Saturday, January 11, 2020

TEXAS PERSIMON OF USA - EXCELLENT TIMBER TREE - டெக்ஸாஸ் பெர்சிமான் - சிற்பமும் சிலையும் செய்ய ஏற்ற பழமரம்




டெக்ஸாஸ் பெர்சிமான் - சிற்பமும் சிலையும் செய்ய ஏற்ற பழமரம்

TEXAS PERSIMON - 
EXCELLENT TIMBER TREE



TREE OF NORTH AMERICA


 v  தாவரவியல் பெயர்: டயோஸ்பைரோஸ் செக்ஸானா (DIOSPYROS TEXANA)v  தாவரக் குடும்பம் பெயர்: எபனேசி (EBENACEAE)v  தாயகம்: வட அமெரிக்கா, மெக்சிகோ(NORTH AMERICA & MEXICO)v  பொதுப் பெயர்கள்: பெர்சிமான், மெக்சிகன் பெர்சிமான், பிளாக் பெர்சிமான், சப்போட்டி, சப்போட்டி பிரிட்டோ(PERSIMON, MEXICON PERSIMON, BLACK PERSIMON, CHAPOTE, CHAPOTE PRETO)

MR & MRS.GNANASURIA BAHAVAN  UNDER
THE PERSIMON  TREE
டெக்சாஸ் பெர்சிமான் அழகான மரம்.  மரவேலைகளுக்கு பயன்படும், பறவைகள், பட்டாம் பூச்சிகள், பாலூட்டி விலங்குகள் ஆகியவற்றிற்கு தேனும், பழமும், மகரந்தமும் தரும், பழங்களை சாப்பிடலாம், அதிலிருந்து சாயம் எடுக்கலாம், இலைகள் அழகானவை, பூக்கள் வாசம் உடையவை, குறைந்த அளவே மாசுகளால் பேசப்படும் மரம்.

பழங்குடிகள் பயன்படுத்திய மரம் (A TREE OF NATIVE AMERICANS)


பீரி கொலம்சியன் பழங்குடிகள் (PRE – COLUMBIAN PEOPLE) இதிலிருந்து ஒரு வகையான கருப்புச் சாயம் தயாரித்து பயன்படுத்தினார்கள்.  மிருகங்கள் அல்லது கால்நடைகளின் தோல்களை அழகான ஆடைகள் மற்றும் இதர ஆபரணங்கள் செய்து பயன்படுத்தினர்.  மெக்சிகோவினர் இன்றும் கூட தோலுக்கு சாயமேற்ற இதனைப் பயன்படுத்தி வருகிறார்கள்.  இந்த மரத்திற்கு மெக்சிகோவும் தாய்மண் என்பது குறிப்பிடத்தக்கது.


எபனி என்றால் தரமான மரம் 

(EBONY – NAME FOR QUALITY TIMBER)


பனி என்றால் தரமான மரம்.  எபனி என்றால் கருப்பு வயிரப் பகுதி (HEART WOOD) கொண்ட மரம்.  எபனி என்றால் இழைத்தும் கடைசல் செய்தும் பயன்படுத்தும் மரம்.  எபனி என்றால் சிற்பம் செய்யலாம்.  சிலைகள் செய்யலாம்.  கருவிகளுக்கு கைப்பிடிகள் செய்யலாம்.  மேஜை  நாற்காலி என நாலாவிதமான மரச் சாமான்களும் செய்யலாம்.  அத்தனைக்கும் ஈடு கொடுக்கும் இணையற்ற மரம் இந்த டெக்ஸஸ் பெர்சிமான்  மரம்.  இதன் வயிரப்பகுதி கருப்பாக இருக்கும்.  வயிரப்பகுதி வாகாக வளர்ந்த மரங்களில்தான் இருக்கும்.  இதன் மேற்புற மரம்(SOFT  WOOD) மஞ்சளாக இருக்கும்.

பழங்களை சாப்பிடலாம்

 சிற்பமும் சிலையும் செய்ய ஏற்ற பழமரம் டெக்ஸாஸ் பெர்சிமான்

இதன் பழங்களை சாப்பிடலாம்.  இனிப்பாக இருக்கும் இன்றும் கூட புட்டிங் மற்றும் கஸ்டர்ட் (PUDDING, CUSTARD) போன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்க, இந்தப் பழங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.  புட்டிங் என்பது இறைச்சியோடு சேர்ந்துத் தயாரிக்கும் சாசேஐ; போன்ற ஒரு உணவுப்பொருள்.  கஸ்ட்டர்ட் என்பது பால் அல்லது “கிரீம் சேர்த்துத் தயாரிக்கும் ஒருவகையான உணவுப்பொருள்.

மார்ச் - எப்ரல் மாதங்களில் பூக்கும்


மார்ச் மற்றும் ஏப்;ரல் ஆகிய இரு மாதங்களில் பூக்கும்.  பூக்கள் வெள்ளை, மற்றும் பச்சை நிறங்களில் பூக்கும்.  பூக்கள் நறுமனம் மிக்கவை.  பூக்கள், ஜாடி அல்லது குடுவை போல (URN SHAPE) தோற்றம் தரும்.


எங்கு வளரும்?


சுமாராக சூரிய வெளிச்சம் கிடைக்கும் இடங்கள், ஒரளவு உப்புத்தன்மை உள்ள நிலங்கள், 7.2 க்கும் மேல் உள்ள கார அமில நிலை (PH), பொதுவான வறண்ட சூழல், அதிகமான வெப்பம் மற்றும் வறட்சி நிலவும் பகுதிகள், நல்ல வடிகால் வசதி உள்ள சுண்ணாம்புக்கல் கொண்ட இருமண்பாட்டு நிலங்கள், (LIMESTONE LOAMS), களிமண், சரளையும், மணலும் நைட்ரேட் உப்பும் உடைய பகுதிகள் (CALICHE SOILS) ஆகியவற்றில் நன்கு வளரும்.  கால்சியம் கார்பனேட் உப்பு நிறைந்த வறண்ட நிலப்பரப்பை காலிச்சி நிலப்பரப்பு என்று சொல்லுவார்கள்.  கடல் மட்டத்திலிருந்து 5100 அடி உயரம் வரை இந்த மரங்களை வளர்க்கலாம்.

மரங்கள் மற்றும் இலைகள்    


ஒன்றுக்கும் மேற்பட்ட அடிமரத் தூர்களுடன் வளரும் சிறு மரம்.  இந்த மரம் 9 முதல் 12 அடி உயரம் வரை வளரும்.  இலைகள் கருப்பச்சை நிறமாக இருக்கும்.  இலைகளின் மேற்பரப்பு பளபளப்பாக இருக்கும்.  இலைகளின் அடிப்புறம் நுட்பமான மயிர்க் கற்றைகளால் மூடி இருக்கும்.  மரங்கள்  20 முதல் 50 ஆண்டுகள் வரை உயி;ர் வாழும்.
விதைகளை விதைக்கலாம்.

விதைகள் மூலம் புதிய கன்றுகளை உருவாக்கலாம்.  விதைகளை புதியதாகப் பயன்படுத்தலாம்.  சேகரித்தவுடன் விதைக்கலாம்.  சேமித்து வைத்தும் விதைக்கலாம்.  Pலை முதல் செப்டெம்பர் வரையான மாதங்களில் பழங்களைப் பறிக்கலாம்.  கனிந்த, முதிர்ந்த பழங்கள் ஊதா மற்றும் கருப்பு நிறமாக இருக்கும்.  விதைகளை சேகரித்து, உலர்த்தி காற்றுப்புகாத பாத்திரங்களில் போட்டு பத்திரமாக சேமிக்கலாம்.  ஒவ்வொரு பழத்திலும் 3 முதல் 8 விதைகள் இருக்கும்.  விதைகள் செக்கச்சிவந்ததாக முக்கோண வடிவில் இருக்கும்.

மரத்தின் பட்டைகள்


இந்த மரத்தின் பட்டை வழுவழுப்பாக இருக்கும்.  சிவப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் இருக்கும்.  மரங்கள் முதிர முதிர பட்டைகள் உறியத் தொடங்கும் பட்டைகள் உறிந்து உதிர்ந்த பின்னால் மரங்கள், ஊதா, வெள்ளை சாம்பல் நிறம் என்று பல வண்ணங்களைக் கலந்தது போன்று கவர்ச்சியான தோற்றம் தரும்.
BEAUTIFUL TREES I SAW IN USA
FOR FURTHER READING
ON RELATED TOPICS

1. ஊமத்தை   ரேபிஸ் நோயை  கட்டுப்படுத்தும்  அரிய மூலிகை -    DATURA  A VALUABLE MEDICINE AGAINST RABIES – Date of Posting; 24.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/datura-best-traditional-herbal-tree.html

2. நீர் பார்க்காத  நான் பார்த்த  மொஜாவ்   பாலைவன  மரங்கள் -  WATER STARVING  TREES OF  MOJAVE  DESERT – Date of Posting; 17.01.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/water-starving-trees-of-mojave-desert.html

3. செக்கோயா  உலகின்  உயரமான   செக்கோயா மரம் -  KING SEQUOIA  WORLDS' TALLEST TREE – Date of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html

4. கலிபோர்னியா  விசிறிப்பனை   சாலைகளுக்கு அழகு தரும் மரம்  -    CALIFORNIA    FAN PALM -    GRACEFUL TREE – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/california-fan-palm-graceful-tree.html

5. டவுக்ளஸ்  பிர் -  பிரபலமான   மின்சார மரம் DOUGLAS FIR - - UTILITY  POLE TREE  – Date of Posting; 16.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/douglas-fir-popular-utility-pole-tree.html

6. சில்க்பிளாஸ்- ஹாலிவுட் அழகுமரம்        -         SILK FLASS -   HOLYWOOD  BEAUTY  TREE  – Date of Posting; 15.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/silk-flass-holywood-beauty-tree.html


7. செடார்  எல்ம் - உறுதி மிக்க  பாறை மரங்கள் -   CEDAR  ELM - STRONG TIMBER TREE – Date of Posting; 14.01.2020 https://vivasayapanchangam.blogspot.com/2020/01/cedar-elm-strong-timber-tree.html

8. டெக்சாஸ் மவுண்டெய்ன் லாரெல்  ட்ரீ - அழகு மரம்      TEXAS MOUNTAIN LAUREL - AWESOME  TREE  – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-mountain-laurel-awesome-tree.html

9. சைனிஸ் பிஸ்டாச்சி  மிரட்டும்  அழகு மரம் - CHINESE PISTACHE -  TREE OF STUNNING  BEAUTY – Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chinese-pistache-tree-of-stunning-beauty.html


10. சுமார்டு சிவப்பு ஒக் மரம் - கலக்கலான  வணிக மரம்       SHUMARD  RED OAK - TOP CLASS BUSINESS TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/shumard-red-oak-top-class-business-tree.html

11. சாவன்னா  ஹோலி - அழகான  காட்டுமரம்       -       SAVANNA    HOLY -   PRETTY  WILD TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/savanna-holy-pretty-wild-tree.html

12. ரீகல் பிரின்ஸ் ஒக்   -   மரங்களின்  சகல கலா வல்லவன் - REGAL PRINCE  OAK  A VERSATILE  TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/regal-prince-oak-versatile-tree.html

13. மக்னோலியா -  ஒரு மரமே  சிறு வனமாகும்  -  MAGNOLIA - ONE TREE  FOREST – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/magnolia-one-tree-forest.html


14. லைவ் ஒக் -  சமையல் எண்ணை    மரம்    LIVE OAK  -   COOKING OIL TREE  – Date of Posting; 09.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/live-oak-cooking-oil-tree.html

15. ஈஸ்டன் ரெட் செடார் வாசனைத்திரவிய மரம்    EASTERN  RED  CEDAR TREE OF PERFUMES – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/eastern-red-cedar-tree-of-perfumes.html

16. சிட்டல்பா சேம்பியன் ட்ரீ  அங்கீகரிக்கப்பட்ட   அழகு மரம் -  CHITALPA CHAMPION  A STUNNING BEAUTY – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chitalpa-champion-stunning-beauty.html

17. ஒசேஜ் ஆரஞ்சு    மண்ணரிப்பைத் தடுக்க    ரூஸ்வெல்ட்   அதிகம் நட்ட மரம்   -    OSAGE ORANGE     PET TREE OF ROOSEVELT – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html

18. பிக் டூத் மேப்பிள்  சக்கரை  மரம் -  BIG TOOTH MAPLE  SUGAR TREE– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-tooth-maple-sugar-tree.html

19. பால்ட் சைப்ரஸ்  பாரம்பரிய  மருத்துவ மரம் -  BALD CYPRESS  A TRADITIONAL  HERB  – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/bald-cypress-traditional-herb.html

20. புளு அட்லஸ் செடார்  தொழில் மரம் -  BLUE ATLAS CEDAR TREE OF INDUSTRIES – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/blue-atlas-cedar-tree-of-industries.html

21. அனாகேச்சோ ஆர்கிட்  அழகு பூமரம்” -   ANACACHO ORCHID  GRACEFULL  FLOWERING  TREE – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/anacacho-orchid-gracefull-flowering-tree.html

22. கிரேப் மிர்ட்டில்   நீண்ட பூங்கொத்து மரம்      CRAPE MYRTLE     GLAMOROUS     FLOWERING TREE – Date of Posting; 06.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html

23. மெக்சிகன் சைகாமோர் அழகிய மருத்துவ  மரம் -  MEXICAN SYCAMORE -   NICE LOOKING   TREE – Date of Posting; 16.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/mexican-cycamore-tree.html

24. ஜோஷுவா  அமெரிக்க  பூர்வகுடிகள் மரம் -  JOSHUVA  TREE OF AMERICAN  NATIVES – Date of Posting; 02.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/joshuva-tree-of-american-natives.html

25. பப்பாளி உடல் எடை  குறைப்பு மரம்  - PAPAYA  BODY WEIGHT REDUCING TREE – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/papaya-body-weight-reducing-tree.html

26. கார்டியா -  மரச்சாமான்  மரம்-    CORDIA   NICE WOOD WORK  TREE– Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/cordia-nice-wood-work-tree.html

27. பிக்சேஜ் எனும்  நோய் போக்கும்  உண்ணி மரம் - BIG SAGE  A  PLEASING HERB TOO– Date of Posting; 22.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-sage-pleasing-herb-too.html

28. டாக்வுட் ட்ரீ - மலேரியாவை  குணப்படுத்தும் மரம்  -  DOG WOOD  ANTI MALARIA  TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/dog-wood-anti-malaria-tree.html

29. சிவப்பு  மேப்பிள்  மலிவான  மரவாடி மரம் - RED  MAPLE    CHEAP TIMBER TREE  – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/red-maple-cheap-timber-tree.html

  v  REFERENCES:
v  WWW.WILDFLOWER.ORG – “TEXAS PERSIMON TREE”
v   WWW.EN.WIKIPEDIA.ORG – “DIOSPYROS TEXANA”
v  WWW.AGGIE – HORTICULTURE.TAMU.EDU – “TEXAS PERSIMON”


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...