நான் எடுத்த ஹாலிவுட் (ஊதா கலர் இலவம்பஞ்சு) படம் |
சில்க்பிளாஸ்- ஹாலிவுட்அழகு
மரம்
SILK FLASS - HOLYWOOD
BEAUTY TREE
அமெரிக்காவில் இதன் பெயர் சில்க் ஃபிளாஸ். நம்ம ஊரில் இலவம் பஞ்சு மரம். இலவம் பஞ்சில் இது ஒரு வகை. நம்ம ஊரில் மஞ்சள் இலவு, சிவப்பு இலவு, வெள்ளை இலவுதான் ரொம்பப் பிரபலம். இது ஊதாக்கலர் இலவு.
சித்த மருத்துவம், மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் முக்கியமான மூலிகை, இலவு. இதன் பூக்களை பயன்படுத்துகிறார்கள். பலவிதமான நோய்களை குணப்படுத்தும் மருந்துகளைத் தயார் செய்கிறார்கள்.
இலவம் பஞ்சு தலையணைகள் உலகம் பூராவும் பிரபலமானவை. நுரை ரப்பர் பஞ்சு அடைத்தக் தலையணைகள்தான் கடைகளில் விற்பனை ஆகின்றன. என்னதான் அவை “மெத்மெத்” தென இருந்தாலும் இலவம்பஞ்சுக்கு இணை ஆகாது. ஈடாகாது. ஆனால் விலைதான் ஆனைவிலை குதிரை விலை இருக்கும்.
ஓற்றை மரத்தைக் குடைந்துவிட்டுச் செய்யும் படகுக்கு “கேனோ” (CANOE BOAT) என்று பெயர். கேனோ மரத்தில் செய்யும் படகுகள் அகலம் குறுகலாக இருக்கும் நீளம் அதிகம் இருக்கும்.
சமீபத்தில் அமெரிக்கா போய் இருந்தேன். அங்கு 40 நாட்கள் தங்கி இருந்தேன்.
அந்த சமயம் 40 வட அமெரிக்க மரங்கள்பற்றி
40 கட்டுரைகள் எழுதத் திட்டமிட்டிருந்தேன். அப்போது
கலிஃபோர்னியா மாநிலத்தில் லாஸ் ஏஞ்செல்சில் நான்கு நாள் தங்கி
இருந்தேன். செல்லும்
இடம் எல்லாம் வித்தியாசமான மரங்கள் கண்ணில் படுகிறதா என்பதில் குறியாக இருப்பேன்.
அங்கு சர்வதேச திரைப்பட
உலகின் தலைமைப்பீடமாகக்
கருதப்படும் இடம்
லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் “ஹாலிவுட்.. தென்னிந்திய
சினிமாவுக்கு கோடம்பாக்கம் மாதிரி உலக சினிமாவுக்கு ஹாலிவுட். அமெரிக்காவில் கலிஃபோர்னியா
மாநிலத்தின் மத்திய பகுதியில் சுமார்
11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஹாலிவுட்.
லாஸ்
ஏஞ்சல்ஸ் நகரில் தங்கி இருந்தபோது எனக்கு சினிமா பற்றிய என்னுடைய சினிமா கனவுகள் சிறகடித்தன.
இப்போது எனக்கு வயது எழுபது. நிறைய வயதினை சோதனைகளை சாதனைகளை கடந்து வந்து விட்டேன்.
எல்லாம் நிழலாக வந்து போகும் வயதில் நான்.
எனது நெருக்கமான தோழர்களுக்குத் தெரியும். சிறுசும் பெருசுமாய் நான் கொஞ்சம் டாகுமெண்டரி படங்களை எடுத்துள்ளேன். நான் எழுதி இயக்கிய ஒரு செய்திப்படத்தின் பெயர் “கடைசி மணிதனை கவனி”. அது ஒரு சமூகம் சார்ந்த படம். “மக்கள் பங்கேற்பு” பற்றிய படம். 1994 வெளிவந்த அந்தப் படம் பற்றிய இரண்டு பக்க விமரிசனத்தை ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் “மணா” அவர்கள் எழுதி இருந்தார்.
அதன் பின்னர் அது ஆங்கிலத்தில் சப்டைட்டில் போடப்பட்டு பல நாடுகளில்கூட பயன்படுத்தப்பட்டது. இந்தியாவிலும் பல மாநிலங்களிலிலும் பயன்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டிலும் பல அரசுத்துறைகள் “மக்கள் பங்கேற்பு” குறித்த பயிற்சிக்காகப் பயன்படுத்தின. அதனைத் தொடர்ந்து சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட குறும்படங்கள் செய்ததுடன் அவை சம்மந்தமான வேலைகளை நான் முடித்துக் கொண்டேன்.
இப்போது நாம் ஹாலிவுட்டில் இருக்கிறோம்.
1870
ம் ஆண்டு வாக்கில் ஹாலிவுட் பகுதிக்கு பெயர் காகுங்கா பள்ளத்தாக்கு (CAHUENGA
VALLEY) என்று பெயர். சாந்தா மொனிகா மலைத்தொடரின்
கணவாய்க்கு அடுத்து அமைந்துள்ளது
இந்தப் பகுதி. அங்கு காரில் செல்லும்போதே ஒரு அழகான மரம் கண்ணில் பட்டது. காரை விட்டு இறங்கி நடந்தோம்.
அங்கு
ஒரு வீட்டின் முகப்பில் அற்புதமான,
அழகான,
கவர்ச்சிகரமான ஒரு மரம். மரம் முழுவதும் ஊதா நிறப் பூக்கள். கிளைகளும் இலைகளும் தெரியாத அளவுக்குப்
பூக்கள். என்ன பூவாக இருக்கும்? என்ன மரமாக இருக்கும்? அங்கும் நாங்கள்
நின்று நிறைய புகைப் படங்கள் எடுத்துக் கொண்டோம்.
“ஹாலிவுட்” டில் நான் எடுத்த படங்கள்.
மரத்தின்
அருகில் சென்று பார்த்தேன். பூக்களைப்
பார்த்தேன். மனம் கொள்ளா அழகு.
மரத்தின் இலைகளைப் பார்த்தேன்.
நம்ம ஊரில் இருக்கும் ஏதோ ஒரு தமிழ் மரத்தின் சாயல். கைவிரல் போன்ற இலைகள், அடர்த்தியான பச்சை
நிறம். ஆமணக்கு இலைபோல. மரவள்ளி இலைபோல. ரப்பர் மரத்தின் இலைபோல, ஏழிலைப்பாலை இலைபோல. கடைசியாய்த் தோன்றியது இலவம்பஞ்சு மர இலைபோல. உடனடியாகச் சொன்னேன் “அநேகமாய் இது இலவம்பஞ்சு மரத்தின் ஒரு வகையாக
இருக்கும்” என்று.
என்
மகனும், மறுமகளும் மனைவியும் என்னை ஒரு மாதிரியாய் பார்த்தார்கள். அவர்கள் என்னை முழுசாய்
நம்பவில்லை என்பது மட்டும் அவர்களுடைய பார்வையில் தெரிந்தது. ஆனால் எனக்கு மட்டும் எடிசன் மாதிரி ஏதோ புதியதாக ஒன்றைக் கண்டுபிடித்தது போல மகிழ்ச்சி.
நம் இந்தியாவில் இலவம் பஞ்சு மரங்கள் மஞ்சளாகப்
பூக்கும். வெள்ளையாகப் பூக்கும். சிவப்பாகப் பூக்கும். ஆனால் இந்த மரத்தின் பூக்கள் ஊதா நிறம். லேவண்டர் நிறம். ஐக்ரந்தா பூக்கள் மாதிரியான ஒரு நிறம்.
மஞ்சள் இலவு மரத்தின் தாவரவியல் பெயர் கோச்லோஸ்பெர்மம் ரெலிஜியோசம், (COCHLOSPERMUM RELIGIOSUM) சிவப்பு இலவு அல்லது செவ்விலவு மரத்தின் தாவரவியல் பெயர் பாம்பாக்ஸ் சிபா (BOMBAX CEIBA). வெள் இலவம் பஞ்சு மரத்தின் தாவரவியல் பெயர் சீபா பெட்டாண்ட்ரா (CEIBA PETANDRA) “ஹாலிவுட்”ல் நான் பார்த்த இலவம்பஞ்சு மரத்தின் தாவர இயல் பெயர் சிபா ஸ்பீசியோசா (CEIBA SPECIOSA).
ஹாலிவுட்டில் நான் எடுத்த இலவம் பஞ்சு மரத்தின் படம் |
ஊதாப்பூ இலவம் பஞ்சு மரம்.(SILK FLASS TREE)
தாவரவியல் பெயர்: சீபா ஸ்பீசியோசா (CEIBA SPECIOSA)
தாவரக்குடும்பம்: மால்வேசி (MALVACEAE)
பொதுப் பெயர்கள்: சில்க் ஃபிளாஸ் ட்ரீ. கப்பாக், பாட்டிபட்ரீ, ரேஷம் ரூய் (SILK FLASS TREE, KAPOK, RESHAM RUI, BATTIBAT TREE)
தாயகம்: தென் அமெரிக்காவின் வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகள் (TROPICAL AND SUB TROPICAL AREAS OF SOUTH AMERICA)
இயற்கையாகப் பரவியிருக்கும் பகுதிகள் (NATURAL SPREAD
இயற்கையாக
இந்த மரம் பல நாடுகளில் பரவியுள்ளது. அவை அர்ஜென்டினா, கிழக்கு பொலிவியா, பேராகுவே, உருகுவே, மற்றும் தெற்கு
பிரேசில் பகுதிகள்.
அடிமரம் பாட்டில் போல வளரும் (BOTTLE SHARED TRUNK)
இந்த
மரத்தின் அடிமரம் பாட்டில் மாதிரி பருத்து வளரும். அடிமரம் வெகுவாகப் பருத்த ஆப்ரிக்க
மரம் பேவோ பாப் (BAOBAB). மரம்
கூட அடிமரம். அநியாயாத்திற்கு பருத்துக் காணப்படும்.
அடி மரத்தில் புதைத்து வைத்த மாதிரி, மொத்தமான முட்கள் இருக்கும். பார்க்க பெரிய கூம்பு
வடிவ முட்களை புகைத்தது போலத் தோன்றும். மரத்தில் ஏறுவதுபற்றி யாரும் யோசிக்கக் கூட முடியாது. இதன்
இலைகள் மடக்காமல் நீட்டிய கைகள் போலத் தோன்றும். கிளைகளிலும் எராளமான முட்கள் இருக்கும்.
ஐந்து இதழ்கள் கொண்ட அழகான பூக்கள் (FIVE PETALED FLOWERS)
இதன்
பூக்கள் ஐந்து இதழ்கள் உடையதாக இருக்கும்.
இவை ஊதா நிறமாக,
இருக்கும்.
இதழ்களின் நடுப்பகுதி அழுக்கு வெள்ளை நிறமாக “கிரீம்” தடவியதுபோல
இருக்கும். பூக்கள் 10 முதல் 15 செ.மீ நீளம்
இருக்கும். தோராயமாகப் பார்க்க
செம்பருத்திப் பூவைப்போல இருக்கும். திறந்தவாயை மூடி முடியாமல் செய்யும் பூக்கள் (JAW DROPPINGLY BEAUTIFUL) இவை என்கிறார்கள்.
பிப்ரவரி முதல் மே மாதம் வரை, கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் பூக்கும். இதர
மாதங்களிலும் இது பூக்கும் எனத்தோன்றுகிறது. காரணம் முழு மரமும் பூக்களோடு நான்
பார்த்தது, அக்டோபார் மாதத்தில். இது இலை உதிர்க்கும் மரம் என்பதால்
குளிர்ப்பருவத்தில், இலைகளும், பூக்களும் இல்லாமல் மரங்கள் மொட்டையாக
நிற்கும்.
இலவம் பஞ்சு தலையணைகள் (PILLOWS OF SILK COTTON)
இலவம்
பஞ்சு தலையணைகள் உலகம் பூராவும் பிரபலமானவை.
நுரை ரப்பர் பஞ்சு அடைத்தக் தலையணைகள்தான் கடைகளில் விற்பனை ஆகின்றன. என்னதான் அவை “மெத்மெத்” தென இருந்தாலும்
இலவம்பஞ்சுக்கு இணை ஆகாது. ஈடாகாது. சில கடைகளில் இலவம் பஞ்சு என்று சொல்லி
கலப்படம் செய்து விற்பனை செய்கிறார்கள்.
சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இலவு (SILK COTTON AND TRADITIONAL MEDICINES)
சித்த
மருத்துவம், மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் முக்கியமான
மூலிகை, இலவு. இதன்
பூக்களை பயன்படுத்துகிறார்கள். பலவிதமான
நோய்களை குணப்படுத்தும் மருந்துகளைத் தயார் செய்கிறார்கள்.
“கேனோ” படகுகள் செய்யலாம் (SINGLE TREE MADE CANOE BOATS
ஓற்றை
மரத்தைக் குடைந்துவிட்டுச் செய்யும் படகுக்கு
“கேனோ” என்று பெயர். கேனோ மரத்தில் செய்யும் படகுகள் அதலம் குறுகலாக இருக்கும் நீளம் அதிகம் இருக்கும். நேராக நிமிர்ந்து கிளைகள் இல்லாமல் வளர வேண்டும். அகலம் அதிகம் இருக்க வேண்டும். மரம் குடைவதற்குச் சுலபமாக இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட மரங்களில்தான் “கேனோ” படகுகள்
செய்யலாம். மரங்கள் அதிக எடை இல்லாமல், தண்ணீரில் சுலபமாக மிதக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இவ்வளவு
குணங்கள் இருந்தால்தான் அதில் “கேனோ” செய்ய முடியும். அத்துடன் இந்த மரங்களில் மரக்கூழ் தயாரித்து, அதில் காகிதம்
தயாரிக்கலாம். தீக்குச்சிகள்
தயாரிக்கலாம்.
பட்டைகளில் கயிறு திரிக்கலாம் (ROPE MAKING BARKS
இதன்
பட்டைகளில் கயிறு திரிக்கலாம். இலவம்
பஞ்சுதான் மிருதுவானவை. இதன் பட்டைக் கயிறுகள் மிகவும்
உறுதியானவை. இதன் கொட்டைகள் அல்லது
விதைகளிலிருந்து எண்ணெய் பிழிந்து எடுக்கலாம். இந்த எண்ணெயைச் சமைக்கப் பயன்படுத்தலாம்.
மேலும் இதனை தொழிற்சாலைகளில் உயவு எண்ணெயாகவும்
பயன்படுத்தலாம். எண்ணெயில் சோப்பு
தயாரிக்கலாம்.
உலகம் முழுவதற்கும் பயன்படும் அழகு மரம் (WORLD RENOWNED ORNAMENTAL TREE)
உலகம்
பூராவும் இந்த இலவம்பஞ்சு .மரத்தை அழகு மரமாகப் பயன்படுத்துகிறார்கள்.சூடி
மகிழும் பூக்கள்பற்றி பாடி மகிழ்வதை பெரு வழக்காகக் கொண்டது நமது சங்க இலக்கியம். இந்த நற்றிணைப் பாட்டைப் பாருங்கள்.
“கோங்க மரத்தின் பூக்கள் பெரியவை. இதழ்கள் சிறியவை. குடைபோல் வளைந்தவை. பூக்கும் பருவம்
இது. பூக்கள் உதிர்ந்து கிடக்கின்றன. அவை
காலைநேர வானத்தில் மின்னும் மீன்கள் போல மனதை கொள்ளையடிக்கின்றன: அந்தக் காட்டுவழி பூ
மணத்தால் நிரம்பி வழிகிறது”
இப்படி சொல்லுவது நற்றிணை என்னும்
சங்க இலக்கியம்.
“புல் இதழ்க் கோங்கின் மெல்லிதழ்கள் குடைப்பூ
வைகுறு மீனின் நினையத் தோன்றிப்
புறவானி கொண்ட பூ நாறு கடத்திடை….” நற்றிணை- 46.(3.5)
இந்த முள் இலவு மரத்தை நம்ம ஊரில் பார்த்திருக்கிறீர்களா ? அந்த மரங்கள் ஊதா கலரில் பூக்கிறதா ?
GNANASURIA BAHAVAN D
gsbahavan@gmail.com
No comments:
Post a Comment