சூபாபுல் - தீவன
மரங்களின்
ராஜா
SUBABUL
- WORLD LEADER OF
FODDER TREES
தே.ஞானசூரியபகவான்,
போன்: + 918526195370
Email: gsbahavan@gmail.com
தாவரவியல் பெயர்:
லியூசினா லியூக்கோசெபாலா
Leucaena leucocephalaதாவர குடும்பம் : பேபேசி (FABACEAE)
பொதுப்பெயர்கள்; ஒயிட் லெட் ட்ரீ, ஜம்பே,
ரிவர் டெமரிண்ட், சூபாபுல் ஒயிட் பாப்பிநாக்
(WHITE LEAD TREE, JUMBE, RIVER TAMARIND,
SUBABUL, WHITE POPINAC)
1
கிடந்தான்.அவன் தலைமாட்டுல ஒரு
சீப்பு வாழப் பழம் இருந்தது. நண்பன்
ஒருத்தன் அவனைத் தேடி வந்தான்.
’ஏண்டா என்னப் பார்க்க வரேன்னு
சொன்னெ. இங்கயே படுத்து கெடக்கற..’
அப்படீன்னு கேட்டான்.’ பசி உயிர் போகுது.
சாப்பிட்டு ரெண்டு நாளாச்சி’ அப்படீன்னான்.
’ஏண்டா பக்கத்துல ஒரு சீப்பு வாழைப் பழம்
இருக்கு, சாப்பிடக் கூடாது’
‘ அதை சாப்பிடலாமுன்னுதான பாத்தேன்
ஆனா அந்த பழத் தோலை உறிக்கணும்
அப்புறம் அதை சாப்பிடணும். ஆதான்
நீ வரட்டும்னு பாத்தேன்.’
’அது ரொம்ப சிரமம்தான்’ என்று சொல்லிக்
கொண்டே ஒரு சீப்பு வாழைப் பழத்தையும்
நண்பனே சாப்பிட்டு முடிச்சிட்டான்.
’ஏண்டா எல்லா பழத்தையும் தின்னுட்டியா?
எனக்கு ஒண்ணு கூட வைக்கலியா?
ஒரு பழமாவது உறிச்சி குடுக்கலாம்ல.
வழக்கமா உறிச்சி தருவியே’
அதற்கு நண்பன் சொன்னான்
‘அப்படியே உறிச்சி குடுத்தாக் கூட
நீ சாப்பிட சிரமப்படுவெ. ஆதான் நானே
உனக்கு பதிலா சாப்பிட்டு குடுத்துட்டேன்’
நீயுமாடா இப்படி? ஊலகத்துல யாரையுமே
நம்ப முடியல கடவுள் கூட என்னை
கைவிட்டுட்டார்’என்று புலம்பினான்.
‘கடவுள் காட்டுவார் ஆனால் ஊட்ட மாட்டார் .
அப்பொ நான் வரட்டா’ என்று ஒரு தத்துவத்ததை
சொல்லிவிட்டு போய்விட்டான்.
2
‘வாழைப் பழம் மாதிரி நம்ம தலை மாட்டுல
நிறைய நல்ல விஷயங்கள் இருக்கு.
அதை நாமதான் சரியா பயன்படுத்திக்கணும்.
முதலில் அதைப்பற்றி தெரிஞ்சிக்கணும்.
அப்புறம் புரிஞ்சிக்கணும். அதுக்குப் பிறுகுதான்
அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
நம்ம தலைமாட்டுல இருக்கற மாதிரிதான்
அகில உலக அளவுல பிரசித்தி பெற்ற
ஒரு மரம் நம்மகிட்ட இருக்கு.
கால்நடைகளுக்கு தீவனம் கொடுக்கும்
மரங்களின் ராஜா நம்மகிட்ட இருக்கு.
அந்த மரத்தை நமக்கு தெரியும். ஆனால்
அதன் மகிமை நமக்கு தெரியாது.
12.அந்த தீவன ராஜாவின் பெயர் சூபாபுல்.
தமழில் அதன் பெயர் சவண்டல்.
கல்துரிஞ்சி ன்னும் சொல்றாங்க.
வேலூர் மாவட்டத்துல
அதை தீவன மரம் ன்னு
சொல்றாங்க.
3
ரேயான் துணி வகைள் உற்பத்தி செய்யலாம்.
ஓட்டுப் பலகை என்ற சொல்லப் படும்
ப்ளைவுட் மற்றும் பார்ட்டிகிள்
போர்டுகள் தயாரிக்கலாம்.
இதன் விதைகளிலிருந்து எடுக்கப் படும்
எண்ணெயில் இருந்து சாயம் எடுக்கலாம்.
நைலான் மற்றும் பாலியெஸ்டர் துணிகளுக்கு
கலர் கொடுக்கலாம்.
சூபாபுல் இலைகளில் தழைச் சத்து நிரம்ப
உள்ளது. இதனை பயிர்களுக்கு தழை
எருவாக பயன்படுத்தலாம்.
4
நிறைய முட்டை இடும். அதிக குஞ்சுகள்
பொரிக்கும்.முயல்கள் விரும்பி சாப்பிடும்
தழைகள் இரண்டு. ஒன்று சக்கரை
வள்ளி கிழங்கு தழை. இன்னொன்று
சூபாபுல் தழை.
கறவை மாடுகளுக்கு மொத்த
தீவனத்தில் 30 சதம் வரை சூபா தழையைத்
தரலாம். சூபாபுல் தழை, மொட்டு, இளம்
கிளைகள் அனைத்துமே கால்நடை
தீவனங்கள்தான். இதன் உலர்ந்த
தழையில் 15 முதல் 27 சதம் வரை
புரதச் சத்தும் 2 முதல் 6 சதம் கொழுப்புச்
சத்தும் உள்ளது. இவை தவிர நார் சத்துக்கள்,
மாவுப் பொருள், தாது உப்புக்கள், கால்சியம்,
பாஸ்பரஸ் ஆகிய சத்துக்களும் உள்ளன.
5
சூபாபுல் காய்களின் விதைகளை சாப்பீடும்
பழக்கம் உள்ளது. டச்சு கிழக்கிந்திய தீவுகளில்,
பச்சை காய், விதைகள், கிளை, கொழுந்து
ஆகியவற்றை சமைத்து சாப்பிடுகிறார்கள்.
இவர்கள் காப்பி பொடிக்கு பதிலாகவும்
இதனை பயன்படுத்துகிறார்கள்.
இந்தோனேசியாவில் முளை கட்டிய
விதைகளை சாப்பிடுகிறார்கள்.
இந்த மரங்களில் கடைசல் வேலைகள்
செய்யலாம். பத்து ஆண்டு வளர்ந்த மரங்களை
கட்டிட வேலைகளுக்கு உபயோகப் படுத்தலாம்.
பிளைவுட் என்னும் ஒட்டுப் பலகை,
பார்டிகிள் போர்டுகள், பைபர் போரடுகள்
அனைத்தும் செய்யலாம்.
இந்த மரத்தின் கரிகள் வெப்பம் கூடியவை.
ஒரு ஏக்கர் மரங்களிலிருந்து 12 டன் கரி
உற்பத்தி செய்யலாம்.
6
நாடுகளில் மரங்களில் இருந்து மின்சாரம்
எடுக்கிறார்கள். மின்சார பிரச்சினையைத்
தீர்க்க இந்த நாடுகளில் மரமின்சாரம்
மிக உதவியாக உள்ளது.
365 ஏக்கரில் பயிரிடப் படும் சூபா, அகத்தி,
சவுக்கு, அகியவற்றில் இருந்து சுமார்
20000 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கலாம்.
இந்த அளவு மின்சாரம் சுமார் 15
கிராமங்களுக்கு போதுமானதுன்னும்
கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
சூபாபுல் மரங்களை 5 முதல் 6 ஆண்டுக்கு
ஒரு முறை தரை மட்டத்திற்கு வெட்டி
விற்பனை செய்யலாம். 55 வருஷங்கள்
வரை 5 ஆண்டுக்கு ஒரு முறை வெட்டலாம்.
அப்படியும் சூபா மரங்கள் உற்சாகமாக வளரும்.
மோசமான மண் அரிப்பு ஏற்படும் இடங்களில்
சூபாவை விதைத்து விட்டால் போதும்.
அது வளர்ந்து வேகமாக அடிக்கும்
மழைத் துளிகளைத் தடுத்து மண்
அரிமானம் ஏற்படாமல் தடுக்கும்.
7
பகுதியில் மண் அரிப்பை சிக்கலில்லாமல்
சூபாபுல் கொண்டு தடுத்து நிறுத்தி உள்ளார்கள்.
சிக்கா பகுதியில் சூபாபுல் பயிரிட்ட இடம்
எல்லாம் மண் அரிப்பு சுத்தமாய் நின்று
போனது. மகசூல் ரட்டிப்பானது.
எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு
அதிசயம் நடந்தது. அதாவது
60 ஆண்டுகளாக வரண்டு போன
“படிக் வாயிர்” என்ற ஆறு மீண்டும்
ஓட ஆரம்பித்தது. மவும்ரி என்ற
நகரத்தில் வருஷா வருஷம் ஏற்படும்
வெள்ள அபாயமும் நின்று போனது.
இந்தோனேசியாவில் அமர்சி என்பது
ஒரு தீவு. அங்குள்ள காடுகள் அழிந்து,
மண்வளம் மறைந்து புல்தரை தோன்றி
பின் புதர் செடிகளாய் மண்டிப் போனது.
இதனால் மரங்களும் புல் பூண்டுகளும்
அற்று கால்நடைகள் காணாமல் போனது.
8
அதன் பிறகு அரசாங்கமே இந்த மலைச்
சரிவுகளிலெல்லாம் சூபாபுல்லை விதைத்தது.
புதர் செடிகளுக்கு பதிலாக சூபாபுல் செடிகள்
முளைத்தன. அதன் விளைவாக மண்
அரிப்பு நின்று போனது. நில வளம் கூடியது.
ஆடு மாடுகளுக்கு புல்லும் தழையும்
தட்டுப்பாடின்றி கிடைத்தது. விளைவு அமர்சி
தீவில் கால்நடைகள் பெருகின.
பால்வளம் பண வளம் இரண்டுமே பெருகியது.
இதை இந்தோனேஷிய மக்கள்
அமர்சி தீவில் சூபாபுல் நடத்திய
அதிசயப் புரட்சி என்று சொலலுகிறார்கள்.
சூபாபுல் விதைகளில் 20 முதல் 25 சதம்
பிசின் உள்ளது. சூபாபுலு; பிசினை
மிட்டாய்கள் செய்ய பயன்படுத்தலாம்.
முகத்தில் பூசும் கிரீம்கள் மற்றும்
லோஷன்கள் தயாரிக்கலாம்.
9
முடிவுரை
‘மரம் நட்டா மழை வரும’ அது ஒரு மரங்களப்
பற்றி ஒரு பொதுவான அபிப்ராயம் அப்படி
சொன்னா மரங்கள குறைவா மதிப்பிடறோம்னு அர்த்தம்.
மரங்கள்தான் எல்லாத்துக்கும் ஆதார சுருதி.
மரம் இல்லை என்றால் மனிதன் மட்டுமல்ல
எந்த ஜீவராசியும் உயிர் வாழ முடியாது. இந்த
பாடத்தை இயற்கை நமக்கு பல தடவ
சொல்லிக் கொடுத்தது.
இந்தியாவுக்கு வந்த சுனாமி, இந்தோனேஷியாவுக்கு
வந்த சுனாமி, சமீபத்தில் ஜப்பானுக்கு வந்த
சுனாமியும் நமக்கு சொல்லிக் கொடுத்த பாடம்
இன்னும் நமக்கு விளங்கல.
ஒரு ஊர்ல ஒரு ஆசிரியர் இருந்தார்.
பாடங்களை தெளிவா நடத்துவார்;.
அதக் கூட ஒரு செயல்விளக்கமா செய்து
காட்டுவார். அந்த ஆசிரியர் வந்தா
மாணவர்கள் ரொம்ப உற்சாகமாயிடுவாங்க.
ஒரு நாள் வகுப்பில் மாணவர்கள்
அந்த ஆசிரியருக்காக காத்திருந்தாங்க.
அன்றைக்கு பூமியைப் பற்றிய பாடம் நடத்தணும்.
ஆசிரியர் வரும் போது கையில் ஒரு ஆரஞ்சு
பழத்தோட வந்தார்.பழத்தை மேஜை மேல
வச்சிட்டு பாடம் நடத்தினார். பூமியைப் பற்றி
நிறைய தகவல்கள் சொன்னார்.
‘இப்பொ பூமி உருண்டை ன்னு செயல்விளக்கமா
செய்து காட் டப் போறேன்.
உடனே ஒரு பையனை கூப்பிட்டார்.
‘தம்பி இங்க வாப்பா’ அந்த பையன்
எழுந்து கிட்ட வந்தான். ‘வகுப்புக்கு வெளிய
போயி ஒரு எறும்பை புடிச்சிட்டு வா’ன்னார்.
பையன் ஆடு திருடின மாதிரி முழிச்சி
பாத்துட்டு எறும்பு புடிக்க போயிட்டான்.
பையன் திரும்பி வந்தான் . ‘இந்தாங்க சார் எறுப்பு’
எறும்பை வாங்கிகிட்டு ‘ தம்பிங்களா எல்லாரும்
என்னை சுத்தி பக்கமா வந்து நில்லுங்க.’ எல்லாரும்
வந்தாங்க. நிண்ணாங்க.
‘நல்லா கவனிங்க இது ஆரஞ்சு பழம்
இது எறும்பு. இந்த எறும்பை பழத்துக்கு
மேல விடறேன்.இப் பொ அது என்ன செய்யுது ?
‘சார் பழத்துக்கு மேல் நடந்து போகுது’
13.’ நல்லா கவனிங்க. எங்க புறப்பட்டது
எங்க போயி சேருதுன்னு பாருங்க’
‘சார் சார் நீங்க எங்க விட்டிங்களோ
அங்க வந்துருச்சி.’ ‘ஆமா சார் அந்த
எறும்பு புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்ந்திருச்சி.’
ஆசிரியருக்கு ரொம்ப மகிழ்ச்சி. பையன்கள்
சரியா புரிஞ்சிகிட்டு இருப்பாங்க. கேட்டா
கரெக்ட்டா சொல்லுவாங்க
பூமி உருண்டை அப்படீன்னு.
’இப்பொ சொலலுங்க இதன் முலமா நீங்க
என்ன தெரிஞ்சிகிட்டிங்க? மாணவர்கள்
எல்லோரும் உற்சாகமாக ஒரே குரலில்
சொன்னார்கள் ‘ ஆரஞ்சு பழம் ஊருண்டை
என்று புரிந்து கொண்டோம்.
உடனே ஆசிரியர் மேஜை மீது இருந்த
டஸ்ட்டர் கட்டையை எடுத்து மடேர் மடேர்
என்ற மண்டையில் அடித்துக் கொண்டார்.
17. பையன்கள் கவனமாக ஆசிரியரை
கவனித்தாரகள், அதுவும் ஒரு
செயல்விளக்கம் என்று.
No comments:
Post a Comment