Monday, January 20, 2020

கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் சிறந்த மூலிகை மரம் இருளி மரம் - TOPMOST HERBAL TREE OF WESTERN GHATS




இருளி 

மரம்

IRULI 

TREE


PERSEA  MACRANTHA


கிழக்கு மற்றும் மேற்கு
தொடர்ச்சி மலைகளின்
சிறந்த மூலிகை மரம் 
இருளி மரம்

TOPMOST HERBAL TREE OF WESTERN GHATS

    


 இருளி மரங்களைக் காலங்காலமாக மருந்துப் பொருளாகப் குறிப்பாகஆஸ்துமா மற்றும் மூட்டுவீக்ம் மூட்டுப் பிடிப்பு மற்றும் மூட்டுவலியை குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள். 



இதன் பழங்களிலிருந்து எடுக்கும் ஒருவகை எண்ணெயிலிருந்து அழகு சானப் பொருட்கள் தயாரிக்கிறார்கள்.


இதன் இலைகளைப் பயன்படுத்திஉடலில் ஏற்படும் புண்களை குணப்படுத்தலாம்.  இருமல்வயிற்றுப்போக்குவயிற்றுக்கடுப்புகைகால் வீக்கம் ஆகியவற்றையும் குணப்படுத்தும்.


தே. ஞானசூரிய பகவான்போன்: + 8526195370Email: gsbahavan@gmail.com


தாவரவியல் பெயர்: பெர்சியா மக்ரந்தா (PERSEA  MACRANTHA)தாவரக்குடும்பம் பெயர்: லாரேசி (LAURACEAE)தாயகம்: மேற்குத் தொடர்ச்சி மலை, இந்தியா), ஸ்ரீலங்கா (WESTERN GHATS, INDIA, SRILANKA )பொதுப் பெயர்கள்:பலமொழிப் பெயர்கள்: இருளி மரம் (IRULI TREE) 


1.தமிழ்: இருளி, கொலமாவு, கொலர் மாவு (IRULI, KOLAMAVU, KOLARMAVU)2.மலையாளம்: குலமாவு, ஊரவு (KULA MAVU, OORAVU)3.மராத்தி: குலாம்பா (GULAAMBA)4.வுநுடுருபுரு நாரா (NARA)

ஆயுர்வேத மருந்துவ உலகம், மூலிகை மரமாக அறிந்த மரம்.  இந்தியாவிற்கு சொந்தமான மரம்.  குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிக்கு சொந்தமானது.  இது ஸ்ரீலங்காவிற்கும் சொந்தமானது.


லாரேசி தாவரக்குடும்பம் நிறைய தாவர வகைகளைக் கொண்டது.  சுமார் 2800 க்கும் மேற்பட்ட தாவரவகைகளை உள்ளடக்கியது.  இதில் கேசித்தா (CASSYTHA) என்ற தாவரஇனம் மட்டும் ஒட்டுண்ணி கொடிவகையை உள்ளடக்கியது.

நூறடி உயரம் வளரும் மரம் (TALL TREES)



இருளி மரங்கள் சுமார் நூறடி உயரம் வரை வளரும்.  தனி இலைகளைக் கொண்டது.  கிளை நுனிகளில் பூக்கும்.  பூங்கொத்துக்களாகப் பூக்கும்.  கனிந்த இதன் பழங்கள் கருப்பு நிறமாக மாறும்.  இந்த மரங்கள் பசுமை மாறா காடுகளில் (EVERGREEN FORESTS) இருக்கின்றன.  தென் மாநிலங்களில் 1100 முதல் 1900 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில் இருக்கின்றன.


மரங்கள் பரவியிருக்கும் இடங்கள் (DISTRIBUTION)



மகாராஷ்ட்ரா மாநிலத்தில், கோலாப்பூர், பூனா, ரெய்காட், ரத்னகிரி, இந்துதுர்க் ஆகிய இடங்களில் இந்த மரங்கள் பரவியுள்ளன.  கர்நாடகாவில், சிக்மகளுர், கூர்க், ஹாசன், மைசூர், நார்த் கேனரா, ஷிமோகா ஆகிய இடங்களிலும், தமிழ்நாட்டில், கோயம்புத்தூர், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, தேனி ஆகிய இடங்களிலும் பரவியுள்ளன.  கேரள மாநிலத்தில் எல்லா மாவட்டங்களிலும் பரவியுள்ளன.

மருத்துவப் பயன்கள் (MEDICINAL USES)



இருளி மரங்களைக் காலங்காலமாக மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள், குறிப்பாக, ஆஸ்துமா மற்றும் மூட்டுவீக்ம் மூட்டுப் பிடிப்பு மற்றும் மூட்டுவலியை குணப்படுத்த இதனை பயன்படுத்துகிறார்கள்.  இதன் வேர்களில் போட்போஸ்டீரால்ஸ், கிளைகோசைட்ஸ், ஆல்கலாய்ட்ஸ், ஆகியவை உள்ளன.  இவை எல்லாம்தான் இதற்கு மருத்துவ குணங்களைத் தருகிறது. 

அகர்பத்திகள் தயாரிப்பதற்கும்.    இது பயன்படுகிறது.  இதன் இலைகளைப் பயன்படுத்தி, உடலில் ஏற்படும் புண்களை குணப்படுத்தலாம்.  இருமல், வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு, கைகால் வீக்கம் ஆகியவற்றையும் குணப்படுத்தும்.  இதன் பழங்களிலிருந்து எடுக்கும் ஒருவகை எண்ணெயும் பயன்தருகிறது.  இதிலிருந்து அழகு சானப் பொருட்கள் தயாரிக்கிறார்கள்.


பெர்சியா இன மரங்கள் (PERSEA GENUS)



பெர்சியா தாவர வகையில் சுமார் 150 மரவகைகள் இருக்கின்றன.  இந்த மரவகையில் நமக்குத் தெரிந்த பிரபலமான பழமரம் ஒன்று உள்ளது.  அந்த பழ மரத்தின் தாவரவியள் பெயர் பெர்சியா அமெரிகானா (PERSEA AMERICANAஎன்பது.  இதன் பொதுப்பெயர் அகேடோ.  தமிழ்ப் பெயர் வெண்ணெய்ப்பழம்.  ஆங்கிலத்தில் பட்டர் புருட் இதன் சொந்த ஊர் மெக்சிகோ.

திருத்தணி கன்னிக்கோயிலில் இருளி மரம் (IRULI TREE IN KANNI TEMPLE OF THIRUTTANI)


திருத்தணியில் கன்னிக்கோயில் என்று கோயில் இருக்கிறது.  அது ஒரு காலத்தில் மகா சித்தர்கள் வசித்த இடம். அங்கு ஞானசித்தி தரும் ஏழு மூலிகை மரங்களை பிரதிஷ்டை செய்து வளர்த்து வந்தார்கள்.  அந்த ஏழு மரங்கள்.  ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிளைந்து இன்றும் இருப்பதாகச் சொல்லுகிறார்கள், அந்த ஏழு மூலிகை மரங்களில் ஒன்று, இருளி மரம்.  இதர ஆறு மூலிகை மரங்கள், அரசு, கல்லரசு, கரும்பிலி, தேவ ஆதண்டம், வேம்பு, மற்றும் கார்த்திகம்.

       REFERENCES:


1. WWW.EN.M.WIKIPEDIA.ORG – “PERSEA MACRANTHA”
2. WWW.INDIABIODIVERSITY.ORG – “PERSEA MACRANTHA”
3.WWW.TANDF.ONLINE.COM/EFFECT OF PERSEA MACRONTHA ACUTE INFLAMATION AND ADJUVANT – INOVCED ARTHRITIS IN RATS – (RESEARCH ARTICLE)
4.   WWW.HEALTHY LIFELIVE.ORG-PERSEA MACRANTHA
5. WWW.INNOVAREACADEMICSIN/PHARMACOGNOSTICAL STUDIES ON PERSEA MACRANTHA.
6.      WWW.TAMILAND VEDAS.COM/”VIYAPPOOTTUM ATHISAYAMARANGAL”
        

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...