சூரை இலந்தை ஒரு ஆயுர்வேத மருத்துவ மரம்
SOORAI ILANTHAI – AN AYURVEDIC MEDICINAL TREE
சூரை இலந்தை
SOORAI ILANTHAI
ZIZIPHUS OENOPLIA
சூரைஇலந்தை என்றால் அது ஒரு முள் மரம், மற்றும் சிறு பழ மரம். என்பது அதன் பழைய முகம். ஆனால் அது நோய்களை, உடல் உபாதைகளை நீக்கும் மூலிகை என்பது அதன் புதுமுகம்.
சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் “சூரல்” முள்
தாவரவியல் பெயர்: சிசிபஸ் ஈனோபிலியா (ZIZIPHUS OENOPLIA)தாவரக் குடும்பம் பெயர்: ராம்னேசி (RHAMNACEAE)பொதுப் பெயர்கள்: ஜாக்கால் ஜுஜுப், சுமால் பூரூட்டட் ஜுஜுPப், ஒயில்ட் ஜுஜுப் (JACKAL JUJUBE, SMALL FRUITED JUJUBE, WILD JUJUBE)தாயகம்: இந்தியா
சூரை இலந்தையின் பல மொழிப் பெயர்கள்SOORAI ILANTHAI'S VERNACULAR NAMES
1.தமிழ்: சூரை முள்ளு, சூரைஇலந்தை (SOORAI MULLU, SOORAI ILANTHAI)2.இந்தி: மக்காய் (MAKKAI)3.மராத்தி: புர்ஐp (BURJI)4.மலையாளம்: டூடாலி, செரியாலண்டா (TOTALI, CHERIALANDA)5.தெலுங்கு: பராகி, பரிங்கி ( PARAKI, PARINGI)6.கன்னடா: பர்ஜி, கரிசூரி முள்ளு, ஹரிசூராலி (BURGI, KARISURI MULLU, HARASURALI)7.பெங்காலி: சயாகுல் (SAYAAKUL)8.சமஸ்கிருதம்: கற்கண்டா (KARKANDAUH)
சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் “சூரல்” முள் (SOORAI ILANTHAI - A TRADITIONAL TREE OF SANGA PERIOD)
(ஐங்குறுநூறு 275, அகம் 228 – 9, 357)
தமிழில் சூரல் முள் என்றும் சூரல் இலந்தை, நரி இலந்தை என்றும் சொல்லப்படுகிறது. சங்க இலக்கியக் காலத்தில் சூரல் என்றே
இலக்கியங்களில் சொல்லப்பட்டது.
“குரங்கின் தலைவன் குரு மயிர்க் கடுவன்
சூரல்
அம் சிறுகோல் கொண்டு, வியல் அறை மாரி
மொக்குள் புடைக்கும் நாட!”
ஐங்குறுநூறு – 275, அகம் 228 - 9, 357)
கடுவன் என்னும் ஆண்குரங்கு, சூரல் என்னும் முள் மரத்தின் கம்பு ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு, பாறையில் கொட்டி அந்த பூ மொட்டுக்களை புடைத்து விளையாடியது, என்று சொல்லும், ஐங்குநுறூறு என்ற
சங்க இலக்கியத்தின் பாடல் இது.
“சூரல் மிளை இல சாரல் அர் ஆறு” (அகம் 228 -9)
என்றும்
அகநானூற்றுப் பாடல்” ஆற்றுவழிப் பாதையில்
சூரல் வேலி போல் அழைந்திருக்கும்” என்று
சொல்லப்படுகிறது“கொடு முள் ஈங்கை சூரலோடு மிடைந்த வான்முகை இறும்பு”(அகம் 357) என்றும் அகநானூற்றுப்
பாடல்,
காடுகளைக் கடந்து செல்ல வழிவிடாமல் ஈங்கை முள்ளும், சூரல் முள்ளும்
பின்னிப் பிணைந்து கிடக்கும்” எனச் சொல்லுகிறது.
சூரை இலந்தை ஒரு ஆயுர்வேத மருத்துவ மரம் SOORAI ILANTHAI – AN AYURVEDIC MEDICINAL TREE
இந்தியாவில்,
பல நூறு ஆண்டுகளாக இதன் வேரை ஆயுர்வேத
மருத்துவத்தில் இதனைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கொங்கணிப் பகுதியில் உள்ள மக்கள், உடலில் எற்படும்
காயங்களை குணப்படுத்த இதன் இலைகளை வித்தியாசமாகப் பயன்படுத்துகிறார்கள்.
இதன் இலைகளைப் பறித்து எச்சில்கூட்டி மென்று
அந்த இந்த இலைச் சாந்தினை காயத்தின் மீது தடவுகிறார்கள். அந்த இலைச் சாந்து காயத்தின் மீது அப்படியே
ஒட்டிக் கொள்ளுமாம். காயம் ஆறிய பின்னர்
உலர்ந்துபோன இலைச் சாந்து அதிலிருந்து உதிர்ந்து போகும்.
தொண்டைப்புண்,
வயிற்றுக்கடுப்பு, கருப்பைவீக்;கம் ஆகியவற்றைக்
குணப்படுத்த, இந்த சூரல் மரத்தின் பட்டைகளைப்
பயன்படுத்துகிறார்கள், பர்மா தேசத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த சூரை மரத்திலிருந்து
எடுக்கும் சாற்றினை, தாய்லாந்து நாட்டினர் மலேரியாவைக் குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள்.
சூரை இலந்தை மரம் – பரவியிருக்கும்
இடங்கள் ஆசியா மற்றும்
ஆஸ்திரேலியா
(SOORAI ILANTHAI TREE IS DISTRIBUTED IN
ASIA AND AUSTRALIA)
ஆசியாவின் குளிர்ப்பிரதேசமான சைனாவின், குவாங்கி மற்றும்
யுன்னான் பகுதி, வெப்பமண்ட ஆசியப் பகுதியான, இந்தியா, நேப்பாளம், ஸ்ரீலங்கா, இந்தோசைனா, மியான்மர், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மற்றும் ஆஸ்திரேலியாவின் வடக்கு எல்லை மற்றும்
குயின்ஸ்லாந்து பகுதியிலும் இந்த சூரல் மரங்கள் பரவியுள்ளன.
இந்தியாவில் ஈரச் செழிப்பான மற்றும் வறண்ட
பகுதிகளில் எல்லாம் பரவியுள்ள குறுமரம். சம வெளிப் பகுதிகளில் மற்றும் மலைச் சரிவுகளில் 1200 மீட்டர் வரை இந்த மரங்கள் வளர்ந்திருக்கும். குறிப்பாக புதர்க்காடுகள் (SCRUB
JUNGLE) இருக்கும் இடங்களில் எல்லாம் இந்த
மரங்களைப் பார்க்கலாம். கேரளா மாநிலத்தில்
பரவலாக எல்லா மாவட்டங்களிலும் இந்த மரங்களைக் காணலாம்.
சூரை இலந்தை இது நாள் வரை ஒரு முள்மரம். இனி அது ஒரு மூலிகை மரம்”(SOORAI ILANTHAI COULD BE A HERB IN FUTURE)
சூரல்
மரத்தின் முக்கியமான அம்சம் இதன் முட்கள்தான்.
கிளைச் சிம்புகளில் முட்கள் இரண்டிரண்டாய் ஜோடிகளாக
இருக்கும். ஒரு முள் நேராக
இருக்கும். இன்னொரு முள்
வளைந்திருக்கும். வேலிகள் அமைக்க மிகவும்
பொருத்தமான மரம்.
இந்த மரங்களைக் கொண்டு
உயிர் வேலிகள் அமைக்கலாம்.
புதர்க்காடுகளில் இரண்டு வகையானவை மிகவும் பிரபலமான முட்கள். ஒன்று இண்டுக் கொடிகளின் முட்கள். இன்னொன்று நம் சூரல் முள்.
இரண்டுக் கொடிகளும், சூரை மரத்தின்
கிளைகளும் வழிப்போக்கர்களின் வழியைத் தடுத்து நின்றன என்று ஒரு சங்க இலக்கியப்பாடல் இந்த இரண்டு
முள்மரங்கள் பற்றி செல்லுகின்றன.
இண்டுக் கொடிகளின் முட்கள் இன்றும் மோசம். ஆபத்தானவை கூட. சிறுமலையில் ஒரு முறை நான் இண்டுக் கொடியின்
முட்களின் வசமாய் மாட்டிக் கொள்டேன்.
என்னுடன் வந்த இரண்டுபேர், இரண்டு சிறிய சட்டைக் கிழிசல்களுடனும், இரண்டு நொட்டு ரத்தம், ஒரு சிறிய காயம் என்று என்னை மீட்டு எடுத்தனர்.
சூரல் இனி உடலில் எற்படும் காயங்கள் தொண்டைப்புண், வயிற்றுக்கடுப்பு, கருப்பைவீக்கம் மலேரியா ஆகியவற்றைக் குணப்படுத்த, அது பரவியிருக்கும் அனைத்து தேசங்களிலும் பயன்படுத்தும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
No comments:
Post a Comment