Friday, January 10, 2020

பேப்பர் பார்க் மேப்பிள் - அரிய அழகு சீன மரம் - PAPER BARK MAPLEE - CHINESE UNIQUE BEAUTY




 பேப்பர் பார்க்
மேப்பிள் -
அரிய அழகு
சீன மரம் 




PAPER BARK 

MAPLEE - CHINESE 

UNIQUE BEAUTY



தே. ஞானசூரிய பகவான், போன்: + 91-8526195370

 சைனாவில் குளிர்ப்பருவத்திற்கென (WINTER SEASONஇரண்டு மேப்பிள் வகைகளை விரும்பி வளர்க்கிறார்.  அந்த இரண்டில் ஒன்று பேப்பர் பார்க் மேப்பிள் (PAPER BARK).  இன்னொன்று ஸ்நேக் பார்க் மேப்பிள் (SNAKE BARK).


இந்த மரத்தின் பட்டைகள் கவர்ச்சிகரமான செங்காவி நிறத்தில் இருக்கும்.  மேப்பிள் இலைகள் எல்லாம் தங்கள் நிறங்களை மாற்றிய பின்னால் இந்தப் பட்டைகள் சிவப்பு ஆரஞ்சு நிறமாக மறும்.

மேப்பிள் மரத்தின் சமரா பழங்கள் தானாகப் பறத்து சென்று தனது விதைகளை தொலைதூர இடங்களில் விதைக்கும் சக்தி படைத்தவை.  




தாவரவியல் பெயர்: செர் கிரைசியம் (ACER GRISEUM)தாவரக் குடும்பம் பெயர்: சேப்பிண்டேசி (SAPINDACEAE)தாயகம்: சென்ட்ரல் சைனா (CENTRAL CHINA)பொதுப் பெயர்கள்: பேப்பிர் பார்க் மேப்பிள் (PAPERBARK MAPLE)



தமிழில் சொல்வதென்றால் இந்த மரத்தை காகிதப்பட்டை மரம் என்று சொல்லலாம்.  காரணம் அதன் பட்டைகள் அவ்வளவு மெல்லியவை.  கையினால் உறித்து எடுத்துவிடலாம்.  மரத்தில் பட்டைகள் தானாக உறிந்து உள்பக்கமும், வெளிப்பக்கமும் சுருண்டிருக்கும்.  அதனால்தான் இதன் பெயர் பேப்பர் பார்க் மேப்பிள் மரம் என்று வைத்திருக்கிறார்கள்.  இந்த மரத்தின் முக்கியமான அம்சம் இதன் பட்டைகள்தான்.

ஏசர் தாவர இனம் (ACER SPECIES)


மேப்பிள் மரங்கள் அனைத்தும் சேப்பிண்டேசி குடும்பத்தில் ஏசர் என்னும் தாவர இனத்தைச் சேர்த்தவை.  இதில் சுமார் 128 வகையான தாவர இனங்கள் உள்ளன.  அவற்றில் பெரும்பான்மையானவை ஆசிய நாட்டைச் சேர்ந்தவை.  மீதமுள்ளவை ஐரோப்பா, வடக்கு ஆப்ரிக்கா மற்றும் வட அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவை.

சைனாவை சொந்த மண்ணாகக் கொண்டவை இந்த மரங்கள் 1901 ம் ஆண்டு வாக்கில் இந்த மரங்கள் ஐரோப்பியா மற்றும் வட அமெரிக்காவிலும் அறிமுகம் ஆனது.

மரங்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டில் அறிமுகம் ஆனவை எல்லாம் பெரும்பாலும் அழகு மரங்களாகவே உள்ளன.  அவ்வகையில்தான் பேப்பர்பார்க் மேப்பிள் மரமும் அறிமுகம் ஆகி பிரபலமாகி உள்ளது.

பட்டையைக் கிளப்பம் பட்டைகள்(BEAUTIFUL BARKS)

இந்த மரங்களும் பெரும்பாலும் சிறிய மரங்களாகவே வளரும்.  20 அல்லது 30 அடி உயரத்திற்கு மேல் அதிகம் வளராது.  அந்த அடிமரத்தின் விட்டம் 28 அங்குலத்தைத்  தாண்டாது.  அதன் பட்டைகள் மெல்லியவை.  ஆரஞ்சு சிவப்பு நிறத்தில் உறிந்தும் சுருண்டும் இருக்கும்.  அதனைப் பார்க்கவே அழகாய் இருக்கும்.  மூன்றாவது அல்லது நான்காவது ஆண்டு இந்தப் பட்டைகள் முழுமையாக உறிந்துவிடும்.

மேப்பிள் என்றால் அழகு இலைகள்(MAPLE MEANS  AWESOME  LEAVES)


மேப்பிள் மரங்களின் இலைகளும் மிகவும் அழகானவை.  அந்த இலைகள் 3-10 அங்குல நீளமானவை.  2 முதல் 6 அங்குல அகலமானவை.  இலைகளின் மேற்புறம் அடர்த்தியான பச்சை நிறத்தில் இருக்கும்.  அதன் அடிப்புறம், நீலப்பச்சை நிறத்தில் இருக்கும்.  இலைகளின் விளிம்புகள் கூர்மை அல்லாத மழுங்கிய பற்கள் போல இருக்கும். 

இறக்கை முளைத்த சமரா பழங்கள்(SAMARA – WINGED FRUITS)

பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.  நீளமான காம்புகளில் பூங்கொத்துக்களாக இருக்கும்.  இந்தப் பூக்கள் சமரா என்றும் பழங்களாக மாறும்.  இந்த சமரா பழங்களின் இருபுறமும் பக்கவாட்டில் இரண்டு இறகுகள் இணைந்திருக்கும்.  சமரா என்றால் இறக்கைகள் உடைய பழம் எனப் புரிந்து கொள்ளலாம்.  இந்தப் பழங்கள் முதிர்ந்து விதைகள் தயாரானதும், இந்த இறக்கைகள் மூலம் பறந்து செல்ல, விதைகள் பல இடங்களிலும் விழுந்து முளைக்கும்.

ஆக மேப்பிள் மரத்தின் சமரா பழங்கள் தானாகப் பறத்து சென்று தனது விதைகளை தொலைதூர இடங்களில் விதைக்கும் சக்தி படைத்தவை.  இந்த மரத்தின் விதை ஒரு செ.மீ. நீளமாகவும், அதன் இருபுறமும் இருக்கும் இறக்கைகள் 3 செ.மீ. நீளமாகவும் இருக்கும்.

சைனாவின் குளிர்ப்பருவக் கவர்ச்சி(CHINA’S WINTER BEAUTY)


சைனாவில் குளிர்ப்பருவத்திற்கென (WINTER SEASON) இரண்டு மேப்பிள் வகைகளை விரும்பி வளர்க்கிறார்.  அந்த இரண்டில் ஒன்று பேப்பர் பார்க் மேப்பிள் (PAPER BARK).  இன்னொன்று ஸ்நேக் பார்க் மேப்பிள் (SNAKE BARK).

இந்த மரத்தின் பட்டைகள் கவர்ச்சிகரமான செங்காவி நிறத்தில் இருக்கும்.  மேப்பிள் இலைகள் எல்லாம் தங்கள் நிறங்களை மாற்றிய பின்னால் இந்தப் பட்டைகள் சிவப்பு ஆரஞ்சு நிறமாக மறும்.

எங்கு வளரும்? (SOIL SUITABILITY)


இந்த மரங்களுக்கு மிகவும் பொருத்தமான, ஏற்ற மண் களிமண், வளர்ந்த மரங்கள் வறட்சியைத் தாங்கும்.  கடுமையான வறட்சியில் இதன் இலைகள் கருகிப்போகும்.  நான்கு பருவங்களிலும் அவர்களுடைய தோட்டம் வண்ணமயமாக இருக்க வேண்டுமானால் பேப்பர் பார்க் மேப்பிள் நடுங்கள், என சிபாரிசு செய்கிறார்கள்.  இந்த மரம் பரவலான மண்வகைகள், மற்றும் கார அமில நிலைகளில் வளரும் ஆனால்  இந்த மரங்களுக்கு அசியத் தேவை என்பது, ஆண்டு முழுவதும் ஈரப்பசையும் நல்ல வடிகால் வசதியும்.

சுகர் மேப்பிள்- வேர்ச்செடிகள்  (SUGAR MAPLE – BEST ROOTSTOCK)


கிளைத்துண்டுகள், பதியன்கள், மற்றும் விதைகள் மூலம் புதிய கன்றுகளை உருவாக்கலாம்.  விதைகளின் முளைப்புத்திறன் மிகவும் குறைவாக இருக்கும்.  போத்துக்கள் அல்லது கிளைத் துண்டுகள் நன்றாக வளரும்.  இதில் ஒட்டு கட்டுவதற்கு சுகர் மேப்பிள்கன்றுகளை தாய்ச் செடியாக அல்லது வேர்ச்செடியாக பயன்படுத்தலாம்.

REFERENCES:


1.      WWW.THE SPRUCE.COM-“GROWING THE PAPER MAPLE”
2.      WWW.PAPERBACK MAPLE-“MOROUIA- PAPER BARK MAPLE”
3.      WWW.MISSOURI BOTANICAL GARDEN.ORG-“ACER GRISEUM”
4.      WWW.GARDENIA.NET-“ACER GRISEUM”
5.      WWW.EN.WIKIPEDIA.ORG”ACER GRISEUM”



No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...