Thursday, January 9, 2020

டான் ரெட்வுட் வேகமாய் வளரும் சீனமரம் - DAWN RED FAST GROWING CHINESE TREE





















டான் ரெட்வுட்
வேகமாய் வளரும் 
சீனமரம் 


DAWN RED FAST GROWINGCHINESE TREE 


 தே. ஞானசூரிய பகவான், போன் : +918526195370,
    Email: gsbahavan@gmail.com


தாவரவியல் பெயர்: மெட்டா செக்கோயா கிளிப்டோஸ்டிரோபாய்டஸ் (METASEQUOIA GLYPTOSTROBOIDES)


தாவரக் குடும்பம் பெயர்: பாக்சோடியேசி (TOXO DIAOEAE)


பொதுப் பெயர்கள்: டான் ரெட் வுட் (DAWN RED WOOD)


தாயகம்: சைனா (CHINA)


டான் ரெட்வுட் என்றும் இந்த ஊர் செம்மரம் அழகான மரம்.  55 அடி உயரம் வரை வளரும்.  லேசான அமிலத்தன்மையுடைய வடிகால் வசதி கொண்ட மண்ணில் நன்கு வளரும்.

உலகம் முழுவதும், அழகுத்தோட்டம் அமைக்க எற்ற மரம் (LANDSCAPE TREE).  நடுத்தரமான மற்றும் பெரிய மரம்.  பிரமிடு போன்ற தோற்றத்தில் வளரும் செம்மரம்.  தாழ இருக்கும் கிளைகளைக் கூட தாங்கிப் பிடிக்கும் மரம்(RETAINS LOWER LIMBS) இதன் பட்டைகள் எப்போதும் உதிர்ந்து போவதற்குத் தயாராக இருக்கும்.  இதன் ஊசி இலைகள் பால்ட் சைப்ரஸ் மரங்களின் இலைகளைவிட பெரும் ஊசிகளாக இருக்கும்.  வேகமாக வளரும் தன்மையுடையாது.  ஆனால் வறட்சியைத் தாங்காது.  நல்ல சூரிய வெளிச்சம் தேவைப்படும்.  சுமாரான நிழலைத் தாங்கி வளரும்.  பூக்காமல் கோன்களை உருவாக்கும்.

இதன் காய்கள் மற்றும் பழங்களும் இதன் கோன்கள்தான்.  சிறிய அளவு கோன்கள் நீளமான உருண்டை வடிவில் முரட்டுக் கட்டைத் துண்டுகள் போல இருக்கும்.  நன்கு முதிர்த்து கனித்த கோன்கள் உடைத்தால், விதைகள் வெளியேறும்.

மரங்கள் 60 முதல் 100 அடி உயரம் கூட வளரும்.  20 முதல் 30 அடி சுற்றளவுக்கு இந்த மரங்கள் பரவயும் வளரும்.

புதைபொருள் ஆய்வில்
கண்டுபிடிக்கப்பட்ட மரம்


1940 ல் ஐப்பானிலும் 1941ல் தெற்கு சைனாவிலும் புதை பொருள் ஆய்வில் இந்த மரத்தினை கண்டுபிடித்தார்கள்.  இந்த மரங்கள் உயிருடன் சில இடங்களில் இருப்பதை பின்னர்தான் கண்டுபிடித்தார்கள்.  இந்த மரங்களுக்கு டான் ரெட் வுட் என பெயர் வைத்தார்கள்.  சைனாவின் அந்தப் பகுதியிலேயே கூடுதலாக இந்த மரங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள்.  பின்னர் இதிலிருந்து விதைகளை சேகரித்து உலகம் முழுவதும் விதைத்தார்கள், என்பது, இந்த செம் மரத்தின் பூர்வீகக் கதை.
மிக வேகமாக வளரும்

இந்த செம்மரத்தில் கவர்ச்சிகரமான அம்சம் என்பது மிக வேகமாக வளரும் என்பதுதான்.  26 ஆண்டுகளில் இந்த மரங்கள் 100 அடியைத்தாண்டி வளர்கின்றன.  மரங்கள் 3 அடி குறுக்களவுள்ள மரங்களாக வளர்ந்து பரவசப்படுத்துகின்றது.  விரைவாக காடுகளை உருவாக்க நினைக்கும் வனத்துறையினருக்கும், க்கர் கணக்;கில் சாகுபடி செய்து கூடுதலாக டாலர் பார்க்க நினைக்கும் வியசாயிகளுக்குப் இது ஒரு வரப்பிரசாதம் என்கிறார்கள்.


மிருதுவான மரம்


இந்த மரம் ஏறத்தாழ கலிபோர்னியா செம்மரம் மாதிரி.  மரங்கள் கடினத்தன்மை இல்லாதது.  மிருதுவான தன்மை கொண்டது.  இதன் வயிரப்பகுதி மரங்கள் கவர்ச்சிகரமான ஊதாநிறத்தில் இருக்கும்.  மிகவும் பலவீனமான மரம்.  உறுதித்தன்மை இல்லாதது. 

உடைத்தால் பொல பொலவென உதிர்த்துபோகும் தன்மையுடையது.  ஆனால் மரங்களை அழுகவைக்கும் பூணங்களைத் தாங்கி வளரும் தன்மையுடையது.கடினமான, உறுதியானத் தன்மை கொண்ட மரங்கள் தேவைப்படாத அனைத்துக் காரியங்களுக்கும், இந்த டான் ரெட்வுட் மரத்தை பயன்படுத்தலாம்.

பாதுகாக்கப்படும் மரம்


20 ம் நூற்றாண்டின் மத்தியக் காலம் வரை இந்த டான் ரெட்வுட் மரம் முற்றிலுமாக அழிந்துபோன மரம் என்றே கருதப்பட்டது.  1949 ம் ஆண்டில்தான், இந்;த மரம் உயிருடன் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இந்த மரத்தின் கட்டைகளை மரச்சாமான்கள் செய்யக்கூட பயன்படுத்தலாம்.  பெட்டிகள் வீடுகளில் பயன்படுத்தும் தட்டுமுட்டுச் சாமான்கள் செய்யலாம்.  கோஸ்டல் ரெட் வுட் என்பதற்கு.  ஏறத்தாழ சமமான மரங்களைத் தரும் இந்த டான் ரெட்வுட்.  அமெரிக்கா மற்றும் சீனாவில் பாதுகாக்கப்படும் மரம் (P PROTECTED STATUS) என்னும் பெருமை உடையது.


சாதாரணமாக மரச்சாமான்கள் செய்வதற்கான மரம் என்றாலும் கூட மரக்கூழ் தயார் செய்யவும், காகிதம் செய்யவும் இது மிகவும் எற்புடைய மரம்.  பிளைவுட் செய்யவும் இது பயன்படுகிறது.  பாலங்கள் கட்ட, கட்டிடங்களில் தரைகள் பாவுவதற்கும், கட்டுமான வேலைகளுக்கும் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.  அத்துடன் இதன் இலைகளை கால்நடைகளுக்கு தீவனமாகப் போடுகிறார்கள்.

REFERENCES:


WWW.FROM CHRON.COM “EARTH KIND LANDSCAPPING” – DAWN RED WOOD –  “WHAT IS BEST SOIL FOR DAWN REDWOODS?



WWW.EKPS.TAMU.EDU / METASEQUOIA GRYPLOSTROBOIDES

WWW.WOODWORKING NETWORK.COM-“DAWN REDWOOD: “A LINNG FOSSIL”.

 WWW.EHON.COM/ - “DAWN REDWOOD LUMBER USES”.
 


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...