Saturday, January 18, 2020

தும்பிலி உயர்தர மரவேலை மரம் THUMBILI A CLASSICAL TIMBER TREE


மரவேலைகளுக்கு ஏற்ற
உயர்தர இந்திய மரங்கள்

TOPCLASS INDIAN
TIMBER TREES


தும்பிலி உயர்தர 

மரவேலை மரம்

THUMBILI A CLASSICAL

TIMBER TREE



கிழக்குத் தொடர்ச்சிமலைப்பகுதி மரங்கள் 

கருங்காலிமரத்தை ஒத்த மலபார் எபனி /தும்பிலி மரம்

  



BLACK AND WHITE
EBONY


 

TREES OFEASTERN GHATS


தே. ஞானசூரிய பகவான்போன்: + 91-8526195370
Email: gsbahavan@gmail.com



தாவரவியல் பெயர்: டயோஸ்பைரோஸ் மலபாரிகா (DIOSPYROS MALABARICA)தாவரக்குடும்பம் பெயர்: எபினேசி (EBANACEAE)தாயகம்: இந்திய, தெற்கு ஆசியா (INDIA – SOUTH ASIA)பொதுப் பெயர்கள்: காப் ட்ரீ, மல பார் எபனி, பிளாக் அன்ட் ஒயிட் எபனி, பேல் மூன் எபனி(GAUB TREE, MALABAR EBONY, BLACK AND WHITE EBONY, PALE MOON EBONY)டயோஸ் பைரோஸ் தாவரவகை மரங்கள் (TREES OF DIOSPYROS GENUS)



டயோஸ்பைரோஸ் தாவரக் குழுவில் கிட்டத்தட்ட 700 வகை இங்கள் இருக்கின்றன.  எல்லாமே இலை உதிர்க்கும் பசுமை மாறாத மரங்கள்.  இந்த வகை மரங்கள் பெரும்பாலும் வெப்பமான இடங்களில்தான் வளரும்.  இந்த வகையைச்; சேர்ந்த மரங்கள் எல்லாமே கடினமான, உறுதியான, தரமான மரங்களைத் தரும்.  இந்த மரங்கள் எல்லாவற்றையும் பொதுவாக ஆங்கிலத்தில் சொல்லுவது எபனி (EBONY).


இதில் பழமரங்களும் இருக்கின்றன.  பழமரங்களுக்கு பெர்சிமான் மரங்கள் (PERSIMON) என்று பெயர்.  தமிழில் இந்த மரங்களுக்குப் பெயர் கருங்காலி.  ஆனால் இந்த குறிப்பிட்ட மரத்தை தும்பிலி என்று சொல்லுகிறார்கள்.  இந்த வகையில் சில அழகு மரங்களும் (ORNAMENTAL TREES) இருக்கின்றன.


எபனி மரத்தின் பொதுவான பண்புகள் (COMMON CHARACTERS OF EBONY)



எபனி மரங்கள் என்றால் தமிழில் கருங்காலி என்று பெயர்.  கருங்காலி என்றால் கருப்பு மரம்.  இதன் வயிரப்பகுதி (HARD WOOD) கன்னங்கரேல் என இருக்கும்.  இந்தியாவிலும் பல கருங்காலி மரங்கள் இருக்கின்றன.  கருங்காலி என்றால் உறுதியானது: கடினமானது, எடை அதிகமானது, தண்ணீரில் போட்டால் மிதக்காது, மூழ்கிவிடும்.  நுட்பமான வேலைகள், மற்றும் கடைசல் வேலைகள் செய்ய ஏற்ற மரம்.  இழைப்புக்கு ஏற்றவாறு மெருகு கூடும்.  கருங்காலி ஒர் அழகுமரம்: அதி அற்புதமான கட்டைமரம் (EBANACEAE) தரும்.  தும்பிலி மரமும் அவ்விதமான பண்புகளைக் கொண்டதான்.


மரங்கள் பரவியிருக்கும் நாடுகள் (DISTRIBUTION)



இந்தியா, ஸ்ரீலங்கா, நேப்பாளம், பங்களாதேவு;, மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், மலேசியா, இந்தோவேரியா ஆகிய நாடுகளில் இந்த மரங்கள் பரவியுள்ளன.


அழகான பூக்கள் தரும் (BEAUTIFUL FLOWERS)



பசுமைமாறாத இந்த மரங்கள் அழகான பூக்கள் தரும்.  பூக்கள் பசுமையாகவும், வெண்மையாகவும் இருக்கும்.  இலைகள் ளிச் சென்ற பசுமை நிறமாக இருக்கும்.  கனிந்த பழங்களை சாப்பிடலாம்.  இனிப்பாக இருக்கும்.  சுவையாக இருக்கும்.  நல்ல மணமாக இருக்கும்.  முதிராத காய்களிலும், பட்டைகளிலும் ஆயுர்வேத மருந்துகள் செய்யலாம்.  இதன் இலைகள் மற்றும் பழங்களிலிருந்து, சாயம் எடுக்கலாம்.  இந்த மரங்கள் 100 அடிக்கும் மேலாக வளரும்.


இதன் பழங்கள் பசுமை கலந்த மஞ்சள் நிறமாக இருக்கும்.  இரண்டு முதல் ஐந்து செ.மீ. குறுக்ககளவும், மென்மையான பழத்தையும் உடையதாக இருக்கும்.


ஆயுர்வேத மருந்துகள் செய்ய உதவுகிறது (BARK, LEAVES & FLOWERS ARE USED IN AYURUEDIC MEDICINES)



மரத்தின் இலைகள், பட்டைகள், பூக்கள் மற்றும் பழங்கள் ஆயுர்வேத மருந்துகள் செய்யப் பயன்படுகின்றன.  தொழுநோய், மேகவெட்டை(GONORRHOEA) , ரத்தத்தை பாதிக்கும் நோய்கள், வயிற்குப்போக்கு, வயிற்றுக்கடுப்பு, ஐலதோஷம், காய்ச்சல், உடலில் ஏற்படும், காயங்கள், புண்கள், கட்டிகள், ஆகியவற்றைக் குணப்படுத்த மருந்துகள் செய்கிறார்கள்.  இதன் விதைகளிலிருந்து எடுக்கும் எண்ணெய்கூட மருந்து தயாரிக்க உபயோகமாகிறது.


இதர பயன்கள் (OTHER USES)



முற்றாத இதன் காய்களில் டேனின் அதிகம் உள்ளது.  டேனின் சந்தினை தோல் பதனிட பயன்படுத்தலாம்.  இந்த டேனின்ல் ஒட்டும் பசை தயாரிக்கிறார்கள்.  இந்த பசையை படகுகளின் அடிப்பகுதியில் பூச பயன்படுத்துகிறார்கள்.  இதனால் அந்தப் பகுதியில் இருக்கும் மரங்கள் அழுகாமல் பாதுகாக்கும்.  புத்தங்ககள் பைண்டிங் செய்ய இது உதவுகிறது.  இதன் பழங்களிலிருந்து, ஒரு கருப்புநிற எண்ணெய் தயாரிக்கிறார்கள்.  இதிலிருந்து வார்னிஷ் கூட தயாரிக்கலாம்.  இதன் டேனினிலிருந்து எடுக்கும் சாயத்தின் மூலம் துணிகளுக்கு நிறமூட்டுகிறார்கள்.


மரத்தின் தன்மை மற்றும் தரம் (NATURE AND QUALITY OF WOOD)


   
இதன் வயிரப்பகுதி மரங்கள் முழுசாக கருப்பாக இருக்கும்.  சிலவற்றில் மரத்தின் நடுநடுவே மஞ்சள், காவி சாம்பல் மற்றும் ரோஜா நிறக் கோடுகள் ஒடும், இந்தக் கோடுகள் சிலசமயம் அகலமாகவும் இருக்கும்.  கருங்காலி மரங்களுக்கு உரிய வழக்கமான  குணங்கள் இதற்கும் இருக்கும்.  மரங்கள் கடினமாக இருக்கும்.  உறுதியாக இருக்கும்.  கனமாக இருக்கும்.  நீண்ட நாட்களுக்கு இந்த மரங்களில் செய்த மரச்சாமான்கள், உழைக்கும்.  சிறிய மரங்களில் வயிரப் பகுதி இருக்காது.  அப்படிப்பட்ட மரங்களை, கம்பங்கள்.  சட்டங்கள், விவசாயக் கருவிகள் செய்ய உபயோகப்படுத்தலாம்.


ங்கு வளரும்  ?(SUITABILITY OF SOIL)

   

தாழ்வான மழைக்காடுகளில், ஆற்றங்கரைகளில், ஒடைக்கரைகளில், நிழற்பாங்கான இடங்கள், ஈரப்பசை மிகுந்த நிலப்பகுதிகள் ஆகியவற்றில் இந்தத் தும்பலி மரங்கள் நன்கு வளரும்.

மணல்சாரியான மண், நடுத்தரமான இளக்கமான இருமண்பாட்டு மண், கடினமான களிமண், அமிலத்தன்மை உடைய மண், நடுத்தரமான கார அமிலநிலை உள்ள மண், உப்பு மண், போன்ற பலவகையான மண்கண்டங்களிலும் நன்கு வளரும்.  அத்தோடு முழுமையான நிழலுடைய பகுதி, சுமாரான நிழல் பகுதி, மற்றும் சுத்தமாக நிழல் இல்லாத இடங்களிலும் வளரும்.  ஆனால் ஈரப்பசை உள்ள மண்கண்டத்தில் இந்த மரங்கள் விருப்பமாக வளரும்.


மரங்கள் நீண்டநாள் உழைக்கும் (DURABLE TIMBER) 

   
வயிரப்பகுதி மரங்களில், கருவிகளின் கைப்பிடிகள், துப்பாக்கிக் கட்டைகள், இசைக்கருவிகள், மேஜை நாற்காலிபோன்ற மரச்சாமான்கள், கேபினட்டுகள், நெசவுத்தறிகளின் உதிரி பாகங்கள், ஆகியவை செய்யலாம்.

புதிய விதைகள் நன்றாக முளைக்கும் (FRESH SEEDS COULD BE SOWN)


புதிய விதைகளை சேகரம் செய்தவுடன் விதைக்க வேண்டும்.  முதல் நாள் சேகரித்த விதைகளை அடுத்த நாளே விதைத்தால், முளைப்புத்திறன் நன்றாக இருக்கும்.  ஏறத்தாழ 85 சதவீகிதம் முளைக்கும்.
புகைப்படம்: நன்றி கூகிள்.

  v  REFERENCES:
 v  WWW.EN.WIKIPEDIA.ORG / - DIOSPYROS.v  WWW.EN. WIKIPEDIA.ORG/ - EBONY
v  WWW.PFAF.ORG/DIOSPYROS MALBARICAv  WWW.TROPICAL.THEFERNS.INFO/DIOSPYROS MALABARACAv  WWW.FLOWERS OF INDIA.NET/DIOSPYROS MALABARICA – GAUB.


No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...