Thursday, January 16, 2020

DOUGLAS FIR - USA UTILITY POLE TREE - டவுக்ளஸ் பிர் - பிரபலமான மின்சார மரம்


 

டவுக்ளஸ்  பிர் - 

பிரபலமான  

மின்சார மரம்

DOUGLAS FIR -

UTILITY 

POLE TREE 





தே .ஞானசூரிய பகவான், போன்: + 91-8526195370
Email: gsbahavan@gmail.com


எனது அமெரிக்கப் பயணம் முடியும் சமயம் ஒருநாள் லாஸ்வேகாஸ் நகரில் “சைனா கோ கோ” என்ற ஹோட்டலுக்குப் போனேன்.  அங்கு போகும் வழியில் வரிசையாக “மின்சார மரங்கள்”.  அநேகமாய் நம் “டவுக்ளஸ் பிர்”.  உற்றுப் பார்த்தேன்.  “என்னை எழுது” என்றது.


நகரங்களில் செல்லும் கேபிள் ஒயர்களை (CABLE WIRES)    சுமந்து செல்ல பல ஆண்டுகளாக உண்மையான மரங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.  அவை குறிப்பாக மூன்று மரங்கள் தகுதியானவை

இவை தவிர ஜேக் பைன், மற்றும் லாட்ஜ்  போல் பைன் (JACK PINE, LODGEPOLE PINE)ஆகிய  மரங்களையும் யுடிலிட்டி போல்களாகப் பயன்படுத்துகிறார்கள். 


 அவை டவுக்ளஸ்  பிர் , வெஸ்டர் ரெட் செடார் மற்றும் சதர்ன் எல்லோ பைன்.  இந்த மரக்கம்பங்களை “யுடிலிட்டி போல்” (UTILITY POLE) என்று சொல்லுகிறார்கள்.


தாவரக் குடும்பம் பெயர்: பைனேசி (PINACEAE)
தாயகம்: வட அமெரிக்காவின் மேற்குப் பகுதி (WESTERN PART OF NORTH AMERICA)
தாவரவியல் பெயர்: சீடோட் சுகா மென்சி (PSEUDOTSUGA MENZIESH) 
பொதுப் பெயர்கள்: டவுக்ளஸ் பிர், ஒரிகான் பைன், கொலம்பியன் பிர்  (DOUGLAS FIR, ORIGON FIR, COLUMBIAN FIR )
பசுமை மாறா ஊசியிலை மரவகை (EVER GREEN CONIFERS)


ஆண்டு 365 நாளும் இலைகளைப் பெற்றிருக்கும்.  இலையுதிர் பருவத்தில் இலைகளை உதிர்க்காது.  நாம் பள்ளிக் கூடங்களில் ஊசியிலைக் காடுகள் என்றும், ஊசியிலை மரங்கள் என்றும் படித்தவை இவைதான்.  இதன் இலைகள் சவுக்கு இலை மாதிரி, கிறிஸ்மஸ் மரஇலை  போல இருக்கும்.  அப்படிப்பட்ட மரங்களைத்தான் ஆங்கிலத்தில் கோனிபர் (CONIFER) என்கிறார்கள்.  

இந்த மரங்கள் “பைனேசி” என்றும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தவை.  இவற்றில் இரண்டு வகை உண்டு.  அவை கடலோரப் பகுதிகளில் வளருபவை ஒன்று.  அவற்றை கோஸ்ட் டவுக்ளஸ் பிர் (COAST DOUGLAS FIR) என்பார்கள்.  இன்னொன்று மலைப் பகுதிகளில் வளருபவை ராக்கி மவுண்டைன் டவுக்லஸ் பிர் (ROCKY MOUNTAIN DOUGLAS FIR)

மின்சார மரங்கள்
(ELECTRICAL AND 
TELEPHONE POSTS



இந்த மரம் 2012 ம் ஆண்டு எனக்கு அறிமுகம் ஆனது.  என் மகனுடன், அமெரிக்காவின் “கனெக்டிகட்” பகுதியில் ஒரு நாள் காரில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.  சிக்னலில் எங்கள் கார் நின்றது.  அங்கு ஒங்கி உயர்ந்த ஒர் “எலக்ட்ரிக்ல்  போஸ்ட்” (ELECTRICAL POST) மின்சார மரம் இருந்தது.  “அப்பா இது என்ன மரம்னு தெரியுதா” என்றான் என் மகன் “மின்சார மரம் - எலக்ட்ரிகல் கம்பம்” என்றேன்.  “அதுசரி அது மெட்டல் போஸ்டான்னு  பாருங்க.  உற்றுப் பார்த்தேன்.  அது உண்மையான மரக்கம்பம், உலோகக்கம்பம்  அல்ல.  எனக்கு ஆச்சரியம் அந்த சிக்னலில் இருந்து கார் புறப்பட்டது.  

அந்த சாலையில் வரிசையாக நின்றிருந்த எல்லா மரங்களுமே மரக்கம்பங்கள்.  அதன் பின்னர் ஓரிரு மாதங்கள்  அமெரிக்காவில் பல மாநிலங்களில் சுற்றி வரும் வாய்ப்புக் கிட்டியது.  நான் சென்ற எல்லா இடங்களிலும் ஆயிரக் கணக்கான மின்சார மரங்கள் மற்றும் டெலிபோன் கம்பங்கள், எல்லாமே மரக்கம்பங்கள் , உலோகக் கம்பங்கள் அல்ல. கலிபோர்னியா மாநிலத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ்  நகரத்தில் பல இடங்களில் சாலைகளில் மின்சார மரங்கள் பெரும்பாலும் மரக்கம்பங்களாகவே இருந்தன. 

கொஞ்சம் கூட வளைவு இல்லாமல், நேராக நிமிர்ந்த கம்பங்கள், உலோகக் கம்பங்களுக்கும் சவால் தருபவை: கிட்டத்தட்ட ஒரு அடி குறுக்களவு உள்ள மரங்கள்: உயரம் 50 முதல் 60 அடி இருக்கலாம்.  யார் இப்படி அளவு கொடுத்து இந்த மரங்களை வளரச் செய்திருப்பார்கள்.

மதா, பிதா, கூகிள், தெய்வம்
(GOOGLE MY GURU)


2018 ம் ஆண்டு இரண்டாம் ஆண்டும் இந்த மின்சார கம்பங்களின் ஆச்சரியம் தொடர்ந்தது.  கூகிள்”ல் தொடர்ந்து தூழவினேன்.  அயிரை மீனுக்கு ஆசை பட்ட தூண்டில்காரனுக்கு  அரிதாய் சிக்கிய  விரால்கள் போல அந்தத் தகவல்களைத் திரட்டினேன்.  

அப்படித் தான் இந்த “டவுக்ளஸ் பிர் ” மரம் எனக்கு சிக்கியது.  “மாதா பிதா கூகிள் தெய்வம்!

மின்சார மரங்களான டவுக்ளஸ் பிர், வெஸ்டர்ன் ரெட் செடார், மற்றும் சதர்ன் பைன் (DOUGLAS FIR, WESTERN RED CEDAR, SOUTHERN PINE)

நகரங்களில் செல்லும் கேபிள் ஒயர்களை (CABLE WIRES)    சுமந்து செல்ல பல ஆண்டுகளாக உண்மையான மரங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.  அவை குறிப்பாக மூன்று மரங்கள் தகுதியானவை எனத் தெரிந்தெடுத்திருக்கிறார்கள்.  அவை டவுக்ளஸ்  பிர் , வெஸ்டர் ரெட் செடார் மற்றும் சதர்ன் எல்லோ பைன்.  இந்த மரக்கம்பங்களை “யுடிலிட்டி போல்” (UTILITY POLE) என்று சொல்லுகிறார்கள்.

பருவநிலை மாற்றங்களால் பாதிக்கப்படாமல்
இருக்க பதனப்படுத்துகிறார்கள்
(CHANGES DUE TO  SEASONAL CONDITIONS)


பொதுவாக மரங்கள் வெய்யிலால் பாதிக்கப்படும்: மழையினால் பாதிக்கப்படும்.  பனிப் பொழிவினால் பாதிக்கப்படும்: பூச்சிகள் மற்றும் வண்டுகளால் பாதிக்கப்படும்: பூசணநோய்களால் பாதிக்கப்படும்.  இவற்றால் பாதிக்கப்படாமல் இருக்க பதனம் செய்கிறார்கள்.  

இப்படி  பதனம் செய்யப்பட்ட மரங்கள் 70 ஆண்டுகள் வரை பயன்படும் என கண்டுபிடித்து இருக்கிறார்கள்.  அந்த மரங்கள் பார்க்க துருப்பிடித்த இரும்பு கம்பங்கள் மாதிரித் தெரிகின்றன.  அப்படி பல மரங்களை நான் டெக்ஸாஸ், கலிபோர்னியா, நெவாடா , மற்றும் அரிசோனா மாநிலங்களில் பார்த்தேன்.


இவை தவிர ஜேக் பைன், மற்றும் லாட்ஜ்  போல் பைன் (JACK PINE, LODGEPOLE PINE)ஆகிய  மரங்களையும் யுடிலிட்டி போல்களாகப் பயன்படுத்துகிறார்கள்.

டவுகிளஸ் பிர் மரம்:
(DOUGLAS FIR TREE)


எவ்வளவு சுமை வேண்டுமானாலும் தாங்கும் மரம் இது. வட அமெரிக்காவின் மேற்குப் புறத்தின் எல்லா மாநிலங்களிலும் இந்த மரம் பரவியுள்ளது.  மெக்சிகோவின் சில பகுதிகளிலும் பரவியுள்ளது.  எவ்வளனவு சுமை
ஏற்றினாலும் வளையாது, உடையாது, தாங்கும்.  வடிவேல் சொன்னது போல எவ்வளவு எற்றினாலும் தாங்கும்.  கட்டுமான வேலைகளிலும் இதனை கம்பங்களாகப் பயன்படுத்தலாம்.

சதர்ன் எல்லோ பைன்:
(SOUTHERN YELLOW PINE)


இவற்றில் பலவகை உண்டு.  கட்டுமானப் பணிகளுக்கு அதிகம் பயன்படும்.  வீடு கட்டும் வேலைகளுக்கு உதவும் பிரபலமான மரம்.  இதன் சிறப்பு, உறுதியானது மற்றும் லேசான எடை கொண்டது என்பது.  வட அமெரிக்காவின் தென்  பகுதி மாநிலங்களுக்குச் சொந்தமானது.

ஜேக்  பைன்:
(JACK PINE)


சதர்ன் எல்லோ  பைன் மரங்களைவிட அதிகம் காணப்படும் மரம்.  ஆனால் இந்த மரத்திற்கு நெருங்கிய சொந்தமானது, கொஞ்சம் குறைவாகப் பயன்படுவது.  மரத்தில் முடிச்சுக்கள் உருவாகும், சீக்கிரமாக மரங்கள் அழுகும் தன்மை கொண்டது.  வட அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதிக்கு சொந்தமான மரம்.  கiடா முழுக்க பரவலாகக் காணப்படும் மரம்.

லாட்ஜ்  போல் பைன்:
(LODGE POLE PINE)


சதர்ன் எல்லோ போல் மரத்தைப் போல நேராக கோடு கிழித்த மாதிரி, நெளிவு சுளிவு இல்லாமல், கம்பங்களுக்காகப் பிறப்பெடுத்ததைப்போல, உயரமாக, நியாயமான, குறைவான எடையுடன் வளரும் மரம்.  கட்டுமான வேலைகளிலும் கம்பங்களாகப் பயன்படும்.  மெல்லிய மரப் பட்டைகளைக் கொண்டது.  நெருப்பு மற்றும் அதீதமான வெயில் மழை மற்றும் பனிப் பொழி வினால் பாதிக்கப்படும் மர வகை.  பிசிட்டீவு; கொலம்பியா இந்த மரத்தின் சொந்த மண்.  ஆனால் வட அமெரிக்காவில் மலை மாநிலங்களில் எல்லாம் இந்த மரங்கள் பரவியுள்ளன.

வெஸ்டர்ன் ரெட் செடார் மரம்
(WESTERN RED CEDAR)


யுடிலிட்டி கம்பங்களை அமைக்கும் கம்பெனிகள் அதிகமாக இந்த மரங்களையே விரும்பி முதலிடு செய்தார்கள்.  இதர மரங்களை ஒப்பிடும்போது.  இந்த செடார் மரம் அதிகமான அளவு பூச்சி, நோய்கள், செய்யில், மழை, பனி போன்றவற்றால் பாதிக்கப்படாதது.  இதனை பதனம் செய்வதற்கான செலவு அதிகம் ஆகாது.  வட அமெரிக்காவின் கடலோரப் பிரதேசங்களை சொந்த இடமாகக் கொண்டவை இந்த மரங்கள்.  அதிலும் குறிப்பாக பசிபிச் மாக்கடலின், வடமேற்குப் பகுதிகளில் இந்த மரங்கள் அதிகம் பரவியுள்ளன.

டவுக்ளஸ் பிர் மரம் உண்மையான பிர் மரம் அல்ல (DOUGLAS FIR IS NOT A TRUE FIR)

ஏபிஸ் (ABIES GENUS) என்ற மரவகையைச் சேந்தவைக்குத்தான் ‘பிர்” மரங்கள்.  என்று பெயர். அதனால்தான் “டவுக்ளஸ்” என்ற அடை மொழி தந்து அழைக்கிறார்கள்.  “சூடோடாட்சுகா” என்ற தாவர வகையையும் அதனால்தான் கொடுத்துள்ளார்கள்.


மரங்கள் பெரியவை, உயரமானவை 
(LARGE AND TALL TREES)

டவுக்ளஸ் மரங்கள் மிகவும் பெரியவை.  உயரமானவை, அதிகபட்சமாக 300 அடி வரை வளரும்.  கடல் மட்டத்திலிருந்து 5900 அடி உயரம் வரை உள்ள பகுதிகளில் வளரும்.  ஆழமான ஆணிவேரைக் கொண்டு வளரும்.
பெரிய பூங்காக்கள் மற்றும் தோட்டங்களுக்கு ஏற்ற அழகு மரங்கள் (ORNAMENTAL TREES SUITABLE FIR LARGE PARKS & GARDENS)

மரங்கள் பெரியவை, உயரமானவை என்பதால் பெரிய பூங்காக்கள் மற்றும் தோட்டங்களில் அழகு மரமாக நடுகிறார்கள்.  இதன் மரங்கள் கொஞ்சம் மிருதுவானவை (SOFT WOODS).  அதற்கு ஏற்றவாறு கட்டுமான வேலைகள் தரைகள் போடுதல் இணைப்பு வேலைகள் (JOINERY) மற்றும் அலங்கார மரத் தகடுகள் (VENEERS) செய்யப் பயன்படுகிறது.

ஹவாய் மற்றும் பிலில்பைன்ஸ் நாட்டில் “ஒயிட் ஐலண்ட் “ என்னும்  தீவுகளில் இரட்டை கேனோ (DOUBLE OUTRIGGER CANOE) என்னும் சிறு படகுகள் செய்யப் பயன்படுத்துகிறார்கள்.

இதுதான் கிறிஸ்மஸ் மரம்
(CHRISTMAS TREE)

ஒரு வகையில் நம் எல்லோருக்கும் அறிமுகமான மரம்.  “கிறிஸ்மஸ் மரம்” என்று காம் பிரவலாக வளர்ப்பது, இந்த “டவுக்ளஸ்  பிர்” மரங்கள்தான்.  1920 ம் ஆண்டிலிருந்து இந்த மரம் கிறிஸ்மஸ் மரமாக முடிவு  செய்துள்லானர்.  நம்முடைய தட்ப வெப்ப நிலைக்;கு 300 அடி வரைவில்லையே என்று எதிர் பார்க்க வேண்டாம்.  

பழங்குடி மக்கள் நாட்டு வைத்தியம் பார்க்கப் பயன்படுத்தினார்கள் (NATIVE AMERICANS USED FOR MAKING TRADITIONAL MEDICINES)


அமெரிக்கப் பழங்குடி மக்கள் இதனை பலவிதமான நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்துகளை இந்த மரத்தின் இலை, வேர், பிசின் பட்டை போன்றவற்றைப் பயன்படுத்தினார்கள்.  இதன் இலைகளிலிருந்து இன்றும் கூட சுவையான தேனீர் தயாரித்து குடிக்கிறார்கள்.

வேறு சில கிறிஸ்மஸ் மரங்கள்
(OTHER CHRISTMAS TREES)


சுமார் 1000 ஆண்டுகளாக கிறிஸ்மஸ் மரம் வைத்து கொண்டாடும் வழக்கம் உள்ளது.  “பிர்” மரங்கள் தவிர வேறு சில மரங்களையும் கிறிஸ்மஸ் மரங்களாக பயன்படுத்துகிறார்கள்.  அவை, விர்ஜினியா பைன், ஆப்கான் பைன், டியோடர் செடார், சேண்ட் பைன், மற்றும் அரிசோனா சைப்ரஸ் (VIRGNIA PINE, AFGHAN PINE, DEODAR CEDAR, SAND PINE AND ARIZONA CYPRESS)
BEAUTIFUL TREES I SAW IN USA
FOR FURTHER READING
ON RELATED TOPICS

1. ஊமத்தை   ரேபிஸ் நோயை  கட்டுப்படுத்தும்  அரிய மூலிகை -    DATURA  A VALUABLE MEDICINE AGAINST RABIES – Date of Posting; 24.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/datura-best-traditional-herbal-tree.html

2. நீர் பார்க்காத  நான் பார்த்த  மொஜாவ்   பாலைவன  மரங்கள் -  WATER STARVING  TREES OF  MOJAVE  DESERT – Date of Posting; 17.01.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/water-starving-trees-of-mojave-desert.html

3. செக்கோயா  உலகின்  உயரமான   செக்கோயா மரம் -  KING SEQUOIA  WORLDS' TALLEST TREE – Date of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html

4. கலிபோர்னியா  விசிறிப்பனை   சாலைகளுக்கு அழகு தரும் மரம்  -    CALIFORNIA    FAN PALM -    GRACEFUL TREE – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/california-fan-palm-graceful-tree.html


5. சில்க்பிளாஸ்- ஹாலிவுட் அழகுமரம்        -         SILK FLASS -   HOLYWOOD  BEAUTY  TREE  – Date of Posting; 15.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/silk-flass-holywood-beauty-tree.html


6. செடார்  எல்ம் - உறுதி மிக்க  பாறை மரங்கள் -   CEDAR  ELM - STRONG TIMBER TREE – Date of Posting; 14.01.2020 https://vivasayapanchangam.blogspot.com/2020/01/cedar-elm-strong-timber-tree.html

7. டெக்சாஸ் மவுண்டெய்ன் லாரெல்  ட்ரீ - அழகு மரம்      TEXAS MOUNTAIN LAUREL - AWESOME  TREE  – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-mountain-laurel-awesome-tree.html

8. சைனிஸ் பிஸ்டாச்சி  மிரட்டும்  அழகு மரம் - CHINESE PISTACHE -  TREE OF STUNNING  BEAUTY – Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chinese-pistache-tree-of-stunning-beauty.html

9. டெக்ஸாஸ் பெர்சிமான் - சிற்பமும் சிலையும் செய்ய ஏற்ற பழமரம் TEXAS PERSIMON -   EXCELLENT TIMBER TREE – Date of Posting; 11.01.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-persimon-excellent-timber-tree.html

10. சுமார்டு சிவப்பு ஒக் மரம் - கலக்கலான  வணிக மரம்       SHUMARD  RED OAK - TOP CLASS BUSINESS TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/shumard-red-oak-top-class-business-tree.html

11. சாவன்னா  ஹோலி - அழகான  காட்டுமரம்       -       SAVANNA    HOLY -   PRETTY  WILD TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/savanna-holy-pretty-wild-tree.html

12. ரீகல் பிரின்ஸ் ஒக்   -   மரங்களின்  சகல கலா வல்லவன் - REGAL PRINCE  OAK  A VERSATILE  TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/regal-prince-oak-versatile-tree.html

13. மக்னோலியா -  ஒரு மரமே  சிறு வனமாகும்  -  MAGNOLIA - ONE TREE  FOREST – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/magnolia-one-tree-forest.html


14. லைவ் ஒக் -  சமையல் எண்ணை    மரம்    LIVE OAK  -   COOKING OIL TREE  – Date of Posting; 09.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/live-oak-cooking-oil-tree.html

15. ஈஸ்டன் ரெட் செடார் வாசனைத்திரவிய மரம்    EASTERN  RED  CEDAR TREE OF PERFUMES – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/eastern-red-cedar-tree-of-perfumes.html

16. சிட்டல்பா சேம்பியன் ட்ரீ  அங்கீகரிக்கப்பட்ட   அழகு மரம் -  CHITALPA CHAMPION  A STUNNING BEAUTY – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chitalpa-champion-stunning-beauty.html

17. ஒசேஜ் ஆரஞ்சு    மண்ணரிப்பைத் தடுக்க    ரூஸ்வெல்ட்   அதிகம் நட்ட மரம்   -    OSAGE ORANGE     PET TREE OF ROOSEVELT – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html

18. பிக் டூத் மேப்பிள்  சக்கரை  மரம் -  BIG TOOTH MAPLE  SUGAR TREE– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-tooth-maple-sugar-tree.html

19. பால்ட் சைப்ரஸ்  பாரம்பரிய  மருத்துவ மரம் -  BALD CYPRESS  A TRADITIONAL  HERB  – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/bald-cypress-traditional-herb.html

20. புளு அட்லஸ் செடார்  தொழில் மரம் -  BLUE ATLAS CEDAR TREE OF INDUSTRIES – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/blue-atlas-cedar-tree-of-industries.html

21. அனாகேச்சோ ஆர்கிட்  அழகு பூமரம்” -   ANACACHO ORCHID  GRACEFULL  FLOWERING  TREE – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/anacacho-orchid-gracefull-flowering-tree.html

22. கிரேப் மிர்ட்டில்   நீண்ட பூங்கொத்து மரம்      CRAPE MYRTLE     GLAMOROUS     FLOWERING TREE – Date of Posting; 06.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html

23. மெக்சிகன் சைகாமோர் அழகிய மருத்துவ  மரம் -  MEXICAN SYCAMORE -   NICE LOOKING   TREE – Date of Posting; 16.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/mexican-cycamore-tree.html

24. ஜோஷுவா  அமெரிக்க  பூர்வகுடிகள் மரம் -  JOSHUVA  TREE OF AMERICAN  NATIVES – Date of Posting; 02.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/joshuva-tree-of-american-natives.html

25. பப்பாளி உடல் எடை  குறைப்பு மரம்  - PAPAYA  BODY WEIGHT REDUCING TREE – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/papaya-body-weight-reducing-tree.html

26. கார்டியா -  மரச்சாமான்  மரம்-    CORDIA   NICE WOOD WORK  TREE– Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/cordia-nice-wood-work-tree.html

27. பிக்சேஜ் எனும்  நோய் போக்கும்  உண்ணி மரம் - BIG SAGE  A  PLEASING HERB TOO– Date of Posting; 22.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-sage-pleasing-herb-too.html

28. டாக்வுட் ட்ரீ - மலேரியாவை  குணப்படுத்தும் மரம்  -  DOG WOOD  ANTI MALARIA  TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/dog-wood-anti-malaria-tree.html

29. சிவப்பு  மேப்பிள்  மலிவான  மரவாடி மரம் - RED  MAPLE    CHEAP TIMBER TREE  – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/red-maple-cheap-timber-tree.html


v  REFERENCES:
v  WWW.EHOW.COM/TYPES OF WOOD USED FOR UTILITY POLES.
v  WWW.FROM TIMES OF INDIA.COM/”EVERYTHING YOU NEED TO KNOW ABOUT CHRISTMAS TREE”

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...