Tuesday, January 7, 2020

உங்கள் வீட்டை மாசில்லாமல் மாற்றுவது எப்படி HOW TO CONTROL POLLUTION AT HOME













HOW TO CONTROL
POLLUTION AT HOME ?
– N A S A

நாசா விண்வெளி 
ஆய்வு நிறுவனத்தின் 
சிபாரிசு 

தே. ஞானசூரிய பகவான்,போன்: + 91 8526195370Email: gsbahavan@gmail.com

  
வீடுகளின்  முன்வாசல், பின்வாசல், 
ஜன்னல் முன்புறம், ஜன்னல் பின்புறம்,  
நடை, தாழ்வாரம், முன் கதவு ஓரம், 
பின் கதவு ஓரம், வரவேற்பறை, 
படுக்கை அறை, ஆகிய அனைத்து 
இடங்களிலும் இந்த செடிகளை 
தேவைக்கேற்ப தரையிலும், தொட்டிகளிலும், 
சட்டிகளிலும், பெட்டிகளிலும் இண்டோர் 
செடிகளை நட்டு வளர்த்து அங்கு 
நிறைந்திருக்கும் மாசு, தூசு, மற்றும் 
நச்சு வாயுக்களை நீக்க முடியும். 
ஏன் குறட்டை விடாமல் கூட தூங்கலாம்.
வீட்டிற்கு உள்ளே மாசு குறைவாக
இருக்கும், வீட்டிற்கு வெளீயே அதிகம் இருக்கும்  
என்பது  நாம் எல்லோரும் நினைப்பது.
ஆனால் வீட்டிற்கு ள்ளேதான் தான் மாசு மற்றும்
நச்சு வாயுக்கள் ஆகியவை அதிகமாக
இருக்கிறது என்பதுதான்  உண்மை என்று
சொல்லுகிறார்கள் அறிவியல் வல்லுனர்கள்.
என்ன ஆச்சரியம் பாருங்கள்.  

அலுவலகங்களுக்கு உள்ளே,
கட்டிடங்களுக்கு உள்ளே, பள்ளிகள் மற்றும்
கல்லூரிகளுக்கு உள்ளேதான் மாசு அதிகம்
உள்ளது. நமது உடல் ஆரோக்கியத்திற்கு
தீமை தரக்கூடியதும், நோய் பரவுவதற்கு
காரணமான  மாசு மற்றும் நச்சு வாயுக்கள்
அதிகம் இருப்பது உள்ளேதான்.
24 மணிநேரம் கொண்ட ஒரு நாளில்
கிட்டத்தட்ட 80 முதல் 90 சதவீதம்
நேரத்தை நாம் ஏதாவது ஒரு
கட்டிடத்துக்குள்தான் செலவிடுகிறோம்.

அதனால் பெரும்பாலும் வீடுகள் மற்றும்  
கட்டிடங்களின், உட்பகுதிகளும்தான்  
நமது ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன.
இதனை குறைக்க அல்லது தடுக்க
ண்டோர் பிளான்ட்ஸ் என்று
சொல்லும்படியான வீட்டிற்குள்ளே அல்லது
கட்டிடத்திற்குள்ளே செடிகளை
தொட்டிச் செடிகளாக வளர்க்கலாம். இது போல
வீட்டிற்குள்ளேயே என்னென்ன செடிகளை
வளர்க்கலாம் என்று அமெரிக்காவின்
நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
ஒரு ஆய்வினை செய்தது.


அந்த ஆராய்ச்சியின் பயனாக பல செடிகளை
சிபாரிசு செய்தது. அவற்றில் சிலவற்றை
இப்போது பார்க்கலாம்.



1. மணி பிளான்ட்

(EPIPREMNUM AUREUM)


  
EPIPREMNUM AUREUM












இதனுடைய தாவரவியல் பெயர்
எப்பிரெம்ம் ஆரியம் என்பது அதனுடைய
தாவர்வியல்பெயர். எல்லோருக்கும் தெரிந்த
அழகான செடி இது.  இந்த செடியை
வளர்த்தால் அதிர்ஷ்டம் வரும்.
நல்ல காரியங்கள் நடக்கும். பணம் சேரும்.
அதனால்தான் இதற்கு மணி பிளாண்ட்
என்று சொன்னார்கள். தொங்கு தோட்டத்திற்கு
ஏற்ற கொடி. தென்னை போன்ற உயரமாக வளரும்
மரங்களில் ஏற்றி விடலாம். தண்ணீர் வசதிக்கு ஏற்ப
இதன் இலையின் அளவு வேறுபடும். பெரிதாய் வளர்ந்த
தலை வாழை இலைகளைப் போலகூட
பயன்படுத்தலாம். இந்த செடிகளை வீட்டில்
வைப்பதன் மூலம் சைலின், பென்சீன்,
ஃபார்மால்டிஹைடு, டிரைகுளோரோ
எத்திலீன் ஆகியவற்றால் ஏற்படும் நச்சுக்களை நீக்கும்.


2. சோற்றுக்கற்றாழை (ALOE VERA)




ALOE VERA













அலோ வேரா என்பது இதனுடைய
தாவரவியல் பெயர். இதற்கு அதிகம் தண்ணீர்
ஊற்ற வேண்டாம். மிகவும் குறைவான
வெளிச்சத்தில் கூட வளரும். மாசுவினால்
ஏற்படும் அதிகமான நச்சு பொருட்களை
உறிஞ்சி நீக்கும் சக்தி படைத்தது. அது மட்டுமல்ல
உங்கள் வீட்டில் அதிக நச்சுக்கள் இருந்தால்
அதன் இலைகளில் காவி நிற புள்ளிகள் தோன்றும்.
குறிப்பாக இதன் மூலம் பார்மால்டிஹைடினால்
ஏற்படும்  நச்சினை நீக்கலாம்.

3. துலுக்க சாமந்தி (CHRYSANTHEMUM INDICUM)


CHRYSANTHEMUM INDICUM


















இதனை ஆங்கிலத்தில் கிரைசாந்திமம் என்று
சொல்லுவார்கள். நமக்கு பழக்கமான
செடிகள் இவை. சாமந்தி மற்றும் துலுக்க
சாமந்தி பூச்செடிகள். காலங்காலமாகப்
பயன்படுத்தி வரும் அழகான தோட்டச்
செடிகள். கொஞ்சம் அதிகம் தண்ணீர்
தேவைப்படும். கொஞ்சம் தட்டுப்பாடு
என்றால்கூட சட்டென செடிகள்
வாடிவிடும். இதன் பூக்கள் மஞ்சள் நிறம்,
ஆரஞ்சு நிறமாக இருக்கும். ரத்தச் சிவப்பு
பூக்கள் கூட இப்போது வந்துவிட்டன. வீட்டைச்
சுற்றிலும் தேங்கும் அல்லது சேகரமாகும்
மாசுக்களை வடிகட்டக்கூடியது.

இதனால் அம்மோனியா, பென்சீன்,
ஃபார்மால்டிஹைடு மற்றும் சைலீன்
போன்ற நச்சுப் பொருட்களை
நீக்க இந்த செடிகள் உதவுகின்றன.

4. ரப்பர் செடிகள்: (FICUS ELASTICA)

























ஃபைகஸ் எலாஸ்டிகா என்பது இதன்
தாவரவியல் பெயர். தொட்டிகளில் வளர்க்க
ஏற்ற ரப்பர் மரம். பெரிய மரமாக கூட வளரும்.
இதன் இலைகள் கூட ரப்பரில் செய்ததுபோல
தடிமனாக இருக்கும். பெரிய இலைகள் சுலபத்தில்
வாடாது. அதிக தண்ணீர் தேவைப்படாத செடி.
கடுமையான கோடையில் கூட வாரம்
ஒரு முறை தண்ணீர் கொடுத்தால் போதுமானது.
இந்தச் செடிகளை வளர்ப்பதன் மூலமாக
ஐந்து விதமான நச்சுக்களை நீக்கலாம்.
அதாவது சைலின், பென்சீன், ஃபார்மால்டிஹைடு,
டிரைகுளோரோ எத்திலீன் ஆகியவற்றை
உறிஞ்சும் சக்தி உடையது.

5. அன்னாசிப்பழச்செடிகள் (ANANAS COMOSUS)



ANANAS COMOSUS

















அன்னாசிப்பழச் செடிகள் எந்தவிதமான
நச்சுப் பொருட்களையும் கட்டுப்படுத்தாது.
கவர்ந்து இழுக்காது. ஆனால் ஒலிமாசுவை  
கட்டுபடுத்தும், என்று சொல்லுகிறார்கள்
ஆராய்ச்சியாளர்கள். அது எப்படி என்று
உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
அன்னாசிபழச் செடிகளை வளர்ப்பதன்
மூலம் குறட்டை விடுவதை கட்டுப்படுத்தலாம்
என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மிகவும் குறைவான தண்ணீர் கொடுத்து
இவற்றை வளர்க்க முடியும். இவை
இரவு நேரத்தில் அதிக அளவு ஆக்சிஜனை
வெளியிடும். அங்கு இருக்கும் காற்றின்
தரத்தை மேம்படுத்தும். ஆனால்
இந்தச் செடிகள் அதிகமான
குளிரைத் தாங்காது.

6. பாம்பு செடிகள் (SNAKE PLANT - SANSEVIERIA TRIFASCIATA)


  SANSEVIERIA TRIFASCIATA







பாம்பு செடிகளுக்கு இன்னொரு பெயர்
உண்டு. அது வேடிக்கையான பெயர் மாமியார்
நாக்குச் செடிகள். ஆங்கிலத்தில் இதனை மதர்
இன் லா பிலேண்ட் என்ற பொதுவான பெயரும்
இதற்கு உண்டு. இதுவும் ஒருவகை கற்றாழைதான்.
ஒற்றை இலையாக நீளமாக வளரும். சராசரியாக
ஒரு மீட்டர் உயரம் வளரும். அதிகபட்சமாக இரண்டு
 மீட்டர் கூட வளரும். பலவிதமான பச்சை
நிறங்களில் இதனைப் பார்க்கலாம். இதுவும்
மிகவும் முக்கியமான இண்டோர் பிளாண்ட்.
இது அதிக தண்ணீர் தேவைப்படாத ஒரு செடி.
இதனுடைய தாவரவியல் பெயர்
சான்சிவைரியா டிரைஃபேசியேடா
(SANSEVIERIA TRIFACIATA) அந்த செடியினை
வைப்பதன் மூலமாக பார்மால்டிஹைடு,
பென்சிலின், டிரை குளோரோ எதிலின்
போன்ற நச்சுக்களை நீக்க முடியும்.


7. மூங்கில் பனை (BAMBOO PLANT - CHAMAEDOREA SEIFRIZII)


CHAMAEDOREA SEIFRIZII





















மூங்கில் பனை அல்லது நாணல் பனை
என்று இதனை சொல்லுவார்கள்.
இதனை பேம்பு பிளாண்ட். என்று ஆங்கிலத்தில்
சொல்லுவார்கள். இதனுடைய தாவரவியல்
பெயர் சாமிடோரியா சீய்ஃபிரிசி 
இதனை மூங்கில் பனை அல்லது
நாணல் பனை என்றும் சொல்லுவார்கள்.
ர்சரிகளில் இந்த பெயரை கேட்டால்
இல்லை என்று சொல்லிவிடுவார்கள்.
நர்சரிகளில் பேம்புபாம் அல்லது ரீட்பாம்
என்று கேட்க வேண்டும். இவை சராசரியாக
இரண்டு மூன்று அடிகளில் இருக்கும்.
சிலசமயம் இவை ஐந்து அல்லது ஆறு
அடிகள் கூட வளரும். இதற்கு அதிகமான
தண்ணீர் கொடுக்கக்கூடாது. நேரடியான
வெயில் தேவைப்படாது. ரமான
சூழல் இதற்கு பிடித்தமானது.


No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...