Monday, January 13, 2020

TEXAS MOUNTAIN LAUREL - AWESOME TREE OF USA - டெக்சாஸ் மவுண்டெய்ன் லாரெல் ட்ரீ - அழகு மரம்


டெக்சாஸ் மவுண்டெய்ன் லாரெல்  ட்ரீ - அழகு மரம்
  

TEXAS MOUNTAINLAUREL - AWESOME  TREE 

தேஞானசூரிய பகவான்போன்: +918526195370Email: gsbahavan@gmail.com.



இந்தப் பூக்களின் வாசம்.  நாம் தொலை தூரத்தில் இருந்தாலும் நான் இங்கேதான் இருக்கிறேன் என்று அறிவிக்கும் வாசம்.


இதன் இலை அழகாபூ அழகா? என பட்டி மன்றம் வைக்கும் அளவுக்கு இதன் இலைகளும் அழகானவை. 


இதன் பழங்களை அரைத்து கூழாக்கி அத்துடன் சுடுநீர் சேர்த்து வடிகட்டிசில துளிகளை மட்டும் காதில் விடகாதுவலி குணமாகும்.


தண்ணீர் குறைவாகக் தேவைப்படும் மரங்களைத் தேடிப் பிடித்துஅவற்றை அமெரிக்கர்கள் அழகு மரங்களாக நகர்ப்புறங்களில் நட்டு வருகிறார்கள்.  

தாவரவியல் பெயர்: சோபோரா செகன்டிபுளோரோ (SOPHORA SECUNDIFLORA)தாவரக் குடும்பம் பெயர்: பேபேசி (FABACEAE)தாயகம்: டெக்சஸ், நியூ மெக்சிகோ (TEXAS & NEW MEXICO)பொதுப் பெயர்கள்: டெக்சாஸ் மவுண்டெய்ன் லாரெல், மெஸ்கல் பீன், மெஸ்கல் பீன் சோபோரா, பிரிஜோலிலோ , பிரிஜோலிட்டோ(TEXAS MOUNTAIN LAUREL, MESCAL  BEAN SOPHORA, FRIJOLILLO, FRIJOLITO, CORAL, BEANI , BIG TRUNK BEAS, COLORIN) கோரல் பீன், பிக் டிரங்க் பீன், கோலோரின்.


டெக்சாஸ் மலை (லாரெல்) மரம், பசுமை மாறாத, பலஅடி மரங்கள் உடைய (MULTI TRUNKED) சராசரியாக பத்துப் பதினைந்தடி உயரம் வளரும், அழகான ஊதாப்பூக்களும், நச்சுத்தன்மை கொண்ட விதைகளையும் உடைய, அழகுக்காக வளர்க்கப்படும் சிறுமரம்.

வாசம் தரும் பூக்கள் (PRAGRANT FLOWERS)



இந்த மரத்தின் சிறப்பே இதன் பூக்கள்.  இந்தப் பூக்களுக்கு இரண்டு சிறப்பு உண்டு.  ஒன்று இதன் கவர்ச்சிகரமான நிறம்.  தனி நீலம், தனி ஊதா அல்லது இரண்டும் சமபங்காக கலந்தது மாதிரியான நிறம்.  ஆங்கிலத்தில் லேவண்டர் நிறப் பூக்கள்.  இரண்டாவது சிறப்பு, இந்தப் பூக்களின் வாசம்.  நாம் தொலை தூரத்தில் இருந்தாலும் நான் இங்கேதான் இருக்கிறேன் என்று அறிவிக்கும் வாசம்.  பிப்ரவரி மார்ச் மாதங்களில் பூக்கும்.  பூக்கள் பட்டாம் பூச்சிகள் தேனீக்கள் மற்றும் இதர பூச்சி வகைகளைக் கவரும்.


கவர்ச்சிகரமான இலைகள்:( ATTRACTIVE LEAVES)



இதன் இலை அழகா? பூ அழகா? என பட்டி மன்றம் வைக்கும் அளவுக்கு இதன் இலைகளும் அழகானவை.  அடர்த்தியாக, அடர்த்தியான பசுமை நிறத்தில் கொத்துக் கொத்தாக வளரும்.  பசுமையாக இருந்தாலும் பளபளப்பான இலைகள்.  இலைகளின் நுனி வித்தியாசமான வட்ட வடிவில் இருக்கும்.  அதிகபட்சமாக இரண்டு அங்குலம் அளவுக்கு வளரும்.  வித்தியாசமாக இலைகளின் நுனி அகன்றும் அடிப்புறம் குறுகலாகவும் இருக்கும்.  தொட்டுப் பார்த்தால் மெத்மெத் தென தோல் பொருட்களைக் தொடுவது போல இருக்கும்.


நச்சுத்தன்மை கொண்ட பழங்கள்(POISONOUS FRUITS)



அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் குடிகொண்டு இருக்கும்.அதுபோல பழங்கள் பார்க்க பளிச்சென்ற பளபளப்பான சிவப்பு நிறத்தில் இருக்கும்.  ஆனால் இவை நச்சுத்தன்மை உடையவை.

இதன் பழங்களை அரைத்து கூழாக்கி அத்துடன் சுடுநீர் சேர்த்து வடிகட்டி, சில துளிகளை மட்டும் காதில் விட, காதுவலி குணமாகும்.  காதுவலிக்கு இது அற்புதமான மருந்து.  மிச்ச சொச்சமாக இருக்கும் அமெரிக்கப் பழங்குடி மக்களுக்கு இன்றும்கூட இது கைகண்ட மருந்து.

கவர்ச்சிகரமான சிவப்பு நிறமான இதன் விதைகளில் சோபோரின் (SOPHORIN) என்னும் ஆல்கலாய்ட் உள்ளது.  அந்த ஆல்கலாய்ட்தான் அந்த நச்சுத்தன்மைக்குக் காரணமாக உள்ளது.  அதுமட்டுமல்ல, இந்த விதைகளை போதைப் பொருளாகவும் பழங்குடி மக்கள் (NARCOTIC AND HALLUCINOGEN) பயன்படுத்துகிறார்கள்.


விதை மூலம் புதிய கன்றுகள் (SEED PROPAGATION)



முதல் ஆண்டு உற்பத்தியாகும் பழங்கள், அடுத்த ஆண்டுதான் அவை விதைகளை வெளியேற்றும்.  அடுத்த ஆண்டு கோடை பருவத்தில்தான் பழங்கள் மரங்களிலிருந்து உதிர்ந்து விதைகளை வெளிப்படுத்தும்.  விதைகளை, சுடுநீரில் ஊறவைத்து விதைப்பதால், நன்கு முளைக்கும்.  காற்றுப்புகாத குப்பிகளில் சேமித்து வைத்தும் பின்னர் பயன்படுத்தலாம்.  மேலும் இளங்கன்றுகள் மெல்ல வளரும்.  மரங்களின் கிளைகளை வெட்டியும் நடவு செய்தும் புதியக்  கன்றுகளை உருவாக்கலாம்.


விதை சேகரிப்பு (SEED COLLECTION)



விதைகள் ஒரளவு முதிர்ந்தவுடன் அவை ஊதா நிறமாக மாறும்.  அந்த சமயத்தில் விதையின் மேல்தோல் கடினத்தன்மை இல்லாமல் இருக்கும்.  அதாவது ஜூன், ஜூலை மாதங்களில் இந்த விதைகளை சேகரிப்பதன் மூலம் அவற்றை உடனடியாக பயன்படுத்த முடியும்.  அந்த விதைகள் மிக வேகமாக பிரச்சினையின்றி முளைக்கும்.  விதைத்தோல் கடினமாகிவிட்டால் முளைப்புத் தாமதமாகும்.


பழங்குடி மக்களின் ஆபரணம் (JEWELRY OF NATIVE AMERICANS)



அழகான சிவப்பு நிற விதைகளை மாலைகளாக செய்து கழுத்தில் மாலைகளாக அணியும் வழக்கம் அமெரிக்கப் பழங்குடி மக்களிடையே பரவலாக இருந்தது.  அதுமட்டுமல்லாமல், இதன் மரக்கட்டைகளிலிருந்து மஞ்சள் நிற சாயம் எடுத்து பயன்படுத்தி வத்தார்கள்.  நமது கிராமத்துக் குழந்தைகள், கருவேலங் காய்களை, கால் கொலுசுகவும், கழுத்து மாலையாகவும் அணிவதை நான் பார்த்திருக்கிறேன்.  நிறைய குழந்தைகளுக்கு நானே செய்தும் கொடுத்துள்ளேன்.


எங்கு வளரும்(SUITABLE SOIL CONDITIONS)



வறண்ட நிலப்பகுதிகள், கற்களும் பாறைகளும் நிறைந்த கல்லாங்கரடுகள், சுக்காம் பாறை நிறைந்த மண்கண்டம் (CALCAREOUS SOILS), மணற்சாரியான நிலம், மனற்சாரியான இருமண்பாடுள்ள நிலங்கள், களிமண்பாங்கான இருமண்பாட்டு மண், கரிசல் மண், போன்ற பரவலான நிலங்களில் வளரும் தன்மையுடையது.  வெப்பமான, குளிர்ச்சியான, மற்றும் வறட்சியான சூழல்களையும், 7.2 கார அமிலநிலை உள்ள தன்மைகளையும் தாங்கி வளரும்.  எது எப்படி இருந்தாலும் நல்ல வடிகால் வசதி அவசியம் வேண்டும்.  மொத்தத்தில் எப்படிப்பட்ட மோசமான நிலத்திலும் முகம் சுளிக்காமல் வளரும்.

 

நீர் சிக்கன மரம்(WATER CONSERVING TREE)



தண்ணீர் குறைவாகக் தேவைப்படும் மரங்களைத் தேடிப் பிடித்து, அவற்றை அமெரிக்கர்கள் அழகு மரங்களாக நகர்ப்புறங்களில் நட்டு வருகிறார்கள்.  அந்த வகையில் இந்த மலை மரத்தை அழகுமரமாக அமெரிக்கர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.  நீரைச் சிக்கனமாக செலவு செய்யும் மரம்.


நன்றி: தாவரவியல் பூங்கா, போர்ட்ஸ் வொர்த், டல்லஸ், யூ எஸ் ஏ (BOTANICAL GARDEN, FORTS WORTH, DALLAS, USA)
BEAUTIFUL TREES I SAW IN USA
FOR FURTHER READING
ON RELATED TOPICS

1. ஊமத்தை   ரேபிஸ் நோயை  கட்டுப்படுத்தும்  அரிய மூலிகை -    DATURA  A VALUABLE MEDICINE AGAINST RABIES – Date of Posting; 24.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/datura-best-traditional-herbal-tree.html

2. நீர் பார்க்காத  நான் பார்த்த  மொஜாவ்   பாலைவன  மரங்கள் -  WATER STARVING  TREES OF  MOJAVE  DESERT – Date of Posting; 17.01.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/water-starving-trees-of-mojave-desert.html

3. செக்கோயா  உலகின்  உயரமான   செக்கோயா மரம் -  KING SEQUOIA  WORLDS' TALLEST TREE – Date of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html

4. கலிபோர்னியா  விசிறிப்பனை   சாலைகளுக்கு அழகு தரும் மரம்  -    CALIFORNIA    FAN PALM -    GRACEFUL TREE – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/california-fan-palm-graceful-tree.html

5. டவுக்ளஸ்  பிர் -  பிரபலமான   மின்சார மரம் DOUGLAS FIR - - UTILITY  POLE TREE  – Date of Posting; 16.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/douglas-fir-popular-utility-pole-tree.html

6. சில்க்பிளாஸ்- ஹாலிவுட் அழகுமரம்        -         SILK FLASS -   HOLYWOOD  BEAUTY  TREE  – Date of Posting; 15.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/silk-flass-holywood-beauty-tree.html


7. செடார்  எல்ம் - உறுதி மிக்க  பாறை மரங்கள் -   CEDAR  ELM - STRONG TIMBER TREE – Date of Posting; 14.01.2020 https://vivasayapanchangam.blogspot.com/2020/01/cedar-elm-strong-timber-tree.html


8. சைனிஸ் பிஸ்டாச்சி  மிரட்டும்  அழகு மரம் - CHINESE PISTACHE -  TREE OF STUNNING  BEAUTY – Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chinese-pistache-tree-of-stunning-beauty.html

9. டெக்ஸாஸ் பெர்சிமான் - சிற்பமும் சிலையும் செய்ய ஏற்ற பழமரம் TEXAS PERSIMON -   EXCELLENT TIMBER TREE – Date of Posting; 11.01.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-persimon-excellent-timber-tree.html

10. சுமார்டு சிவப்பு ஒக் மரம் - கலக்கலான  வணிக மரம்       SHUMARD  RED OAK - TOP CLASS BUSINESS TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/shumard-red-oak-top-class-business-tree.html

11. சாவன்னா  ஹோலி - அழகான  காட்டுமரம்       -       SAVANNA    HOLY -   PRETTY  WILD TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/savanna-holy-pretty-wild-tree.html

12. ரீகல் பிரின்ஸ் ஒக்   -   மரங்களின்  சகல கலா வல்லவன் - REGAL PRINCE  OAK  A VERSATILE  TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/regal-prince-oak-versatile-tree.html

13. மக்னோலியா -  ஒரு மரமே  சிறு வனமாகும்  -  MAGNOLIA - ONE TREE  FOREST – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/magnolia-one-tree-forest.html


14. லைவ் ஒக் -  சமையல் எண்ணை    மரம்    LIVE OAK  -   COOKING OIL TREE  – Date of Posting; 09.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/live-oak-cooking-oil-tree.html

15. ஈஸ்டன் ரெட் செடார் வாசனைத்திரவிய மரம்    EASTERN  RED  CEDAR TREE OF PERFUMES – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/eastern-red-cedar-tree-of-perfumes.html

16. சிட்டல்பா சேம்பியன் ட்ரீ  அங்கீகரிக்கப்பட்ட   அழகு மரம் -  CHITALPA CHAMPION  A STUNNING BEAUTY – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chitalpa-champion-stunning-beauty.html

17. ஒசேஜ் ஆரஞ்சு    மண்ணரிப்பைத் தடுக்க    ரூஸ்வெல்ட்   அதிகம் நட்ட மரம்   -    OSAGE ORANGE     PET TREE OF ROOSEVELT – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html

18. பிக் டூத் மேப்பிள்  சக்கரை  மரம் -  BIG TOOTH MAPLE  SUGAR TREE– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-tooth-maple-sugar-tree.html

19. பால்ட் சைப்ரஸ்  பாரம்பரிய  மருத்துவ மரம் -  BALD CYPRESS  A TRADITIONAL  HERB  – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/bald-cypress-traditional-herb.html

20. புளு அட்லஸ் செடார்  தொழில் மரம் -  BLUE ATLAS CEDAR TREE OF INDUSTRIES – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/blue-atlas-cedar-tree-of-industries.html

21. அனாகேச்சோ ஆர்கிட்  அழகு பூமரம்” -   ANACACHO ORCHID  GRACEFULL  FLOWERING  TREE – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/anacacho-orchid-gracefull-flowering-tree.html

22. கிரேப் மிர்ட்டில்   நீண்ட பூங்கொத்து மரம்      CRAPE MYRTLE     GLAMOROUS     FLOWERING TREE – Date of Posting; 06.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html

23. மெக்சிகன் சைகாமோர் அழகிய மருத்துவ  மரம் -  MEXICAN SYCAMORE -   NICE LOOKING   TREE – Date of Posting; 16.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/mexican-cycamore-tree.html

24. ஜோஷுவா  அமெரிக்க  பூர்வகுடிகள் மரம் -  JOSHUVA  TREE OF AMERICAN  NATIVES – Date of Posting; 02.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/joshuva-tree-of-american-natives.html

25. பப்பாளி உடல் எடை  குறைப்பு மரம்  - PAPAYA  BODY WEIGHT REDUCING TREE – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/papaya-body-weight-reducing-tree.html

26. கார்டியா -  மரச்சாமான்  மரம்-    CORDIA   NICE WOOD WORK  TREE– Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/cordia-nice-wood-work-tree.html

27. பிக்சேஜ் எனும்  நோய் போக்கும்  உண்ணி மரம் - BIG SAGE  A  PLEASING HERB TOO– Date of Posting; 22.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-sage-pleasing-herb-too.html

28. டாக்வுட் ட்ரீ - மலேரியாவை  குணப்படுத்தும் மரம்  -  DOG WOOD  ANTI MALARIA  TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/dog-wood-anti-malaria-tree.html

29. சிவப்பு  மேப்பிள்  மலிவான  மரவாடி மரம் - RED  MAPLE    CHEAP TIMBER TREE  – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/red-maple-cheap-timber-tree.html

      REFERENCES:1. WWW.WILDFLOWER.ORG – “SOPHORA SECUNDIFLORA”
2. WWW.WATERUSE IT WISELY.COM – “TEXAS MOUNTAIN LAUREL”
3.WWW.MSWN.COM – “SOPHORA SECUNDIFLORA”
4.WWW.AGGIE – HORTICULTURE.TAMU.EDU – “TEXAS MOUNTAIN LAUREL”(TEXUS A & M UNIVERSITY, COLLEGE STATION, TEXAS)


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...