Tuesday, January 14, 2020

டாக்வுட் ட்ரீ - மலேரியாவை குணப்படுத்தும் மரம் - DOG WOOD ANTI MALARIA TREE







டாக்வுட் ட்ரீ 

மலேரியாவை 

குணப்படுத்தும் மரம்  


DOG WOOD 

ANTI MALARIA 

TREE 

டாக்வுட் 

பூ மரம்


 FLOWERING

DOG WOOD


TREE OF

CENTRAL &  

EAST  AMERICA


டாக்வுட் மரங்கள் தந்து
ஜப்பானை கவுரவித்தது
அமெரிக்கா








USA GAVE DOG WOOD TREES TO HONOUR JAPAN 

வட அமெரிக்காவில் மூன்று மாநிலங்களின் அரசு மரம் இது.  அவைவிர்ஜினியாமிசவுரி மற்றும் நார்த் கரோலினா.


இதனை மலேரியா காய்ச்சலை குணப்படுத்துவதற்காக மருந்தாகப் பயன்படுத்தி உள்ளார்கள்.  இதனை குனைன் மருந்திற்குப் பதிலாகப் பயன்படுத்தி உள்ளார்கள்.


நகைப்பெட்டிகள் செய்யலாம்.  பலவகையான கருவிகள் செய்யலாம்.  மரச்சுத்திகள் மற்றும் பல்வேறு கருவிகளுக்கான கைப்பிடிகள் செய்யலாம்.


இந்த மரத்திலிருந்து எடுக்கும் மருந்தை பயன்படுத்தி நாய்களைக் தாக்கும் மேஞ்ச்  என்ற நோயைத் குணப்படுத்தலாம்.

இந்த மேஞ்ச் நோயை குணப்படுத்துப் மரம் என்பதனால்தான் இந்த மரத்தை டாக்வுட் (DOG WOOD) என அழைக்கிறார்கள்.




தே. ஞானசூரிய பகவான்போன்: +918526195370,
Email: gsbahavan@gmail.com


தாவரவியல் பெயர்: கார்னஸ் புளோரிடா (CORNUS FLORIDA)தாவரக்குடும்பம் பெயர்: கார்னேசி (CORNACEAE)தாயகம்: கிழக்கு மற்றும் மத்திய அமெரிக்கா (EASTERN AND CENTRAL USA)பொதுப் பெயர்கள்: அமெரிக்கன் டாக்வுட், புளோரிடா டாக் வுட், இந்தியன் ஆரோ வுட், கமீலியன் ட்ரீ, ஒயிட் கோமல், ஒயிட் டாக்வுட், பால்ஸ் பாக்ஸ், பால்ஸ் பாக்ஸ் வுட் (AMERICAN DOG WOOD, FLORIDA DOG WOOD, INDIAN ARROW WOOD, COMELIAN TREE, WHITE COMEL, WHITE DOG WOOD, FALSE BOX, FALSE BOX WOOD)


வீடுகள் மற்றும் பொது இடங்களில் அழகு மரமாக வளர்க்கப்பட்டு வரும் மரம் இது.  அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிற்கு சொந்தமானது. இந்த மரம்.  இந்த மரத்தின் தாவரவியல் பெயர் கார்னஸ் புளோரிடா.  வட அமெரிக்காவில் மூன்று மாநிலங்களின் அரசு மரம் இது.  அவை, விர்ஜினியா, மிசவுரி மற்றும் நார்த் கரோலினா.


மலேரியாவை குணப்படுத்தும் (CURES  MALARIA)



இந்த மரத்தினை அமெரிக்கப் பழங்குடி மக்கள் பலவிதமாக பயன்படுத்தி வந்துள்ளார்கள்.  எழுதுவதற்கான இங்க், துணிகளுக்கு மற்றும் இதர ஆடை ஆபரணங்களுக்கு ஏற்றும் சாயம், தயாரித்து உள்ளார்கள்.  அது மட்டுமல்ல, இதனை மலேரியா காய்ச்சலை குணப்படுத்துவதற்காக மருந்தாகப் பயன்படுத்தி உள்ளார்கள்.  இதனை குனைன் மருந்திற்குப் பதிலாகப் பயன்படுத்தி உள்ளார்கள்.


மரங்கள் கடினமானவை, உறுதியானவை (HARD & STRONG TIMBER)



அதுமட்டுமல்ல, இதன் மரக்கட்டைகள், கடினமானவை.  சராசரி மரங்களைவிட தரமானவை, அவற்றறைவிட உறுதியானவை.  அவற்றைவிட உபயோகமானவை.  இந்த மரங்களிலிருந்து, விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் செய்யலாம்.  நகைப்பெட்டிகள் செய்யலாம்.  பலவகையான கருவிகள் செய்யலாம்.  மரச்சுத்திகள் மற்றும் பல்வேறு கருவிகளுக்கான கைப்பிடிகள் செய்யலாம்.


மேஞ்ச் நோயை குணப்படுத்தும் மரம் (CURES MANGE DISEASE)



இந்த மரத்திலிருந்து எடுக்கும் மருந்தை பயன்படுத்தி நாய்களைக் தாக்கும் மேஞ்ச்  என்ற நோயைத் குணப்படுத்தலாம்.  இந்த நோய் குறிப்பாக வளர்ப்புப் பிராணிகளை தாக்கும் நோய்.  இந்த நோய் ஒரு வகையான தோல் நோய்.  இந்த நோயை ஒரு வகையான சிலந்திகள் ஏற்படுத்திகின்றன.  இந்த மேஞ்ச் நோயை குணப்படுத்துப் மரம் என்பதனால்தான் இந்த மரத்தை டாக்வுட் (DOG WOOD) என அழைக்கிறார்கள்.

சிறிய, இலை உதிர்க்கும் மரம்(SMALL DFCLDOUS TREE)


மூர்த்தி சிறுசு கீர்த்தி பெருசு என்பது போல மரங்கள் சிறியவைதான்.  ஆனால் அழகான மரங்கள்.  அதிகபட்சமாக 33 அடிக்கு மேல் வளராது.  சாதாரணமாக பசுமை நிறத்தில் இருக்கும் இதன் இலைகள், இலையுதிர் காலத்தில் அழகான, அடர்த்தியான செங்காவி நிறத்தில் மாறி மனதை மயக்கும்.

இதன் பூக்கள் சிறியவை.  ஆனால் பூங்கொத்துக்கள் பெரியவை.  ஒரு பூங்கொத்துகள் சராசரியாக 20 பூக்களாவது இருக்கும்.  ஒவவொரு பூவும் ஐந்து அழகான, வண்ணமயமான இதழ்களைக் கொண்டிருக்கும்.  சில வெள்ளை நிறத்தில் இருக்கும்.  இதன் பூக்கள் பார்க்க, நம்ம ஊர் பட்டிப் பூ மாதிரி இருக்கின்றன.  இவை ஏப்ரல் - மே மாதங்களில் பூக்கும்.

பறவைகளைக் கவரும் பழங்கள்(BIRDS LOVE ITS FRUITS)


இந்த மரத்தின் பழங்கள் கவர்ச்சிகரமானவை.  கொத்துக் கொத்தாகக காய்த்திருக்கும்.  ஒரு கொத்தில் 2 முதல் 10 பழங்கள் இருக்கும்.  பழங்களும் பல வண்ணங்களில் இருக்கும்.  சிவப்பு, மஞ்சள் மற்றும் நிறங்களில் இதன் பழங்கள் பார்க்கும் அனைவரையும் கவரும்.  இந்த பழங்களைச் சாப்பிடும் பறவைகள் இந்த விதைகளை பல இடங்களுக்கும் எடுத்து சென்று விதைக்கின்றன.

சாகுபடி செய்ய பல ரகங்கள் தயார்(SELECTED CULTIVARS)


அழகான மரங்கள் என்றால் அவற்றை ஒட்டுகட்டி பல ஒட்டு ரகங்களை உருவாக்குகிறார்கள், அது போன்ற ஒரு மரம்தான் இந்த டாக்வுட் மரம்.  இதனை குளிர்ச்சியான தட்பவெப்பச் சூழல் (TEMPERATE ZONES) உள்ள பல இடங்களிலும் இதனை விரும்பி நடுகிறார்கள்.  அப்படி இதிலும் பலவகைகளை உருவாக்கி இருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு சில வற்றை மட்டும் சொல்லுகிறேன், அவை அமெரிக்கன் டச், அப்பலாச்சியன் ஸ்பிரிங், ஆட்டம் கோல்ட், பார்ட்டன், பே பியூட்டி, செரோக்கி சீ.ப், செரோக்கி டே பிரேக் மற்றும் செரோக்கி பிரின்சஸ்.


விதைகள் மூலம் கன்றுகளை உருவாக்கலாம்(EASY PRODAGATION BY SEEDS)



இதைகள் மூலமாக புதிய கன்றுகளை உருவாக்கலாம்.  இளம் கிளைகளை வெட்டியும் நடலாம்.  ஆனால் விதைகள் மூலம் கன்றுகள் தயாரிப்பது சுலபம்.  தேவைப்படும் விதைநேர்த்தி செய்து விதைத்தால் நூற்றுக்கு நூறு விதைகள் முளைக்கும்.  இதன் கன்றுகள் அதிகம் தேவைப்படுவதால், திசு வளர்ப்பு முறையில் கன்றுகளை உற்பத்தி செய்யும் முயற்சிகளில் இறங்கி இருக்கிறார்கள்.


டாக்வுட் மரக்கன்றுகள் தந்து அமெரிக்கா, ஐப்பானை கவுரவித்தது (USA HONOURED JAPAN  DOG WOOD SAPLINGS TO JAPAN)




1915 ம் ஆண்டு, ஜப்பான் செர்ரி மரக்கன்றுகளை அமெரிக்காவுக்குப் பரிசாகக் தந்தது.  அந்த நிகழ்வின் 100 வது ஆண்டு நிறைவினை கொண்டாடும் விதமாக, ஐப்பானுக்கு 3000 டாக்வுட் பூ மரங்களை அனுப்பி கவுரவித்தது, அமெரிக்கா. 

FOR FURTHER READINGON RELATED TOPICS


1. ஊமத்தை   ரேபிஸ் நோயை  கட்டுப்படுத்தும்  அரிய மூலிகை -    DATURA  A VALUABLE MEDICINE AGAINST RABIES – Date of Posting; 24.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/datura-best-traditional-herbal-tree.html

2. நீர் பார்க்காத  நான் பார்த்த  மொஜாவ்   பாலைவன  மரங்கள் -  WATER STARVING  TREES OF  MOJAVE  DESERT – Date of Posting; 17.01.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/water-starving-trees-of-mojave-desert.html

3. செக்கோயா  உலகின்  உயரமான   செக்கோயா மரம் -  KING SEQUOIA  WORLDS' TALLEST TREE – Date of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html

4. கலிபோர்னியா  விசிறிப்பனை   சாலைகளுக்கு அழகு தரும் மரம்  -    CALIFORNIA    FAN PALM -    GRACEFUL TREE – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/california-fan-palm-graceful-tree.html

5. டவுக்ளஸ்  பிர் -  பிரபலமான   மின்சார மரம் DOUGLAS FIR - - UTILITY  POLE TREE  – Date of Posting; 16.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/douglas-fir-popular-utility-pole-tree.html

6. சில்க்பிளாஸ்- ஹாலிவுட் அழகுமரம்        -         SILK FLASS -   HOLYWOOD  BEAUTY  TREE  – Date of Posting; 15.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/silk-flass-holywood-beauty-tree.html


7. செடார்  எல்ம் - உறுதி மிக்க  பாறை மரங்கள் -   CEDAR  ELM - STRONG TIMBER TREE – Date of Posting; 14.01.2020 https://vivasayapanchangam.blogspot.com/2020/01/cedar-elm-strong-timber-tree.html

8. டெக்சாஸ் மவுண்டெய்ன் லாரெல்  ட்ரீ - அழகு மரம்      TEXAS MOUNTAIN LAUREL - AWESOME  TREE  – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-mountain-laurel-awesome-tree.html

9. சைனிஸ் பிஸ்டாச்சி  மிரட்டும்  அழகு மரம் - CHINESE PISTACHE -  TREE OF STUNNING  BEAUTY – Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chinese-pistache-tree-of-stunning-beauty.html

10. டெக்ஸாஸ் பெர்சிமான் - சிற்பமும் சிலையும் செய்ய ஏற்ற பழமரம் TEXAS PERSIMON -   EXCELLENT TIMBER TREE – Date of Posting; 11.01.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-persimon-excellent-timber-tree.html

11. சுமார்டு சிவப்பு ஒக் மரம் - கலக்கலான  வணிக மரம்       SHUMARD  RED OAK - TOP CLASS BUSINESS TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/shumard-red-oak-top-class-business-tree.html

12. சாவன்னா  ஹோலி - அழகான  காட்டுமரம்       -       SAVANNA    HOLY -   PRETTY  WILD TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/savanna-holy-pretty-wild-tree.html

13. ரீகல் பிரின்ஸ் ஒக்   -   மரங்களின்  சகல கலா வல்லவன் - REGAL PRINCE  OAK  A VERSATILE  TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/regal-prince-oak-versatile-tree.html

14. மக்னோலியா -  ஒரு மரமே  சிறு வனமாகும்  -  MAGNOLIA - ONE TREE  FOREST – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/magnolia-one-tree-forest.html


15. லைவ் ஒக் -  சமையல் எண்ணை    மரம்    LIVE OAK  -   COOKING OIL TREE  – Date of Posting; 09.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/live-oak-cooking-oil-tree.html

16. ஈஸ்டன் ரெட் செடார் வாசனைத்திரவிய மரம்    EASTERN  RED  CEDAR TREE OF PERFUMES – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/eastern-red-cedar-tree-of-perfumes.html

17. சிட்டல்பா சேம்பியன் ட்ரீ  அங்கீகரிக்கப்பட்ட   அழகு மரம் -  CHITALPA CHAMPION  A STUNNING BEAUTY – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chitalpa-champion-stunning-beauty.html

18. ஒசேஜ் ஆரஞ்சு    மண்ணரிப்பைத் தடுக்க    ரூஸ்வெல்ட்   அதிகம் நட்ட மரம்   -    OSAGE ORANGE     PET TREE OF ROOSEVELT – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html

19. பிக் டூத் மேப்பிள்  சக்கரை  மரம் -  BIG TOOTH MAPLE  SUGAR TREE– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-tooth-maple-sugar-tree.html

20. பால்ட் சைப்ரஸ்  பாரம்பரிய  மருத்துவ மரம் -  BALD CYPRESS  A TRADITIONAL  HERB  – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/bald-cypress-traditional-herb.html

21. புளு அட்லஸ் செடார்  தொழில் மரம் -  BLUE ATLAS CEDAR TREE OF INDUSTRIES – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/blue-atlas-cedar-tree-of-industries.html

22. அனாகேச்சோ ஆர்கிட்  அழகு பூமரம்” -   ANACACHO ORCHID  GRACEFULL  FLOWERING  TREE – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/anacacho-orchid-gracefull-flowering-tree.html

23. கிரேப் மிர்ட்டில்   நீண்ட பூங்கொத்து மரம்      CRAPE MYRTLE     GLAMOROUS     FLOWERING TREE – Date of Posting; 06.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html

24. மெக்சிகன் சைகாமோர் அழகிய மருத்துவ  மரம் -  MEXICAN SYCAMORE -   NICE LOOKING   TREE – Date of Posting; 16.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/mexican-cycamore-tree.html

25. ஜோஷுவா  அமெரிக்க  பூர்வகுடிகள் மரம் -  JOSHUVA  TREE OF AMERICAN  NATIVES – Date of Posting; 02.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/joshuva-tree-of-american-natives.html

26. பப்பாளி உடல் எடை  குறைப்பு மரம்  - PAPAYA  BODY WEIGHT REDUCING TREE – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/papaya-body-weight-reducing-tree.html

27. கார்டியா -  மரச்சாமான்  மரம்-    CORDIA   NICE WOOD WORK  TREE– Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/cordia-nice-wood-work-tree.html

28. பிக்சேஜ் எனும்  நோய் போக்கும்  உண்ணி மரம் - BIG SAGE  A  PLEASING HERB TOO– Date of Posting; 22.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-sage-pleasing-herb-too.html


29. சிவப்பு  மேப்பிள்  மலிவான  மரவாடி மரம் - RED  MAPLE    CHEAP TIMBER TREE  – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/red-maple-cheap-timber-tree.html

REFERENCES:1.      WWW.EN.WIKIPEDIA.ORG – “CORNUS FLORIDA”
2.      WWW.MISSOURI BOTANICAL GARDEN.ORG- “CORNUS FLORIDA”
3.      WWW.WILDFLOWER.ORG – “CORNUS FLORIDA”
  

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...