இன்று ஒருகுறுஞ்செய்தி
NEWS TODAY
நபிகள் நாயகம்பயன்படுத்திய பல்குச்சி
உகாய் என்னும் பெருவிளாசால்வடோரா பெர்சிகா
TOOTH BRUSH TREE
SALAVADORA PERSICA
NATIVE OF INDIASAUDI ARABIA &EGYPT
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதிஅரேபியாவிலும் ஆப்ரிக்காவிலும்மெஷ்வாக்தான் பல்லுக்கும் சொல்லுக்கும் பக்காவான உறுதி !
நபிகள் நாயகம் தனது வாழ்நாளில் பல்துலக்க பயன்படுத்தியது மிஷ்வாக் என்னும்
மரத்தின் வேர்க்குச்சிகளைத்தான். பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ள
மிஸ்வாக் மரத்தின் குச்சிகளின்
எப்படி பயனுள்ளதாக இருக்கிறது என பலமுறை அண்ணல் நபி
நாயகம் மக்களுக்கு எடுத்து
சொல்லியுள்ளார்.
இதுபற்றி குர்ஆனில் சொல்லப்பட்டிருப்பதாக
சொல்லுகிறார்கள். உலகம் முழுக்க
உள்ள இஸ்லாமிய மக்கள் கடந்த 1000 ஆண்டுகளாக
மிஷ்வாக் மரத்தின் குச்சிகளை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த மிஸ்வாக்
மரத்தின் தாவரவியல் பெயர் சல்வடோரா பேர்சிகா. இதனை
தமிழில் உகாய்மரம் என்றும் பெருவிளா என்றும் சொல்லுகிறார்கள். ஆங்கிலத்தில் இதன் பொதுபெயர்
டூத் பிரஷ் ட்ரீ (TOOTH BRUSH TREE). அரேபியா
ஆப்பிரிக்கா தென்மேற்கு ஆசியா இந்தியா பாகிஸ்தான் இலங்கை ஆகிய நாடுகளில் இந்த மரங்கள் இருக்கின்றன.
இந்த மரத்தின்
சொந்த ஊர் இந்தியா, சவூதி அரேபியா மற்றும் எகிப்து.
இப்போது
நாம் பயன்படுத்தும் வடிவில் டூத்பிரஷ் வந்தது 1938 ல்.
ஆனால் பல்குச்சி பிறந்தது, கிறிஸ்து பிறப்பதற்கு 3000
ஆண்டுகளுக்கு முன்னால் என்று சொல்கிறார்கள்
ஆராய்ச்சியாளர்கள். இப்போது நாம் பயன்படுத்தும் மாடலில் டூத்பிரஸ் முதன் முதலில் தயார் செய்தது
சைனாதான். இந்த பிரஷ்களை பன்றி முடியில்
தயரித்ததாக சொல்லுகிறார்கள்.
ஆப்பிரிக்க மக்களும் பெரும்பகுதி இந்த மிஸ்வாக் மரத்தின் வேர்க்குச்சிகளைத்தான் பல்துலக்க பயன்படுத்துகிறார்கள் இது ‘ஆர்கானிக் காலம்’ அதனால் மெல்ல
மறைந்து கொண்டிருந்த இந்த பழக்கத்தை மீண்டும் வழக்கத்திற்கு கொண்டு வருகிறது
அமேசான், அலிபாபா போன்ற ஆன்லைன் நிறுவனங்கள். மெஷ்வாக் என்ற பெயரில் ஒரு டூத்பேஸ்டும் மக்களிடையே பிரபலமாகியுள்ளது
!
No comments:
Post a Comment