Sunday, January 5, 2020

பொங்கலோ பொங்கல்

















இன்று ஒரு குறுஞ்செய்தி 

NEWS TODAY





பொங்கலோ
பொங்கல்

CONCEPT 

BEHIND 

PONGAL 

festivals


பொங்கல் தமிழர்களின் திருவிழா. 
நான்கு நாட்களுக்கு இந்த பொங்கல் 
திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். 
முதல் நாள் நடக்கும் திருவிழாவின் 
பெயர் போகி பண்டிகை.

இரண்டாவது நாள் கொண்டாடுவது  
பெரும்பொங்கல். மூன்றாம் நாள் 
கொண்டாடுவது மாட்டுப்பொங்கல்.  
நான்காம் நாள் கொண்டாடுவது 
கன்றுப்பொங்கல் அல்லது 
காணும் பொங்கல்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 
மாதத்தில் இந்த திருவிழாவை 
கொண்டாடுகிறார்கள். தமிழர்களின் 
ஆண்டு கணக்கில் தை மாதம் 
கொண்டாடுகிறார்கள். அதனால் 
இதனை தை பொங்கல் 
என்றும் சொல்லுவார்கள்.

 பொங்கல் திருவிழாவுக்கு அறுவடைத் 
திருவிழா என்ற பெயரும் உண்டு. 
உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு 
உணவு தரும் தொழில் விவசாயம். 
அந்த விவசாயத்துக்கு நன்றி சொல்லும் 
திருவிழாதான் இந்த பொங்கல். அதனால் 
தனை அறுவடை திருவிழா 
என்றும் சொல்லுகிறார்கள்.

இந்த திருவிழாவில்  புதியதாக 
அறுவடை செய்த நெல் கரும்பு 
கேழ்வரகு ஆகியவற்றை வைத்து 
படைக்கிறார்கள்.

உலகம் முழுவதும்  பொங்கல் 
திருவிழாவை கொண்டாடுகிறார்கள். 
ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறார்கள். 
பயிர்களை அறுவடை செய்தபின் 
கொண்டாடுகிறார்கள்.

அமெரிக்காவில் கொண்டாடும் பொங்கல் 
பண்டிகையின் பெயர் கிரான்பெர்ரி ஃபெஸ்டிவல்.

ஐரோப்பவில்  கொண்டாடும் பொங்கல் 
பண்டிகையின் பெயர் ஹார்வெஸ்ட் 
ஹோம் ஃபெஸ்டிவல்.

ஆப்ரிக்காவில் கொண்டாடும் பொங்கல் 
பண்டிகையின் பெயர் குவான்சா ஃபெஸ்டிவல்.

இஸ்ரேலில் கொண்டாடும் பொங்கல் 
பண்டிகையின் பெயர் சுக்கோத் ஃபெஸ்டிவல்.

இப்படி விழா கொண்டாடுவதால் 
பயிர்களில் விளைச்சல் அதிகரிக்கும். 
மக்களின் வருமானம் அதிகரிக்கும் 
அவருடைய வாழ்க்கை தரம் உயரும் 
என்று நம்புகிறார்கள். அதனால் தான் 
இதனை ஆங்கிலத்தில் தேங்க்ஸ் 
கிவிங் ஃபெஸ்டிவல் என்கிறார்கள்.

முதல்நாள் கொண்டாடுவது 
போகிப்பண்டிகை. இது உபயோகமில்லாதவற்றிற்கு 
வழியனுப்பும் விழா இது.

பழையன கழிதலும் புதியன புகுதலும் 
என்பதுதான் இதன் அடிப்படை.
வீட்டில் உபயோகமில்லாத பொருட்களை 
எல்லாம் சேகரித்து அதனை 
நெருப்பில் எரித்து விடுவார்கள்.

இரண்டாம் நாள் கொண்டாடுவது 
பெரும்பொங்கல் முக்கியமானது
இது புதியவற்றை அல்லது மாற்றங்களை  
வரவேற்கும் விழா.

இது சூரியனை வணங்கும் விழா
இது மழையை வணங்கும் விழா
மண்ணை இந்த நிலத்தை வணங்கும் 
விழா. புதிதாக அறுவடை செய்த நெல்லை 
எடுத்து புதுப்பானையில் இட்டு புது 
அடுப்பில் வைத்து பொங்கல் வைப்பார்கள்
அந்த  பொங்கல் பானை பொங்கும் சமயம் 
பொங்கலோ பொங்கல் என்று குரல் 
எழுப்பி கொண்டாடுவார்கள். மூன்றாம் நாள் 
மட்டுப்பொங்கல். உழவுக்கு 
உதவி செய்யும்  மாடுகளை 
கொண்டாடும் விழா அது. 
அன்று கால்நடைகளை குளிப்பாட்டி 
கொம்புகளுக்கு வர்ணம் பூசி, கழுத்தில் 
பூமாலை போட்டு, காலில் சலங்கை கட்டி 
பொங்கல் வைத்து அதனை 
தின்னக் கொடுப்பார்கள்.

நான்காம் நாள் கன்றுப்பொங்கல் 
அல்லது காணும்பொங்கல். இது 
பெரியோர்களின் அனுபவங்களை 
ஏற்றுக்கொள்ளும் விழா.

இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் 
பெரியவர்களை  சந்தித்து அவருடைய 
ஆசி பெறுவது வழக்கம். வயதான 
பெரியவர்கள் அவர்களுக்கு வாழ்த்து 
சொல்லுவார்கள் அந்த சமயங்களில் 
அன்பளிப்பு தருவதும் வழக்கமாக உள்ளது.

ஆக பொங்கல் திருவிழா என்பது 
விவசாயத்தையும் விவசாயிகளையும் 
போற்றும் விழா.

பொங்கல் திருவிழா என்பது இயற்கை 
வளங்களுக்கும் கால்நடைகளுக்கும் 
நன்றி தெரிவிக்கும் விழா.

பொங்கல் திருவிழா என்பது 
ஆக்கபூர்வமான மாற்றங்களை 
வரவேற்கும் திருவிழா.

சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
உழன்றும் உழவே தலை'

என்று சொல்லி
நமது விவசாய பஞ்சாங்கம்   
வலைப்பூ நேயர்கள் அனைவருக்கும் 
பொங்கல் வாழ்த்து சொல்லி 
விடைபெறுகிறேன் 
நன்றி வணக்கம்
பொங்கலோ பொங்கல்.

இப்படிக்கு
தே.ஞானசூரிய பகவான்
ஆசிரியர், விவசாய பஞ்சாங்கம்   வலைப்பூ
தெக்குப்பட்டு & அஞ்சல், திருப்பத்தூர் மாவட்டம் – 635 801
தமிழ்நாடு, இந்தியா
போன்: +91 8526195370, Email: gsbahavan@gmail.com




No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...