அமெரிக்காவில்
பிரபலமாகியிருக்கும்
சைனிஸ்
பிரிஞ்சி
மரம்
சைனிஸ் பிரிஞ்சி மரம் -
நேர்த்தியான
பூமரம்
FRINGE TREE -RAVING BEAUTY
OF CHINA
நேர்த்தியான
பூமரம்
FRINGE TREE -RAVING BEAUTY
தாவரவியல் பெயர்:
சியோனேந்தஸ் ரெட்யூசஸ் (CHIONANTHUS RETUSUS)தாயகம்: சைனா, ஐப்பான், கொரியா, டைவான் (CHINA, JAPAN, KOREA, TAIWAN )
தாவரக்குடும்பம்:
ஒலியேசி (OLEACEAE)
ஒரு அழகு மரத்திற்கான எல்லா பண்புகளையும் பெற்ற மரம். இந்த மரத்தின் சிறப்பு இதன் பூக்கள்.
ஐரேப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வீடுகளிலும், பொது இடங்களிலும் அழகு மரமாகப் பயன்படுத்துகிறார்கள்.
சைனிஸ் பிரிஞ்சி மரம் கிழக்கு ஆசிய
நாடுகளுக்கு சொந்தமான மரம். சைனா, ஐப்பான், கொரியா, மற்றும் தைவான்
நாடுகளுக்கு சொந்தமான மரம்.
இவை காட்டுயிர்களுக்கு உணவாகும். பறவைகள் பழங்களை விரும்பி சாப்பிடும். இதர வன உயிர்களும் சாப்பிடும்.
இதில் குறைபாடு என்ற சொல்லக்கூடிய ஒரு அம்சம் உண்டு. இதன் இலை தழைகளை மான்கள் விரும்பிச் சாப்பிடும் என்பதுதான்.
வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவியிருக்கும் அழகுமரம் (POPULAR ORNAMENTAL TREE IN NORTH AMERICA AND EUROPE)
சைனிஸ் பிரிஞ்சி மரம் ஒரு பிரபலமான அழகு
மரம். செடியாகவும் இல்லாமல் பெரிய மரமாகவும்
இல்லாமல், உள்ள மரம்.
ஒரு அழகு மரத்திற்கான எல்லா பண்புகளையும் பெற்ற மரம். இந்த மரத்தின் சிறப்பு இதன் பூக்கள். ஐரேப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில்
வீடுகளிலும், பொது இடங்களிலும் அழகு மரமாகப்
பயன்படுத்துகிறார்கள்.
மரங்கள் நடுத்தரமானவை
அல்லது சிறிய மரங்கள்
(SMALL AND MEDIUM SIZE TREES)
சைனிஸ் பிரிஞ்சி மரங்கள் சிறியவை அல்லது
நடுத்தரமானவை. நல்ல சூழலில் இருபது மீட்டர்
உயரம் கூட வளரும். இதன் இலைகள், தனி இலைகள் 3 முதல் 12 செ.மீ நீளம் இருக்கும். அதிகபட்சமாக 5 செ.மீ அகலம்
இருக்கும். பூக்கள் கொத்தாகப்
பூக்கும். பூங்கொத்துக்கள் 3 முதல் 12 செ.மீ நீளம் வரை
இருக்கும். பூக்கள் வெள்ளை நிறத்தில்
இருக்கும் பூக்கள் ஒண்ணரை செ.மீ நீளமும் ஒரு செ.மீ அகலமும் இருக்கும். மார்ச் முதல் ஜூன் வரையான நான்கு
மாதங்களில் பூக்கின்றன. ஜூன் முதல் நவம்பர்
வரையான ஆறு மாதங்களில் காய்த்து கனிகளாக கனிகின்றன.
இலை உதிர்வில்
கவர்ச்சிகரமாக மாறும்
(LEAVES BECOME ATTRACTIVE DURING FALL)
வுட அமெரிக்காவில் அழகுமரம் என்றால்
பெரும்பாலான மரங்களி இலைகள் கவர்ச்சிகரமாக இருக்கும். சில மரங்களில் பூக்கள் கவர்ச்சிகரமாக
இருக்கும். பல அடிமரங்களை உடைய மரமாக
(MULTI STEMMED) இருக்கும். பல
மரங்களில், அதன் பட்டைகளே அழகாக இருக்கும். இந்த மரத்தின் இலைகள், இலை உதிரும்
பருவத்தில் அழகான மஞ்சள் நிறமாக மாறும்.
மற்ற பருவங்களில் பிளச்சென்ற பச்சை நிறமாக இருக்கும். இலைகளின் அடிப்புறம், வெளிர் பச்சை நிறமாக
இருக்கும்.
நுனிக்கிளைப் பூக்கள்
வாசம் உடையவை
(FLOWERS HAVE MILD FRAGRANCE)
பூக்கள் நுனிக்கிளைகளில் பூக்கும். அவை கொத்தாக பூக்கும். வெண்மை நிறத்தில் பூக்கும். துளிர்விடும் பருவத்தில் பூக்கும். கொஞ்சம் தாமதமாகப் பூக்கும். ஆண் பெண் பூக்கள் தனித்தனியானவை. ஆண் பூக்கள் கொஞ்சம் பெரியவை. மெலிதான வாசம் வீசும். இருபால் பூக்களும் இருக்கும். ஆண் பெண் மரங்கள்
தனித்தனியாவை.
கருநீலப் பழங்கள் காட்டுயிர்களுக்கு உணவாகும் (FRUITS BECOME FOOD FOR WILD LIVES)
மரத்தின் பழங்கள் கருநீல நிறமாக
இருக்கும். கோடை காலத்தில்
பழுக்கும். இவை காட்டுயிர்களுக்கு உணவாகும். பறவைகள் பழங்களை விரும்பி சாப்பிடும். இதர வன உயிர்களும் சாப்பிடும். இதில் குறைபாடு என்ற சொல்லக்கூடிய ஒரு அம்சம்
உண்டு. இதன் இலை தழைகளை மான்கள்
விரும்பிச் சாப்பிடும் என்பதுதான்.
பனிக்கட்டி நிறமான பூக்கள் (SNOW WHITE FLOWERS)
இதன் தாவரவியல் பெயர் சியோனேந்தஸ்
ரெட்யூசஸ் (CHIONANTHUS RETUSUS), இதில் “சியோ” என்றால் கிரேக்க
மொழியில் பனிக்கட்டி(SNOW), ஆந்தோஸ்(ANTHOS) என்றால் பூக்கள். இதன் பூக்களைப் பார்க்க பனிக்கட்டி போலவே
தெரியும். முழுமையாகப் பூத்திருக்கும் சமயம்
அத்தனை அழகாய் அம்சமாய், அற்புதமாய் இருக்கும்.
எங்கு நடலாம் (SOIL SUITABILITY)
அழகுபடுத்த நினைக்கும் அத்தனை இடங்களிலும்
நடலாம். வீட்டுத் தோட்டங்கள், பொது அலுவலகங்கள், பேக்டரிகள், தொழிலகங்கள், புல்தரைகள், பூங்காக்கள், ஒடைக்கரைகள், குளக்கரைகள் என
அனைத்து இடங்களிலும் நடலாம்.
சுமாரான ஈரப்பசை உள்ள மண்வகைகள், வடிகால் வசதி உள்ள
மண்கண்டம், ஒரளவு நிழலாக உள்ள இடங்கள், நாள் முழுவதும்
வெயிலும் வெளிச்சமும் உள்ள பகுதிகள், எங்கும் நன்கு
வளரும். நிறைய சூரிய வெளிச்சம் கிடைக்கும்
பகுதிகளில் நிறைய பூக்கும். ஆனால் ஆழமான
மண்கண்டம், நல்ல ஈரப்பசை,
ஊட்டச்சத்துக்கள் அடங்கிய அமிலத்தன்மை உடைய
நிலப்பகுதிகள், மிகவும் பொருத்தமான இடங்கள். தொடர்ந்து நிலவும் வறட்சியை இது தாங்காது.
இந்த மரத்திற்கு அதிகமான பராமரிப்பு வேலைகள்
தேவைப்படாது. முக்கியமாக தேவைப்படும்
கவாத்து (PRUNING) இதற்கு தேவைப்படாது. சுற்றுச் சூழலில் ஏற்படும் மாசுவைத் தாங்கி
வளரும் தன்மையுடையது.
இது அமெரிக்காவுக்கு சொந்தமான மரம் (NORTH AMERICAN TREE)
“சியோனேந்தஸ்” மரவகையில்
அமெரிக்காவிற்கு சொந்தமான ஒரு மரமும் உள்ளது.
அந்த மரத்தின் தாவரவியல் பெயர், சியோனேந்தஸ் விர்ஜீனிகா (CHIONANTHUS VIRGINICA), இந்த மரத்தை விட
எல்லா வகையிலும் மேம்பட்டதாக உள்ளது. இந்த
சீனமரம். அதனால்தான் வட அமெரிக்கா
முழுவதும் அழகுமரமாக பயன்படுத்துகிறார்கள்.
No comments:
Post a Comment