பீச் - சீனாவுக்கு
சொந்தமான
பழ மரம்
PEACH - FRUIT TREE
OF CHINA
தே.
ஞானசூரிய பகவான், போன்: +
91-8526195370
Email:
gsbahavan@gmail.com
வடஅமெரிக்காவில் முதன் முதலாக இங்கிலாந்திலிருந்து, விர்ஜீனியாவில் பீச் அறிமுகம் ஆனது. இது 17ம் நூற்றாண்டில் பீச்பழமரம் அமெரிக்காவில் வந்து சேர்ந்தது.
பீச் பழக்
கொட்டைகளிலிருந்து எடுத்த பருப்புகளை சீனர்கள் தங்களின் பாரம்பரிய மருந்துவத்தில்
பயன்படுத்தி உள்ளனர். பீச் மரங்களில்
வில்அம்புகள் தயாரிக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது.
வீடுகளில் கதவுகள்
மற்றும் வாசக்கால்களுக்கு பீச் மரக்கட்டை
களைப் பயன்படுத்தினால், பேய் பிசாசுள் அண்டாது என்றும் சீனர்கள் நம்பினர்.
பேய் பிசாசு ஒட்டும் மந்திரவாதிகள் பீச்
மரத்தில் மந்திரக் கோல்களை செய்யும் வழக்கமும் சீனர்களிடம் இருந்து வந்துள்ளது.தற்போது இந்தியாவில், ஐம்மு காஷ்மீர்;, இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய இடங்களில் “பீச்” பயிரிடப்படுகிறது.
தாவரவியல் பெயர்: புரூனஸ் பெர்சிகா (PRUNUS PERSICA)தாவரக்குடும்பம் பெயர்: ரோசேசி (ROSACEAE)தாயகம்: சைனாபொதுப் பெயர்கள்: பீச், நெக்டரின் (PEACH, NECTARINE)
பீச் பழமரத்தின்
பிறமொழிப் பெயர்கள்:1. தமிழ்: பீச் (PEACH)2. இந்தி: ஆடூ (ADOO)3. மணிப்புரி: சும்பிரி (CHUMBHREI)4. கன்னடா: பிச்சோ (PICHO)5. ஒரியா: பிஷொ (PISHO)
இலை உதிர்க்கும்
பழமாம். சைனாவைத் தாயகமாகக் கொண்டது. புழமரம்.
பார்க்க ஆப்பிள் மாதிரியே இருக்கும்.
பழத்தின் தசை ஆப்பிளை விட இருக்கம் குறைவாக
இருக்கும். சாறு நிரம்ப இருக்கும். பீச் என பிரபலமாக அழைக்கப்பட்டாலும் இதனை நெக்டரின் என்றும்
சொல்லுகிறார்கள்.
பீச், பிளம் ஆசியவை
குளிர்பிரதேசத்துக்கு உரிய பழமரங்கள். இவற்றை நம்ம ஊரில் சீமை அல்லது இங்கிலீஷ்; பழங்கள் என்று சொல்லுவார்கள்.
இந்தப் பழங்களை, கொடைக்கானல் ஊட்டி பழக்கடைகளில் விசேஷமாக விற்பனை ஆகும். ஆனால் இப்போதெல்லாம் மற்ற இடங்களில் கூட எல்லா
பழங்களுமே விற்பனை ஆகின்றன.
கொஞ்ச
நாட்களுக்கு முன்னால், மலேசிய நாட்டில் “டிராகன் ப்ரூட்” என்னும் பழத்தை முதன்
முதலாகப் பார்த்தேன். கொஞ்ச நாட்களில் அதே
பழம் வாணியம்பாடி பழக்கடையில் மிதிபட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
இரண்டு நாட்களுக்கு முன்னால்,
டல்லஸ் பகுதியில் “பிளானோ” என்னும் நகரத்தில் “வால்மார்ட்”ல் “பீச்” பழங்களைப் பார்த்து
மிரண்டு போனேன். ஆப்பிளைவிட பெரிதாக
இருந்தன. “பிளம்” அதில் கால்வாசி சைஸ்தான் இருந்தது. கொடைக்கானல் பகுதியில், பழனி செல்லும்
பாதையில் இரு புறங்களிலும் “பிளம்” பழங்கள் சாகுபடி
செய்வதைப் பார்த்திருக்கிறேன். “பீச்” சாகுபடி
செய்கிறார்களா, எனத் தெரியவில்லை.
“புரூனஸ் பெர்சிகா” என்னும் தாவரவியல் பெயரில் “பெர்சிகா” என்பது “பெர்சியா” வைக்
குறிக்கும். “பெர்சியா” வின் இன்றையப் பெயர்
ஈரான். அங்கிருந்துதான் ஐரோப்பிய நாடுகளுக்கு பரவியதாகச்
சொல்லுகிறார்கள். ஆனால் “பீச்” மரத்தின் சொந்த ஊர்
சைனா.
“பீச்” மரங்கள் புரூனஸ் (PRUNUS) என்றும் தாவரவகையைச் சேர்ந்தது. செர்ரி,
ஆப்ரிகாட், அல்மாண்ட், பிளம் ஆகியவை கூட “புரூனஸ்” தாவர வகையைச்
சேந்தவைதான். இவை எல்லாமே “ரோசேசி” குடும்பத்தைச்
சேர்ந்தவைதான்.
பீச் மற்றும்
நெக்டரின் பழங்களும் இருவேறு மரங்கள்.
ஆனால் ஒரே தாவர வகையைச் (SPECIES) சேர்ந்தவை.
ஆனால் சந்தையில் தனித்தனி பெயர்களிலேயே விற்பனை ஆகிறது.
பீச் மற்றும் “நெக்டரின்” பழங்கள் உற்பத்தியில்
முதலிடத்தில் உள்ளது சைனாதான். கிட்டத்தட்ட 58 சதவிகித பழங்களை
உற்பத்தி செய்கிறது.
இந்தியாவில் பீச்மரம், கிறிஸ்துபிறப்பதற்கு 1700 ஆண்டுகளுக்கு முன் ஹரப்பா நாகரீகக் காலத்திலேயே, அறிமுகம் ஆனது என
சரித்திரக்குறிப்புகள் சொல்லுகின்றன.
கிரேக்க நாட்டில்
கி.பி. 300 ல் மாவீரன்
அலக்ஸாண்டரால் அறிமுகம் செய்யப்பட்டது என ஒரு செய்தி உள்ளது. அலக்ஸாண்டர் பெர்சியாவை
வெற்றிகண்டபோது, அங்கிருந்து பீச் மரத்தை, ஐரோப்பியாவில்
அறிமுகம் செய்தார்.
வடஅமெரிக்காவில்
முதன் முதலாக இங்கிலாந்திலிருந்து, விர்ஜினியாவில் பீச் அறிமுகம் ஆனது. இது 17ம் நூற்றாண்டில் பீச்பழமரம் அமெரிக்காவில் வந்து
சேர்ந்தது.
பொதுவாக பீச் மரங்களுக்குக்
கூடுதலான குளிர்ச்சி தேவை. மிதமான
வெப்பநிலைகூட பீச் மரங்களுக்கு ஏற்றதல்ல.
ஆனால் மிகவும் உயரமான மலைகளில் மட்டும் வளர்கின்றன. உதாரணமாக,
ஈக்வேடர், கொலம்பியா, எத்தியோப்பியா, மற்றும் இந்தியாவில்
இதுபோன்ற பகுதிகளில், “பீச்” மரங்களைப் பயிர் செய்கிறார்கள்.
வட அமெரிக்காவில், ஜார்ஜியா மாநிலத்திற்கு “பீச் ஸ்டேட்” என்று பெயர். 1571 ம் ஆண்டிலிருந்து ஜார்ஜியா மாநிலத்திலிருந்து பீச் சாகுபடி
செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும்
பீச் பழங்கள் பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2014 ம் ஆண்டு கலிபோர்னியா மற்றும், சவுத் கரோலினா ஆகிய
மாநிலங்கள் ஜார்ஜியா மாநிலத்தைவிட அதிக “பீச்” உற்பத்தி செய்தன.
பீச் பழக்
கொட்டைகளிலிருந்து எடுத்த பருப்புகளை சீனர்கள் தங்களின் பாரம்பரிய மருந்துவத்தில்
பயன்படுத்தி உள்ளனர். பீச் மரங்களில்
வில்அம்புகள் தயாரிக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது.
வீடுகளில் கதவுகள்
மற்றும் வாசக்கால்களுக்கு பீச் மரக்கட்டை
களைப் பயன்படுத்தினால், பேய் பிசாசுள் அண்டாது என்றும் சீனர்கள் நம்பினர்.
பேய் பிசாசு ஒட்டும் மந்திரவாதிகள் பீச்
மரத்தில் மந்திரக் கோல்களை செய்யும் வழக்கமும் சீனர்களிடம் இருந்து வந்துள்ளது.
“பீச்” இந்தியாவில் அறிமுகம்
ஆனது 126 பி.சி இல்.
ஆனால் 19ம் நூற்றாண்டின் மத்திய காலகட்டத்தில்தான் பீச்
பழமரங்கள் வணிக ரீதியில் பயிரிடப்பட்டது.
தற்போது இந்தியாவில், ஐம்மு காஷ்மீர்;, இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய இடங்களில் “பீச்” பயிரிடப்படுகிறது.
REFERENCES:
No comments:
Post a Comment