Saturday, January 18, 2020

மருந்து தயரிக்க உதவும் மலை மரம் கணைப்பிரண்டை - KANAIPPIRANDAI EASTERN GHATS HERB




KANAIPPIRANDAI

EASTERN GHATS


HERB




கணைப்பிரண்டை

(KANAIPPIRANDAI)



 கிழக்குத் தொடர்ச்சி    மலையின் மரம்


தாவரவியல் பெயர்: அல்சியோடேப்னி செமிகார்ப்பிபோலியா(ALSEODAPHNE  SEMECARPIFOLIA)தாவரக் குடும்பம் பெயர்: லாரேசி (LAURACEAE)
தாயகம்: லெஸ்டன் காட்ஸ், ஸ்ரீலங்கா (EASTERN GHATS & SRILANKA)

 பொதுப் பெயர்:

பிற மொழிப் பெயர்கள்:1.     தமிழ்: கணைப் பிரண்டை (KANAIPPIRANDAI)
2.     மலையாளம்: மூலக் நாரி (MOOLAK NAARI)
3.     தெலுங்கு: நாராமாமிடி (NAARA MAMIDI)4.     கன்னடா: நெல்தேறி (NELTHARE)5.     சிங்களம்: லேவராணி (LEWARANI)6.     மராத்தி: புட்குஸ் (PHUDGUS)


மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் ஸ்ரீலங்காவில், மறைந்து வருகின்ற மரம் என்று அறிவித்திருக்கிறார்கள்.  கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் மரம் கூட.

பசுமை மாறாத பெரிய மரம்: 18 மீட்டர் அல்லது 50 முதல் 60 அடி உயரம் வளரும்,

இலை உதிரும் மரங்கள் மற்றும் இலையுதிர மரங்கள் இருக்கும் காடுகளில் இந்த மரங்கள் இருக்கின்றன.  இந்த காடுகள், கடல் மட்டத்திற்கு மேல் 800 மீட்டர் உயரம் வரை இந்த மரங்கள் வளரும்.

தமிழில் கணைப்பிரண்டை என்கிறார்கள்.  எதனால் இந்த மரத்திற்கு இந்தப் பெயர்கள் வைத்தார்கள் என்று இன்னமும் துழவிக் கொண்டிருக்கிறேன்.  எதுவும் சிக்கவில்லை.  கணைப்பிரண்டை என்பதோடு கரிஞ்சிக்கடா, மஞ்சாயா, முணமரம், தும்பாரா என்ற தமிழ்ப்பெயர்களிலும் இதனை அழைக்கிறார்கள்.

கேரளாவில் பரவியிருக்கும் இடங்கள் 
(DISTRIBUTION IN KERALA)


இந்த மரங்கள் கேரளா மாநிலத்தில் அதிகம் உள்ளன.  காசர்கோடு, பத்தனம்திட்டா, கோழிக்கோடு, மலப்புறம், விநாடு, இடுக்கி, ஆகிய மாவட்டங்களில் இந்த மரங்கள் பரவியுள்ளன.  அது மட்டுமில்லாமல் பனப்புழா, மஞ்சேரி, சொக்கம்பட்டி, மலைப்பகுதிகள், எழிமலா, தாளிப்பரம்பா, முன்ளேரியா ஆகிய இடங்களிலும் இந்த மரங்கள் காணப்படுகின்றன.
எதிர்காலத்தில் மருந்துகள் செய்ய பயன்படலாம் (BIOLOGICALLY IMPORTANT TREE).

இதன் இலைகளில், உள்ள தாவர சாங்கள் (PHYTO CHEMICAL CONSTITUENTS) குறித்த ஆய்வுகள் செய்யப்பட்டன.  இதில் இருக்கும், ஆல்கலாய்ட்ஸ், பினால்கள் மருந்துகள் செய்யப் பயன்படும் எனத்தெரிகிறது ஆனால் இது குறித்த இன்னும் கூடுதலான ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

இந்த மரங்களை பாதுகாக்கவும் மேம் படுத்தவும் வேண்டும். (EFFORTS TO PROTECT  THE TREES)


இந்த மரங்களின் இலைகள், மற்றும் பட்டைகள் பரம்பரியமாக ஆடுமாடுகளுக்கு வரும் நோய்களை கட்டுப்படுத்துவதற்காகப் பயன்படுத்தி வந்துள்ளார்கள்.  அத்துடன் இதிலிருந்து முக்கிய எண்ணெய் (ESSENTIAL OIL) எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது என கண்டுள்ளார்கள்.  அதற்கும் இன்னும் கூடுதலான ஆராய்ச்சிகளும் ஆய்வுகளும் தேவை என்கிறார்கள், வனத்துறை நிபுணர்கள்.

மரங்களில் ஒட்டுப்பலகைகள் செய்யலாம்  
(PLYWOODS COULD BE MADE)


இந்த மரத்தை எப்படி எல்லாம் உபயோகப்படுத்தலாம் என்ற தகவல்கள் அதிகம் இல்லை.  ஆனால் இதில் ஒட்டுப்பலகைகள், தேயிலைத்தூள் பேக் செய்யும் பெட்டிகள் போன்றவற்றைச் செய்யலாம்.

REFERENCES

o   WWW.BOOKS.GOOGLE.COM/FLORISTIC PLANTS OF THE WORLDo   WWW.SEMANTIC SCHOLAR.ORG/ESSENTIAL OIL CONSTITUENTS OF ALSEODAFNE SEMECARPIFOLIA
o   WWW.FLOWERS OF INDIA.NET / ALSEODAPHNE SEMECARPIFOLIA.
o   WWW.INDIA BIODIVERSITY.ORG/ALSEODAPHNE SEMECARPIFOLIA.
o   WWW.WIKIWAND.COM/ALSEODAPHNE SEMECARPIFOLIA


No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...