Saturday, January 25, 2020

நீர் நொச்சி – தமிழ்நாட்டின் வீட்டு வைத்திய மூலிகை - NIR NOCHI BEST HOME REMEDY HERB OF TAMILNADU




   

நீர் நொச்சிதமிழ்நாட்டின்
வீட்டு வைத்திய மூலிகை 


NIR NOCHI BEST  HOME REMEDHERB OF TAMILNADU 




NIR NOCHIWHITE WOOD
CHASTE  TREE


 NIR NOCHI KNOWN  HERBAL
TREE OF WESTERN GHATS


இந்த மரங்கள் தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி முழுவதிலும் பரவியுள்ளது.  அத்துடன் ஸ்ரீலங்காவிலும் அதிகம் காணப்படுகின்றன.


இந்தியாவில் பெரும்பாலும் மூலிகைக்காவும், மர உபயோகத்திற்காகவும் வளர்க்கிறார்கள்.  சிறிய மரமாகவும், அழகான பூக்களை உடையதாகவும் இருப்பதால் அழகு மரமாகவும் (ORNAMENTAL TREE) வளர்க்கிறார்கள்.


இதன் இலைச்சாற்றுடன் உப்பு சேர்த்து.  நெற்றியில் பூச கடுமையான தலைவலியும் குணமாகும்.  ருமாட்டிசம் என்று சொல்லப்படும், மூட்டுப்பிடிப்பு, மூட்டு வலி, போன்றவற்றையும் இதன் இலைச்சாறு குணப்படுத்தும்.

தே. ஞானசூரிய பகவான்,
போன்: 91-8526195370


தாவரவியல் பெயர்: வைட்டக்ஸ் லீயூகோசைலான் (VITEX  LEUCOXYLON)
தாவரக் குடும்பம் பெயர்: லேகியேசி (LAMIACEAE)தாயகம்: மேற்கு மலைத் தொடர்ச்சிப்பகுதி (WESTERN GHATS)பொதுப் பெயர்கள்: WHITE WOOD CHASTE  TREE


நொச்சியின் பலமொழிப் பெயர்கள்:(NIR NOCHI IN OTHER INDIAN LANGUAGES)


1.தமிழ்: நீர்நொச்சி (NEER NOCHI)2.மலையாளம்: பீமிஸ், வெள்ள நொச்சி, ஆத்து நொச்சி, ட்டா நொச்சி (BEEMIS, VELLA NOCHI, ATHU NOCHI, ATTA NOCHI)3.மராத்தி: சோனா கர்பி, ஷேராஸ் (SONA GARBI, SHERAS)4.தெலுங்கு: கஜாவாவிலி, கொண்டவாலி (GAJAVAVILI, KONDAVAALI)5.கன்னடா: ஹோலி நெக்கி, செங்கேணி, ஹோல்க்கி (HOLE NEKKI, SENGENI, HOLLALAKKI)6.சமஸ்கிருதம்: பரவதப்படி (PARAVATAPADI)


தமிழில் தோட்டத்து பச்சிலைக்கு மரியாதை இல்லை என்பது பரவலாகப் பயன்படுத்தும் பழமொழி ஆனால் நொச்சி மட்டும் எப்போதுமே மதிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட ஒரு மரமாகவே இருந்து வந்துள்ளது.  இன்றுக் கூட தமிழ்நாட்டு கிராமங்களில் பரவலாக இருக்கும் மரங்கள் என்றால், அதில் முக்கியமானது நொச்சி, ஒரு காலத்தில் அப்படி கை;கெட்டும் தூரத்தில் இருந்த மரங்கள் என்றால் நான்கு மரவகைகளை குறிப்பாகச் செய்லலாம்.  அவை நொச்சி, நுணா, ஆடாதோடை மற்றும் வேம்பு.

நொச்சித் திணை (NOCHI CLOSELY RELATED TO TAMIL CULTURE)


 எதிரி மன்னன், கோட்டையை முற்றுகையிட்டு போர் செய்வான்.  அப்படி முற்றுகையிடும் வீரர்கள் உழிஞை மலர்மாலை அணிந்து போர் செய்வார்கள்.  அப்படி போரிடும்போது, அரண்மனைக் கோட்டையைப் பாதுகாக்க வீரர்கள், உள்ளே இருந்து போர் செய்வார்கள்.  அந்த வீரர்கள் நொச்சி மலர் மாலை அணிந்து சண்டை இடுவார்கள்.

இதைத்தான்  நொச்சித்திணை என்பார்கள்.  இது அதை மட்டும் சொல்லவில்லை.  தமிழ் மக்களுக்கு, தமிழ் கலாச்சாரத்திற்கு நொச்சி மரம் எவ்வளவு நெருக்கம்  என்பதையும் சொல்லுகிறது. 

பல நொச்சி வகைகள் (NOCHI - DIFFERENT VARITIES)


ம்முடைய கிராமங்களில் இருப்பது நீலநொச்சி என்னும் வகை. இதன் தாவரவியல் பெயர் வைடக்ஸ் நெகுண்டோ (VITEX NEGUNDO) ), இன்னொரு நொச்சிக்கு சாமியார் மிளகு மரம் (MONKS  PEPPER) என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.  இந்த மரத்தின் தாவரவியல் பெயர் வைடக்ஸ் ஆக்னஸ் - கேஸ்டஸ்( VITEX – AGNUS - CASTUS) என்பது.  இந்த மரத்தை நான் அமெரிக்காவில் பார்த்துவிட்டும், அதுபற்றி எனது 180 வது கட்டுரையில் உள்ளேன்.  43 வது கட்டுரையில் நீர் நொச்சி பற்றியும் எழுதியுள்ளேன். 

நொச்சி வகைகளில், மிகவும் விசேவுமாக சொல்லப்படுவது, கரு நொச்சி, இதன் தாவரவியல் பெயர் nஐண்டுரூசா வல்காரிஸ் (GENBURUSSA VULGARIS), இதுபற்றி 145 வது கட்டுரையில் நமது தினம் தினம் வனம் செய்வோம் தொடரில் எழுதியுள்ளேன்.

நீர் நொச்சியின் பூக்கள் நீலமும் ஊதாவும் கலந்த நிறத்தில் இருக்கும்.  சாமியார் மிளகு மரத்தின் பூக்கள், ஊதா நிறம், நீல நிறம், மற்றும் அடர்த்தியான வாடாமல்லி நிறத்திலும் இருக்கும்.

கருநொச்சியின் பூக்கள் வெள்ளை, மற்றும் ஊதா நிறத்தில் அல்லது ஊதா நிறப்புள்ளிகளுடன் இருக்கும்.  இதே மூன்று வகை நொச்சிகளும் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மூலிகைகளாக அறியப்பட்டுள்ளது.

நொச்சி தாவரக் குழுவில் ஏறத்தாழ 18 வகையான வகைகள் இருக்கின்றன.  இவற்றில் அழகு மரங்களும் இருக்கின்றவை.  சிpல வகைகள் மரச்சாமான்கள், மேஜை நாற்காலிவகை பொருட்களையும் செய்ய உதவும் மரங்கள்.  சிலவகை மரங்களின் போத்துகளும் சிம்புகளும், கூடைகள், தட்டிகள், போன்றுவற்றைச் செய்ய உதவியாக இருக்கும்.  சிலவகைச் செடிகளின் இலைகளை கொசுக்களை கட்டுப்படுத்த பயன்படுத்துகிறார்கள்..

நீர் நொச்சி அல்லது காட்டு நொச்சி (NEER NOCHI OR KATTU NOCHI)


நீர் நொச்சி, இலை உதிர்க்கும் சிறு மரம், அதிகபட்சமாக 15 மீட்டர் அல்லது சுமார் 50 அடி உயரம் வளரும்.  இந்த மரங்களை ஆங்கிலத்தில் ஒயிட் வுட் சேஸ்ட் ட்ரி (WHITE CHASTE TREE)என்றும் சொல்லுகிறார்கள்.  இந்த மரங்கள் தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி முழுவதிலும் பரவியுள்ளது.  அத்துடன் ஸ்ரீலங்காவிலும் அதிகம் காணப்படுகின்றன.

இந்தியாவில் பெரும்பாலும் மூலிகைக்காவும், மர உபயோகத்திற்காகவும் வளர்க்கிறார்கள்.  சிறிய மரமாகவும், அழகான பூக்களை உடையதாகவும் இருப்பதால் அழகு மரமாகவும் (ORNAMENTAL TREE) வளர்க்கிறார்கள்.

அமெரிக்காவின் வைட்டக்ஸ் அக்னஸ் கேஸ்டஸ் மரங்களை அழகுமரமாக, பயன்படுத்துகிறார்கள்.  டல்லஸ், நகரில் போர்ட்வொர்த் என்றும் இடத்தில், உள்ள தாவரவியல் பூங்காவில் நொச்சி மரங்களுக்கான ஒரு தனி இடத்தையே ஒதுக்கி உள்ளார்கள்;.

நீர் நொச்சிதமிழ்நாட்டின் வீட்டு வைத்திய மூலிகை (NIR NOCHI  BEST  HOME REMEDHERB OF TAMILNADU)


இந்த நொச்சி மரத்தின் வேர்கள் மருத்துவத்தில் துவர்ப்பி யாகப் பயன்படுத்துகிறார்கள்.  விட்டுவிட்டு வரும் காய்ச்சலை இதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.  இதன் இலைகளில் சுருட்டு தயாரித்துக் புகைப்பதனால்.  ஐலதோஷம் மற்றும் மண்டைவலி, அல்லது மண்டை குடைச்சல் குணமாகும்.  இதன் இலைச்சாற்றுடன் உப்பு சேர்த்து.  நெற்றியில் பூச கடுமையான தலைவலியும் குணமாகும்.  ருமாட்டிசம் என்று சொல்லப்படும், மூட்டுப்பிடிப்பு, மூட்டு வலி, போன்றவற்றையும் இதன் இலைச்சாறு குணப்படுத்தும், வயிற்றில் ஏற்படும் புழுத்தொல்லையைக் குணப்படுத்த இதன் பழங்களை பயன்படுத்துகிறார்கள்.

நொச்சி மரங்கள் நீண்ட காலம் உழைக்கக் கூடியவை (NIR NOCHI DURABLE  STRONG TIMBER)


நீர் நொச்சி மரங்கள், உறுதியானவை, கடினமானவை, இந்த நொச்சி மரங்களில் செய்த மரச்சாமான்கள் நீண்ட நாட்கள் உழைக்கும்.
இதன் மரங்கள், வெளிர் சாம்பல் நிறத்திலும், காவி நிறத்திலும் இருக்கும்.  நடுத்தரமான கடினத்தன்மை உடையது.  வண்டிச் சக்கரங்கள் போன்ற, கடினமான மரச்சாமான்களைச் செய்யலாம்.  மேi, நாற்காலி, ஸ்டூல்கள், மரப்பெஞ்சுகள், இதர வகைகளையும் செய்யலாம்.

நீர் நொச்சி பரவியிருக்கும் இடங்கள் (NIR NOCHI - DISTRIBUTION IN  EAST ASIAN COUNTRIES)


நீர் நொச்சி மரங்கள், கிழக்கு ஆசிய நாடுகளில் பரவியுள்ளது.  அவை இந்தியா, பாக்கிஸ்தான், ஸ்ரீலங்கா, மியான்மர் மற்றும் மயேசியா.

போகிறபோக்கில் ஒரு தகவல்:


மாலை ஆறுமணி வாக்கில் வீடுகளில் நொச்சி இலை புகை போட்டால் கொசுத் தொல்லை இருக்காது.



REFERENCES FOR FURTHER READING:Ø  GENERAL PHARMACOLOGY OF VITEX LEUCOXYLON LEAVES
Ø  STUDIES ON HAEPATOPROTECTIVE ACTIVITY OF VITEX LEUCOXYLON
Ø  RELIMINARY PHTOCHEMICAL ANALYSIS AND ANTI BACTERIAL ACTIVITY OF VITEX LEUCOXYLON
Ø  VITEX ALTISSIMA – THE PLANT LIST
Ø  VITEX LEUCOXYLON - VERBENACEAE




           


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...