Thursday, January 16, 2020

கூவம் என்று தேம்ஸ் ஆகும் ? - HOW THAMES WAS MADE POLLUTION FREE ?



PEOPLE'S VOLUNTARY CLEANING IN THAMES


கூவம்
என்றுதேம்ஸ்ஆகும் ?


PEOPLE'S VOLUNTARY CLEANING IN THAMES



இந்த மூன்று நதிகரைகளிலும் நான் காலார நடந்திருக்கிறேன்
. இதில் ஒன்று உலகத்தின் முதல் தரமான மாசு அடைந்த ஆறு. இன்னொன்று உலகின் முதல் தரமான மாசில்லாத ஆறு. மூன்றாவது ஆறு இந்த இரண்டு ஆறுகளுக்கும் இன்றும் நகலாக இருக்கும் ஆறு.

உலகத்தின் முதல் தரமான மாசு அடைந்த ஆறு கங்கை நதி.
உலகின் முதல் தரமான மாசில்லாத ஆறு லன்டனில் ஓடும் தேம்ஸ் நதி.
இந்த இரண்டு ஆறுகளுக்கும் இன்றும் நகலாக இருக்கும் ஆறு கூவம் நதி.

நீர் மாசுக்கு நல்ல உதாரணம் நம்முடைய கூவம் ஆறு. இன்னொன்று கங்கை நதி. இதற்கான காரணங்களை விவரமாக சொல்ல வேண்டிய அவசியமில்லை. சென்னை பெருநகரில் உள்ள அனைத்து வீடுகள் தொழிற்சாலைகள் இவை எல்லாவற்றின் கழிவுகள் அத்தனையும் சேகரித்து எடுத்துச்சென்று கடலில் கொண்டு சேர்ப்பது கூவம் நதிதான்.

தமிழ் நாட்டில் 17 பெரிய ஆறுகளும் 99 சிறிய ஆறுகளும் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய சமூகத்தில் ஆறுகள் அனைத்தும் புனிதமானவைகளாக, தெய்வங்களுக்கு சமமாகவே போற்றி வணங்கப் படுகின்றன.

ஆறுகள் அனைத்திலும் மிகவும் புனிதமானது கங்கை நதி என்றுதான் நாம் போற்றுகிறோம். உலகத்திலேயே மிகவும் மாசடைந்த மற்றும் அசுத்தமான நதி என்றால் அது கங்கைதான் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இது ஆச்சர்யமான செய்தியாக இல்லை. கங்கையில் குளிக்கும் யாரும், அதில் ஒரு பிணம் அடித்துக்கொண்டு வந்தால்கூட அதிர்ச்சி அடையக்கூடாதுஎன்று ஒரு நண்பர் சொல்லி இருந்தார்.

ஒரு சமயம் கங்கை செல்லும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தும் நான் அதில் குளிக்காமல் திரும்பி வந்தேன்.

ஒரு காலத்தில் லண்டனில் உள்ள தேம்ஸ் நதிகூ கூவம் மாதிரி கங்கைமாதிரிதான் இருந்த்தாம். ஆனால் அந்த நாட்டுக் காரர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு தேம்ஸ் நதியை சுத்தப்படுத்தினார்களாம். இன்று உலகின் மிகவும் சுத்தமான நதி என்றால் அது தேம்ஸ் நதிதான் என்று சொல்லுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 25000 டன் கழிவுப்பொருட்களை தேம்ஸ் நதியிலிருந்து நீக்குகிறார்களாம்.

1957 ல் லண்டன் நகரில் ஓடும் தேம்ஸ் நதியை உயிரியல் ரீதியாக மாசடைந்த மற்றும் இறந்துபோன ஆறு என அறிவித்தது நேட்சுரல் ஹிஸ்டரி ஆஃப் மியூசியம் (NATURAL HISTORY OF MUSEUM).

இரண்டாவது உலகப்போருக்கு முன்னதாகவே தேம்ஸ் நதியை சுத்தப்படுத்தும் வேலைகள் மும்முரமாக தொடங்கப்பட்டது. தேம்ஸ் ஆற்றங்கரைகளில் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டன.

இந்த சுத்திகரிப்பு மையங்கள் எல்லாம் உலகப்போரின்போது அழிக்கப்பட்டன. அதன் பின்னர் 1950 வாக்கில் புதிய சுத்திகரிப்பு மையங்கள் உருவாகப்பட்டன. 1960 ம்ஆண்டு வாக்கில் தொழிற்சாலைகள் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை விடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இன்று தேம்ஸ் ஆற்றின் கழிவுகளை உலர்த்தி அவை இயற்கை திட உரச் சில்லுகளாக (ORGANIC MANURE PELLETS) மாற்றி விவசாயிகளுக்கு வழங்குகிறார்கள். 1950 ல் ஒரேஒருவகை மீன்கூட இல்லாத தேம்ஸ் நதியில் இன்று 120 வகையான மீன் வகைகள் இருப்பதாக ஆய்வுகள் சொல்லுகின்றன.

சுத்தமான மாசில்லாத தேம்ஸ் நதியை தரிசிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. புது வெள்ளமாக செம்மஞ்சள் நிறமாக லண்டன் நகரத்தை சுற்றி சுற்றி ஒடும் அமைதியான  தேம்ஸ் நதியை காரிலும், பேருந்து பிக்பஸ்ஸிலும் சென்று பார்த்தேன். ஆச்சர்யமான சுத்தத்துடன் தேம்ஸ் நதியை பார்த்தேன்.

ஆக நம்முடைய கங்கையும் கூவமும்கூட நாளை தேம்ஸ் ஆக மாறும் வாய்ப்பு உள்ளது.



No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...