இன்று ஒரு
குறுஞ்செய்தி
NEWS TODAY
புத்தாண்டு
வாழ்த்துக்கள்
ஆடுகளை
சாப்பிடும்
செடிகள்
குறுஞ்செய்தி
கோவாலு
பூச்சிகளை சாப்பிடும் செடிகள் இருக்கின்றன
என்று சொன்னாலே எல்லோரும் மிரளுவார்கள்.
இந்த நிலையில் ஆடுகளை சாப்பிடும் செடிகள்கூட
இருக்கின்றன என்று சொன்னால் எப்படி இருக்கும் ?
உண்மையா என்று கேட்பீர்கள்.
உண்மையைத்தான் சொல்லுகிறேன். இந்த செடிகள்
கொடிகள் போன்ற தனது மெல்லிய அல்லது
நீண்ட கிளைகளில் இருக்கும்
முட்களைக்கொண்டு ஆடுகள் தப்பிவிடாமல்
கட்டிப்போட்டுவிடும். ஆடுகள் அப்படியே
பட்டினி கிடந்தது இறந்துபோகும். அதன் உடல்
அங்கேயே அழுகி மண்ணோடு மண்ணாகக்
கலந்துவிடும். இந்த பேய்ச்செடிகள்
அதன் சத்துக்களை மட்டும் தனது
வேர்களின் மூலமாக உறிஞ்சி
எடுத்துக்கொள்ளும்.
தென் அமெரிக்காவின் மலைப்பகுதிகளில்
இருக்கும் இந்த செடிகளை 'புயா செடிகள்'
என்று அழைக்கிறார்கள். இதன் தாவரவியல்
பெயர் புயா பெர்ட்ரோனியானா. ஆடுகள்
மட்டுமின்றி அதே அளவில் அதைவிட
சிறிய பிராணிகள் மற்றும் பறவைகளை
இந்த செடிகள் தனது கொடிய
கொடிக்கரங்களால் மடக்கிப்பிடித்துவிடும்.
இந்த செடிகளின் சொந்த ஊர் சைல்தேசம்
தென் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருநாடுதான்
இந்த சைல்.
மாமிசபட்சிணியாக விளங்கும் இந்த
செடிகளைப் பற்றிய தகவல்களை படிக்க
மர்மநாவல்மாதிரி சுவாரஸ்யமாக இருக்கும்.
அதற்கு நீங்கள் கார்னிவோரஸ் பிளாண்ட்ஸ்
என்று வலைத்தளத்தில் தேடுங்கள் !
SPINES OF PUYA SHRUBS |
No comments:
Post a Comment