Sunday, January 19, 2020

எலும்புருக்கி தென்னிந்தியாவின் வணிக மரம் ELUMBURUKKI - ALIAS INDIAN LAUREL TREE



          
எலும்புருக்கி வணிக மரம்

 

 

 

 

 

 

எலும்புருக்கி

தென்னிந்தியாவின்  

வாணிப மரம் 

 

ELUMBURUKKI - 

ALIAS  INDIAN   

LAUREL  TREE

 

 தொழில் செய்ய 

ஏற்ற இந்திய 

மரங்கள் 

 

LITSEA GLUTINOSA




இந்த மரத்தின் இலை, கிளை, பூ பிஞ்சு பழம், விதை, மரம், பட்டை, வேர் அத்தனையும் மருந்தாக பயன்பட்டுவந்தது.  பழங்குடிகன் காலங்காலமாக இவற்றைப் பயன்படுத்தி வந்தனர்.

ஊதுவத்தி செய்யும் தொழிற்சாலைகளில் இதனை ஒட்டும் பொருளாகப் (BINDING AGENT) பயன்படுத்தினார்கள்.முக்கியமாக எலும்பு முறிவுக்கு பிளாஸ்டர் போடுவதற்கு இது அதிகம் பயன்படுத்தப்பட்டது.


இதில் மிகவும் மதிப்பு மிக்கப் பொருள், இந்த மரத்தின் பட்டைதான்.  இப்படி இந்த மரங்களில் பட்டை சேகரிக்கும் தொழில், ஆந்திராவில், கிழக்குக் தொடர்ச்சி மலைப்பகுதியின் பழங்குடி, மக்களுக்கு சோறு போட்டது.


இந்த மரத்தில் விவசாயக் கருவிகள் செய்யலாம்.  இதன் வேர்களில் கயிறுகள் செய்யலாம், மரக்கூழ் தயாரித்து காகிதம் தயாரிக்கப் பயன்படுத்தலாம், இதன் இளம் இலைகளை கால்நடைகளுக்குத் தீவனமாகத் தரலாம், விதை எண்ணெயில் மெழுவர்த்தி செய்யலாம், சோப்புகள் செய்யலாம்.


தே. ஞானசூரிய பகவான்போன்: + 91-8526195370Email: gsbahavan@gmail.com



தாவரவியல் பெயர்: லிட்சியா குளுட்டினோசா (LITSEA GLUTINOSA)தாவரக்குடும்பம் பெயர்: லாரேசியே (LAURACEAE)தாயகம்: இந்தியா (INDIA)பொதுப் பெயர்கள்: இண்டியன் லாரெல் (INDIAN LAUREL)



பல மொழிப் பெயர்கள்:
1.     தமிழ்: எலும்புருக்கி, உரல்லி, மூச்செய் பெயட்டி (ELUMBURUKKI, URALLI,  MUCHAIPEYETTI)2.     தெலுங்கு: கனுகு நாலிக்கி, மேடா, நாரா நாலிக்கி (KANUGU  NALIKE,MEDA, NARA NALIKE3.     சமஸ்கிருதம்: மேடசாகா (MEDASAKA4.     மராத்தி: மெல்டாலக்டி, ரானம்பா (MELDA LAKDI,  RANAMBA5.     ஒரியா: காய்பலா, கேட்சோ (GHAIPHALA, GATCHO)


உலகம் பூராவும் அங்கீகரிக்கப்பட்ட மூலிகை மரம் இந்த எலும்புருக்கி மரம்.  ஆயர்வேதம், சித்த மருத்துவம், பாரம்பரிய மருத்துவம், சீன மருத்துவம் - இப்படி எல்லா மருத்துவ முறைகளிலும் இதனை பயன்படுத்துகிறார்கள்.

பரவியிருக்கும் இடங்கள் (DISTRIBUTION)


இந்தியா முதல் ஆஸ்திரேலியா வரை பரவலாக பல நாடுகளில் பரவியுள்ளது.  கடல் மட்டத்திலிருந்து 1350 மீட்டர் உயரம் உள்ள இமயமலையில் இந்த மரம் பரவியுள்ளது.  இதர மலைப்பகுதிகளிலும் இந்த மரம் பரவியுள்ளது.

தென்னிந்தியாவிற்கு சொந்தமான மரம் (SOUTH INDIAN TREE )

இது தென்னிந்தியாவிற்கு சொந்தமான மரம்.  அதனால் தான் தெலுங்கு மொழியில் இதற்கு 13 பெயர்கள் உண்டு.  தமிழில் ழு பெயர்களில் இதனை அழைக்கிறார்கள்.  அமா, எனம்பிரகி, எலும்புறுக்கி, மூச்சைப்பேயெட்டி, பிசின்பட்டி, உரல்லி, அத்தனையும் தமிழ்ப்பெயர்கள்.  ஆனால் இவற்றில் ஒன்றுகூட கேள்விப்பட்ட மாதிரி இல்லை.  ஆனால் இது ஒரு முக்கியமான மூலிகை மரம்.  அநேகமாய் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களுக்கு.  தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு.  அல்லது இந்த மரங்கள் இருக்கும் ஊர்களில் இதற்கு உள்ளூரில் வேறு பெயர்கள் இருக்கக் கூடும். உங்களுக்கு தெரிகிறதா, பாருங்கள்.

லாரேசி என்று மிகப் பெரிய தாவரக் குடும்பம் (LAURACEAE  - A BIG  FAMILY)
லாரேசி என்பது மிகவும் பெரிய தாவரக்குடும்பங்களில் ஒன்று.  இதில் இருக்கும் தாவரவகைகள் உலகம் பூராவும் பரவி உள்ளது.  இதில் சுமார் 2850 பூக்கும் தாவர வகைகள் (FLOWERING PLANT SPECIES) உள்ளன.  இவை வெப்பமண்டலம், மற்றும் குளிர்ப்பிரதேசங்களிலும் பரவியுள்ளன.  இதில் கேசித்தா (CASSYTHA) என்பது மட்டும் வித்தியாசமான தாவர வகை.  அதாவது இதில் உள்ளவை அனைத்தும் ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்த, கொடிவகைக் தாவரங்கள் (PARASITIC VINES).

மரத்தின் மருத்துவப் பயன்கள் (MEDICINAL USES)


இந்த மரத்தின் இலை, கிளை, பூ பிஞ்சு பழம், விதை, மரம், பட்டை, வேர் அத்தனையும் மருந்தாக பயன்பட்டுவந்தது.  பழங்குடிகன் காலங்காலமாக இவற்றைப் பயன்படுத்தி வந்தனர்.  பலவிதமான நோய்களை குணப்படுத்த பயன்படுத்தி உள்ளார்கள்.  முறையாக இதனை அறுவடை செய்யாததால் அற்புதமான இந்த மூலிகை மரத்தை முழுவதுமாக அழித்து விட்டார்கள்.  

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில்.  ஊதுவத்தி செய்யும் தொழிற்சாலைகளில் இதனை ஒட்டும் பொருளாகப் (BINDING AGENT) பயன்படுத்தினார்கள்.  முக்கியமாக எலும்பு முறிவுக்கு பிளாஸ்டர் (BONE FRACTURE PLASTER) போடுவதற்கு இது அதிகம் பயன்படுத்தப்பட்டது.  இந்த மரத்தின் எல்லா பகுதிகளிலும் பயன்படுகிறது.  ஆனாலும் இதில் மிகவும் மதிப்பு மிக்கப் பொருள், இந்த மரத்தின் பட்டைதான்.  இப்படி இந்த மரங்களில் பட்டை சேகரிக்கும் தொழில், ஆந்திராவில், கிழக்குக் தொடர்ச்சி மலைப்பகுதியின் பழங்குடி, மக்களுக்கு சோறு போட்டது.  இதன் விளைவாக கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வெகுவாக இந்த மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. 

இது இந்தியாவில் மட்டுமல்ல, பிலப்பைன்ஸ், பங்ளாதேஷ்; ஆகிய நாடுகளிலும் நடந்தது.  இதன் விளைவாக, இந்தியா உட்பட மற்ற இரண்டு நாடுகளிலும் கூட அழிந்துவரும் மரங்கள் என்ற பட்டியலில் (ENDANGERED TREE SPECIES) சேர்க்கப்பட்டுள்ளது.

பட்டைகள் சேகரிப்பதில் பழங்குடி மக்கள் நிபுணத்துவம் பெற்றவர்கள் (TRIBALS ARE  EXPERTS IN BARK COLLECTION)

கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருக்கும்  பழங்குடிகள் இந்தப் பட்டைகள் சேகரிப்பதில் வல்லவர்கள்.  ந்து முதல் ஏழு ஆண்டுகள், வயதுடைய மரங்களில்தான் பட்டைகள் சேகரிக்க முடியும். 1.5 முதல் 2.00 செ.மீ பருமன் உள்ள பட்டைகளை சேகரிக்க வேண்டும்.  ஒவ்வொரு தனி மரத்திலிருந்தும் 4 முதல் 5 கிலோ பட்டைகளை சேகரிக்க முடியும்.  ஒரு நபர் ஒரு நாளில் 15 கிலோ பட்டைகள் சேகரிப்பார்.  இந்த வகையில் ஒரு நபர் ஏறத்தழ 950 கிலோ சேகரிப்பார். இதன் மூலம் அவருக்கு மாதம் 3000 ரூபாய் வரை வருமானமாகக் கிடைக்கும்.

கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், விசாகப்பட்டினம் பகுதியில் இதுபற்றிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.  இந்த ஆய்வு 2012-2013 ம் ஆண்டு நடத்தப்பட்டது.  இந்த ஆய்வின்படி இந்தியவில் இருக்கும் அகர்பத்தி தயாரிக்கும் தொழிற் கூடங்கள் மட்டும் பல கோடி இருக்கும் என்கிறார்கள்.  இதன் காரணமாகத்தான்  இந்த மரங்கள் அதிகம் அழிக்கப்பட்டன.  திரும்பத் திரும்ப வரைமுறை இல்லாம பட்டைகள் சேகரிச்சதுதான்.  இவ்ளோ மரங்கள் அழிஞ்சதுக்குக் காரணம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்தப் பட்டைகள் சேகரிப்பதை முறையாகச் செய்தால், மரங்களையும் பாதுகாக்கலாம்.  இந்த மரங்கள் நமது தொழிற்சாலைகளுக்கு உதவியாகவும் இருக்கும் என்றும் சொல்லுகிறார்கள், சில பொறுப்பான அதிகாரிகள்.

இந்த மரத்தில் விவசாயக் கருவிகள் செய்யலாம்.  இதன் வேர்களில் கயிறுகள் செய்யலாம், மரக்கூழ் தயாரித்து காகிதம் தயாரிக்கப் பயன்படுத்தலாம், இதன் இளம் இலைகளை கால்நடைகளுக்குத் தீவனமாகத் தரலாம், விதை எண்ணெயில் மெழுவர்;த்தி செய்யலாம், சோப்புகள் செய்யலாம், இதன் பட்டைகளைப் பயன்படுத்தி, பலவிதமான நோய்களை குணப்படுத்தலாம்.  முக்கியமாக எலும்பு முறிவை சரி செய்யலாம்.  பாலுணர்வுத் தூண்டியாகவும் இது பயனாகிறது.  மருந்துகள் தயாரிப்பில் மாத்திரைகள் செய்வதில் ஒட்டும்பொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.  மொத்தத்தில் இது ஒரு சகல கலா வணிகமரம்.

 REFERENCES:
1.      WWW.ENVIS.FRLWT.ORG/PLANT DETAILS FOR HTSEA GLUTINOSA.
2.      WWW.EN.WIKIPEDIA.ORG/LAURACEAE FAMILY
3.      WWW.KERALA PLANTS.IN/LITSEA.GLUTINOSA
WWW.RESEARCHGATE.NET/TRADITIONAL AND COMMERCIAL USES OF LITSEA CLUTINOSA.   



2 comments:

Muralidharan Ramarao said...

பட்டையைக் கிளப்புகிறதே இந்த மரம்!

Gnanasuriabahavan Devaraj said...

அன்பு முரளி அவர்களே, தொடர்ந்து நமது பதிவுகள் குறித்து உங்கள் கருத்துக்களை எழுதுவதற்கு நன்றி, இந்த மரம் முறிந்த எலும்புகளை ஒட்டுவதில் காலம் காலமாக தனது பட்டைகளைத் தந்தனால், அதன் பட்டைகளை நம்ம ஆட்கள் கிளப்பிவிட்டார்கள் !

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...