BEAUTIFUL TREES I SAW IN USA
FOR FURTHER READING
ON RELATED TOPICS
1.
ஊமத்தை ரேபிஸ் நோயை
கட்டுப்படுத்தும் அரிய மூலிகை
- DATURA A VALUABLE MEDICINE AGAINST RABIES – Date of Posting; 24.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/datura-best-traditional-herbal-tree.html
2.
செக்கோயா உலகின்
உயரமான செக்கோயா மரம் - KING SEQUOIA
WORLDS' TALLEST TREE –
Date of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html
3. கலிபோர்னியா விசிறிப்பனை
சாலைகளுக்கு அழகு தரும் மரம்
- CALIFORNIA FAN PALM - GRACEFUL TREE – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/california-fan-palm-graceful-tree.html
4.
டவுக்ளஸ் பிர் -
பிரபலமான மின்சார மரம் DOUGLAS
FIR - - UTILITY POLE TREE –
Date of Posting; 16.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/douglas-fir-popular-utility-pole-tree.html
5.
சில்க்பிளாஸ்-
ஹாலிவுட் அழகுமரம் - SILK FLASS -
HOLYWOOD BEAUTY TREE – Date of Posting; 15.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/silk-flass-holywood-beauty-tree.html
6.
செடார் எல்ம் - உறுதி மிக்க பாறை மரங்கள் - CEDAR ELM -
STRONG TIMBER TREE –
Date of Posting; 14.01.2020 https://vivasayapanchangam.blogspot.com/2020/01/cedar-elm-strong-timber-tree.html
7.
டெக்சாஸ் மவுண்டெய்ன்
லாரெல் ட்ரீ - அழகு மரம் TEXAS MOUNTAIN LAUREL - AWESOME TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-mountain-laurel-awesome-tree.html
8.
சைனிஸ்
பிஸ்டாச்சி மிரட்டும் அழகு மரம் - CHINESE PISTACHE - TREE OF STUNNING BEAUTY –
Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chinese-pistache-tree-of-stunning-beauty.html
9.
டெக்ஸாஸ் பெர்சிமான்
- சிற்பமும் சிலையும் செய்ய ஏற்ற பழமரம் TEXAS PERSIMON -
EXCELLENT TIMBER TREE –
Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-persimon-excellent-timber-tree.html
10.
சுமார்டு சிவப்பு ஒக்
மரம் - கலக்கலான வணிக மரம் SHUMARD RED
OAK - TOP CLASS BUSINESS TREE –
Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/shumard-red-oak-top-class-business-tree.html
11.
சாவன்னா ஹோலி - அழகான
காட்டுமரம் - SAVANNA
HOLY - PRETTY WILD TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/savanna-holy-pretty-wild-tree.html
12.
ரீகல் பிரின்ஸ்
ஒக் -
மரங்களின் சகல கலா வல்லவன் - REGAL
PRINCE OAK A VERSATILE
TREE – Date
of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/regal-prince-oak-versatile-tree.html
13.
மக்னோலியா - ஒரு மரமே
சிறு வனமாகும் - MAGNOLIA - ONE TREE
FOREST – Date
of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/magnolia-one-tree-forest.html
14. லைவ் ஒக் - சமையல் எண்ணை மரம்
LIVE OAK -
COOKING OIL TREE – Date of Posting; 09.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/live-oak-cooking-oil-tree.html
15.
ஈஸ்டன் ரெட் செடார்
வாசனைத்திரவிய மரம் EASTERN RED
CEDAR TREE OF PERFUMES –
Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/eastern-red-cedar-tree-of-perfumes.html
16.
சிட்டல்பா சேம்பியன்
ட்ரீ அங்கீகரிக்கப்பட்ட அழகு மரம் -
CHITALPA CHAMPION A STUNNING
BEAUTY – Date of
Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chitalpa-champion-stunning-beauty.html
17.
ஒசேஜ் ஆரஞ்சு மண்ணரிப்பைத் தடுக்க ரூஸ்வெல்ட்
அதிகம் நட்ட மரம் - OSAGE ORANGE
PET TREE OF ROOSEVELT
– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html
18.
பிக் டூத்
மேப்பிள் சக்கரை மரம் -
BIG TOOTH MAPLE SUGAR TREE– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-tooth-maple-sugar-tree.html
19.
பால்ட் சைப்ரஸ் பாரம்பரிய
மருத்துவ மரம் - BALD
CYPRESS A TRADITIONAL HERB – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/bald-cypress-traditional-herb.html
20.
புளு அட்லஸ்
செடார் தொழில் மரம் - BLUE ATLAS CEDAR TREE OF INDUSTRIES – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/blue-atlas-cedar-tree-of-industries.html
21.
அனாகேச்சோ
ஆர்கிட் அழகு பூமரம்”
- ANACACHO ORCHID GRACEFULL
FLOWERING TREE – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/anacacho-orchid-gracefull-flowering-tree.html
22.
கிரேப்
மிர்ட்டில் நீண்ட பூங்கொத்து மரம் CRAPE MYRTLE
GLAMOROUS FLOWERING TREE – Date of Posting; 06.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html
23.
மெக்சிகன் சைகாமோர்
அழகிய மருத்துவ மரம் - MEXICAN SYCAMORE -
NICE LOOKING TREE – Date of Posting; 16.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/mexican-cycamore-tree.html
24.
ஜோஷுவா அமெரிக்க
பூர்வகுடிகள் மரம் - JOSHUVA TREE OF AMERICAN NATIVES –
Date of Posting; 02.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/joshuva-tree-of-american-natives.html
25.
பப்பாளி உடல்
எடை குறைப்பு மரம் - PAPAYA BODY
WEIGHT REDUCING TREE –
Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/papaya-body-weight-reducing-tree.html
26.
கார்டியா - மரச்சாமான்
மரம்- CORDIA NICE WOOD WORK TREE–
Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/cordia-nice-wood-work-tree.html
27.
பிக்சேஜ் எனும் நோய் போக்கும்
உண்ணி மரம் - BIG SAGE
A PLEASING HERB TOO– Date of Posting; 22.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-sage-pleasing-herb-too.html
28.
டாக்வுட் ட்ரீ -
மலேரியாவை குணப்படுத்தும் மரம் - DOG
WOOD ANTI MALARIA TREE –
Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/dog-wood-anti-malaria-tree.html
29.
சிவப்பு மேப்பிள்
மலிவான மரவாடி மரம் - RED MAPLE
CHEAP TIMBER TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/red-maple-cheap-timber-tree.html
REFERENCES:
No comments:
Post a Comment