Sunday, January 5, 2020

விவசாயிகளுக்கு விடியலை தரப்போவது இதுதான்












இன்று ஒரு 

குறுஞ்செய்தி 


NEWS TODAY


விவசாயிகளுக்கு 

விடியலை 

தரப்போவது 

இதுதான் !


SUSTAINABLESOLUTION TOFARMING
COMMUNITY



SAHAYATRI FARMS

தே. ஞான சூரிய  பகவான்,
போன்: + 91 8526195370
Email: gsbahavan@gmail.com

ஒரு தனியார் கம்பெனியின்  ப்ரொபஷனல்
மேனேஜ்மென்ட் மற்றும் கூட்டுறவு
சங்கங்களுக்கு உரிய மீயுச்சுவல்
பெனிஃபிட்ஸ் என்ற இரண்டு
சிறப்பு அம்சங்களையும்
ஒன்றிணைக்கப்பட்டதுதான்
உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்.

இந்த சகாயத்ரி உழவர் உற்பத்தியாளர்  நிறுவனத்தில்
மந்திரிகள் மற்றும் அரசு அதிகாரிகளும்
அங்கத்தினர்கள் ஆகி இருக்கிறார்கள். 

நாசிக் என்பது ரூபாய் நோட்டடிக்கும் இடம்
என்பது எல்லோருக்கும் தெரியும்.
இனி இந்த கம்பெனி அமைந்திருக்கும்
மொகாதி கிராமமும் நோட்டடிக்கும் இடமாக
மாறிவிடும் என்று சொல்கிறார்கள். 



இந்தியாவின் மிகப்பெரிய உழவர்
உற்பத்தியாளர் நிறுவனம்  சகாயத்ரி
பார்ம்ஸ் என்பதுதான்.  விலாஸ் ஷிண்டே
என்னும் வேளாண்மை பொறியாளர்
இதனை 2011ஆம் ஆண்டு உருவாக்கினார்.
இதில் உள்ள 8,000 விவசாய உறுப்பினர்கள்
ஓராண்டின்  செய்யும் வியாபாரம்
மட்டும் சுமார் 300 கோடி.

பாலுக்கு அமல்
பழத்திற்கு சகாயத்திரி பார்ம்ஸ்

 அது  தற்போது  அக்ரி  பிசினஸ் கம்பெனியை,
குறிப்பாக ஏற்றுமதி வியாபாரத்தில் 
முந்தியுள்ளது இந்த சகாயத்திரி பார்ம்ஸ் .
திராட்சை ஏற்றுமதியில் முன்னணியில்
இருந்த  நிறுவனம் அக்ரி பிசினஸ்.
அதுமட்டுமல்ல பழங்கள் மற்றும்
காய்கறிகள்  ஏற்றுமதியில் புரட்சிகரமான
மேம்பாட்டினை உருவாகியுள்ள
நிறுவனம் இது.

பால் உற்பத்தி மற்றும்
வியாபாரத்தில் அமுல்  நிறுவனம் என்றால்
பழங்கள் மற்றும் காய்கறி வியாபாரத்திற்கு
அக்ரி பிசினஸ் என்று சொல்லப்பட்ட
நிறுவனம் இது.  அந்த நிறுவனத்தை
இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்
பின்னுக்கு தள்ளியுள்ளது.

தன்னுடைய சூப்பர் மார்க்கெட் கான
பழங்கள் மற்றும் காய்கறிகளை
சப்ளை செய்வதற்காக பிக் பஸார்
நிறுவனத்தின்  'கிஷோர் பிரியாணி'  சகாயத்ரி
நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள்.

இதன்மூலம் இந்த உழவர் உற்பத்தியாளர்
நிறுவன  விவசாயிகளின் வருமானம்
இரட்டிப்பாக அதிகரிக்கும் என்று
சொல்லுகிறார்கள்.

 இந்த சகாயத்ரி உழவர் உற்பத்தியாளர்  நிறுவனத்தில்
மந்திரிகள் மற்றும் அரசு அதிகாரிகளும்
அங்கத்தினர்கள் ஆகி இருக்கிறார்கள்.
இந்த காயத்திரி பார்ம்ஸ் என்றழைக்கப்படும்
விவசாயிகள் கம்பெனி  மகாராஷ்டிரா மாநிலம்
நாசிக் நகரத்திற்கு அருகில் உள்ளது.

நாசிக் என்பது ரூபாய் நோட்டடிக்கும் இடம்
என்பது எல்லோருக்கும் தெரியும்.
இனி இந்த கம்பெனி அமைந்திருக்கும்
மொகாதி கிராமமும் நோட்டடிக்கும் இடமாக
மாறிவிடும் என்று சொல்கிறார்கள்.

1956 ஆம் ஆண்டு இந்த கம்பெனி
ஆக்ட் கொண்டுவரப்பட்டது.  இதில்
சில மாற்றங்களை திருத்தங்களை
செய்து 2003 ஆம் ஆண்டு உழவர்
உற்பத்தியாளர் கம்பெனியில்
உருவாக்கப்பட்டது. நபார்டு வங்கியின்
கருத்துப்படி உழவர்  உற்பத்தியாளர் கம்பெனி
என்பது ஒரு தனியார் கம்பெனி மற்றும்
ஒரு கூட்டுறவு சங்கம் இரண்டையும்
ஒன்று சேர்ந்தது போல
உருவாக்கப்பட்ட வடிவம்தான் இது.

 ஒரு தனியார் கம்பெனியின்  ப்ரொபஷனல்
மேனேஜ்மென்ட் மற்றும் கூட்டுறவு
சங்கங்களுக்கு உரிய மீயுச்சுவல்
பெனிஃபிட்ஸ் என்ற இரண்டு
சிறப்பு அம்சங்களையும்
ஒன்றிணைக்கப்பட்டதுதான்
உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்.

விவசாயிகளை ஒருங்கிணைப்பது
ஒருங்கிணைந்த முறையில் அவர்களுடைய
திறன்களை மேம்படுத்துவது ,
உற்பத்தியைப்  பெருக்குவது
 மற்றும் விற்பனைத்  திறனை
மேம்படுத்துவது  ஆகியவற்றை
செயல்பாடுகளாகக் கொண்டவை தான்
இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்
என்பவை.

இனி விவசாயிகளுக்கு விடியலை தரக்கூடியது
உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்தான்
என்பதை நிரூபிக்கிறது இந்த
சகாயத்ரி பார்ம்ஸ்.






No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...