Tuesday, January 21, 2020

காட்டலரி பல நோய்களை கட்டுப்படுத்தும் சிறந்த மூலிகைமரம் - KATTALARY HERB CURE MANY DISEASES





காட்டலரி
பல நோய்களை 
கட்டுப்படுத்தும் 
சிறந்த
மூலிகைமரம் 




KATTALARY HERB  CURE MANY DISEASES

 




 தேஞானசூரிய பகவான்,போன்: 91-8526195370EMAIL: gsbahavan@gmail.com







தாவரவியல் பெயர்: ஹோமோனாயா ரிப்பேரியா (HOMONOIA RIPARIA)தாவரக் குடும்பம்: ஈப்போர்பியேசி (EUPHORBIACEAE)தாயகம்: இந்தியா கம்போடியா, சைனா (INDIA, COMBODIA, CHINA)பொதுப் பெயர்கள்: வில்லோ லீவ்டு வாட்டர் குரோட்டன் (WILLOW - LEAVED WATER CROTON)


பிற மொழிப் பெயர்கள்:
1.     தமிழ்: காட்டலரி (KATTALARI)2.     இந்தி: ஷெர்னி (SHERNI)3.     மலையாளம்: நீர்வஞ்சி, புழவஞ்சி (NEER VANCHI, PUZHA VANCHI)4.     மராத்தி: ரான் கடுணர், ஷெர்னி (RAAN KADNER, SHERNI)5.     தெலுங்கு: அடவி கண்ணேரு (ADAVI GANNERU)6.     கன்னடா: ஹோலி நாகி, நீரு கனிகலு (HOLE NAGE, NIRU KANIGALU)7.     ஒரியா: தோத்தோரி (THOTHORI)8.     அசாமீஸ்: ஹில் கடம் (HIL KADAM)9.     சமஸ்கிருதம்: வெட்டசா (JALA VETASA)

அரளி என்பதும் அலரி என்பதும் ஒன்றா? வேறுவேறா? நிறைய பேருக்கு இந்தச் சந்தேகம் இருக்கும்.  எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது.  இரண்டும் ஒன்றுதான் என்றுதான் நானும் உறுதியாக நம்பினேன்.  ஆனால் காட்டலரி பற்றிய தகவல்களைத் திரட்டும்போது, அதுபற்றி எனக்கு சந்தேகம் எழுந்தது.  காரணம், அரளி செடிகள் அத்தனையும், அப்போசயனேசி (APOCYANACEAE) குடும்பத்தைச் சேர்ந்தவை.  ஆனால் இந்தக் காட்டலரி ஈப்போர்பியேசி (EUPHORBIACEAE) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

என்னிடம் புராதனமான கழகத் தமிழ் கையகராதி ஒன்று உள்ளது.  அதில் பார்த்தேன்.  அதுப்படி அரளியும் அலரியும் ஒன்றுதான்.  சரி காட்டலரி இருக்கிறதா என்றும் பயந்தேன்.  காட்டெருமை உள்ளது.  காட்டேரி உள்ளது.  காட்டலரி இல்லை.


அதனால் நாம் அரளி என்பதும் அலரி என்பதும் வெவ்வேறு செடிகள் என்று புரிந்து கொள்ளுவோம்.  ஆனால் இதன் இலைகள் அதேமாதிரி.  நீளநீளமான இலைகள்.  இலை நுனி கூர்மையானவை.  இலைகளின் மேற்புறம் பளிச் சென்ற பச்சை நிறம்.  அரளி இலையின் அடிப்புறம் கொஞ்சம் வெளிர் நிறமாக இருக்கும்.  இதில் வெளிர் பச்சை இல்லை.  வேறு நிறம்.



பரவியுள்ள இடங்கள் (DISTRIBUTION IN SOUTH ASIA & SOUTH EAST ASIA)


நீர் நிலைகளில் குறிப்பாக ஆறுகளின் அருகாமையில் வளரும் சிறுமரம் அல்லது பெருஞ்செடி.  இதனை மாங்குரோவ் இனம் என்றும் சொல்லுகிறார்கள்.  தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த காட்டலரி அதிகமாகக் காணப்படுகிறது.  கம்போடியா, சைனா, இந்தோனேசியா, லாவோஸ், பப்புவா நியூகினியா, பிலிப்பைன்ஸ், ஸ்ரீலங்கா, டைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் அடங்கும்.


பாலியல் நோய்களை குணப்படுத்தும் (CAN CURE SEXUAL DISEASES AND KIDNEY STONES)


அரளிச் செடிகளைப்போல இதனையும் உடல் உபாதைகளுக்கு உரிய மருந்தாகப் பயன்படுத்தலாம்.  இதன் வேர்களிலிருந்து தயாரிக்கும் வேர்க்கஷாயத்தைக் குடித்தால் மலச்சிக்கலை குணப்படுத்தும்.  இது பலமிளக்கியாக செயல்படும்.  சிலருக்கு சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருக்கும்.  அதற்கும் இந்த வேர்க்கஷாயத்தை மருந்தாகக் கொடுக்கலாம்.  இது மூல நோயையும் குணப்படுத்தும்.  சிறுநீர்ப்பைகளில் கற்கள் உருவாவது என்பது சாதாரணமாக வரும் நோயாகிவிட்டது.  அதனையும் இது கட்டுப்படுத்தும் அதுபோல் பாலியில் நோயான மேகவெட்டை (GONORRHOEA) நோயை குணப்படுத்தலாம்.  அதுமட்டும் இல்லாமல் மிகவும் தீவிரமான பால்வினை நோய் சிபிலிஸ் க் (SIPHILIS) கூட கட்டுப்படுத்தும் சக்தி கொண்ட அற்புதமான மூலிகைமரம் இந்த காட்டலரி.


 மலேரியா” மற்றும் தோல் நோய்களையம்   குணப்படுத்தும் (CURES MALARIA AND SKIN DISEASES TOO)


இதன் மரக் கட்டைகளிலிருந்து கஷாயம் தயாரித்தும் குடிக்க மலேரியாக் காய்ச்சல் குணமாகும்.  உடலில் ஏற்படும் ஸ்கேபிஸ் என்று சொல்லும் சொறி சிரங்கு போன்ற தோல் நோய்களையும் அது குணப்படுத்தும்.
மண்ணரிப்பை கட்டுப்படுத்தும் (SOIL CONSERVATION)

ஆற்றங்கரைகள், மற்றும் ஒடைக்கரைகளில் மண்அரிப்பைத் தடுக்க காட்டலரியைப் பயன்படுத்தலாம்.  காட்டலரி மரங்களை ஒரு முறை நட்டுவிட்டால், அவை புதர் போல மண்டிவிடும்.  ஏறத்தாழ இவையும், அரளிச் செடிகள் போலவே வளரும், ஆழமான மற்றும் பரந்துபட்ட வேர் அமைப்பினை உருவாக்கிக் கொள்ளும். ஒருமுறை கன்றுகள் வளர்ந்துவிட்டால், அவ்வளவு சுலபமாக அவை மடிந்து போகாது.  ஆனால் இதற்கு ஈரச் செழிப்புடைய நிலவாகு அவசியம் வேண்டும்.  இந்த அடிப்படைப் பண்புகளினால், ஜாவா மற்றும் சுமத்திரா ஆகிய நாடுகளில் நீர்தாரங்களின் கரைகளைப் பாதுகாக்க காட்டலரியைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

எப்படிப்பட்ட சூழலில் வளரும்? (SUITABLE ENVIRONMENT)


மணல், கிரேனைட் கற்கள், மற்றும் சுண்ணாம்புக்கற்கள்  நிறைந்த மண்கண்டம், எரிமலையினால் வெளித்தள்ளப்பட்ட மண்கண்டம் என அனைத்திலும் நன்றாக வளரும்.  வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கூட சாகாது.  ஆச்சரியமான ஒரு செய்தி நம்புவதற்குக் கூட கடினமாக உள்ளது.  வெள்ள நீரில் 9 மாதங்கள் வரை மூழ்கி இருந்தால், அது வற்றிய பின்னால், செடிகள் சாகாது என்று சொல்லுகிறார்கள்.  அதுபோல இதன் விதைகளும் அபூர்வமான சத்தி படைத்தவை.  வெள்ள நீரால் பல இடங்களுக்கும் இதன் விதைகள் எடுத்து செல்லப்படுகின்றன.  இந்த விதைகள் கடலை சென்றடைந்தால் கூட அதன் கரைகளில், உள்ள உபரியான உப்பினை சட்டை செய்யாமல் முளைத்து எழும் என்று சொல்லுகிறார்கள்.  அந்த அளவிற்கு இதன் விதைகள் கடினமானவை.  நீண்ட நாட்களுக்கு அதன் முளைப்புத் தன்மை நீடித்து இருக்கும்.

இதர பயன்கள் (OTHER USES)


அழகு மரங்களாக, மருத்துவப் பயன்தரும் மரங்களாக, ஆற்றங்கரைகளில், மண் அரிப்பைத் தடுத்துக் கரைகளை பலப்படுத்தும் மரங்களாக பயன்படுவதோடு வேறுபல பயன்களையும் தருகிறது இந்த காட்டலரி மரங்கள். 

இந்த மரங்கள் தனது எல்லா பாகங்களிலும் டேனின் சத்தினை அதிகம் வைத்துள்ளது.  இதன் விதை கொழுப்பு எண்ணெய் (FATTY OIL) எடுக்கலாம்.  இதன் பட்டைகளில் உறுதிமிக்க கயிறுகள் தயாரிக்கலாம்.  கம்போடியா நாட்டில் கூந்தல் தைலம் தயாரித்துப் பயன்படுத்துகிறார்கள்.  இதன் வேர்ப்பகுதி மரங்களில், கந்த சுத்தி போன்ற கருவிகளுக்கு கைப்பிடிகள் செய்யலாம்.  இதன் கிளைகள், மரங்கள், குச்சிகள் மற்றும் சிம்புகள் அடுப்பெரிக்த அற்புதமான விறகாகின்றன.

கிளைகளை வெட்டி நடலாம்  (STEM CUTTINGS COULD BE USED FOR PLANTING)


இதன் விதைகள், எப்படிப்பட்ட மண்ணிலும், நீரிலும், தாமதமாக விளத்ததால் கூட வளரும் தன்மை உடையது.  விதைகளுக்காகக் கூட காத்திருக்க வேண்டாம்.  இதன் கிளைகளை (STEM CUTTINGS) வெட்டி நட்டு வைத்தால் கூட அழகாக வளரும் இதன் கன்றுகள்.  ஈரச் சூழலில் மட்டும் இருக்கும் இடங்களில் விதைத்தால் போதுமானது.  எவ்விதமான சிரமும் இல்லாமல் சுலபமாக முளைக்கும்.

பளிச் சென்ற சிவப்பு நிற பூக்கள் (BRIGHT RED FLOWERS)


இலைக் கணுக்களில் தோன்றும் ஸ்பைக்ஸ் என்றும் வகையைச் சேர்ந்த பூக்கள்.  பளிச் சென்ற சிவப்பு நிறத்தில் இருக்கும்.  இலைகளை விட பூக்கள் நீளம் குறைவாக இருக்கும்.  எப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஐந்து மாதங்கள் பூக்கும்.

தமிழ்நாட்டில் இந்த மரங்கள் இருக்கும் இடங்கள்(DISTRIBUTION IN TAMILNADU)


கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, கன்னியாகுமரி, தேனி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இந்த காட்டலரி மரங்கள் இருக்கின்றன.  இந்தியாவில் தமிழ்நாடு உட்பட, கேரளா, கர்நாடகா, ஒரிசா, மத்தியப்பிரதேவு;, மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களிலும் பரவியுள்ளன.

குறிப்பு: உங்கள் பகுதியில் காட்டலரி இருந்தால் சொல்லுங்கள்.  புகைப்படம் எடுத்து அனுப்பி வையுங்கள்.  விதை சேகரியுங்கள்.  கன்றுகள் உற்பத்தி செய்யுங்கள்.  நடுவதற்குக் கொடுங்கள்.

FOR FURTHER READINGON RELATED TOPICS


1. காரை மரம்   அனைத்து   மருத்துவ   முறைகளும்   பயன்படுத்தும்   மூலிகை -   KARAI MARAM  HERB  FOR ALL  MEDICAL SYSTEMS – Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/karai-maram-herb-for-all-medical-systems.html

2. புளிச்சக்காய் மரம் உலகம் முழுக்க                                              பிரபலமான  மூலிகை  -  PULICHAKKAI MARAM WORLD RENOWNED HERB– Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/karai-maram-herb-for-all-medical-systems.html

3. மதுக்காரை மரம்   அற்புத ஆயுர்வேத   மூலிகை    MADHUKKARAI    ACCEPTED AYURVEDIC HERB    – Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/madhukkarai-accepted-ayurvedic-herb.html

4. மலைவேம்பு மரம்                                              எல்லா மருத்துவ                                             முறைகளுக்கும்                மருந்தாகும்               மூலிகை  -   MALAIVEMBU MARAM OUTSTANDING  TREE HERB – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/malaivembu-maram-outstanding-tree-herb.html

5. நொச்சி மரம்   பல நோய்   குணப்படுத்தும்   மூலிகை   -   NOCHI MARAM -  MULTISPECIALITY  TREE HERB – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/nochi-maram-multispeciality-tree-herb.html

6. மருத்துவம் பேசும் 21 மரங்கள்     - 21  MEDICINAL TREES   BOOK   – Date of Posting; 03.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html

7. வெள்அத்தி மரம்  சித்தப்பிரமையை  சீராக்கும்  மூலிகை     VELL-ATHI MARAM CURE MENTAL DISORDERS – Date of Posting; 31.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/vell-athi-maram-cure-mental-disorders.html

8. பன்னீர்மரம்  ஒரு  பாலுணர்வுத் தூண்டி  மூலிகை மரம் -  PANNEER MARAM  NATURAL SEX DRIVING HERB – Date of Posting; 26.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/panneer-maram-natural-sex-driving-herb.html
9. மலம்புளுவன்   பாலைவன  மருத்துவ மரம்  MALAMBULUVAN -  MATCHLESS   DESERT  TREE HERB – Date of Posting; 27.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/malambuluvan-matchless-desert-tree-herb.html

10. சேங்கொட்டை - பெண்களுக்கான   கருத்தடை மூலிகை -  SENKOTTAI  SUPREME  FAMILY PLANNING HERB – Date of Posting; 29.12.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/senkottai-supreme-family-planning-herb.html

11. இடலை மூலிகை மரம்  பாம்புக்கடியை  குணப்படுத்தும்     IDALAI MARAM  CURES SNAKE BITES – Date of Posting; 30.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/idalai-maram-cures-snake-bites.html

12. காட்டலரி பல நோய்களை   கட்டுப்படுத்தும்   சிறந்த  மூலிகைமரம்   - KATTALARY HERB  CURE MANY DISEASES – Date of Posting; 21.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/kattalary-herb-cure-many-diseases.html

13. வெட்சி - உடல் பருமனாதல் மற்றும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பூமரம் -  VETCHI - DIABETES AND OBESITY CURING HERB – Date of Posting; 25.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/vetchi-diabetes-and-obesity-curing-herb.html

14. புத்திரன்ஜீவா - குழந்தை பாக்கியம் தரும் மரம் - PUTRAN JIVA – UNISEXUAL  FERTILITY TREE  – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/putran-jiva-unisexual-fertility-tree.html

15. நஞ்சுள் மரம் சிசேரியனிலிருந்து  கர்ப்பிணிப்  பெண்களை  காப்பாற்றும்  மரம் -  NANJUL – SAVE  PREGNANT MOTHERS  – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/nanjul-save-pregnant-mothers.html

16. சூரை  இலந்தை ஒரு  ஆயுர்வேத மருத்துவ மரம்  - SOORAI ILANTHAI – AN AYURVEDIC  MEDICINAL TREE – Date of Posting; 30.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/soorai-ilanthai-ayurvedic-medicinal-tree.html

17. நாட்டு பாதாம்கொட்டை வைரஸ் நோய் நீக்கும்   மருந்து மரம் - NATTU PADHAMKOTTAI  -  IDEAL  TREE HERB  – Date of Posting; 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/nattu-padhamkottai-ideal-tree-herb.html

REFERENCES:1.      WWW.EN.WIKIPEDIA.ORG / HOMONOIA RIPERIA.
2.      WWW.FLOWERS OF INDIA.NET / “WILLOW LEAVED WATER CROTTON”
3.      WWW.TROPICAL.TH E FORNS.INFO/ HOMONOIA RIPARIA.
 


No comments:

A CITY COLLEGE EDUCATE STUDENTS TO CONSERVE RIVERS - ஆறுகள் பாதுகாப்புக் கல்வி நூல் வெளியீடு

  ஊர் கூடி  தேர் இழுக்கலாம்  வாங்க (ஆறும் ஊரும் தமிழ் நாட்டின் நூறு ஆறுகளின் கதை சொல்லும் நூலிலிருந்து ஒரு பகுதி)   நான் எழுதிய “ஆறும்...