ACER PALMATUM |
ஜப்பானிய மேப்பிள் -
இலையழகு மரம்
JAPANESE MAPPLE -
DECORATIVE
FOLIAGE TREE
இந்த மரத்தின் இலைகள், கிளைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி சைனாவில் பலவிதமான பரம்பரிய மருந்துகளைத் தயாரித்து பயன்படுத்துகிறார்கள்.
கோடைப் பருவத்தின் இதன் இலைகள் இளம் பச்சை நிறத்தில் இருக்கும். இதனை சம்மர் போலியேஜ் (SUMMER FOLIAGE) என்கிறார்கள். இலையுதிர் பருவத்தில் (AUTUMN SEASON) இந்த இலைகள் முதலில் மஞ்சளாக மாறும். பின்னர் ஆரஞ்சு நிறமாக, அடுத்து சிவப்பு மற்றும் ஊதா நிறமாக மாறும். பின்னர்தான் இவை உதிர ஆரம்பிக்கும்.
தே.
ஞானசூரிய பகவான்,
போன்:
+ 918526195370,
Email:
gsbahavan@gmail.com
தாவரவியல் பெயர்: சேர் பால்மேட்டம் (JAPANESE MAPPLE TREE) தாவரக் குடும்பம் பெயர்: சேப்பிண்டேசி (SAPINDACEAE) தாயகம்: ஐப்பான், சைனா, கொரியா, கிழக்கு மங்கோலியா, தென்கிழக்கு ரஷ்யா (JAPAN, CHINA, KOREA, EAST MANGOLIA, SOUTH EAST RUSSIA) பொதுப் பெயர்கள்: பால்மேட் மேப்பிள், ஐப்பானிஸ் மேப்பிள், ஸ்மூத் ஐப்பானிஸ் மேப்பிள் (PALMATE MAPLE, JAPANESE MAPLE, SMOOTH JAPANESE MAPLE)
மேப்பிள்
மரங்கள் “ஏசர்” என்றும் தாவர
இனத்தைச் சேர்ந்தது. இந்த இனத்தில்
மொத்தம் 128 வகையான தாவரங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஆசிய நாடுகளை சொந்த
மண்ணாகக் கொண்டவை. மீதமுள்ளவை, ஐரோப்பா, வடக்கு ஆப்ரிக்கா, மற்றும் வட
அமெரிக்காவைச் சேர்ந்தவை.
மேப்பிள் இலைகள்
கவர்ச்சிகரமாவை.
கைவிரல்கள் போன்ற அமைப்புடைய
இதன் இலைகள் இலையுதிர் பருவத்திற்கு முன்னால், மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, காவிநிறம் என பல
நிறங்கள் மாறி வர்ணஜாலம் காட்டும்.
நிறம் மாறும் இதன் இலைகளுக்காகவே உலகம் முழுக்க இந்த மரங்களை விரும்பி
வளர்க்கிறார்கள்.
“ஏசர் பால்மேட்டம்” என்றும் இந்தவகை மேப்பிள் மரங்கள் பலநூறு ஆண்டுகளாக
வளர்த்து வருகிறார்கள். குறிப்பாக குளிர்ப்பிரதேசங்களில். ஆனால் உலகம் முழுவதுமே 1800 ம் ஆண்டு முதல் இந்த
மரங்களை வளர்க்கிறார்கள்.
புதிய மேப்பிள் வகைகள்
ஐப்பான், கொரியா, சைனா ஆகிய இடங்களில்
உள்ள மேப்பிள் மரங்களைப் பயன்படுத்தி, தோட்டக்கலை நிபுணர்கள் பல புதிய ரகங்களை உருவாக்கி
உள்ளார்கள். இவற்றை ‘போன்சாய்” முறையில் வளர்ப்பதில்
ஆர்வம் காட்கிறார்கள்.
முக்கியமாக
இந்த மேப்பிள் வகையில் சிவப்பு இலை ரகம் ஒன்றிறன உருவாக்கி இருக்கிறார்கள். அந்த சிவப்பு வகை ஐரோப்பிய நாடுகளிலும், வட அமெரிக்காவிலும்
மிகவும் பிரபலமாக உள்ளது. தங்கள்
வீடுகளில், மற்றும் அலுவலக, தோட்டங்களில் இந்த
மரங்களை விரும்பி வளர்க்கிறார்கள்.
புதுப்புது கன்றுகள் உற்பத்தி
இலைகளின்
நிறம், அளவு, வடிவம், இவற்றை வைத்து இந்த மேப்பிள் வகையில் மட்டும்
ஆயிரக்கணக்கான மரவகைகளை உருவாக்கி உள்ளனர், என்பது ஆச்சிரியமான
செய்தி. மொட்டுக்கட்டுதல், ஒட்டுக்கட்டுதல், புதியன்போடுதல், திசுவளர்ப்புமுறை, மற்றும்
கிளைத்துண்டுகள் என பலமுறைகளில் புதுப்புது கன்றுகளை உற்பத்தி செய்து விற்பனை
செய்கிறார்கள்.
அட்ரோபர்புரியம், பிளட்குட், டிசெக்டம்,
ஃபிலிகிரி, லேஸ் லீஃப் (ATROPURPUREUM, BLOOD GOOD,
DISSECTUM, FILIGIRI, LACE LEAF) ஆகியவை, ‘ஏசர் பால்மேட்டம்” வகையில் மிகவும் அதிக அளவில் விற்பனை ஆகும் வகைகள்.
இலைகள்தான்
இந்த மரத்தின் கவர்ச்சிகரமான அம்சம்.
கோடைப் பருவத்தின் இதன் இலைகள் இளம் பச்சை நிறத்தில் இருக்கும். இதனை சம்மர் போலியேஜ் (SUMMER
FOLIAGE) என்கிறார்கள். இலையுதிர் பருவத்தில் (AUTUMN SEASON) இந்த இலைகள் முதலில்
மஞ்சளாக மாறும். பின்னர் ஆரஞ்சு நிறமாக, அடுத்து சிவப்பு
மற்றும் ஊதா நிறமாக மாறும். பின்னர்தான்
இவை உதிர ஆரம்பிக்கும். இதனை ஆட்டம்
போலியேஜ் (AUTUMN
FOLIAGE) என்று பெயர்.
மே
– ஜூன் மாதங்களில்
பூக்கும். பூக்கள் சிறியதாக
இருக்கும். சிவப்பு மற்றும் ஊதா நிறமாக
இருக்கும். இதன் பழங்களை ‘சமராஸ்’ என்கிறார்கள். சமராஸ் செம்பசுமை மற்றும் பசுமை நிறமாக இருக்கும். இந்த பழங்களில் ஒன்று அல்லது இரண்டு கொட்டைகள்
இருக்கும். அத்துடன் அதற்கு இரண்டு
சிறகுகள் இருக்கும். இந்தப் பழங்களில்
இருக்கும் சிறகுககள், இந்த விதைகள் பரவுவதற்கு உதவியாக இருக்கின்றன.
சைனாவின் பாரம்பரிய மருந்து
இந்த
மரங்களுக்கு அழகு தருவதில் இதன் கிளைகள்,
குச்சிகள். சிம்புகள் மற்றும்; பட்டைகளும் கூட
முக்கிய பங்காற்றுகின்றன. இதன் சிம்புகள், பசுமையாக, சிவப்பாக மற்றும்
பளபளப்பாக இருக்கும். இதன் முக்கியக்
கிளைகள் மற்றும் அடிமரத்தின் பட்டைகள் சாம்பல் நிறமாக இருக்கும்.
இந்த மரத்தின் இலைகள், கிளைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி சைனாவில் பலவிதமான பரம்பரிய மருந்துகளைத் தயாரித்து பயன்படுத்துகிறார்கள்.
இந்த
மரங்களுக்கு முழுமையான சூரிய ஒளி தேவை.
ஒரளவு நிழல் இருப்பது நல்லது. மண்
ஈரப்பசை உள்ளதாக இருக்க வேண்டும். லேசான அமிலத்தன்மையும் அவசியம்.
அத்துடன் நல்ல வடிகால் வசதியும், அபரிதமான
அங்ககச் சத்தும் மண்ணில் இருக்க வேண்டும்.
அதிகமான வெப்பம், மற்றும் வறட்சி இதற்கு ஆகாது. வேகமாகக் காற்று வீசும் பகுதிகளை தவிர்த்தல்
அவசியம்.
No comments:
Post a Comment