Monday, January 27, 2020

புத்திரன்ஜீவா - குழந்தை பாக்கியம் தரும் மரம் - PUTRAN JIVA – UNISEXUAL FERTILITY TREE




        


            

புத்திரன்ஜீவா - குழந்தை பாக்கியம்
தரும் மரம் - PUTRAN JIVA –
UNISEXUAL  FERTILITY TREE OF INDIA


புத்திரஜீவா விந்தணுக்களை கூட்டுகிறது,
கருக்குழந்தையை காப்பாற்றுகிறது (PUTRAJEEVA ENHANCES SPERM COUNT
AND PROTECTS THE BABY IN THE WOMB)



TREE OF INDIA
 PUTRANJIVA
ROX BURGII

 

புத்திரஜீவா 

மரம்


புத்திரஜீவா விதைத் தூளை ஒன்று முதல் 3 கிராம், பாலில் கலத்து சாப்பிட்டு வந்தால் உங்கள் விந்துவில் ஸ்பெர்ம் கவுண்ட் அதிகரிக்கும்.
புத்திரஜீவா  விதைத்தூளுடன் பால் சேர்த்து குடித்தால், ருவில் இருக்கும் கருக்குழந்தை பாதுகாப்பாய் வளரும்.

புத்திரஜீவா  இலைகளிலிருப்பது எடுக்கும் சாற்றினை இருபது முதல் முப்பது மில்லி கொடுத்து, சிறுநீர்; கழிப்பதில் ஏற்படும் பிரச்சினைகளை குணப்படுத்தலாம்.

தே. ஞானசூரிய பகவான்,
போன்: + 91-8526195370
Email: gsbahavan@gmail.com


தாவரவியல் பெயர்: புத்திரன்ஜீவா ராக்ஸ்பர்கி (P PUTRANJIVA ROX BURGII)
தாயகம்: இந்தியா (INDIA)
பொதுப் பெயர்கள்: புத்திரன்ஜீவா, லக்கி பின்ட்ரி (PUTRANJIVA, LAKKI PINTRI)

புத்திரஜீவாவின்பல மொழிப் பெயர்கள்:(PUTRANJIVA – OTHER
VERNACULAR NAMES)


1.     தமிழ்: இருக்கோலி, கருப்பலா (IRUKKOLI, KARUPPALI)2.     மலையாளம்: பொங்கலம் (PONGALAM)3.     தெலுங்கு: குதுரு, புத்ர ஐPவிகா (PKUTUHRU,PUTHRA JEEVIKA)4.     கன்னடா: அமனி, புத்ரஜீவா (AMANI ,PUTRAJIVA)5.     பெங்காலி: புத்ரன்ஜீவா, ஜியோசுடா (PUTHRANJIVA, JIOSUTA)6.     ஒரியா: பால்லுண்டியா (PALLUNDIYA)7.     கொங்கணி: சாமன் (SAMAN)
8.     உருது: பைஷான்டியா (PAISHANDIYA)9.     குஐராத்தி: புத்ரன் ஐPவா (PUTRAN JEEVA)10.    மஸ்கிருதம்: புத்ரஜீவா (PUTRA JEEVA)



புத்ரஜீவா இந்தியாவிற்கு
சொந்தமான மரம்(PUTRA JEEVA - INDIAN TREE)


இந்தியாவிற்கு சொந்தமான மரம்.  தென்கிழக்கு ஆசியாவைத் சேர்ந்த சில நாடுகளுக்கு உரிய மரம் இது. அவை ஐப்பான், சைனா மற்றும் நியூகினியா.

புத்ரஜீவா - புத்திர பாக்கியம்
தரும் இந்தியமரம் (PUTRA JEEVA –
UNISEXUAL  FERTILITY TREE OF INDIA )


புத்திர ஐPவ மரம் பெண்களுக்கு புத்திர பாக்கியம் தரக்கூடிய மரம்.  மலட்டுத்தன்மை என்பது குடும்பங்களில் மிகப்பெரிய பிரச்சினைகளை எல்லாம் ஏற்படுத்திவிடும்.  மலட்டுத்தன்மை என்பது கணவன் மனைவிக்கு இடையே மணபிறிவைக்கூட ஏற்படுத்திவிடும்.  மலட்டுத் தன்மைக்குக் காரணம் ஆணா பெண்ணா என்று பார்க்கமாட்டார்கள்.  அந்தப்பழி எப்போதும் பெண்ணின் மீதுதான் விழும்.  அறிவியலும் தொழில்நுட்பமும் அரசோச்சும் இந்தநாளில்கூட புத்திரபாக்கியம் இல்லை என்றால் புத்திர ஐPவி மரம்தேடிச் செல்லுவோர் எண்ணிக்கை குறையவில்லை.  அந்த அளவுக்கு மக்கள் இந்த மரத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.  மருத்துவரீதியாகவும் கருப்பையில் ஏற்படும் குறைபாடுகளைப் போக்கும் என்பதை ஆராய்ச்சி முடிவுகள், சரி என்று நிருபித்துள்ளன.

புத்ரஜீவா ஆயுர்வேத
மூலிகை மரம்(PUTRA JEEVA - AYURVEDIC HERB)


ஆயுர்வேத மருத்துவத்தின் முக்கியமான மூலிகை.  இதன் மூலம் பல நோய்களை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளைத் தயார் செய்கிறார்கள்.  ஆண்கள் மற்றும் பெண்களின் மலட்டுத் தன்மையைப் போக்க, உதவுகிறது.


புத்ரஜீவா ஆண் மலட்டுத்தன்மையை
போக்கும் (PUTRA JEEVA CURES
MALE IMPOTENCY / AZOOSPERMIA)


விந்து உற்பத்தி ஆகாமல் இருப்பது ஒரு வகையான பிரச்சினை.  உற்பத்தி ஆகும் விந்தினை எடுத்துச் செல்ல முடியாமல் போவதும் உண்டு.  இந்த இரண்டு பிரச்சினைகள்தான் ஆண் மலட்டுத்தன்மைக்குக் காரணம். இதனை அசூஸ்பெர்மியா என்று சொல்லுகிறார்கள்.
ஆண்மலட்டுத்தன்மைக்கு என்ன காரணம் என்பதை மருத்துவர்களால்தான் சொல்ல முடியும்.  அப்படிப்பட்ட குறைபாடுகளை புத்திர ஐPவி போக்கும் சக்தி உடையது.

புத்ரஜீவா சிறுநீர் கழிப்பதில் உள்ள
சிரமங்களை குணப்படுத்தும் (PUTRA JEEVA CURES
DIFFICULTY IN URINATION - MICTURITION-)


சிறுநீர் கழிப்பதில் பலவிதமான சிரமங்கள் ஏற்படுவதுண்டு.  சராசரியாக ஒரு நபர் ஒரு நாளில் ஏழு முறை சிறுநீர் கழிப்பதுண்டு.  சில சமயங்களில் இது கூடவும் வாய்ப்புண்டு குறையவும் வாய்ப்புண்டு.  அது தொடர்ந்து நடந்தால் ஏதோ பிரச்சினை இருக்கு என்று அர்த்தம்.  சிலரால் சில மணித்துளிகள் கூட சிறுநீரை அடக்கி வைக்க முடியாது  என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இதனை மருத்துவத்துறையில் மிக்டூரிஷன் என்று சொல்லுகிறார்கள்.  இதனை சரிசெய்யும் மருந்துகளைச் செய்யக்கூட புத்திரஐPவி உதவியாக உள்ளது.

இவை தவிர கண்களில் ஏற்படும் பிரச்சினைகள், கண் எரிச்சல், யானைக்கால் நோய், போன்றவற்றையும் புத்திர ஐPவி குணப்படுத்தும்.  மிக்டூரிவுன் என்றலும் நான் கூட பயந்துவிட்டேன்.  அதற்கு அர்த்தம் ஒண்ணுக்குப் போதல் என்று அர்த்தமாம்.  அதற்கு அது மருத்துவப் பெயர்.

புத்ரஜீவா அடிக்கடி நிகழும்
கருச்சிதைவுகளை கட்டுப்படுத்தும்(PUTRA JEEVA CONTRLOS  HABITUAL  ABORTIONS)


அடுத்தடுத்து கருச்சிதைவு நேர்ந்தால் அதனை ரெக்கரண்ட் பிரெக்னன்சி லாஸ் (RECURRENT PREGNANCY LOSS) என்றும் சொல்லுகிறார்கள்.  மூன்று முறை அல்லது அதற்கு மேலும் கருச்சிதைவு ஏற்பட்டால் அதனை ரெக்கரண்ட் பிரக்னன்சி லாஸ் என்றும் ஹாபிச்சுவல் அபார்வுன்ஸ் என்றும் சொல்லுகிறார்கள்.  கருப்பைகளில் கருத்தரித்த பின்னால் அவை தொடர்ந்து உயிர்தரித்து வர உதவுகிறது இந்த மரம்.  அதனால்தான் அதற்கு புத்திர ஐPவி என்று பெயர் வைத்துள்ளார்கள்.  ஆங்கிலத்தில் இதனை சைல்ட் லைப் ட்ரீ என்கிறார்கள்.

புத்திரஜீவா விந்தணுக்களை கூட்டுகிறது,
கருக்குழந்தையை காப்பாற்றுகிறது (PUTRAJEEVA ENHANCES SPERM COUNT
AND PROTECTS THE BABY IN THE WOMB)


இவை எல்லாம் முடியும் என்பதைச் சொல்லித்தான் இதனை எழுதுகிறேன்.  இவற்றை கடைபிடிக்க ஒரு நல்ல மருத்துவரின் பரிந்துரையுடன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  காரணம், நான் டாக்டர் இல்லை.  கம்பவுண்டர் கூட கிடையாது என்பதை அறியவும்.

1.புத்திரஜீவா விதைத் தூளை ஒன்று முதல் 3 கிராம், பாலில் கலத்து சாப்பிட்டு வந்தால் உங்கள் விந்துவில் ஸ்பெர்ம் கவுண்ட் அதிகரிக்கும். அதாவது உயிர் அணுக்களை அதிகரிக்கும். கரு முட்டையை சினைப்படுத்தும் திறனை உயிர் அணுக்களுக்கு கூடுதலாக்கும்.

2.புத்திரஜீவா விதைத்தூளுடன் பால் சேர்த்து குடித்தால், ருவில் இருக்கும் கருக்குழந்தை பாதுகாப்பாய் வளரும். அதற்கு எவ்விதமான இடையூறும் ஏற்படாது.

3.புத்திரஜீவாவின் புதிய இலைகளை அரைத்து அதிலிருந்து எடுக்கும் சாற்றினை பத்து முதல் பதினைந்து மில்லி சாப்பிட்டு வர யானைக்கால் நோய் குணமாகும்.

4.புத்திரஜீவா இலைச் சாந்தினை யானைக்கால் வீக்கத்தில் தொடர்ந்து தடவு, வீக்கம் குறைந்து நோயும் குணமாகும்.

5.புத்திரஜீவா இலைகளிலிருப்பது எடுக்கும் சாற்றினை இருபது முதல் முப்பது மில்லி கொடுத்து, சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் பிரச்சினைகளை குணப்படுத்தலாம்.

6.புத்திரஜீவா விதைகளை நன்கு அரைத்து மைபோல தயாரித்து, மைதீட்டுவது போல கண் ரப்பைகளில் இட்டால், கண் சம்மந்தமான நோய்கள் அத்தனையும் குணமாகும்.

புத்திரஜீவா எண்ணையில்
சோப்பு செய்யலாம்(PUTRAJIVA OIL COULD BE USED
FOR SOAP MAKING)


1.விதையிலிருந்து எடுக்கும் எண்ணெயில் சோப்பு செய்யலாம், விளக்கு எரிக்கலாம்.

2.ரத்தில் கடைசல் வேலை, கட்டிட கட்டுமானப் பொருட்கள், மற்றும் வேளாண்மைக் கருவிகள் செய்யலாம்.  அடுப்பெரிக்க விறகாகும்.

3.தழைகள், விளைநிலங்களுக்கு தழை உரமாகும்.

4.அழகு மரமாகும், சுற்றுச்சூழலை சுத்தமாக்கும். 


புத்திரஜீவா நீரோட்டம் நிறைந்த
பகுதியில் நன்கு வளரும்
(PUTRAJIVA LOVES MOIST ENVIRONMENT)


வண்டல் மண் நிறைந்த பகுதிகள், ஆற்றங்கரையோரம், சதுப்புநிலப் பகுதிகள், ஆகியவற்றில் புத்திர ஜீPவி மரங்கள் பிரச்சினையில்லாமல் வளரும்.  ஈரம் குறைந்த பகுதிகளில் வளர்ச்சியும் குறையும்.

குறிப்பு: இந்த மரம் உங்கள் ஊரில் இருந்தால் எனக்கு போன் செய்யுங்கள் (+ 91-8526195370)

FOR FURTHER READINGON RELATED TOPICS


1. காரை மரம்   அனைத்து   மருத்துவ   முறைகளும்   பயன்படுத்தும்   மூலிகை -   KARAI MARAM  HERB  FOR ALL  MEDICAL SYSTEMS – Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/karai-maram-herb-for-all-medical-systems.html

2. புளிச்சக்காய் மரம் உலகம் முழுக்க                                              பிரபலமான  மூலிகை  -  PULICHAKKAI MARAM WORLD RENOWNED HERB– Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/karai-maram-herb-for-all-medical-systems.html

3. மதுக்காரை மரம்   அற்புத ஆயுர்வேத   மூலிகை    MADHUKKARAI    ACCEPTED AYURVEDIC HERB    – Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/madhukkarai-accepted-ayurvedic-herb.html

4. மலைவேம்பு மரம்                                              எல்லா மருத்துவ                                             முறைகளுக்கும்                மருந்தாகும்               மூலிகை  -   MALAIVEMBU MARAM OUTSTANDING  TREE HERB – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/malaivembu-maram-outstanding-tree-herb.html

5. நொச்சி மரம்   பல நோய்   குணப்படுத்தும்   மூலிகை   -   NOCHI MARAM -  MULTISPECIALITY  TREE HERB – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/nochi-maram-multispeciality-tree-herb.html

6. மருத்துவம் பேசும் 21 மரங்கள்     - 21  MEDICINAL TREES   BOOK   – Date of Posting; 03.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html

7. வெள்அத்தி மரம்  சித்தப்பிரமையை  சீராக்கும்  மூலிகை     VELL-ATHI MARAM CURE MENTAL DISORDERS – Date of Posting; 31.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/vell-athi-maram-cure-mental-disorders.html

8. பன்னீர்மரம்  ஒரு  பாலுணர்வுத் தூண்டி  மூலிகை மரம் -  PANNEER MARAM  NATURAL SEX DRIVING HERB – Date of Posting; 26.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/panneer-maram-natural-sex-driving-herb.html
9. மலம்புளுவன்   பாலைவன  மருத்துவ மரம்  MALAMBULUVAN -  MATCHLESS   DESERT  TREE HERB – Date of Posting; 27.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/malambuluvan-matchless-desert-tree-herb.html

10. சேங்கொட்டை - பெண்களுக்கான   கருத்தடை மூலிகை -  SENKOTTAI  SUPREME  FAMILY PLANNING HERB – Date of Posting; 29.12.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/senkottai-supreme-family-planning-herb.html

11. இடலை மூலிகை மரம்  பாம்புக்கடியை  குணப்படுத்தும்     IDALAI MARAM  CURES SNAKE BITES – Date of Posting; 30.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/idalai-maram-cures-snake-bites.html

12. காட்டலரி பல நோய்களை   கட்டுப்படுத்தும்   சிறந்த  மூலிகைமரம்   - KATTALARY HERB  CURE MANY DISEASES – Date of Posting; 21.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/kattalary-herb-cure-many-diseases.html

13. வெட்சி - உடல் பருமனாதல் மற்றும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பூமரம் -  VETCHI - DIABETES AND OBESITY CURING HERB – Date of Posting; 25.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/vetchi-diabetes-and-obesity-curing-herb.html


14. நஞ்சுள் மரம் சிசேரியனிலிருந்து  கர்ப்பிணிப்  பெண்களை  காப்பாற்றும்  மரம் -  NANJUL – SAVE  PREGNANT MOTHERS  – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/nanjul-save-pregnant-mothers.html

15. சூரை  இலந்தை ஒரு  ஆயுர்வேத மருத்துவ மரம்  - SOORAI ILANTHAI – AN AYURVEDIC  MEDICINAL TREE – Date of Posting; 30.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/soorai-ilanthai-ayurvedic-medicinal-tree.html

16. நாட்டு பாதாம்கொட்டை வைரஸ் நோய் நீக்கும்   மருந்து மரம் - NATTU PADHAMKOTTAI  -  IDEAL  TREE HERB  – Date of Posting; 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/nattu-padhamkottai-ideal-tree-herb.html

REFERENCES:1. WWW.EN.M.WIKIPEDIA/VRINATION2.WWW.DICTIONARY.STUDYSITE.ORG/ENGLISH TO TAMIL DICTIONARY - MEANING OF COLLYRIUM.
3.WWW.EASY AYURUEDA.COM/PUTRAJNAKA/PUTRAJIVA ROX BURGH – USES, REMEDIES, RESEARCH.4.WWW.TROPICAL THE FERNS.INFO/USEFUL TROPICAL PLANTS PUTRAJIVA         ROXBURGHII. 



1 comment:

Unknown said...

புத்திரஞ்சிவி மரம் கன்று எங்கு கிடைக்கும்? கேரளாவில் இதை பொஙகலம் என்கிறார்கள்

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...