இன்று ஒரு பொங்கல்
குறுஞ்செய்தி
NEWS
TODAY
உங்கள் அனைவருக்கும்
இனிய பொங்கல்
வாழ்த்துக்கள் !
தேன் உற்பத்தி செய்யும் நாணல் -
HONEY PRODUCING REED
தமிழர்
திருநாளை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். இந்த சமயத்தில் கரும்பு தொடர்பான இந்த செய்தியை உங்களுக்கு தருவது எனக்கு மகிழ்ச்சியும் ஆச்சரியமும்
அளிக்கிறது.
கரும்பையும் சர்க்கரையையும் இந்த உலகுக்கு
அறிமுகம் செய்த நாடு இந்தியாதான். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பலவகையான
கரும்பு பயிர்கள் இந்தியாவில் சாகுபடி செய்யப்பட்டன.
நான்காவது
மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் இடைப்பட்ட காலத்தில் கரும்பு
பற்றிய செய்திகள் பரவின. கரும்பினை,
பெர்சிய மற்றும் கிரேக்க நாட்டில் தேனீக்கள் இல்லாமல் தேன்
உற்பத்தி செய்யும் நாணல் என்று அழைத்தார்கள்.
மாசிடோனியாவைச்
சேர்ந்த சிப்பாய்கள் இந்தியாவில் இருக்கும் போது இந்த கரும்புபற்றிய தகவல்களை தெரிந்து கொண்டார்கள். தங்கள் நாட்டிற்கு
திரும்பியபோது தேனீக்கள் இல்லாமல் தேன் உற்பத்தி
செய்யும் நாணல் என்று கருமபினை
அறிமுகம் செய்தார்கள்.
கிறிஸ்து
பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியர்கள்தான் சர்க்கரையை கண்டுபிடித்தார்கள். சக்கரைக்கு ‘கண்டா’ என்று பெயர்
வைத்தார்கள். இதிலிருந்துதான் ‘கேண்டி’ என்ற ஆங்கில
வார்த்தை உருவானதாம். பதினெட்டாம்
நூற்றாண்டுவரை கரும்பு இந்தியாவில் மட்டுமே சாகுபடியானது
பதினெட்டாம்
நூற்றாண்டு வாக்கில் சர்க்கரை பிரபலமானது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சர்க்கரை உலகம் முழுவதும் அறிமுகமானது. ஆனால் இன்று சர்க்கரை என்பது உலகம் முழுவதும் தவிர்க்க முடியாத ஒரு
உணவுப் பொருளாக மாறியுள்ளது.
888888888888888888888888888
No comments:
Post a Comment