MORUS ALBA |
மல்பெரி - விரியன் விஷத்தை முறிக்கும் பட்டு மரம்
MULBERRY -
CAN CURE
SNAKE BITE
விரியன் பாம்பு விஷத்தைக் முறிக்கும்;
அபூர்வ சக்தி உடையது இதன்; இலைச்சாறு.
விதி முடித்தவர்களைத்தான் விரியன்
பாம்பு கடிக்கும் என்பார்கள். ஒரு மல்பெரி
தோட்டத்தில் நட்டுவைத்தால் போதும்
விரியன் பாம்பு பற்றி விசனப்பட வேண்டாம்.
மல்பெரி மரத்தின் கட்டைகளில் ‘ஆ’ அல்லது
‘மா’ இறைச்சியை சுட்டு சாப்பிட்டால்
இரண்டு நாக்கு வேண்டும். மல்பெரி
விறகுசமையலில் ‘ஆ’ அல்லது ‘மா’
இறைச்சியின் வாசம்; இருபதுவீடு
தாண்டியும் வீசும் என்கிறார்கள்.
அமெரிக்காவின், ‘செரோக்கி’ (CHEROKEE)
என்றும் பழங்குடிகள், இந்த மரத்தின்
நாரில், கைவைத்தால் வழுக்கும்
ஒருவகை ‘லினன்’ துணிகளை
நெய்து உடுத்தினார்கள்.
இதன் வேர்ச்சாற்றைப்
பயன்படுத்தி லியூக்கேமியா என்னும்,
வெண்புள்ளி நோயைக்கூட கட்டுப்படுத்த முடியும்.
உலகத்திலேயே, 2018ல் பட்டு உற்பத்தியில்
இந்தியா இரண்டவது இடத்தில் உள்ளது.
பட்டுத் தொழிலை உலகிற்கு அறிமுகம்
செய்த சைனா முதலிடத்தில் உள்ளது.
தாவரவியல் பெயர்: மோரஸ் ஆல்பா
(MORUS ALBA)
தாவரக் குடும்பம் பெயர்: மோரேசியே
(MORACEAE)
தாயகம்: மத்திய மற்றும் கிழக்கு சைனா
(CENTRAL & EAST CHINA)
மல்பெரி மரத்திற்கு பட்டுப்பூச்சி மரம் என்று
பெயர். தமிழ்நாட்டில் பட்டுப் புழு
வளர்க்கும் இடங்களில் எல்லாம்
அதுதான் பெயர். வெள்ளை மற்றும்
மஞ்சள் பட்டு உற்பத்தி செய்யும்
இடங்களில் எல்லாம் மல்பெரிதான்
பட்டுத் தொழிலின் ஆதார சுருதி.
மல்பெரி மரம் 10 முதல் 20 மீட்டர் உயரம்
வரை வளரும். இதன் வயது சுமார் 250
ஆண்டுகள். இதற்கு சைனா சொந்த மண்.
ஆனாலும் மெக்சிகோ, ஆஸ்திரேலியா,
கிர்கிஸ்தான், அர்nஐன்டினா ஆகிய
நாடுகளில், இது பரவியுள்ளது.
நாம் இரண்டு வகையான பட்டுப்புழுக்களை
வளர்க்கிறோம். ஒன்று வெண்பட்டு தரும்
பட்டுப்புழு. இரண்டு மஞ்சள்பட்டு தரும்
பட்டுப்புழு. மல்பெரி வியாபார ரீதியான
பட்டுக்கூடு உற்பத்திக்கு உதவுகிறது.
குளிர்ச்சியான பகுதிகளில் இது இலை
உதிர்க்கும் மரம். வெப்பமான பகுதிகளில்
இது பசுமை மாறாத மரம். இதில் சிவப்பு,
வெள்ளை என இருவகை உண்டு.
சிவப்பு மல்பெரியின் தாவரவியல்
பெயர் மோரஸ் ரூப்ரா (MORUS RUBRA),
வெள்ளை மல்பெரி பெயர் மோரஸ்
ஆல்பா (MORUS ALBA).
17ம் நூற்றாண்டு வாக்கில், அமெரிக்கா-
விர்ஜீனியாவின் ‘பவ்ஹாத்தன்’
(POWHATHAN) என்னும் பழங்குடி மக்கள்
சிவப்பு மல்பெரியை வளர்த்தார்க்கள்.
இதன் பழங்களை பச்சையாகவும்,
சமைத்தும் சாப்பிட்டார்கள். கேக் மற்றும்
இனிப்பு வகைகள் தயார் செய்வதில்
இதனை பயன்படுத்தினார்கள்.
மல்பெரி மரத்தின் கட்டைகளில் ‘ஆ’ அல்லது
‘மா’ இறைச்சியை சுட்டு சாப்பிட்டால்
இரண்டு நாக்கு வேண்டும். மல்பெரி
விறகுசமையலில் ‘ஆ’ அல்லது ‘மா’
இறைச்சியின் வாசம்; இருபதுவீடு
தாண்டியும் வீசும் என்கிறார்கள்.
அமெரிக்காவின், ‘செரோக்கி’ (CHEROKEE)
என்றும் பழங்குடிகள், இந்த மரத்தின்
நாரில், கைவைத்தால் வழுக்கும்
ஒருவகை ‘லினன்’ துணிகளை
நெய்து உடுத்தினார்கள்.
“புட்பாய்சனிங்” என்னும் உணவு நச்சு
ஆகுதல் இன்று மூச்சுவிடுவது மாதிரி
ஆகிவிட்டது. பல நேரங்களில் இது
பாடாய்ப்படுத்தி விடும். ஹோட்டல்
‘பாஸ்ட்புட்’ பழகியவர்களுக்கு, இதுவும்
பழகிவிடும்;. இதனைச் சரி செய்ய மல்பெரி
வேர்களின் பட்டைச்சாறு போதும்.
இதன் இலைச் சாற்றில் சக்கரை நோயை
குணப்படுத்தலாம். இது பற்றிய ஆராய்ச்சிகளும்
இன்னும் தொடருகின்றன. அநேகமாய்
இந்த இலைச்சாறு இனியும் தாமதமில்லாமல்
மருந்துகடைகளுக்கு வந்து சேரலாம்;.
விரியன் பாம்பு விஷத்தைக் முறிக்கும்;
அபூர்வ சக்தி உடையது இதன்; இலைச்சாறு.
விதி முடித்தவர்களைத்தான் விரியன்
பாம்பு கடிக்கும் என்பார்கள். ஒரு மல்பெரி
தோட்டத்தில் நட்டுவைத்தால் போதும்
விரியன் பாம்பு பற்றி விசனப்பட வேண்டாம்.
நல்ல பாம்பை விட விரியன் பாம்புகள்
20 மடங்கு அதிக விஷம் உடையவை
என்று எனக்கு சொன்னார்
ஒரு பாம்பு ஸ்பெசலிஸ்ட்.
இந்தியாவில் உள்ள விஷப் பாம்புகளை
நான்கு வகைகளாகப் பிரிக்கிறார்கள்.
அவை இண்டியன் கோப்ரா, காமன்
கிரெய்ட், ரஸ்ஸல் வைப்பர், சா ஸ்கேல்டு
வைப்பர் (INDIAN COBRA, COMMON KRAIT,
RUSSELLS VIPER & SAW SCALED VIPER)
ஆகியவை. ‘பிக்பாஸ்’ என்பது மாதிரி
இந்த நான்கும் “பிக்போர் (BIG FOUR).
மற்ற பாம்புகள் எல்லாம் பாம்பு கணக்கில்
வராது. விஷமில்லா பாம்புகள்,
மண்புழு கணக்கில்தான் வரும்.
தமிழில் ‘காமன் கிரெய்ட்’ என்பது, கட்டுவிரியன்:
ரஸ்ஸல் வைப்பர் என்பது கண்ணாடி விரியன்:
சா ஸ்கேல்டு வைப்பர் என்பது சுருட்டை விரியன்.
இண்டியன் கோப்ரா என்பது ‘நல்ல பாம்பு’ என்னும்
நாகப்பாம்பு. நல்ல பாம்பு தவிர மற்றவை
மூன்றும் விரியன் வகையைச் சேர்ந்தது.
மல்பெரி இலையின் சாறு, விரியன் பாம்பு
விஷத்தைக் கூட முறித்துவிடும், எ
ன்பது ஆச்சரியமானது.
இதன் வேர்ச்சாற்றைப்
பயன்படுத்தி லியூக்கேமியா என்னும்,
வெண்புள்ளி நோயைக்கூட கட்டுப்படுத்த முடியும்.
இது மட்டுமில்லாமல், இன்று உலகின்
மிகப்பெரிய பிரச்சினை எண்ணிக்கை
அதிகரிக்கும் “ஒபீசிட்டி” என்னும் குண்டு
மனிதர்கள்தான். ஹார்ட் அட்டாக்,
டயபெட்டிஸ் இரண்டையும் கூட
வயசாளிகளின் பிரச்சினை என்று,
பின்னால் தள்ளிவிட்டார்கள். இன்று
‘குண்டு மனிதர்’ பிரச்சினைதான் நம்மை
உண்டு இல்லை என ஆக்கிக் கொண்டிருக்கிறது.
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில்,
மல்பெரி மரம் நன்னம்பிக்கை தந்துள்ளது.
நம்பிக்கையான முடிவுகளைத் தந்துள்ளது.
ஆராய்ச்சியில், கொழுத்த குண்டு எலிகளை
எல்லாம் ‘கியூட் பியூட்டி’ களாக
மாற்றிவிட்டது நமது மல்பெரிச் சாறு.
கருப்பு இளைஞர் மற்றம் இளைஞிகளுக்கு,
மல்பெரி ஒரு நல்ல சேதி தந்துள்ளது.
“கருப்புதான் எனக்குப் புடிச்சக் கலரு”
என்ற சினிமாப்பாட்டு சமாதானம்
சொன்னாலும் ‘சிவப்பழகு கிரீம்’ன்
விற்பனை குறைய வில்லை. நாற்பதைத்
தாண்டிய பின்னால் கூட இந்த ‘கிரீம்’ன்
பின்னால் செல்லுபவர்கள் குறையவில்லை.
“மல்பெரோ சைட் எப்”
(BULBERO SIDE EF)
என்றும் மாயாஜாலம் மல்பெரியில்
இருக்கிறது. ‘இது வெள்ளழகை
வாரித் தருகிறது. இதற்குக் காரணமாக
இருக்கும் ‘மெலனின்’ என்னும்
நிறமியை வராமல் தடுக்கிறது.
இனி கருப்பாக இருப்பவர்கள்
கவலை கொள்ள வேண்டாம்.
அத்தோடு வீக்கம் நீக்கியாக
(ANTI INFLAMATORY ) நோய்
தடுப்பியாக, ரத்தத்தில் சேரும்
கொழுப்பளவு மற்றும் குளுகோஸ்
குறைப்பியாக, கேன்சர் திசுக்கள் தடுப்பியாக,
உடல் மற்றும் மனச்சோர்வு
நீக்கியாகவும் வேலை பார்க்கிறது.
இதில் இருக்கும் பிளேவனாய்ட்ஸ்,
ஆல்கலாய்ட்ஸ் மற்றும் ஸ்டில் பினாய்ட்ஸ்,
நுண்ணுயிரிகளின் தாக்குதல்
ஏற்படாமல் பாதுகாக்கின்றன.
இன்று இளைஞர்களை எதிர்தோக்கி
இருக்கும் இன்னொரு பிரச்சினைக்கும்
மல்பெரி தீர்வு தருகிறது. என்னதான்
விழுந்து விழுந்து படித்தாலும், பரிட்சை
ஹாலில் உட்கார்ந்ததும், படித்தது
எல்லாம் ஆவியாகிவிடுகிறது.
விரைந்து கற்றுக் கொள்ளும் சக்தி
மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த
உதவுகிறது ‘மல்பெரி’. மல்பெரி
இலைச்சாறு மூளையின் என்.ஜி.எஃப்
(NEURO GROWTH FACTOR)
அளவை அதிகரிப்பதால்தான் இது
சாத்தியமாகிறது என்கிறார்கள்,
ஆராய்ச்சியாளர்கள்.
அத்தோடு சிலருக்கு அடிக்கடி ஏற்படும்
மனச்சோர்வு (SIONDEPRES)
மற்றும் அற்பமான காரியங்களுக்கு
எல்லாம் ஏற்படும் படபடப்பு (ANXIETY)
மன இருக்கம் (STRESS) ஆகியவற்றை
சரி செய்யும் சஞ்சீவி மூலிகையாக உள்ளது, மல்பெரி.
தமிழ்நாட்டில், மல்பெரிக்கு வழங்கும்
பெயர் பட்டுப் பூச்சி செடி. பட்டு உற்பத்தித்
தொழிலுக்கு அடிப்படையாக இருப்பது
மல்பெரி. ஒரு ஏக்கரில் மல்பெரி போட்டு
பட்டுப்புழு வளர்ந்தால் மாதம்
ஒரு லட்சம் சம்பாதிப்பது சுலபம்.
பூமி நிறுவனம், நபார்டு உதவியடன்
110 மலை வாழ்மக்களுக்கு, பட்டு
வளர்ப்பை அறிமுகம் செய்துள்ளது.
அரை ஏக்கரில் மல்பெரி போட்டு
மாதாமாதம் ரூ 15,000 முதல் ரூ 20,000
சராசரியாக வருமானம் எடுக்கிறார்கள்
பல விவசாயிகள். அதிகபட்சமாக சிலர்
21 நாட்களில் ரூ 50000 வரை கூட
வருமானமாக எடுக்கிறார்கள்.
வேலை கூட அதிகம் இல்லை
என்கிறார்கள்.
உலகத்திலேயே, 2018ல் பட்டு உற்பத்தியில்
இந்தியா இரண்டவது இடத்தில் உள்ளது.
பட்டுத் தொழிலை உலகிற்கு அறிமுகம்
செய்த சைனா முதலிடத்தில் உள்ளது.
இன்று இந்;தியாவில் 52,000 கிராமங்களில்
சுமார் 8 மில்லியன் மக்கள் பட்டு
உற்பத்தி செய்கிறார்கள்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும்
‘பட்டு’ நான்கு வகைகளில் உற்பத்தி
ஆகின்றது: அவை மல்பெரி பட்டு,
டஸ்ஸார் பட்டு, ஈரி பட்டு மற்றும்
முதா பட்டு (MULBERRY SILK, TASAR SILK,
ERI SILK, MUGA SILK). இந்த நான்கு வகைளில்
92 சதவிகித பட்டு உற்பத்தி
ஆவது மல்பெரிப் பட்டுதான்.
இந்த நான்கு வகையான பட்டு உற்பத்தியும்
இருப்பது இந்தியாவில் மட்டும்தான்.
வேறு எந்த நாட்டிலும் இல்லை என்கிறார்கள்.
மல்பெரி தவிர்த்து மற்ற அனைத்து
வகைக்கும் பெயர் ‘வான்யா பட்டு’
(VANYA SILKS). இது காடுகளில்
சேகரிக்கும் பட்டு. தானாய் வளரும்
மரத்தில் தானாய் வளரும் பட்டுப்புழுக்கள்
தானாய் கட்டும் கூடுகள். மல்பெரி பட்டு
உற்பத்தியில், மரமும் வளர்க்க வேண்டும்.
பட்டுப்புழுவும் வளர்க்க வேண்டும்.
அவை கூடுகட்ட வீடும் கட்டித்தர வெண்டும்.
கிட்டத்தட்ட 90 சத பட்டுப்புடவைகள்
மல்பெரி பட்டில்தான் தயாராகின்றன.
உலகிலேயே மிகவும் விலை அதிகமான
பட்டுப்புடவைகள் என்பவை காஞ்சிபுரம்
பட்டு நெசவில் உருவானவைதான்.
அத்தனைக்கும் அடிப்படை
நமது மல்பெரி மரங்கள்.
இந்தியாவில் மல்பெரி பட்டு விவசாயம்
செய்வதில் 90 நிலப்பரப்பு, கர்நாடகா,
ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் உள்ளன.
மீதம் உள்ள 10 சதவிகித மல்பெரி பட்டு
விவசாய நிலப்பரப்பு மேற்கு வங்காளம்,
இமாச்சலப் பிரதேசம், மற்றும் வடகிழக்கு
மாநிலங்களில் உள்ளன.
தே. ஞானசூரிய பகவான், போன்:+ 91-8526195370,
Email:gsbahavan@gmail.com
WWW.FAO.ORG/
MULBERRY CULTIVATION
AND UTILIZATION IN INDIA,
THE
DIFFERENT TYPES OF SILK IN
DIFFERENT PARTS OF INDIA’,
‘TOP 10 LARGEST SILK
PRODUCING
STATES IN INDIA 2018, WWW.SELFHACKED.COM /”
13 AMAZING HEALTH
BENEFITS OF
WHITE MULBERRY (MORIS ALBA)
WITH MECHANISM.
No comments:
Post a Comment