Friday, January 17, 2020

மோரோ பிளட் மெடிட்டெரேனியன் நாடுகளின் ஆரஞ்சு வகை - MORO BLOOD ORANGES OF MEDITERRANEAN COUNTRIES


         



      


  

மோரோ பிளட்
மெடிட்டெரேனியன்
நாடுகளின் 
ஆரஞ்சு வகை 


MORO
BLOOD ORANGES OF MEDITERRANEAN COUNTRIES

TREE OF 

SOUTHERN 

MEDITERANEAN


உலக மெங்கும் சாகுபடி செய்யும் முக்கியமான பத்து ஆரஞ்சு வகைகளில் மோரே பிளட் ஆரஞ்சு வகையும் ஒன்று.

அமெரிக்காவில் டெக்ஸஸ் மற்றும் கலிபோர்னியா மாநிலங்களில் ரத்தச் சிவப்பு ஆரஞ்சு வகைகளைப் பயிர் செய்கிறார்கள்.

ஆரஞ்சுவகைகளில் இதில்தான் அதிகமான விட்டமின் “’சி உள்ளது.  ஆன்டி ஆக்சிடெண்ட்களும் அபரிதமாக உள்ளன.


மெடிட்ரரேனியன் பகுதி எட்டாம் நூற்றாண்டில் மூர்களின் ஆதிக்கத்தில் இருந்தது.  அந்த ஆதிக்கம்தான் இன்று பிளட் ஆரஞ்சு ரகம் வரை நீண்டுள்ளது. 

வித்தியாசமாய்  இருப்பதால் மார்கெட்டில் மோரோ பிளட் ஆரஞ்சு க்கு நல்ல விலை கிடைக்கிறது. 


தே. ஞானசூரிய பகவான்போன்: + 91-8526195370 Email: gsbahavan@gmail.com




தாவரவியல் பெயர்: சிட்ரஸ் சைனென்சிஸ் (CITRUS SINENSIS)தாவரக் குடும்பம் பெயர்: ரூட்டேசி (RUTACEAE)
தாயகம்: சதர்ன் மெடிட்டரேனியன் (SOUTHERN MEDITERANEAN COUNTRIES)
பொதுப் பெயர்கள்: மோரோ பிளட் ஆரஞ்சு (MORO BLOOD ORNGE)


உலக அளவில் அதிகம் ஆரஞ்சு உற்பத்தி செய்யும் நாடு பிரேசில்.  அமெரிக்கா  இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.  உலகம் முழுவதும் சாகுபடி செய்யும் பத்து ஆரஞ்சு வகைகளில் ஒன்று மோரோ பிளட் ஆரஞ்சு.

டல்லஸ் நகரில் போர்ட்வொர்த் தாவரவியல் பூங்காவில் நுழைந்ததும் நான்பார்த்தது, மோரோ பிளட் ஆரஞ்சு மரம்தான்;.  பிளட் ஆரஞ்சு என்பது எனக்கு ரொம்பவும் புதியதாக இருந்தது.  ஆரஞ்சில் நமக்குத் தெரிந்தவை ஒன்று சாதா ஆரஞ்சு.  இன்னொன்று மேண்டரின் ஆரஞ்சு என்பது.  அதனை கமலா ஆரஞ்சு என்று சொல்லுவார்கள்.  ஆங்கிலத்தில் அது லூஸ் ஜாக்கட் ஆரஞ்ச்.  சாதா ஆரஞ்சு தோலை உறிப்பது ரொம்ப கஷ்டம்.  ஆனால் லூஸ் .ஆரஞ்சு பெயருக்குத் தகுந்படி, கையை வைத்தால் போதும், தானாய் கழன்று வந்துவிடும் அதன் தோல்.

எங்கள் தோட்டத்தில் ஒரு வகை ஆரஞ்சு இருந்தது.  பழங்கள் நெல்லிக்காய்யை விட கொஞ்சம் சிறியது.  சுண்டைக்காயைவிட கொஞ்சம் பெரியது.  ஆனால் பழங்கள் மேல்பக்கமும் அடிப்பக்கமும் தட்டையாக இருக்கும்.  அதுவும் ஆரஞ்சுதான்.  ஆனால் வாயில் வைத்தால் உடல் நடுங்கும்படியான புளிப்பு.  ஐஸ் போட்டால் எவ்வளவு தண்ணீர் வேண்டு மானாறும்  ஊற்றி, கொஞ்சம் சர்க்கரையும் போட்டுவிட்டால் ஜூஸ் அற்புதமாய் இருக்கும்.  இந்த மரம் ஐந்தாது ஆண்டுகளில் 5 அடிக்குமேல் வளராமல் நின்று எக்கச் சக்கமாகக் காய்த்தது.  யார் கண்  பட்டதோ ஒரு ஆறு மாதத்துக்கு முன்னால் அடித்தூரோடு காய்ந்துவிட்டது.

உலகின் முக்கிய ஆரஞ்சு வகைகள் (TOP 10 ORANGE VARIETIES OF THE WORLD)


உலக மெங்கும் சாகுபடி செய்யும் முக்கியமான பத்து ஆரஞ்சு வகைகளில் மோரே பிளட் ஆரஞ்சு வகையும் ஒன்று. அந்த பத்து ஆரஞ்சு வகைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.  வேலன்சியா, மாண்டரின், நேவல் ஆரஞ்சு, பிளட் ஆரஞ்சு, சத்சுமா ஆரஞ்சு, செவிலி ஆரஞ்சு, கிளிமென்டைள் ஆரஞ்சு, ஹேம்லின் ஆரஞ்சு, பைன் ஆப்பிள் ஆரஞ்சு, மற்றும் ஜாபா ஆரஞ்சு (VALENCIA, MANDARIN, NAVEL ORANGE, BLOOD ORANGE, SATSUMA ORANGE, SEVELLE ORANGE, CLEMENTINE ORANCE, HAMLIN ORANGE, PINEAPPLE ORANGE & JAFFA ORANGE)

பிளட் ரெட் ஆரஞ்சு வகை (BLOOD RED ORANGE VARITIES)


ஆரஞ்சு பழங்களின் மேல் தோல் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.  சில வகை பசுமையாகக்கூட இருக்கின்றன.  தோல் சிலவற்றில் மெல்லியதாக இருக்கும்.  சிலவற்றில் அது தடிமனாக இருக்கும். சில வகைகளில் பழத்துடன் தோல் இறுக்கமாகப் பற்றிக்கொண்ருக்கும்.  சிலவற்றில் சுலபமாய் உறிக்கலாம்.  கமலா ஆரஞ்சு வகைகளில் சொல்லவே வேண்டாம்.  பழங்களின் சுளைகள் பெரும்பாலும் மஞ்சளாக, அடர்த்தியான மஞ்சளாக, இளமஞ்சளாக, லேசாக சிவந்தமாதிரியும் இருக்கும்.  இது ரகங்களுக்கு எற்ற மாதிரி வேறுபடும்.  ஆனால் பிளட் ஆரஞ்சு வகையில் பிஞ்சுகளும், காய்களும் பசுமையாகவும், தோல் ஆரஞ்சு நிறமாகவும், சுளைகள் மட்டும் ரத்தச் சிவப்பில் சிலவற்றில் ஊதா நிறம் கலந்தும், சில கருஞ்சிவப்பு எனவும், பலவகையாக இருக்கும்.

இயற்கையாக உருவான ரகம் இது (NATURAL MUTATION VARIETY)


அமெரிக்காவில் டெக்ஸஸ் மற்றும் கலிபோர்னியா மாநிலங்களில் ரத்தச் சிவப்பு ஆரஞ்சு வகைகளைப் பயிர் செய்கிறார்கள், இதன் பூர்வீகம் தெற்கு தீவு மெடிட்டரேனியன் பகுதியின் (MEDITERANEAN), சிசிலி இயற்கையான சடுதி மாற்றத்தால் (MUTATIONAL CHANGE) உருவான ரகம்.  இது ஒட்டு ரகமும் கூட(HYBRID), இந்தாலியின் டரோகோ (TAROCCO ORANGE) ரகமும் ஸ்பெயின்ன் சேன்குநெல்லோ (SANGUNELLO VARIETY) ரகமும் சேர உருவான ரகம் இது, பழத்தின் சுளைகளின் சிவப்பு நிறத்திற்குக் காரணம் இதில் இருக்கும் அந்தோசயனின் (ANTHOCYANINS), இந்த ஆந்தோசயனின் இதர பழவகை மற்றும் பூக்களில் இருக்கும்.  பொதுவாக நராரத்தைகளில் இது இருக்காது.  ஆரஞ்சுவகைகளில் இதில்தான் அதிகமான விட்டமின் “’சி உள்ளது.  ஆன்டி ஆக்சிடெண்ட்களும் அபரிதமாக உள்ளன.

மெடிட்ட ரேனியன் கடலில் உள்ள மிகப்பெரிய தீவுதான் சிசிலி.  இத்தாலி நாட்டின் தனி அதிகாரம் பெற்ற ஒரு பகுதிதான் (AUTONOMOUS REGION ) சிசிலி.  ஐரோப்பாவில் இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் மிகவும் உயரமான எரிமலையின் பெயர்.  மவுண்ட் எட்னா” (MOUNT EDNA).  அது இங்குதான் உள்ளது.

ஆரஞ்சு அதிகம் உற்பத்தி செய்யும் நாடு பிரேசில்(BRAZIL - WORLD LEADER OF ORANGE)


உலகில் ஆரஞ்சு அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள், இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரேசில்.  ஆரஞ்சு உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பதுபிரேசில்இரண்டாம் இடத்தில் இருப்பது அமெரிக்கா.மூன்றாவது இடத்தில் இருப்பதுசைனா.   நாம்  நான்காம் இடத்தில் இருக்கிறோம்.  இந்தியாவின் பிரபலமான ஆரஞ்சு நம் நாக்பூர் ஆரஞ்சு.  இந்தியாவின் ஆரஞ்சு நகரம் (NAGPUR - ORANGE CITY OF INDIA) நாக்பூர்.  

அமெரிக்காவில் அதிக ஆரஞ்சு உற்பத்தி செய்யும் மாநிலங்கள்(TEXAS & CALIFORNIA - ORANGE CITIES OF AMERICA)


ஆரஞ்சு உற்பத்தியில் உலக அளவில் இரண்டாம் நிலையில் இருக்கும் அமெரிக்காவின் ஆரஞ்சு நகரங்கள் என்பவை, கலிபோர்னியா, புளோரிடா மற்றும் அரிசோனா.  ஆனால் மோரோ பிளட் ஆரஞ்சு ரகங்கள் இத்தாலி நாட்டில்தான் வியாபார ரீதியில் பயிர் செய்கிறார்கள்.  அதற்கு அடுத்ததாகச் செய்யும் இடங்கள் கலிபோர்னியா, மற்றும் டெக்சஸ்.

மோரோ பிளட் ஆரஞ்சுக்கு மோரோ எப்படி வந்தது? (INFLUENZE OF MOORS IN 8 TH CENTURY)


இந்த மெடிட்ரரேனியன் பகுதி எட்டாம் நூற்றாண்டில் மூர்களின் ஆதிக்கத்தில் இருந்தது.  அந்த ஆதிக்கம்தான் இன்று பிளட் ஆரஞ்சு ரகம் வரை நீண்டுள்ளது.


பழத்தின் இனிப்பு பிரமாதமாக இருக்கும். அதைவிட அதன்மணம் வித்தியாசமாக இருக்கும்.  ஆரஞ்சு வாசனை கமகமக்கும்.  அத்தோடு ரேஷ்ப் பெரியின் வாசனையும் சேர்ந்து வீசும்.  சாதாரணமாக ஆரஞ்சு சாற்றில் ஒரு சிறு கசப்பு இருக்கும்.  அந்தத் கசப்பு இந்த ரகத்தில் கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.  இன்னொன்று இதில் ஆந்தோசயனின் அதிகம் இருப்பதால், ஆன்டி ஆக்சிடெண்ட்கள்  அதிகம் இருக்கும்.  

சிவப்பு நிறம் இருக்கும் பழங்கள் மற்றும் காற்கறிகளில் இந்த ஆந்தோசயனின் கண்டிப்பாய்.  இருக்கம்.  உதாரணம், கத்தரிக்காய், மற்றும் சிவப்பு முட்டைக்கோசு.  இது தவிர மோரோ வில் போலேட், கால்சியம், மற்றும் தயமின் (FOLATE, CALCIUM, THIYAMIN) ஆகிய தாது உப்புக்களும் இதில் அதிகம் உள்ளது.

வித்தியாசமாய்  இருப்பதால் மார்கெட்டில் மோரோ பிளட் ஆரஞ்சு க்கு நல்ல விலை கிடைக்கிறது.  மாம்பழங்கள்.  பப்பாளி பழங்கள் சிவப்பாய் இருந்தால் நல்ல விலைக்குப் போகிறது.  கொய்யாவில் கூட செந்தசைக் கொய்யாவுக்கு மார்கெட்டில் மவுசு அதிகம்.  அவ்வளவு ஏன்? சிவப்பாய் இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் கூட  கல்யாண மார்கெட்டில் மவுசு அதிகம்!

  v  REFERENCES:


v  WWW.SPECIALTYPRODUCE.COM/MORO BLOOD ORANGES
v  WWW.EN.M.WIKIPEDIA.ORG “MORO BLOOD ORANGE
v  WWW.CHRUSIARIETY.UCR.EDU/ MORO BLOOD ORANGE
v  WWW.THE INDIANVEGAN. BLIGSPOT.COM/ THE EARTH OF INDIA –ALL ABOUT ORANGES IN INDIA.






2 comments:

Muralidharan Ramarao said...

ஊமத்தம்பூ நல்ல அழகு அதன் காயை மேலே தூக்கி எறிந்து நானும் விளையாடியிருக்கிறார் அதைப்பற்றி மிக அழகாக விவரித்திருக்கிறீர்கள் பாராட்டுகள் ஞான சூரியன்

Gnanasuriabahavan Devaraj said...

கிராம் வாழ்க்கையின் அழகே அழகு ! அதனால்தான் நான் கடந்த 20 ஆண்டுகளாக ஒரு அழகிய கிராமத்தில், ஒரு சிறிய குன்றின் அடிவாரத்தில் நான் வாசம் செய்கிறேன். ஊமத்தங்காய்களை தூக்கிப்போட்டு புறங்கையில் தாங்கி ரத்தம் துளிர்ப்பதைப் பார்ப்பது என்பது வீரர்களின் விளையாட்டு. அப்படிப் பார்த்தால் நீங்களும் வீரன்தான், சந்தேகம் இல்லை. என்னைமாதிரி !

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...