Wednesday, January 29, 2020

நஞ்சுள் மரம் –சிசேரியனிலிருந்து கர்ப்பிணிப் பெண்களை காப்பாற்றும் மரம் - NANJUL – SAVE PREGNANT MOTHERS






நஞ்சுள் மரம் –சிசேரியனிலிருந்து  கர்ப்பிணிப் பெண்களை காப்பாற்றும்  மரம் 

NANJUL – SAVE PREGNANT MOTHERS FROM  CESAREAN  SURGERY 


நஞ்சுள் மரம் - NANJUL TREECEYLON BOX WOOD TREE


தே. ஞானசூரிய பகவான்,
போன்: 91- 8526195370
Email: gsbahavan@gmail.com



தாவரவியல் பெயர்: சிட்ராக்ஸ் டைகோகாஸ் (PSYDRAX  DICOCCOS)தாவரக் குடும்பம் பெயர்: ரூபியேசி (RUBIACEAE)பொதுப் பெயர்கள்: சிலோன் பாக்ஸ் வுட் (CEYLON BOX WOOD)தாயகம்: இந்தியா

நஞ்சுள் மரத்தின் பலமொழிப் பெயர்கள் (NANJUL TREE- DIFFERENT VERNACULAR NAMES)


1.     தமிழ்: நஞ்சுள், நல்ல மந்தரம் (NANJULNALLA MANTHARAM)2.     கூர்க்: அம்மி பண்ணு (AMMI PANNU)
3.     கன்னடா: ஹனாஐp, கொடவா (HANAGE, KODAVA)
4.     மலையாளம்: நஞ்சுள்,  இரும்பரப்பன், நக்கினி (NANJUL)> IRUMBARAPPAN, NAKKINI)
5.     மராத்தி: ஆர்சுல், டூடா (ARSUL, TUDA)6.     தெலுங்கு: நல்ல பலாசு, பலாசு நாய்க்கிண்ணா (NALLA PALASU, NAIKINNA)



நஞ்சுள் மரம், சிசேரியன் பிரசவத்திலிருந்து தப்பிக்க , உதவும். முறிந்த எலும்பினை ஒட்டவைக்க உதவும், உள்ளுர் மரம், அழகுமரம் என அறிவிக்கப்பட்டுள்ள மரம்.

நஞ்சுள் மரம் - தமிழ்நாட்டில்  எங்கும் தென்படும் மரம்(NANJUL TREE – SPREAD IN TAMILNADU  EXTENSIVELY) 

தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் இருப்பதாக பதிவிட்டுள்ளார்கள்.  நஞ்சுள் மரம் உங்கள் ஊரில் இருக்கிறதா? கேரளாவிலும் பரவலாக சில மாவட்டங்களில் உள்ளன.  அவை, கோட்டயம், கொல்லம், இடுக்கி, திருவனந்தபுரம், திருச்சூர், மாலப்புரம், விநாடு மற்றும் கோழிக்கோடு.
சர்வதேச அளவில், இந்தோமலேசியா மற்றும் சீனாவில் இந்த மரங்கள் பரவலாக இருப்பதாகச் சொல்லுகிறார்கள்.

இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, கோவா, கச்சத்தீவு;, ஒரிசா, ஜார்கண்ட், பீஹார் ஆகிய இடங்களில் பரவியுள்ள.

நஞ்சுள் மரம் - எலும்பு முறிவை
சரி செய்ய எற்ற மூலிகை(NANJUL - BEST TREE HERB TO
CURE BONE FRACTURE)


நஞ்சுள் மரத்தின் பட்டையை அரைத்து சாந்துபோலாக்கி, அதனை எலும்பு முறிவை குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள்.  இந்த மரம் எலும்பு முறிவை சரி செய்யும் மூலிகை என்றால் நிச்சயமாக, உள்ளுர் மற்றும் பழங்குடி மக்களிடையே பிரபலமாக இருக்கலாம்.  ஆனால் உள்ளூரில் இதற்கு வேறு பெயர்கள் இருக்கக் கூடும்.
இதன் பட்டைச்சாந்து, பட்டைக் கஷாயம், இலைக் கஷாயம் ஆகியவற்றைக்கூட உடல் காய்ச்சல், வாயுத்தொல்லை, மற்றும் இயற்கையாக பிரசவம் நடைபெறவும் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். 

நஞ்சுள் மரம்
ஒரு ஆல்ரவுண்டர்(NANJUL – AN AL ROUNDER TREE) 

மரங்களில் இது ஒரு ஆல்ரவுண்டர்.  பலவிதமான பயன்களை தரும் மரம்.  இதன் பட்டைகள் மற்றும் வேர்கள் மருந்துப் பொருளாக நோய்களை குணப்படுத்துகின்றன.  இதன் பழங்கள், மனிதர்களுக்கு ருசியானவை,.  தன் தழைகள் ஆடுமாடுகளுக்கு ருசியானவை.  இதன் தேன்  தேனீக்களுக்கு ருசியானவை.   மரங்களில் விவசாயக் கருவிகள், வீடுகளுக்குத் தேவையான இதர தட்டுமுட்டுச் சாமான்கள் செய்யலாம். 
ஒரு பழத்தில் இரண்டு விதைகள் இருக்கும்.  டிசம்பர் முதல் பிப்ரவரி வரை மூன்று மாதங்களில் பூத்து ஏப்ரல் - Nமு ஆகிய இரு மாதங்களில் பழங்கள் தரும்.  Pலை முதல் டிசம்பர் வரை விதைகள் சேகரிக்கலாம்.

நஞ்சுள் மரம் – சிசேரியன்  பிரசவத்திலிருந்து கர்ப்பிணித்
தாய்மார்களுக்கு விடுதலை
தரும்  (NANJUL TREES – SAVE
PRENANT MOTHERS FROM
CAESARIAN SURGERY)


வ்விதமான சிரமமுமின்றி சுலபமாக பிரசவிக்க இது உதவுகிறது. இந்த மரத்தின் இலைச்சாற்றை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.  தமிழ்நாட்டில் கொல்லி மலப் பகுதிகளில் வசிக்கும் மலையாளிகள் இன்றும் கூட இந்த நடைமுறையை கடைபிடிக்கிறார்கள்.  பிரசவத்திற்கு தயாராக உள்ள கர்ப்பிணிக் தாய் மார்களுக்கு நஞ்சுள் மரத்தின் இலைச் சாற்றுடன் வாழைப்பழத்தைக் கலந்து மருந்தாகத் தருகிறார்கள்.  எவ்விதப் பிரச்சினையு மின்றி சுகப்பிரசவமாகிறது.  சிசேரியன் பிரசவத்திலிருந்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விடுதலை தரும் மரம்.

பெண்களுக்கு உதவும்
நஞ்சுள்மர சீப்புகள் -
 (WOMEN FRIENDLY  NANJUL COMBS
SAVES WOMEN FROM HEAD LOUSE)


இந்த நஞ்சுள் மரத்தில் மரசீப்பும் ஈர்க்கொல்லியும் செய்யலாம்.  பேன் சீப்பு எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு.  ஈர்க்கொல்லி அநேகமாய் தெரிய வாய்ப்பு இல்லை.  ஒரு காலத்தில் பேன் சீப்பு என்று சொல்லப்படும் மரச்சீப்பு வெகுவாகப் பழக்கத்தில் இருந்தது.  நிறைய வீடுகளில் இந்த மரச்சீப்புகள்தான் இருக்கும்.  எங்கள் வீட்டில் கூட இருந்தது.  Pபேன் சீப்பு போட்டு தலைவாரினால் பேன்கள் எல்லாம் வந்துவிடும். 

குட்டிப் பேன்களுக்கு நமுடு என்று பெயர்.  முட்டைப் பேன்களுக்கு ஈறு என்று பெயர்.  அந்த நமுடு மற்றும் ஈறு போன்றவற்றை தலைமுடியிலிருந்து எடுக்க வேண்டும் என்றால் அதற்குத் தனியான உபகரணம் உண்டு.  அதன் பெயர்தான் ஈர்க்கொல்லி.  ஆனால் பேச்சு வழக்கில் ஈர்க்குளி என்றுதான் சொல்லுவோம்.  அந்த மரசீப்பும், மர ஈர்க்குளியும் எல்லா மரத்திலும் செய்துவிட முடியாது.  அதற்தகு மிகவும் பொருத்தமான மரம் இந்த நஞ்சுள் மரம்.

அந்த காலத்தில் தலையில் பேன் பார்ப்பது என்பது பெண்கள் மத்தியில் ஒரு பொழுதுபோக்கு அம்சம் கொண்டது.  பெரும்பாலும்; மதிய உணவுக்குப் பின் பிற்பகலில்தான் இந்தக் காரியம் நடக்கும்.

 பேன் பார்ப்பது, பார்த்துக் கொள்ளுவது இரண்டிலும் பெரும்பாலும் மத்திய வயதுப் பெண்கள்தான் வல்லவார்களாக இருப்பார்கள், எண்ணெய் வைப்பது, சிக்கெடுப்பது, அழுந்துச் சீவுவது, பின்னர் இந்தப் பேன் - நமுடு, ஈறு என ஆய்வு செய்து வேட்டையாடுவது என்பது படி நிலைகளில் இதனைச் செய்ய வேண்டும்.  பேன் பார்த்து முடித்த பின்னால், எத்தனை நாட்களுக்கு ஒரு முறை சீயக்காய் போட்டு குளிக்க வேண்டும்; என்ற பரிந்துரையும் தருவார்கள்.

ஷாம்பு வந்த பின்னால் பேன்தொல்லையும் இல்லை.  தலையில் முடியும் இல்லை.  முடி இருப்பதால் ஏற்படும் தொல்லையும் இல்லை.  முடிகளே இல்லாதபோது, பேன்கள் தொடர்ந்து அங்கு வாழ வசிக்க இடம் இல்லாமல் போய்விட்டது.


நஞ்சுள் மர விதைகளை எப்படி விதைப்பது ?
(HOW TO SOW NANJUL SEEDS ? )


Pலை முதல் டிசம்பர் வரை விதைகளை சேகரித்து, விதைக்கலாம்.  விதைக்கும் முன்னர் விதைகளை  12 மணி நேரம் நீரில் ஊறவைத்து விதைத்தால் நன்கு முளைக்கும்.  பரவலாக எல்லா மண் வகைகளிலும் வளரும்.  ஆனால் வடிகால் வசதி வேண்டும்.

ஒரு நல்லசேதி! மறுபடியும் மரசீப்பு வந்து விட்டது.  ஆன்லைனில் தாடி சீவும்; மரசீப்புகள் வந்துவிட்டன.  நூறு சதவிகிதம் ஆர்கானிக் !
நீங்கள் வாங்கும் மரச்சீப்புகள் நஞ்சுள் மரத்தில் செய்ததா என்று கேட்டு வாங்குங்கள் !


FOR FURTHER READINGON RELATED TOPICS


1. காரை மரம்   அனைத்து   மருத்துவ   முறைகளும்   பயன்படுத்தும்   மூலிகை -   KARAI MARAM  HERB  FOR ALL  MEDICAL SYSTEMS – Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/karai-maram-herb-for-all-medical-systems.html

2. புளிச்சக்காய் மரம் உலகம் முழுக்க                                              பிரபலமான  மூலிகை  -  PULICHAKKAI MARAM WORLD RENOWNED HERB– Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/karai-maram-herb-for-all-medical-systems.html

3. மதுக்காரை மரம்   அற்புத ஆயுர்வேத   மூலிகை    MADHUKKARAI    ACCEPTED AYURVEDIC HERB    – Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/madhukkarai-accepted-ayurvedic-herb.html

4. மலைவேம்பு மரம்                                              எல்லா மருத்துவ                                             முறைகளுக்கும்                மருந்தாகும்               மூலிகை  -   MALAIVEMBU MARAM OUTSTANDING  TREE HERB – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/malaivembu-maram-outstanding-tree-herb.html

5. நொச்சி மரம்   பல நோய்   குணப்படுத்தும்   மூலிகை   -   NOCHI MARAM -  MULTISPECIALITY  TREE HERB – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/nochi-maram-multispeciality-tree-herb.html

6. மருத்துவம் பேசும் 21 மரங்கள்     - 21  MEDICINAL TREES   BOOK   – Date of Posting; 03.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html

7. வெள்அத்தி மரம்  சித்தப்பிரமையை  சீராக்கும்  மூலிகை     VELL-ATHI MARAM CURE MENTAL DISORDERS – Date of Posting; 31.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/vell-athi-maram-cure-mental-disorders.html

8. பன்னீர்மரம்  ஒரு  பாலுணர்வுத் தூண்டி  மூலிகை மரம் -  PANNEER MARAM  NATURAL SEX DRIVING HERB – Date of Posting; 26.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/panneer-maram-natural-sex-driving-herb.html
9. மலம்புளுவன்   பாலைவன  மருத்துவ மரம்  MALAMBULUVAN -  MATCHLESS   DESERT  TREE HERB – Date of Posting; 27.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/malambuluvan-matchless-desert-tree-herb.html

10. சேங்கொட்டை - பெண்களுக்கான   கருத்தடை மூலிகை -  SENKOTTAI  SUPREME  FAMILY PLANNING HERB – Date of Posting; 29.12.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/senkottai-supreme-family-planning-herb.html

11. இடலை மூலிகை மரம்  பாம்புக்கடியை  குணப்படுத்தும்     IDALAI MARAM  CURES SNAKE BITES – Date of Posting; 30.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/idalai-maram-cures-snake-bites.html

12. காட்டலரி பல நோய்களை   கட்டுப்படுத்தும்   சிறந்த  மூலிகைமரம்   - KATTALARY HERB  CURE MANY DISEASES – Date of Posting; 21.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/kattalary-herb-cure-many-diseases.html

13. வெட்சி - உடல் பருமனாதல் மற்றும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பூமரம் -  VETCHI - DIABETES AND OBESITY CURING HERB – Date of Posting; 25.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/vetchi-diabetes-and-obesity-curing-herb.html

14. புத்திரன்ஜீவா - குழந்தை பாக்கியம் தரும் மரம் - PUTRAN JIVA – UNISEXUAL  FERTILITY TREE  – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/putran-jiva-unisexual-fertility-tree.html


15. சூரை  இலந்தை ஒரு  ஆயுர்வேத மருத்துவ மரம்  - SOORAI ILANTHAI – AN AYURVEDIC  MEDICINAL TREE – Date of Posting; 30.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/soorai-ilanthai-ayurvedic-medicinal-tree.html


16. நாட்டு பாதாம்கொட்டை வைரஸ் நோய் நீக்கும்   மருந்து மரம் - NATTU PADHAMKOTTAI  -  IDEAL  TREE HERB  – Date of Posting; 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/nattu-padhamkottai-ideal-tree-herb.html

 REFERENCES:1. WWW.STAUICT EXCHAUGE.ORG / PALLANE MEDICINAL PLANTS – MALACAFE – CELON BOX WOOD TREE.2. WWW.PICHANDIKULAM – HERBARLIUM.ORG / PSYDRAX DICOCCOS3. WWW.TRONCAL THE FERNS.INFO/PSYDRAX DICOCCOS4.  WWW.HERBPATHY.COM/CANTIUM DICOCCUM.                  


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...