Sunday, January 26, 2020

வெட்சி - உடல் பருமனாதல் மற்றும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பூமரம் - VETCHI - DIABETES AND OBESITY CURING HERB



         
         

வெட்சி - உடல் பருமனாதல் மற்றும் சர்க்கரை யைக் கட்டுப்படுத்தும் பூமரம்   



VETCHI - DIABETES AND 

OBESITY CURING HERB  


வெட்சி மரம்

IXORA  
COCCINIA 


தே.ஞானசூரிய பகவான்
போன்: +918526195370,


தாவரவியல் பெயர்: இக்சோரா காக்சினியா (IXORA COCCINIA )தாவரக் குடும்பம் பெயர்: ரூபியேசி காப்பி குடும்பம் (RUBIACEAE)பொதுப் பெயர்கள்: இக்சோரா, ஐங்கிள் ஜெரானியம், ருக்மிணி, வெட்சி (IXORA, JUNGLE GERANIUM, RUGMINI, VETCHI)


பல மொழிப் பெயர்கள் (VETCHI IN DIFFERENT VERNACULAR NAMES)


1.     தமிழ்: இட்லிப் பூ, வெட்சி (IDLY POO, VETCHI)2.     இந்தி: ருக்மிணி (RUGMINI)3.     பெங்காலி: ரங்கன் (RANGAN)
4.     மலையாளம்: சேத்தி (SETHI) 

இக்சோரா காக்சினியா என்ற மரம்பற்றிப் பார்க்கலாம்.  இது தாவரவியல் பெயர்.  அதைச் சொன்னால் நமக்குத் தெரியாது.  இட்லிப் பூ என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியும்.  இதன் செடியில் இருக்கும் போது கொத்தாக வெள்ளை நிறத்தில் இதன் பூக்களைப் பார்த்தால் வந்த விளைவு இது இட்லி மாதிரியும் தெரியும்.  அதனால் அப்படி ஒரு பெயரை வைத்துவிட்டார்கள். 

இட்லி சாம்பார் காலைச் சிற்றுண்டியில் இரண்டும் நட்சத்திர அஸ்தஸ்து உடையவை.  ஆனால் யாரையாவது பார்த்து இட்லி என்றோ சாம்பார் என்றோ சொன்னால் அதன் அர்த்தம் வேறு.  வெட்சிப் பூவைத்தான் நாம் இட்லிப்பூ என்ற சொல்லுகிறோம் என்று தெரிந்த போது எனக்கு சங்கடமாக இருந்தது.  வருத்தமாக இருந்தது.  யார் இந்தப் பெயரை வைத்திருப்பார்கள் என்று எனக்கு கோபம் கூட வந்தது.

வெட்சி தமிழ்நாட்டின் பாரம்பரிய மரம்(VETCHI - TRADITIONAL TREE OF TAMILNADU)


பண்டை தமிழகத்தின் அரசு மரியாதை பெற்ற அரிய பூ மரம், இந்த வெட்சி.

ஆநிறைக் கவர்தல் என்பது தமிழனின் போர்முறையில் ஒன்று.  அந்தப் போரில் போர்புரியும் வீரர்கள், கைகளில் வாள் ந்தி இருப்பார்கள்.  தோளில் வெட்சிப் பூ மாலை அணிந்திருப்பார்கள்.  தமிழ் கலாச்சாரம் இந்தப் போர் நிகழ்வுக்கு ந்திருந்த பெயர் வெட்சித்திணை.

ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க விரும்பினால், அந்த அரசன் அவன் செய்யும் முதல் காரியம் ஆநிறைக் கவர்வதுதான்.  ஆநிறைக் கவர்வது என்பது எதிரி நாட்டின் மீது நடத்தும் பொருளாதரத்தடை.  இது ஒரு வகையான பொருளாதாரக் தாக்குதல்.  மெரிக்கா தன் எதிரி நாடுகளின் மீது இப்போதுதான் பொருளாதாரத் தடை கொண்டு வருது போல.  ஆனால் இது தமிழனுக்கு பால பாடம்.  பால பருவத்தில் விளையாடிய கோலிக்குண்டு.

வெட்சி - அழகான செடிகள்
அழகான பூக்கள்
(VETCHI - BEAUTIFUL PLANTS
AND FLOWERS)


ஐங்கிள் ஜெரானியம், என்பதும் ரெட் இக்சோரா (JUNGLE GERANIUM & RED IXORA) என்பதும் இட்லி செடியின் பொதுவானப் பெயர்கள்.  இலைகள் உதிர்க்காமல், எப்போதும் பசுமையாக இருக்கும்.  இவை காப்பி செடிகளின் குடும்பத்தைச் சேர்ந்ததால், இதன் இலைகளின் சாயல் ஏறத்தாழ அதுபோலவே இருக்கும்.  ஆனால் இட்லி பூச்செடியின் இலைகள் இளம்பச்சை நிறத்தில் இருக்கும்.

இதன் பூக்களை நான் பல நிறங்களில் பார்த்திருக்கிறேன்.  ஆனால் வெள்ளையும், சிவப்பும் அதிகம்.  சிவப்பில் கூட, இளஞ்சிவப்பு, ஆழமான சிவப்பு, ஆரஞ்சு நிறம் எல பல நிறங்களில் இருக்கின்றன.  நூற்றுக் கணக்கான பூக்களின் தொகுப்புதான் இந்த இட்லி பூ.  இட்லி பூ அல்ல.  பூங்கொத்துக்கள்  நூற்றுக் கணக்காக பூக்கள் இருந்தாலும் பூக்கள் எல்லாமே ஒரே மட்டத்தில் இருக்கும்.  பூங்கொத்தின் நடுப்பகுதி பூக்களின் காம்புகள் சிறுசாய் இருக்கும்.  விளிம்பில் இருப்பவைக்கு காம்புகள் நீளமாய் இருக்கும்.  ஆனால் பூக்களின் மேல்பக்கம் பார்த்தால் ஒரே மட்டமாக இருக்கும்.

வெட்சி - தென்னிந்தியாவிற்கு
சொந்தமான மரம்(VETCHI - SOUTH INDIAN TREE)


இந்த வெட்சிப்பூ மரம், தென்னிந்தியா, ஸ்ரீலங்கா மற்றும் வங்கா தேசத்துக்கு சொந்தமானது.  அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்துக்காரர்கள் இதனைப் பெருமளவில் அழகுமரமாகப் பயன்படுத்துகிறார்கள்.  சூரினாம் என்ற நாட்டில் தேசியப் பூ (JUNGLE GERANIUM & RED IXORA) என்னும் அதிகாரம் பெற்றுள்ளது, வெட்சிப் பூ.

வெட்சி - மருத்துவப் பண்புகள் கொண்ட
தாவர ரசாயனங்களைக்
கொண்து (VETCHI - RICH IN
PHYTO CHEMICALS WITH MEDICINAL PROPERTIES)


பைட்டோ கெமிகல்ஸ் எனும் தாவர ரசாயனங்கள் இதில் நிறைந்துள்ள தாவரம் இது.  அதனால், இது பல நோய்களை குணப்படுத்தும் சத்தி உடையது.  பாரம்பரிய மருத்துவம், இந்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், ஆங்கில மருத்துவம் என எல்லா மருத்துவ முறைகளுக்கும், மூலிகையாக உதவுகிறது, இந்த வெட்சி மரம்.  இதன் பூக்கள், இலைகள், வேர்கள், தண்டுகள் அனைத்தும் மருந்தாகப் பயன்படுகிறது.

இதில் லூப்பியால், உள்சோலிக் அமிலம், ஒலியோனிக் அமிலம், சைட்டோஸ்டிரால், ரூட்டின்ப லியூகோசயணிடின், ஆன்தோ சயனின்கள், புரோஆன்தோ சயனிடின்கள், மற்றும் கிளைகோசைட்ஸ், இதில் அடங்கியுள்ளன, என ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்கள்.

வெட்சி - பாலியல் நோய்களையும்
குணப்படுத்தும்(VETCHI - CURES SEXUAL DISEASES TOO)


பெண் உறுப்பில் ஏற்படும் வெள்ளைப்படுதல், சூத்கவலி, மற்றும் புற்றுநோய் உட்பட பலநோய்களைக் கட்டுப்படுத்தும் சத்தி இதில் உள்ளது.  இவை தவிர ரத்தவாந்தி, ரத்த அழுத்தம், வயிற்றுக் கடுப்பு ஆகியவற்றையும் ஆச்சரியப்படும் வகையில் குணப்படுத்தும் சக்தி உடையவை இதன் பூக்கள்.

தோல் நோய்கள், குறிப்பாக ஸ்கேபிஸ் என்று சொல்லப்படும் சிரங்கு நோய், மற்றும் நுண்ணுயிர்களுக்கு என்கிறான் நுருமிநாசினி யாகவும், கட்டுப்படுத்தவும் (ANTISEPTIC AND ASTRINGENT), புண்களை, காயங்களை குணப்படுத்தவும் உதவுகிறது, வெட்சியின் வேர்கள்.

இக்சோரா தாவரக்குழுவைச் சேர்ந்த பல தாவரவகைகள் சிறப்பான மூலிகைகளாக உள்ளன என்று ஆய்வுகள் சொல்லுகின்றன.

சங்க இலக்கியங்கள் போற்றும் வெட்சி
( TAMIL LITERATURE PORTRAYS VETCHI)


இதன் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி

என்று அகநானூறு 133 வது பாடலில் (14-18) நிலம் பற்றிய வர்ணனையில் வெட்சி பற்றி சொல்லுகிறது.
காடை என்ற பறவையின் காலில் உள்ள முள்ளைப்போல வெட்சியின் அரும்புகள் முதிர்ந்தும் மலர்ந்தும் இருக்கின்றன என்று சொல்லுகிறது.

வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்ட
கட்சி காணாக் கடமா நல் ஏறு
கடறு மணி கிளர, சிதறு பொன் மிளிர.
(புறநானூறு 202 / 1-5)


வெட்சி மரங்கள் நிறைந்த ஒரு மலைக்காடு.  அதற்கு வெட்சிக்காடு என்று பெயர்.  அதன் ஊடாக மேய்த்து கொண்டிருந்த மானைத்துரத்த, அது அகப்பிடாமல் தப்பி ஒடியது.  அப்போது அங்கிருந்த மானில் கால்பட்டு பொன்னும் மணியும் சிதறின என்கிறது, மேலே இருக்கும் புறநானூற்றுப் பாடல்.

உடல் பருமனாதல் மற்றும்
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் வெட்சி(VETCHI  CURES OBESITY AND DIABETES)


வெட்சி மரங்களின் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், உடல் பருமனாதல் சரியாகும்.  அத்தோடு சர்க்கரை நோயையும் இது சரிசெய்யும்.  மேலும் ஆஸ்துமா, தோல் சம்மந்தமான நோய்கள், குடற்புண், வயிற்றுப்போக்கு, செரிமானப் பிரச்சினைகள், புண்கள், காயங்கள் போன்ற பலவற்றையும் குணப்படுத்தும்.

FOR FURTHER READINGON RELATED TOPICS


1. காரை மரம்   அனைத்து   மருத்துவ   முறைகளும்   பயன்படுத்தும்   மூலிகை -   KARAI MARAM  HERB  FOR ALL  MEDICAL SYSTEMS – Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/karai-maram-herb-for-all-medical-systems.html

2. புளிச்சக்காய் மரம் உலகம் முழுக்க                                              பிரபலமான  மூலிகை  -  PULICHAKKAI MARAM WORLD RENOWNED HERB– Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/karai-maram-herb-for-all-medical-systems.html

3. மதுக்காரை மரம்   அற்புத ஆயுர்வேத   மூலிகை    MADHUKKARAI    ACCEPTED AYURVEDIC HERB    – Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/madhukkarai-accepted-ayurvedic-herb.html

4. மலைவேம்பு மரம்                                              எல்லா மருத்துவ                                             முறைகளுக்கும்                மருந்தாகும்               மூலிகை  -   MALAIVEMBU MARAM OUTSTANDING  TREE HERB – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/malaivembu-maram-outstanding-tree-herb.html

5. நொச்சி மரம்   பல நோய்   குணப்படுத்தும்   மூலிகை   -   NOCHI MARAM -  MULTISPECIALITY  TREE HERB – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/nochi-maram-multispeciality-tree-herb.html

6. மருத்துவம் பேசும் 21 மரங்கள்     - 21  MEDICINAL TREES   BOOK   – Date of Posting; 03.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html

7. வெள்அத்தி மரம்  சித்தப்பிரமையை  சீராக்கும்  மூலிகை     VELL-ATHI MARAM CURE MENTAL DISORDERS – Date of Posting; 31.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/vell-athi-maram-cure-mental-disorders.html

8. பன்னீர்மரம்  ஒரு  பாலுணர்வுத் தூண்டி  மூலிகை மரம் -  PANNEER MARAM  NATURAL SEX DRIVING HERB – Date of Posting; 26.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/panneer-maram-natural-sex-driving-herb.html
9. மலம்புளுவன்   பாலைவன  மருத்துவ மரம்  MALAMBULUVAN -  MATCHLESS   DESERT  TREE HERB – Date of Posting; 27.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/malambuluvan-matchless-desert-tree-herb.html

10. சேங்கொட்டை - பெண்களுக்கான   கருத்தடை மூலிகை -  SENKOTTAI  SUPREME  FAMILY PLANNING HERB – Date of Posting; 29.12.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/senkottai-supreme-family-planning-herb.html

11. இடலை மூலிகை மரம்  பாம்புக்கடியை  குணப்படுத்தும்     IDALAI MARAM  CURES SNAKE BITES – Date of Posting; 30.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/idalai-maram-cures-snake-bites.html

12. காட்டலரி பல நோய்களை   கட்டுப்படுத்தும்   சிறந்த  மூலிகைமரம்   - KATTALARY HERB  CURE MANY DISEASES – Date of Posting; 21.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/kattalary-herb-cure-many-diseases.html


13. புத்திரன்ஜீவா - குழந்தை பாக்கியம் தரும் மரம் - PUTRAN JIVA – UNISEXUAL  FERTILITY TREE  – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/putran-jiva-unisexual-fertility-tree.html

14. நஞ்சுள் மரம் சிசேரியனிலிருந்து  கர்ப்பிணிப்  பெண்களை  காப்பாற்றும்  மரம் -  NANJUL – SAVE  PREGNANT MOTHERS  – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/nanjul-save-pregnant-mothers.html

15. சூரை  இலந்தை ஒரு  ஆயுர்வேத மருத்துவ மரம்  - SOORAI ILANTHAI – AN AYURVEDIC  MEDICINAL TREE – Date of Posting; 30.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/soorai-ilanthai-ayurvedic-medicinal-tree.html

16. நாட்டு பாதாம்கொட்டை வைரஸ் நோய் நீக்கும்   மருந்து மரம் - NATTU PADHAMKOTTAI  -  IDEAL  TREE HERB  – Date of Posting; 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/nattu-padhamkottai-ideal-tree-herb.html

       REFERENCES:1.    WWW.IJRPC.COM/”A REVIEW ON PHYTOCHEMICAL AND PHARMACOLOGICAL ACTIVITY OF GENUS IXORA”
2.      WWW.RESEARCH GATE.NET / IXORA COCCINIA – TRADITIONAL USES.
3.      WWW.GREENLANDSCAFL. /JUNALE FIERANIUM – IXORA COCCINIA.




No comments:

A CITY COLLEGE EDUCATE STUDENTS TO CONSERVE RIVERS - ஆறுகள் பாதுகாப்புக் கல்வி நூல் வெளியீடு

  ஊர் கூடி  தேர் இழுக்கலாம்  வாங்க (ஆறும் ஊரும் தமிழ் நாட்டின் நூறு ஆறுகளின் கதை சொல்லும் நூலிலிருந்து ஒரு பகுதி)   நான் எழுதிய “ஆறும்...