Saturday, January 4, 2020

மண்புழுக்களை கடத்தினால் மரண தண்டனை















இன்று ஒருகுறுஞ்செய்தி


NEWS TODAY


மண்புழுக்களை

கடத்தினால்

மரண தண்டனை


கொஞ்ச நாளைக்கு முன்னாடி
இயற்கை விவசாயிகள் கூட்டத்தில்
என்னை  பேசக் கூப்பிட்டிருந்தார்கள்.
அந்த இன்விடேஷன்
தலைப்பில்  தொழுவுரமே  தொழும் உரம்
அப்படின்னு போட்டு இருந்தார்கள்.
அதாவது இயற்கை உரம் தான்
மனுஷன் தொழக்கூடிய உரமாய் இருக்கு.
அதுதான் மனுஷன் வணங்குவதற்கு
உரிய உரம்  என்பதுதான்  அதற்கு அர்த்தம்.

தொழுஉரம் என்ற  வார்த்தையுடன்
'ம்' என்கிற ஒரே ஒரு எழுத்து தான்
கூடுதலாய் சேர்ந்து இருக்க, எப்படி
அந்த ஒரு எழுத்து அதன் அர்த்தத்தை
மாற்றி இருக்கிறது பாருங்கள்.
இதுதான் தமிழ்மொழியின்  மகத்துவம்.

பயிருக்குப் இடக்கூடிய ஒரு இயற்கை உரத்தை
இந்த மாதிரி பாராட்டி சீராட்டி பேசலாம்.
ஆனா உண்மையிலேயே இயற்கை உரத்தை
சாமியாக  கும்பிட்டு இருப்பாங்களா ?

இருக்காங்க அப்டிங்கறதுதான் அதுக்கு பதில் !!

தன்னுடைய உடல் அழகை மேம்படுத்த
மெருகேற்ற ஒரு பேரழகி கழுதைப்பாலில்
குளிச்சிட்டு இருந்தாராம். அந்த பேரழகி ஒரு நாட்டுக்கு பேரரசியாக
இருந்தார் . அந்த பேரழகியோட
இஷ்டதெய்வம் மண்புழுக்கள்தான்.
அந்த நாட்டின்  விவசாய உற்பத்தி மற்றும்
தொழில் உற்பத்திக்கான கடவுள்
மண்புழுக்கள் தான் .

அந்த நாட்டின் விவசாய உற்பத்தி மற்றும்
தொழில் உற்பத்தி அதிகரிக்க வேண்டுமானால்
மண்புழுக்களுக்கு பூஜை புனஸ்காரம் செய்வார்கள்.
அவற்றை கடவுளாக  கும்பிட்டு வந்தார்கள்.
மண்புழுக்கள் நிலத்தில் அதிகம் இருந்தால்
அதில்  பயிர் வளம் சிறப்பாக இருக்கும்
அந்த மக்களுக்குத் தெரிந்திருந்தது. அதனால்
 மண்புழுக்களை வேறு நாட்டிற்கு
கடத்தக்கூடாது  கூடாது என்று ஒரு சட்டம் இருந்தது.
சட்டத்தை மீறியவர்களுக்கு   அவர்களுக்கு
மரண தண்டனை கொடுத்தார்கள்.

அப்படி அந்த காலத்தில்,அந்த நாட்டில்
மண்புழுக்களை போற்றி வளர்த்ததில்
அந்த நாட்டில்  ஓடும்   பிரபலமான நதிக்கரை
இப்பவும் வளமான பூமியாக இருக்குன்னு சொல்றாங்க.
அந்த நதி  11 நாடுகளில்   1,650 கிலோ மீட்டர்
ஓடும் மிக நீளமான நதி அது.

மண்புழுக்களை கடத்துபவர்களுக்கு மரணதண்டனை
 என்ற சட்டத்தை வைத்திருந்த நாடு எகிப்து.

அந்த சட்டத்தை கொண்டு வந்த மகாராணி
பேரழகி யாருன்னு கண்டு பிடிச்சு இருப்பீங்க.
அதுதான் கிளியோபாட்ரா.

நம்ம  தமிழ்நாட்டுல உழவர்களின்
நண்பன் அப்படின்னு சொல்றாங்க
உலகத்தில் மொத்தம் 7000 வகையான
மண்புழுக்கள் இருக்கு.  நிலத்தில்,
நீரில் கடலில் என்று  பல இடங்களிலும்
மண்புழுக்கள் இருக்கறதா சொல்றாங்க .

உலகத்திலேயே மிக நீளமான மண்புழுக்கள்
ஆஸ்திரேலியாவில் இருக்கின்றன. அவற்றை ராட்சச
மண்புழுக்கள் என்கிறார்கள். இவை சராசரியாக
மூன்றடி  நீளம் இருக்கும். இவை அதிகபட்சமாக
9 அடி நீளம் கூட வளரும். ஒவ்வொரு புழுவும்
சராசரியாக 200 கிராம் முதல்  கால் கிலோ வரை
எடை இருக்கும்.

இந்த மண் புழுக்களுக்கு கொடும்புரா  என்ற
நகரத்தில் ஆண்டுதோறும்  திருவிழா
கொண்டாடுகிறார்கள். அதுமட்டுமல்ல
இந்த கொடும்புரா நகரத்தில் இந்த
மண் புழுக்களுக்கு என ஒரு தேசிய பூங்கா
செயல்படுகிறது.  மெல்பேன்  நகரில் இருந்து
120 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும்
இந்த ஊர் ஆஸ்திரேலியாவில்
விக்டோரியா என்ற மாநிலத்தில் உள்ளது.



No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...