Friday, January 10, 2020

மெக்சிகோ நாட்டின் தேசியமரம் மாண்டிசுமா சைப்ரஸ்- MONTEZUMA CYPRESS MEXICAN HERBAL TREE





மாண்டிசுமா சைப்ரஸ் மெக்சிகோ நாட்டின் மூலிகைமரம் 




MONTEZUMA CYPRESS

MEXICAN HERBAL TREE


தே. ஞானசூரிய பகவான், போன்: + 91-8526195370
Email: gsbahavan@gmail.com




தாவரவியல் பெயர்: டாக்சோடியம் முக்ரனேட்டம் (TAXODIUM MUCRANATUM)

தாவரக்குடும்பம் பெயர்: குப்ரசேசி (CUPPRESACEAE)

தாயகம்: மெக்சிகோ மற்றும் கவுட்டிமாலா (MEXICO, GUATEMALA)




குப்சேசி குடும்பத்தைச் சேர்ந்த பொதுவான தாவரவகைகள் சைப்ரஸ் என்னும் பிரிவுக்குள் அடங்கும்.  இந்த வகை மரங்கள், வட அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, வியட்நாம், அர்nஐண்டினா, ஆஸ்திரேலியா, சைனா, என பல நாடுகளில் பரவியுள்ளது.



அடிமரம் பருத்து வளரும் மரம்


மாண்டிசுமா, சைப்ரஸ் மரங்கள் பசுமை மாறா மற்றும் சுமாரான பசுமை மாறா மரங்கள்.  அதிகபட்சமாக 40 மீட்டர் உயரம் வரை வளரும்.  மரங்களின் அடிமரத்தின் விட்டம், 9.8 அடிவரை பருத்து வளரும்.  மிகவும் பெரிய அடிமரம் உள்ள மரமாக வளரும். 



இதற்கு அடுத்ததாக பெரிய அடிமரம் உடையதாகப் பருத்து வளரும் மரம், ஆப்ரிகன் பேவோபாப் மரம்.  ஆப்ரிகன் பேபாப் மரங்களின் அடிமரம் தண்ணீர் தொட்டி போல மிகவும் பெரியதாக இருக்கும்.  ஆப்ரிக்கன் பேவோபாப் மரங்கள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளன.


அது அந்த காலத்துலயே அப்பிடி அழகு மரம் மாண்டிசுமா சைப்ரஸ்
மாண்டிசுமா சைப்ரஸ் மரங்கள் ஆற்றங்கரை மரங்கள் (RIPARIAN TREES) என்று சொல்லலாம்.  ஆற்றங்கரைகள், ஒடைக்கரைகள், சதுப்பு நிலங்கள் மற்றும் ஊற்றுக்கள் நிறைந்த பகுதிகளில் இந்த மரங்கள் நன்கு வளரும்.  குறிப்பாக மாண்டிசுமா சைப்ரஸ் மரங்கள் வறட்சியைத் தாங்கி வளரும்.  இன்னொன்று மிகவும் வேகமாக வளரும்.  கடல் மட்டத்திலிருந்து 980 முதல் 8200 அடி உயரம் வரை உள்ள பகுதிகளில் வளரும்.


பிரி கொலம்பியன் காலத்திற்கு (PRE COLUMBIAN TIMES) பிற்பட்ட, காலத்திலேயே, மாண்டிசுமா சைப்ரஸ் மரங்கள் அழகுமரமாக அமெரிக்காவில் பயன்படுத்தி வந்துள்ளார்கள்.  ஐரோப்பியர்கள் அமெரிக்காவில்; காலூன்று வதற்கு முற்பட்ட காலம்தான் பிரி கொலம்பியன் காலம் என்பது.


நோய் தீர்க்கும் மூலிகை மரம்


பழங்காலத்திலிருந்தே மெக்சிகோவில், பூங்காக்கள் மற்றும் தோட்டங்களில் இந்த மரங்களை அழகுமரமாக நட்டு வந்திருக்கிறார்கள்.  இந்த மரங்களின் கட்டைகள் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்ட பயன்படுத்தினார்கள்.  இந்த மரங்களின், பிசின், பட்டைகள் மற்றும் இலைகளை பல்வேறு நோய்களை குணப்படுத்த மருந்தாகப் பயன்படுத்தி வந்துள்ளார்கள்.


மரங்கள் தேராக நிமிர்ந்து உயரமாக வளரும்.  பெரிய மரங்களாக வளரும்.  அதனால் அதிக இடம் தேவைப்படும்.  மரம் பிரமிடு வடிவத்தில் வளரும்.  ஒர் ஆண்டில் அதிகபட்சமாக 36 அங்குலம் உயரம் வளரும்.  சராசரி மரங்களின் வயது 50 முதல் 150 ஆண்டுகள்.


இலைகள் நீளமானவை (LINEAR) வெளிர் பச்சை நிறமானவை.  நிறம் மாறுவதில்லை.  முழுமையாக இலைகளை உதிர்க்காத (SEMI DECIDOUS TREE) மரம்.  பூக்கள் மிகவும் சிறியவை.  கோடை அல்லது இலை உதிர்க்கும் பருவத்தில் பூக்கும்.  ஆண் பெண் பூக்கள் தனித்தனியானவை.  ஒரே மரத்தில் பூக்கும்.  மரத்தின் பட்டைகள் செங்காவி நிறத்தில் மிகுதியான வெடிப்புகளுடன் இருக்கும்.


புனிதமான மரம் - மழை அதிகம் பெய்யும்.


மெக்சிகோவில் காலம்காலமாக இதன் மரங்கள் மரச்சாமான்கள், மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்தி வந்துள்ளார்கள்.  இந்த மரங்கள் அதிகம் இருந்தால் மழை அதிகம் பெய்யும் என்று நம்பினார்கள்.  தோட்டங்கள், பூங்காக்கள், மற்றும் அரண்மனை வளாகங்களில் இந்த மரங்களை நட்டனர்.  பாரம்பரி மருத்துவத்தில் இதனை அதிகமாகப் பயன்படுத்தினர்.  கிறித்துவ ஆலயங்களில் விழாக்களின்போது பலிபீடங்களை அலங்கரித்த இதனைப் பயன்படுத்தினர்.  இந்த மரங்களை புனிதமான மரம் என்றும் நம்பினார்கள்.


மெக்சிகோ நாட்டின் தேசியமரம்


இந்த மரங்களுக்கு வணிகரீதியில் பெரிய வரவேற்பு உள்ளது என சொல்ல முடியாது.  காரணம், இந்த மரங்கள் அவ்வளவு உறுதியானவை அல்ல.  கடினமானவை அல்ல கொஞ்சம் பலவீமானவை என்றுகூட சொல்லலாம்.


மெக்சிகோ நாட்டு மக்களின் கலாச்சார வாழ்க்கையுடன் மிகவும் நெருக்கமான தொடர்புடையது, இந்த மாண்டிசுமா சைப்ரஸ் மரம்.  அதனால் மெக்சிகோ நாட்டின் தேசியமரமாக இதனை அறிவித்துள்ளார்கள்.


இந்த மரங்கள் வரை அதிகமான நீர் தேவைப்படும்.  ஒரளவு நிழலும் தேவை.  மணற்பாங்கான மண், மணற்பாங்கான இருமண்பாட்டு மண்(SANDY LOAM), களிப்புத்தன்மை கொண்ட இருமண்பாட்டு மண் (CLAY LOAM), களிமண், ஆகிய மண்தன்மை கொண்ட நிலங்களில் இந்த மரங்கள் நன்கு வளரும்.  பால்ட் சைப்ரஸ் மரங்களைவிட வேகமாக வளரும்.  குளிர்ப் பருவங்களில் ஒரளவு இலைகளை உதிர்க்கும். 


இந்த மரங்களின் கோன்கள் பிப்ரவரி மாதத்தில் திறக்கும்.  அக்டோபர் மாதத்தில் விதைகள் தயார் ஆகும்.  மார்ச் ஏப்ரல் மாதங்களில் பூக்கும்.  கோன்கள் முதிர்ந்தவுடன், விதைகள் வெளிப்படும்.  போதுமான ஈரம் இருந்தால் புதிய விதைகள் எளிதில் முளைக்கும்.

புகைப்படங்கள்: டல்லஸ் அர்பரிட்டம், ஃபோர்ட்ஒர்த், யூ எஸ் ஏ (DALLAS ARBORETUM, FORTWORTH, USA)

REFERENCES:


1. WWW.EN.WIKIPEDIA.ORG-“TAXODIUM MUCRANATUM”2. WWW.WILD FLOWER.ORG – “TAXODIUM MUCRANATUM”
3. WWW.SELECT TREE.CALPOLY.EDU-“MOTEZUMA CYPRESS”
4. WWW.IUCREDLIST.ORG-”TAXODIUM MUCRANATUM”





No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...