சுமார்டு சிவப்பு ஒக் மரம் -
கலக்கலான
வணிக மரம்
SHUMARD
RED OAK - TOP CLASS
BUSINESS TREE
பொங்கல் பண்டிகையின்போது நமது வீடுகளில் புதுக்கோலம் பூணுவதுபோல, இங்கு இயற்கை புதுக்கோலம் பூணுகின்றன. இதன் இலைகளின். மேற்புறம் அடர்த்தியான பசுமை நிறத்திலும், அடிப்பகுதி வெளிர்பச்சை நிறத்திலும் இருக்கும். ஃபால் - இலை உதிர் பருவத்தில் இலைகள், கவர்ச்சிகரமான காவி மற்றும் சிவப்பு நிறமாக மாறி பொங்கல் கொண்டாடுகின்றன.
வணிக ரீதியான மரத்திற்கான பண்புகள். இந்த அத்தனைப் பண்புகளையும் கொண்டது, சுமார்டு சிவப்பு ஒக் மரம். மரவேலைகள் செய்ய உயர்தரமான மரம் (MECHANICALLY SUPERIOR TREE) என்கிறார்கள் மர நிபுணர்கள்.
குறிப்பாக பாடும் பறவைகள், விளையாட்டுப் போட்டிகளில் பயன்படுத்தப்படும் (GAME BIRDS) வான் கோழிகள், காடைகள், மற்றும் நீர்க் கோழிகள். சிறு பாலூட்டி விலங்குகளில், வெள்ளைவால் மான்கள், காட்டுப்பன்றிகள் (FERAL HOGS), எலிகள் மற்றும் அணில்கள் போன்றவைகளுக்கும் இது உணவாகிறது.
தாவரவியல் பெயர்: கொர்கஸ் சுமார்டி (QUERCUS SHUMARDII)
தாவரக்
குடும்பம் பெயர்: பேகேசியே (FACACEAE)
பொதுப்
பெயர்கள்: சுமார்டுஒக், ஸ்பியூட்டட் ஒக், ஷ்னெக் ஒக், சுமார்டு ரெட் ஒக், சுவேம்ப் ரெட் ஒக் (SHUMARD OAK, SPUTED OAK, SCHNECK
OAK, SUMARD RED OAK, SWAMP RED OAK)
தாயகம்: அட்லாண்டிக் கடற்கரையின் சமவெளிப்பகுதியில் வடக்குக் கரோலினா முதல் வடக்கு புளோரிடா வரை (ATLANTIC COASTAL PLAIN – NORTH CAROLINA TO NORTHERN FLORIDA)
சுமார்டு
சிவப்புஒக் மரம், இதர சிவப்பு ஒக் மரங்கள் முதல் தரம் உடையது. மரவாடிக்தகு போய் சிவப்பு ஒக் மரம் வேண்டும்
என்றால், “எந்த மரம் வேண்டும்?” என்பார்கள். அவர்கள் உங்களுக்கு சுமார்டு சிவப்பு ஒக் மரம்தான்
சிபாரிசு செய்வார்கள்.
மற்றவை எல்லாம் சுமார் ரக ஒக் மரங்கள்தான் என்பார்கள்.
ஒரு வியாபார மரம் (COMMERCIAL TREE)
சுமார்டு
ஒக் மரம், முக்கியமாக ஒரு வணிக மரம். இரண்டாவதாக நிழல் தரும் மரம், மூன்றாவதாக பறவைகள், மற்றும் விலங்குகளுக்கு உணவாகும் மரம்.
பரவியிருக்கும்
இடங்கள் (DISTRIBUTION)
வட
அமெரிக்காவின் பல பகுதிகளிலும் பரவியுள்ள மரம், அவை, மிசிசிப்பி ஆற்றின்
பள்ளத்தாக்குப் பகுதிகள், மத்திய ஒக்கலஹாமா, வடக்கு கான்சாஸ், மிசௌரி, தெற்கு இலிநாய்ஸ், இண்டியானா, மேற்கு மற்றும்
தெற்கு ஒகையோ, கெண்டக்கி,
டென்னிசி, மிச்சிகன், பெனிசில்வேனியா, மேரிலேண்ட், மேற்கு நியூயார்க்
பகுதி மற்றும் ஒண்டாரியோ, கனடா.
பரவலான மண்வகைகள் ஏற்றவை(SUITABLE TO WIDE RANGE OF SOILS)
வேறுபட்ட
கார அமிலநிலை உள்ள மண்வகைகளிலும் நன்கு வளரும்.
நல்ல சூரியஒளி மற்றும் சுமாரான வெளிச்சம் இருந்தாலும்
வளரும். வறட்சி இருந்தாலும் அதனையும்
தாங்கி வளரும்.
மரவேலைகள்
பல செய்யலாம்(DIFFERENT WOOD WORKS)
இந்த
சுமார்டு மரத்தைப் பயன்படுத்தி பலவகையான மரவேலைகள் செய்யலாம். வணிக ரீதியில் பயன்பட அது முக்கியமாக
கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்பட வேண்டும். மேஜை நாற்காலி போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் செய்யப்
பயன்பட வேண்டும். தரை போடுதல், அலங்கார வேலைகள், பொருட்களை பேக்கிங்
செய்யத் தேவையான பெட்டிகள் செய்யப் பயன்பட வேண்டும். பல்வேறு பொருட்களை செய்வதற்கான அச்சுக்கள் (MOULDS) தயாரிக்க பயன்பட வேண்டும்.
இவைதான் வணிக ரீதியான மரத்திற்கான
பண்புகள். இந்த அத்தனைப் பண்புகளையும்
கொண்டது, சுமார்டு சிவப்பு ஒக் மரம். மரவேலைகள் செய்ய உயர்தரமான மரம் (MECHANICALLY
SUPERIOR TREE) என்கிறார்கள் மர
நிபுணர்கள்.
25 ஆண்டுகள் விதை உற்பத்தி செய்யும்
சுமார்
25 ஆண்டுகள் இந்த மரங்கள் விதைகளை உற்பத்தி
செய்யும். தனது 25 வது வயதில் விதை
உற்பத்தி செய்யத் தொடங்கி 50 ஆண்டுகள் வரை தொடரும். ஆனால் இதன் வயதைக் கேட்டால்
ஆச்சரியப்படுவீர்கள். அதிக வயது வாழும்
மரங்களில் ஒன்று. இதன் வயது 480 ஆண்டுகள். அகார்ன்கள்தான் விதை உற்பத்தி செய்யும் இனப்பெருக்க
உறுப்புகள். இந்த அகார்ன் சராசரியாக ஒரு
அங்குல நீளம் இருக்கும்.
பறவைகளுக்கும் பாலூட்டிகளுக்கும்
உணவாகிறது (FEED BIRDS AND MAMMALS)
சுமார்டு
ஒக் மரங்களின் அகார்ன்கள் வன உயிர்களுக்கு உணவாகிறது. குறிப்பாக பறவைகள் மற்றும் சிறு பிராணிகளுக்கும்
உணவாகிறது. குறிப்பாக பாடும் பறவைகள், விளையாட்டுப்
போட்டிகளில் பயன்படுத்தப்படும் (GAME BIRDS) வான் கோழிகள், காடைகள், மற்றும் நீர்க்
கோழிகள். சிறு பாலூட்டி விலங்குகளில், வெள்ளைவால் மான்கள், காட்டுப்பன்றிகள் (FERAL HOGS), எலிகள் மற்றும் அணில்கள் போன்றவை இந்தப் பட்டியலில் அடங்கும்.
பெருங்குழுவைச்
சேர்ந்த
சிவப்பு
ஒக் மரங்கள்(RED OAK TREES)
ஒக்
மரங்கள் என்பதே ஒரு பெரிய குழுவைத் சேர்ந்தது.
இதில் ஏராளமான மரவகைகள் உள்ளன.
இதில் “சிவப்பு ஒக்” மரங்களும்
ஒரு பெருங்குழுவே. இவற்றில் சுமார்டு சிவப்பு
ஒக் மரங்களுடன் தொடர்புடையவை என மூன்று வகைகளைக் குறிப்பிடுகிறார்கள். அவை டெக்சாஸ் ரெட் ஒக், நட்டல்ஸ் ஒக், சிசோஸ் ரெட் ஒக் (TEXAS
RED OAK, NUTTAL’S OAK AND CHISOS RED OAK) ஆகியவை.
எப்படிபட்ட
மரங்கள்?
(DISCRIPTION OF THE TREE)
மரங்கள்
அளவில் பெரியவை. உயரத்தில், பெரியவை. பருமனில்
பெரியவை. அதிகபட்சமாக வளரும் உயரம் 138 அடி.
மரத்தின் தலைப்பகுதியின் (CROWN) அளவு 90 அடி. மரங்கள் நேராக நிமிர்ந்து வளரும். தரைமட்டத்தில் மரத்தின் அடிப்பகுதி பருமனாகக்
காணப்படும். சுமார்டு மரங்கள் தாழ்வான
பள்ளக்கால் பகுதிகளில் வளரும். அதனால்தான்
அதனை ஸ்வாம்ப் ஒக் (SWAMP
OAK) என்னும் சொல்லுகிறார்கள். இப்படிப்பட்ட சதுப்பு நிலங்களில் தொடர்ந்து 40 முதல் 50 நாட்கள் அடிமரப் பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றால் கூட அதனால் மரங்கள் பாதிக்கப்படாது.
இலையுதிர்
பருவத்தைக்
கொண்டாடுகிறார்கள்(AMERICANS CELEBRATE THE FALL)
ஆங்கிலத்தில்
ஃபால்
(FALL) என்பதன் அர்த்தம் வேறு அமெரிக்காவில் ஃபால்
என்பது ஒரு கொண்டாட்டத்தைக் குறிக்கும்
சொல். அப்போதுதான் பல அழகு மரங்கள், பசுமையான தங்கள்
இலைகளை, மஞ்சள், செம்மஞ்சள்,
சிவப்பு, காவி, செங்காவி, தங்க நிறம் என பல
நிறங்களில் மாறி வர்ணஜாலம் காட்டி உதிர்ந்து போகின்றன.
பொங்கல் பண்டிகையின்போது நமது வீடுகளில் புதுக்கோலம் பூணுவதுபோல, இங்கு இயற்கை
புதுக்கோலம் பூணுகின்றன. இதன்
இலைகளின். மேற்புறம் அடர்த்தியான பசுமை நிறத்திலும், அடிப்பகுதி வெளிர்பச்சை
நிறத்திலும் இருக்கும். ஃபால் - இலை உதிர் பருவத்தில் இலைகள், கவர்ச்சிகரமான காவி
மற்றும் சிவப்பு நிறமாக மாறி பொங்கல் கொண்டாடுகின்றன.
BEAUTIFUL TREES I SAW IN USA
FOR FURTHER READING
ON RELATED TOPICS
1.
ஊமத்தை ரேபிஸ் நோயை
கட்டுப்படுத்தும் அரிய மூலிகை
- DATURA A VALUABLE MEDICINE AGAINST RABIES – Date of Posting; 24.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/datura-best-traditional-herbal-tree.html
2. நீர் பார்க்காத நான் பார்த்த
மொஜாவ் பாலைவன மரங்கள் -
WATER STARVING TREES OF MOJAVE
DESERT – Date
of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/water-starving-trees-of-mojave-desert.html
3.
செக்கோயா உலகின்
உயரமான செக்கோயா மரம் - KING SEQUOIA
WORLDS' TALLEST TREE –
Date of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html
4. கலிபோர்னியா விசிறிப்பனை
சாலைகளுக்கு அழகு தரும் மரம்
- CALIFORNIA FAN PALM - GRACEFUL TREE – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/california-fan-palm-graceful-tree.html
5.
டவுக்ளஸ் பிர் -
பிரபலமான மின்சார மரம் DOUGLAS
FIR - - UTILITY POLE TREE –
Date of Posting; 16.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/douglas-fir-popular-utility-pole-tree.html
6.
சில்க்பிளாஸ்-
ஹாலிவுட் அழகுமரம் - SILK FLASS -
HOLYWOOD BEAUTY TREE – Date of Posting; 15.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/silk-flass-holywood-beauty-tree.html
7.
செடார் எல்ம் - உறுதி மிக்க பாறை மரங்கள் - CEDAR ELM -
STRONG TIMBER TREE –
Date of Posting; 14.01.2020 https://vivasayapanchangam.blogspot.com/2020/01/cedar-elm-strong-timber-tree.html
8.
டெக்சாஸ் மவுண்டெய்ன்
லாரெல் ட்ரீ - அழகு மரம் TEXAS MOUNTAIN LAUREL - AWESOME TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-mountain-laurel-awesome-tree.html
9.
சைனிஸ்
பிஸ்டாச்சி மிரட்டும் அழகு மரம் - CHINESE PISTACHE - TREE OF STUNNING BEAUTY –
Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chinese-pistache-tree-of-stunning-beauty.html
10.
டெக்ஸாஸ் பெர்சிமான்
- சிற்பமும் சிலையும் செய்ய ஏற்ற பழமரம் TEXAS PERSIMON -
EXCELLENT TIMBER TREE –
Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-persimon-excellent-timber-tree.html
11.
சாவன்னா ஹோலி - அழகான
காட்டுமரம் - SAVANNA
HOLY - PRETTY WILD TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/savanna-holy-pretty-wild-tree.html
12.
ரீகல் பிரின்ஸ்
ஒக் -
மரங்களின் சகல கலா வல்லவன் - REGAL
PRINCE OAK A VERSATILE
TREE – Date
of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/regal-prince-oak-versatile-tree.html
13.
மக்னோலியா - ஒரு மரமே
சிறு வனமாகும் - MAGNOLIA - ONE TREE
FOREST – Date
of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/magnolia-one-tree-forest.html
14. லைவ் ஒக் - சமையல் எண்ணை மரம்
LIVE OAK -
COOKING OIL TREE – Date of Posting; 09.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/live-oak-cooking-oil-tree.html
15.
ஈஸ்டன் ரெட் செடார்
வாசனைத்திரவிய மரம் EASTERN RED
CEDAR TREE OF PERFUMES –
Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/eastern-red-cedar-tree-of-perfumes.html
16.
சிட்டல்பா சேம்பியன்
ட்ரீ அங்கீகரிக்கப்பட்ட அழகு மரம் -
CHITALPA CHAMPION A STUNNING
BEAUTY – Date of
Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chitalpa-champion-stunning-beauty.html
17.
ஒசேஜ் ஆரஞ்சு மண்ணரிப்பைத் தடுக்க ரூஸ்வெல்ட்
அதிகம் நட்ட மரம் - OSAGE ORANGE
PET TREE OF ROOSEVELT
– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html
18.
பிக் டூத்
மேப்பிள் சக்கரை மரம் -
BIG TOOTH MAPLE SUGAR TREE– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-tooth-maple-sugar-tree.html
19.
பால்ட் சைப்ரஸ் பாரம்பரிய
மருத்துவ மரம் - BALD
CYPRESS A TRADITIONAL HERB – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/bald-cypress-traditional-herb.html
20.
புளு அட்லஸ்
செடார் தொழில் மரம் - BLUE ATLAS CEDAR TREE OF INDUSTRIES – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/blue-atlas-cedar-tree-of-industries.html
21.
அனாகேச்சோ
ஆர்கிட் அழகு பூமரம்”
- ANACACHO ORCHID GRACEFULL
FLOWERING TREE – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/anacacho-orchid-gracefull-flowering-tree.html
22.
கிரேப்
மிர்ட்டில் நீண்ட பூங்கொத்து மரம் CRAPE MYRTLE
GLAMOROUS FLOWERING TREE – Date of Posting; 06.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html
23.
மெக்சிகன் சைகாமோர்
அழகிய மருத்துவ மரம் - MEXICAN SYCAMORE -
NICE LOOKING TREE – Date of Posting; 16.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/mexican-cycamore-tree.html
24.
ஜோஷுவா அமெரிக்க
பூர்வகுடிகள் மரம் - JOSHUVA TREE OF AMERICAN NATIVES –
Date of Posting; 02.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/joshuva-tree-of-american-natives.html
25.
பப்பாளி உடல்
எடை குறைப்பு மரம் - PAPAYA BODY
WEIGHT REDUCING TREE –
Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/papaya-body-weight-reducing-tree.html
26.
கார்டியா - மரச்சாமான்
மரம்- CORDIA NICE WOOD WORK TREE–
Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/cordia-nice-wood-work-tree.html
27.
பிக்சேஜ் எனும் நோய் போக்கும்
உண்ணி மரம் - BIG SAGE
A PLEASING HERB TOO– Date of Posting; 22.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-sage-pleasing-herb-too.html
28.
டாக்வுட் ட்ரீ -
மலேரியாவை குணப்படுத்தும் மரம் - DOG
WOOD ANTI MALARIA TREE –
Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/dog-wood-anti-malaria-tree.html
29.
சிவப்பு மேப்பிள்
மலிவான மரவாடி மரம் - RED MAPLE
CHEAP TIMBER TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/red-maple-cheap-timber-tree.html
No comments:
Post a Comment