Wednesday, January 8, 2020

ஒசேஜ் ஆரஞ்சு மண்ணரிப்பைத் தடுக்க ரூஸ்வெல்ட் அதிகம் நட்ட மரம் - OSAGE ORANGE PET TREE OF ROOSEVELT



ஒசேஜ் ஆரஞ்சு  

மண்ணரிப்பைத் தடுக்க

ரூஸ்வெல்ட் 

அதிகம் நட்ட மரம் 




OSAGE ORANGE 

ROOSEVELT'S

TREE OF SOIL EROSION



AUTHOR D. GNANASURIA BAHAVAN UNDER THE
OSAGE ORANJE TREE IN DALLAS, USA.















உலகத்திலேயேமண்அரிப்புமரம் நடுதல்வன உருவாக்கம்வனங்களை மனு சீரமைப்பு செய்தல்நீர்வடிப்பகுதி மேம்பாடு போன்ற இயற்கை வளப் பாதுகாப்பு பணிகளுக்கு முன்றுரிமை தந்து செயல்படுத்திய ஒரே அரசியல் தலைவர்பிராங்ளின் டிலானோ ரூஸ்வெல்ட்.  அவர் செயல் படுத்திய அந்தத் திட்டத்தின் பெயர் நியூடீல்.



1934 ம் ஆண்டு வட அமெரிக்காவில் 29,900 கி.மீ. தொலைவிற்கு ஷெல்டர் பெல்ட் என்னும் மண்அரிப்புத் தடுப்பு நடவடிக்கையாக 220 மில்லியன்.  மரங்கள் நடப்பட்டனஇதில் பிரதானமான மரமாகப் பயன்படுத்தப்பட்டதுநமது ஓசேஜ் ஆரஞ்சு மரம் தான்.



அந்த காலகட்டத்தில் வட அமெரிக்கா முழுவதிலும் சுமார் 50 க்கும மேற்பட்ட அமெரிக்கப் பழங்குடிகள் வசித்து வந்தார்கள்.  அவர்கள் எல்லோருமே இந்த ஒசேஜ்; ஆரஞ்ச் மரத்தை வில் செய்வதற்காகப் பயன்படுத்தி வந்தார்கள்.  அதனால்தான் இந்த மரத்திற்கு போவுட் என்னும் பெயர் வந்தது.




வடஅமெரிக்காவின் மிகவும் பழமையான சரித்திரத்தோடு நீண் தெடிய தொடர்புடையது  கிரவுண்ட் ஸ்லாத் என்று சொல்லப்படும்பழங்கால மிகப்பெரிய விலங்குகள் ஒசேஜ் ஆரஞ்சு பழங்களை சாப்பிடும் வழக்கம் இருந்து வந்தது.



TREE TRUNK OF  BOIS D ARC / OSAJE ORANGE











OSAJE ORANGE FRUIT











தே. ஞானசூரிய பகவான், போன்: + 91 8526195373, Email: gsbahavan@gmail.com


தாவரவியல் பெயர்: மேக்லூரா போமிபெரா (MACLURA POMIFERA)

தாவரக் குடும்பம் பெயர்: மோரேசி (MORACEAE)


பொதுப் பெயர்கள்: ஒசேஐ; ஆரஞ்சு, ஹார்ஸ் ஆப்பிள், பொடார்க், ஹெட்ஐ; ஆப்பிள்(OSAGE ORANGE, HORSE APPLE , BODARK, HEDGE APPLE , MONKEY BALL, BOW WOOD, YELLOW WOOD, MOCK ORANGE) பாய்ஸ் டி ஆர்க் என்பது ஒரு பிரென்ச் பெயர்.  இதற்கு போ வுட் என்ற பெயரும் உண்டு.  போவுட் என்றால் வில் செய்யப் பயன்படும் மரம் என்று அர்த்தம். ஒரு காலத்தில் இந்த மரத்தில்தான் வில் செய்தார்கள்.  நேட்டிவ் அமெரிக்கன்ஸ் என்று சொல்லப்படும் புராதன அமெரிக்க மக்கள் வில் செய்வதற்காக இந்த மரத்தைப் பயன்படுத்தினார்கள்.



வேலிகள் அமைக்க முட்கம்பிகள் பயன்படுத்துவதற்கு திலாக இந்த பாய்ஸ் டி ஆர்க் என்ற இந்த முள் மரத்தைப் பயன்படுத்தினார்கள்.  இதுவும் ஒரு முள் மரம்தான்.


நம்ம உரில் சீமைக் கருவைக்கு இன்னொரு பெயர் வேலிகாத்தான்.  அதுபோல இந்தப் பகுதியின் வேலிகாத்தான்.  இயற்கைவேலி அமைக்க வேண்டும் என்றால், எங்கே பாய்ஸ் டி ஆர்க் மரம் என்றுதான் கேட்பார்களாம், இந்தப் பகுதி மக்கள்.  வட அமெரிக்காவைச் சேர்ந்த மரம்தான் இது.  அதிலும் குறிப்பாக டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த மரம்.


நான் டல்லஸ் நகரின் தாவரவியல் தோட்டத்திற்குச் சென்றபோது, தோட்டத்திற்கு வெளியே இருக்க ஒரு மரம் என்னைக் கவர்ந்தது.  அந்த மரத்தில் பச்சை நிறத்தில், ஆரஞ்சுப் பழம், மாதிரியான பழங்களைப் பார்த்தேன்.  தோட்டத்திற்கு உள்ளிருந்தபடி ஒன்றிரண்டு புகைப்படங்களும் எடுத்துக் கொண்டோம்.  தோட்டத்தை விட்டு வெளியே போனதும், அந்த மரத்தைச் தெடிச் சென்றோம்.  மரத்தில் நிறையப் பழங்கள் எமரால்டு பச்சை நிறத்தில் இருந்தன.  மரத்தடியிலும் கொஞ்சம் பழங்கள் கொட்டிக் கிடந்தன.  ஆனால் என்ன மரம் என்று மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.  ஒரு பழத்தை மட்டும் எடுத்துக் கொண்டு திரும்பி வந்துவிட்டோம்.


கிட்டத்தட்ட ஒருவாரத் தேடலுக்குப் பின்னால் இந்த மரத்தின் பெயர் ஜோ; ஆரஞ்சு என்றும், இந்தப் பழங்களை சாப்பிட முடியாது, வேலிகளில் வளர்க்க ஏற்ற முள் மரம் என்பதும் தெரிந்தது.


அதன் பின்னர்தான் எனக்குத் தெரிந்தது, தாவரவியல் தோட்டத்தில் பாய்ஸ் டி ஆர்;க் என்ற பெயரில் நான் தெரிந்து கொண்டதும் வேலிக்கு வெளியே பார்த்ததும் ஒரே மரம்தான் எனத் தெரிந்து கொண்டேன்.


இதன் மரங்கள் உறுதியானவை.  கடினத்தன்மை உடையது.  எடை அதிகமானது.  வெகு நாட்களுக்கு உழைக்கும் மண்ணில் புதைப்பதனால் மற்ற மரங்கள்போல சுலபமாக மக்காது.  இதன் வயிரப் பகுதி மரம் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.  புதிய மரங்கள் வெட்டிய பின் சிறிது நேரத்தில் அவை காவி நிறமாக மாறும்.  இந்த மரங்களை வேலிக்கால்களாக (FENCE POSTS) அதிகம் பயன்படுத்துகிறார்கள்.


பழங்கள் உருண்டையாக , பெரிய ஆரஞ்சு பழங்கள் மாதிரியே ஆனால் பச்சை நிறத்தில இருக்கும்.  பழங்களைத் தொட்டுப் பார்த்தால் கெட்டியாக இருக்கும்.  பழத்திற்குள் சிறிய விதைகள் நிறைய இருக்கும்.  இதற்கு குதிரை ஆப்பிள் மற்றும் வேலி ஆப்பிள் (HORSE APPLE, HEDGE APPLE) என்ற பெயர்களும் வழங்குகின்றன.


ஆண், பெண் பூக்கள் தனித்தனியான மரங்களி;ல் பூக்கும். ஆண் பூக்கள்.  சிறிய, நீளமான பூங்கொத்துக்களாகப் பூக்கும்.  பெண் மரங்களில், பெண் பூக்கள், சிறிய உருண்டையாக இலைக்கணுக்களில் பூக்கும்.


இதன் இலைகள் சாதாரணமானைவ.  3 முதல் 5 அங்குல நீளம் 2 முதல் 3 அங்குல அகல மும், இலை நுனி கூர்மையாகவும், இலைகளின் மேற்பகுதி அடர்த்தியன பச்சை நிறத்திலும், அடிப்பகுதி வெளிர்பச்சை நிறத்திலும் இருக்கும்;.  உதிர்வதற்கு முன்னால் இலைகள் பளிச் சென்ற மஞ்சள் நிறத்தில் மாறிவிடும்.  மரத்தின் சிம்புகளில், மொத்த மொத்தமான முட்கள் இருக்கும்.  சிம்புகளை உடைத்தால் பிசுபிசு வென கைகளில் ஒட்டும்படியான வெள்ளைநிறப் பால் வடியும்.


இந்த மரங்கள் நடுத்தரமான அளவில் வளரும் மரம்.  நன்கு வளர்ந்த மரங்கள் 40 அடி உயரமும், 3 அடி குறுக்களவு கொண்ட முரட்டு மரமாக வளரும் மரத்தின் தலைப் பகுதி நன்கு பரந்து வளரும்.


ஓஹையோ மற்றும் மிசிசிப்பி பள்ளத்தாக்குகளில், ஒசேஜ்; நேன் என்னும், பழங்குடி மக்கள் வசிக்கும் தேசம் இருந்தது.  அங்கிருந்துதான் இந்த மரம் அமெரிக்காவின் பிற பகுதிகளுக்குப் பரவியது.  அதனால்தான் அதன் பெயர் ஒசேஜ்; ஆரஞ்சு என்னும் பெயர் பெற்றது.


ஒருகாலத்தில் நியூ மெக்சிகோ, மற்றும்  டெக்சாஸ் மாநிலத்தின் மேற்குப் பகுதிக்கு கொம்த்சீரியா என்று பெயர்.  இந்தப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட அமெரிக்கள் இண்டியன்கள் வசித்து வந்தார்கள்.  அந்த காலகட்டத்தில் வட அமெரிக்கா முழுவதிலும் சுமார் 50 க்கும மேற்பட்ட அமெரிக்கப் பழங்குடிகள் வசித்து வந்தார்கள்.  அவர்கள் எல்லோருமே இந்த ஒசேஜ்; ஆரஞ்ச் மரத்தை வில் செய்வதற்காகப் பயன்படுத்தி வந்தார்கள்.  அதனால்தான் இந்த மரத்திற்கு போவுட் என்னும் பெயர் வந்தது.


வடஅமெரிக்காவின் மிகவும் பழமையான சரித்திரத்தோடு நீண் தெடிய தொடர்புடையது  கிரவுண்ட் ஸ்லாத் என்று சொல்லப்படும், பழங்கால மிகப்பெரிய விலங்குகள் ஒசேஜ் ஆரஞ்சு பழங்களை சாப்பிடும் வழக்கம் இருந்து வந்தது.


1934 ம் ஆண்டு வட அமெரிக்காவில் 29,900 கி.மீ. தொலைவிற்கு ஷெல்டர் பெல்ட் என்னும் மண்அரிப்புத் தடுப்பு நடவடிக்கையாக 220 மில்லியன்.  மரங்கள் நடப்பட்டன, இதில் பிரதானமான மரமாகப் பயன்படுத்தப்பட்டது, நமது ஓசேஜ் ஆரஞ்சு மரம் தான்.  உலகத்திலேயே, மண்அரிப்பு, மரம் நடுதல், வன உருவாக்கம், வனங்களை மனு சீரமைப்பு செய்தல், நீர்வடிப்பகுதி மேம்பாடு போன்ற இயற்கை வளப் பாதுகாப்பு பணிகளுக்கு முன்றுரிமை தந்து செயல்படுத்திய ஒரே அரசியல் தலைவர், பிராங்ளின் டிலானோ ரூஸ்வெல்ட்.  அவர் செயல் படுத்திய அந்தத் திட்டத்தின் பெயர் நியூடீல்.


இந்த நியூடீல் திட்டம் குறிப்பாக விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள், மற்றும் முதியோர்களை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட உலகின் புரட்சிகரமான திட்டம்.  கிரேட் டிப்ரவுன் னிலிருந்து அமெரிக்காவை விடுத்த புதுமையான திட்டம் இது.


முள் இல்லாத இதன் ஆண்பால் மரத்தை அழகு மரமாக வளர்ந்துள்ளார்கள்.  அதுமட்டுமல்ல, இத்தாலி, யூகேஸ்லேவியா, ரோமானியா, ஷ்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இந்த மரங்களை சாகுபடி செய்ததாக குறிப்புகள் காணப்படுகின்றன.




TO READ  FURTHER MORE

       1.            பாட்டில் மரம் ஏலியன்தீவின் அதிசய மரம் - WONDER TREE OF THE ALIEN ISLAND –  Date of Posting: 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/blog-post7.html
       2.            மங்கிபஸ்சில் -  தென் அமெரிக்காவின்  அதிசய   மரம் -  MONKEY PUZZLE - TREE OF SOUTH AMERICA - Date of Posting: 06.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/monkey-puzzle-tree-of-south-america.html
       3.            டிரேவலர்ஸ் பாம் - ஒரு வித்தியாசமான அழகுமரம்  - TRAVELLER’S PALM -  IS A DIFFERENTLY  BEAUTIFUL TREE - Date of Posting: 03.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/travellers-palm-is-differently.html
       4.            செக்கோயா  உலகின்  உயரமான    மரம் -  KING SEQUOIA  WORLDS' TALLEST TREE Date of Posting: 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html
       5.            ஒசேஜ் ஆரஞ்சு    மண்ணரிப்பைத் தடுக்க    ரூஸ்வெல்ட்   அதிகம் நட்ட மரம்   -    OSAGE ORANGE     PET TREE OF ROOSEVELT - Date of Posting: 08.01.2020 - https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html
       6.            மரூலா மரம் - ஆப்ரிக்காவின்  சிறுதொழில் மரம்  - MARULA - ENTREPRENEUR  FRIENDLY AFRICAN  TREE - Date of Posting: 25.12.2019 https://vivasayapanchangam.blogspot.com/2019/12/marula-entrepreneur-friendly-african.html
       7.            பேவோபாப் -  கல்லறையாகக்கூட    பயன்பட்ட மரம்    BAO BAB -  ONCE USED CEMETRY - Date of Posting: 07.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/bao-bab-once-used-cemetry.html
       8.            டிராகன் பிளட் ட்ரீ -  சாக்ரடிஸ் பயன்படுத்திய  மருத்துவ மரம் -   DRAGON BLOOD RARE HERB USED BY SOCRATES - Date of Posting: 08.02.2018 https://vivasayapanchangam.blogspot.com/2018/02/dragon-blood-rare-herb-used-by-socrates.html
       9.            கலா பேஷ் - உலகு துறந்தோருக்கு உணவு பாத்திரம் தரும் மரம்   CALABASH  - BLESS BOWELS TO SAINTS - Date of Posting: 29.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/calabash-bless-bowels-to-saints.html
   10.            முருங்கை -   பலவீனமான நாடுகளுக்கு ஏற்ற ஊட்டமிகு மரம்     MURUNGAI -   GOOD FOR MAL- NUTRITIONED BABIES  - Date of Posting: 17.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/murungai-good-for-mal-nutritioned-babies.html
   11.            வேப்ப மரம்  கிராமத்து  மருந்து கடை -   VEPPA MARAM -  VILLAGE PHARMACY  OF THE  WORLD - Date of Posting: 08.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/veppa-maram-village-pharmacy-of-world.html
   12.            பாலைவன மக்களின்    வாழ்வாதாரம்   -   VANNI LIVELIHOOD  TREE OF   DESERT PEOPLE - Date of Posting: 29.07.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/07/vanni-livelihood-tree-of-desert-people.html
   13.            அணுக்கதிர்களை தடுக்கும் ஒரே மரம்        SENCHANTHANAM ONLY CAN BLOCK ATOMIC RAYS - Date of Posting: 28.07.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/07/senchanthanam-only-can-block-atomic-rays.html


No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...