Friday, January 17, 2020

செக்கோயா உலகின் உயரமான மரம் - KING SEQUOIA WORLDS' TALLEST TREE





செக்கோயா 

உலகின் 

உயரமான  மரம் 


KING SEQUOIA 
WORLDS' TALLEST
TREE 

KING SEQUOIA

TALLEST & LARGEST 

TREE OF THE WORLD



தே. ஞானசூரிய பகவான்போன்:+ 91- 8526195370Email: gsbahavan@gmail.com




உலகத்திலேயே மிக உயரமாகவும், பெரியதாகவும் வளரக்கூடிய மரங்களைப் பார்த்தேன்.  அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.  அதை வாய்ப்பு என்று சொல்லக் கூடாது.  பாக்கியம் என்று சொல்ல வேண்டும். அந்த மரத்தின் பெயரும் செம்மரம்தான்.  கலிபோர்னியாவின் ரெட்வுட் - செம்மரம்.  செக்கோயா செம்மரம்.  

அப்படி உயரமான மரங்களை நாம் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாது.  அப்படி ஒரு உசரம்.  இந்த மரங்கள் அதிகம் இருக்கும் பகுதியை அமெரிக்க அரசாங்கம் தேசிய பூங்காவாக அறிவிச்சு இருக்காங்க.  அதன் பெயர் செக்கோயா அண்ட் கிங் கேனியான் நேஷனல் பார்க்ஸ் தேசியப்பூங்கா.

டெக்சாஸ் மாநிலத்தின் டல்லஸ் நகரில்க்சனி ரிசிடென்சிக்கு,  ஒரு கால்டாக்சி வரவழைத்து, போர்ட்வொர்த் விமான நிலையம் சேர்ந்து, தாமதமாகப் போனதால், ஆறரைமணி விமானத்தைத் தவறவிட்டு, அடுத்த ஒரு மணி நேரத்தாமதமாக அடுத்த விமானம் பிடித்து, மூன்றரை மணி நேரம் பறந்து லாஸ்ஏஞ்சல்ஸ்ல் இறங்கி, பஸ், கார் என பயணித்து பேமாண்ட் லாட்ஜ் என்றும் விடுதியில் இரவு தங்கி, அடுத்த நாள், ஹாலிவுட் சுற்றி வந்து, இரண்டாம் நாள் 10 மணிநேரம் பயணித்து லூரிமோர் டிராவல் லாட்ஜில் இரவு குளிரி;ல் நடுங்கி, அடுத்த நாள் காலை 2 மணி நேர கார் பயனம் செய்து சுமார் 11 மணிக்கு செக்கோயா தேசியப் பூங்காவில் இறங்கிய போது, கூட்டமாக அங்கிருந்த செம்மரங்கள் உயர உயரமாக நின்று எங்களை கண்கொட்டாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.

சீரா தெவாடா என்பது ஒரு மனலத்தொடர்.  நம்ம ஊர் கிழக்குத் தொடர்ச்சி மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் மாதிரி.  ரொம்ப நீளமானது.  பெயர் சீரா நெவாடா மலைத் தொடர்.  இந்த மலைத் தொடர் அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 48 ல் படுத்துக்கிடக்கிறது. அப்படி என்றால் யோசித்துப் பாருங்கள், அது எவ்வளவு நீளமாது ? அந்த மலைத்தொடரில் தான் இருக்கிறது, செக்கோயா மற்றும் கிங் கேனியான் தேசியப் பூங்காக்கள் (SEQUOIA AND KING CANYON NATIONAL PARK).  இதன் மொத்தப் பரப்பளவு 7 லட்சத்து 68 ஆயிரம் ஏக்கர்.

A TUNNEL IN THE FALLEN TREE

உலகத்தின் மிக உயரமான மரம் (TALLEST AND LARGEST TREE OF THE UNIVERSE)

உலகத்தின் மிக உயரமான, மிகப்பெரிய, அதிக எடையுள்ள, இன்னும் உயிராய் இருக்கும் செக்கோயா செம்மரம் இங்குதான் உள்ளது.  அதிக பட்சமாக இதன் வயது 3500 ஆண்டுகள்.  வளரும் உயரம் சராசரியாக 300 அடி.  வளர்ந்த கிளைகளின் குறுக்களவு 18 அடி.  இதன் மரப்பட்டையின் தடிமன் 3 அடி.  சீரா நெவாடா மலைச்சாரலில் கலிபோர்னியா மாநிலத்தில் இருக்கும் செக்கோயா மரக்காடுகள் மட்டும் 36000 ஏக்கர். 

ஆபிரஹாம் லிங்கன் அனுமதித்த செக்கோயா தேசியப் பூங்கா ( ABRAHAM LINGAM INITIATED THE NATIONAL PARK)


1860 ம் ஆண்டு அன்றைய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் நிதி அனுமதி அளித்து.  பிள்ளையார் சுழி போட, 30 ஆண்டுகள் முடங்கிக் கிடந்த யோஷிமிட்டி தேசியப் பூங்கா திட்டம் 1890 ல், 7.47 லட்சம் ஏக்கர் பரப்பில் உயிர் பெற, அதனை வேர்ல்ட் ஹெரிட்டேஜ் சைட் அங்கீகரிக்க, இங்குள்ன செக்கோயா மரத் தோப்புகள், கிரேனைட் மலை முகடுகள், தெள்ளிய நீரோடைகள், ஏரிகள், மலை அடுக்குகள், பனிப்பாறைகள், அத்தனையும் உள்ளடக்கிய இந்தப் பூங்காவிற்கு ஆண்டுக்கு அம்பது லட்சம் பேர், நுழைவுக் கட்;டணம் செலுத்தி, இங்கு வந்து இந்த ராட்சப் மரங்களைப் பார்த்து வாய்ப்பிளந்து நிற்கிறார்கள்.

காட்டுத்தீ கண்டிப்பாய் வேண்டும் (SEQUOIA NEEDS FOREST FIRE)


இந்தப் பூங்காவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது காட்டுத்தீ கண்டிப்பாய் வந்து போகிறது.  இப்போதெல்லாம் அது தள்ளிப் போய்விட்டது.  10 அல்லது 15 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் வருகிறது.  இதற்காக அவர்கள்  வருத்தப்படுகிறார்கள்.  விசாரித்துப் பார்த்ததில் அதற்கு விளக்கம் சொல்லுகிறார்கள்.  இதன் விதைக்கனிகள் (ACORNS) உடைந்தால்தான் அதன் உள்ளிருக்கும் விதைகள் வெளியேறும். அதற்கு முக்கியமாக இந்த காட்டுத்தீ வேண்டும் என்கிறார்கள்.
  
விதைகள் வெளியே வந்தால்தான் அவை முளைக்கும்.  அப்படி முளைத்தால்தான் புதிய கன்றுகள் உருவாகும்.  அப்போதுதான் செக்கோயா மரங்கள் பெருகும்.  அதனால்தான் காட்டுத் தீயின் கருணை வேண்டும் என்கிறார்கள்.  இந்த விதைகள் இயற்கையாக வெளியேற வேறு வழி இல்லையா? இங்கு இருக்கும் அணில்கள் இந்த விதைக்கனியைக் கடித்த விதைகளைச் சிதறவிட வேண்டும்.  இந்த இரண்டு முறைகளில்தான் புதிய மரங்களை உருவாக்க முடியும் என்கிறார்கள்.

இதற்கு நீங்களே ஏதாச்சும் செய்ய முடியாதா? என்று கேட்டால் முடியும்.  அதையும் செய்கிறோம்.  அளவாக அவ்வப்போது தீ மூட்டத்தான் செய்கிறோம்  ஆனால் அதைக் கட்டுப்படுத்துவது அவ்வளவு சுலபம் இல்லை என்கிறார்கள்.

லாங் ஹார்ன் பீட்டில் (LONG HORN BEETLE)என்னும் கொம்பு நீண்ட ஒருவகை வண்டுகள் கூட இந்த கனிகளைக் கடித்து விதைகளை வெளிப்படுத்துகின்றன.

ஒரு மரத்தின் ஊடாகச் செல்லும் ரோடும் ஆயிரக் கணக்கான கார்களும் (A TUNNEL ROAD THROUGH A FALLEN TREE)


1937 ம் ஆண்டு ஒரு பெரிய செக்கோயா மரம் தரையில் சாய்ந்தது.  சாய்ந்த மரம் ஒரு சாலையின் குறுக்காக விழுந்தது.  அதனை அப்புறப்படுத்துவது அவ்வளவு சுலபமான வேலையாக இல்லை.


பாடி ஸ்டாங்கு பேஸ்மெண்ட் வீக் (BODY STRONG BASEMENT WEEK)


இந்த செக்கேயா மரங்கள், உறுதியானவை, உயிரமானவை, மிரட்டும் தோற்றம் உடையவை, உலகின் பெரிய மரங்கள் என்றும் பெருமை உடையவை, மரங்கள் அழுகாக, கட்டு மானப் பணிகளுக்கு உதவாது, இதன் வேர் அமைப்பு பலவ்ன மானவை.  முரங்கள் கீழே சாய்ந்துவிட்டால் அம்புட்டுதான்.  குhரியம் முடிஞ்சது.  பொல பொலாதான் ! உண்மையாக வடிவேல் டயலாக் இதற்கு அளவெடுத்தத் தைத்த சட்டை மாதிரி அப்படிப் பொருந்தும்.  பாடி ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்ட் வீக்.


என்ன செய்யலாம் என யோசித்தார்கள்.  கையும் வலிக்காமல் கல்லுக்கும் நோகாமல் ஒரு காரியம் செய்தார்கள், புத்திசாலித்தனமான காரியம் அது.  அந்த மரத்தைக் குடைந்து வழி செய்து, அந்த சாலையே அந்த மரத்திற்குள் செல்லுமாறு செய்து விட்டார்கள்.  விழுந்த மரம் விழுந்த மேனிக்குக்குக் கிடக்கிறது.  தேசியப் பூங்காவில் கார்கள் அத்தனையும் அதுவழியாக வந்து போகின்றன.  இந்த மரத்தில் 1938 ம் ஆண்டே இந்த டன்னல் சாலையை (TUNNEL ROAD) அமைத்தார்கள். 

உலகின் உயர்ந்த பெரியமரம் என்றும் சாதனையை நிகழ்த்தியபடி உயிருடன் நின்றிருக்கும் மரம் (TALLEST AND LARGEST TREE OF THE WORLD)


உலகிலேயே உயிருடன் இருக்கும் மரங்களில் உயரமான மரம் என்றும் பெருமைக்குரிய மரமும் செக்கோயா செம்மரம்தான்.  அந்த மரம் செக்கோயா தேசியப் பூங்காவில்இருக்கிறது. அதன் பெயர் ஜெனரல் ஷெர்மான் மரம் (THE GENERAL SHERMAN TREE).  இந்த மரத்தின் முன்னால் நாங்கள் போட்டோவும் எடுத்தக் கொண்டோம்.  இன்று அதன் உயரம் 275 அடி.  அந்த மரத்தின் விட்டம் 36 அடி.  யோசித்துப் பாருங்கள்.  அந்த செக்கோயா மரங்களின் ஊடாக நடக்கும்போது புதிய உலகத்தில் இருப்பது மாதிரி இருந்தது.  அதனை வார்த்தைகளில் எழுத முடியாது.



இந்த ஜெனரல் ஷெர்மான் மரத்துக்கு அருகிலும் ஒரு பிரம்மாண்டமான மரம் விழுந்து கிடக்கிறது.  ஆனால் அது சாலையில் இல்லை.  மரங்களுக்கு ஊடாக ஒரு மூலையீல கிடக்கிறது.  அந்த மரத்திலும் குடைந்து ஒரு வாசலை உருவாக்கி இருக்கிறார்கள்.  ஒரு பக்கம் நுழைந்து அடுத்த பக்கம் செல்லலாம்.  அதன் வேர்ப்பகுதியும் அங்கே கிடக்கிறது.




















TO READ  FURTHER MORE

       1.            பாட்டில் மரம் ஏலியன்தீவின் அதிசய மரம் - WONDER TREE OF THE ALIEN ISLAND –  Date of Posting: 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/blog-post7.html
       2.            மங்கிபஸ்சில் -  தென் அமெரிக்காவின்  அதிசய   மரம் -  MONKEY PUZZLE - TREE OF SOUTH AMERICA - Date of Posting: 06.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/monkey-puzzle-tree-of-south-america.html
       3.            டிரேவலர்ஸ் பாம் - ஒரு வித்தியாசமான அழகுமரம்  - TRAVELLER’S PALM -  IS A DIFFERENTLY  BEAUTIFUL TREE - Date of Posting: 03.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/travellers-palm-is-differently.html
       4.            செக்கோயா  உலகின்  உயரமான    மரம் -  KING SEQUOIA  WORLDS' TALLEST TREE Date of Posting: 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html
       5.            ஒசேஜ் ஆரஞ்சு    மண்ணரிப்பைத் தடுக்க    ரூஸ்வெல்ட்   அதிகம் நட்ட மரம்   -    OSAGE ORANGE     PET TREE OF ROOSEVELT - Date of Posting: 08.01.2020 - https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html
       6.            மரூலா மரம் - ஆப்ரிக்காவின்  சிறுதொழில் மரம்  - MARULA - ENTREPRENEUR  FRIENDLY AFRICAN  TREE - Date of Posting: 25.12.2019 https://vivasayapanchangam.blogspot.com/2019/12/marula-entrepreneur-friendly-african.html
       7.            பேவோபாப் -  கல்லறையாகக்கூட    பயன்பட்ட மரம்    BAO BAB -  ONCE USED CEMETRY - Date of Posting: 07.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/bao-bab-once-used-cemetry.html
       8.            டிராகன் பிளட் ட்ரீ -  சாக்ரடிஸ் பயன்படுத்திய  மருத்துவ மரம் -   DRAGON BLOOD RARE HERB USED BY SOCRATES - Date of Posting: 08.02.2018 https://vivasayapanchangam.blogspot.com/2018/02/dragon-blood-rare-herb-used-by-socrates.html
       9.            கலா பேஷ் - உலகு துறந்தோருக்கு உணவு பாத்திரம் தரும் மரம்   CALABASH  - BLESS BOWELS TO SAINTS - Date of Posting: 29.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/calabash-bless-bowels-to-saints.html
   10.            முருங்கை -   பலவீனமான நாடுகளுக்கு ஏற்ற ஊட்டமிகு மரம்     MURUNGAI -   GOOD FOR MAL- NUTRITIONED BABIES  - Date of Posting: 17.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/murungai-good-for-mal-nutritioned-babies.html
   11.            வேப்ப மரம்  கிராமத்து  மருந்து கடை -   VEPPA MARAM -  VILLAGE PHARMACY  OF THE  WORLD - Date of Posting: 08.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/veppa-maram-village-pharmacy-of-world.html
   12.            பாலைவன மக்களின்    வாழ்வாதாரம்   -   VANNI LIVELIHOOD  TREE OF   DESERT PEOPLE - Date of Posting: 29.07.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/07/vanni-livelihood-tree-of-desert-people.html
   13.            அணுக்கதிர்களை தடுக்கும் ஒரே மரம்        SENCHANTHANAM ONLY CAN BLOCK ATOMIC RAYS - Date of Posting: 28.07.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/07/senchanthanam-only-can-block-atomic-rays.html


No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...