Friday, January 24, 2020

ஊமத்தை ரேபிஸ் நோயை கட்டுப்படுத்தும் அரிய மூலிகை - DATURA A VALUABLE MEDICINE AGAINST RABIES

  



ஊமத்தை  ரேபிஸ் நோயை கட்டுப்படுத்தும் அரிய மூலிகை   


 DATURA  A VALUABLEMEDICINE AGAINST RABIES

DATURA - 

BESTTRADITIONAL  

HERBAL TREE



DATURA 

STRAMONIUM






சீனாவை சொந்த ஊராகக் கொண்டது கருஊமத்தை.  சீனாவின் முக்கியமான 50 மூலிகைகளில் ஒன்று இது.

வெறிநாய்க் கடியினால் ஏற்படும் ரேபிஸ் என்னும் வெறிநோயை கட்டுப்படுத்தலாம்.  விவண்டு கடியினால் உடலில் சேரும் நச்சுத்தன்மையை முறிக்கவும், இது பயன்பட்டு வருகிறது. 

சில வகை ஊமத்தை வகைகள் பாலுணர்வுத் தூண்டியாகவும் (APHRODISIAC) பயனாகிறது. 

கருஊமத்தை திருமணஞ்சேரி திருத்தலத்தின் தலமரமாக உள்ளது.  திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவில் அப்பர் மற்றும் திருஞான சம்மந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம் இது.


பூமி ஞானசூரியன், போன்:+ 91-8526195370
Email: gsbahavan@gmail.com


தாவரவியல் பெயர்: டேட்ரொ ஸ்ட்ரமோனியம் (DATURA STRAMONIUM)தாவரக் குடும்பம் பெயர்: சொலானேசி (SOLANACEAE)தாயகம்: அமெரிக்கா, மெக்சிகோ, கவுட்டிமாலா(AMERICA, MEXICO, GOUTEMALA)பொதுப் பெயர்கள்: டெவில்ஸ் டிரம்பட், மூன் பிளவர்ஸ், ஜிம்சன்வீட், டெவில்ஸ் வீட், ஹெல்ஸ்பெல்ஸ், தார்ன் ஆப்பிள் (DEVILS TRUMPHET, MOON FLOWERS, JIMSON WEED, DEVILS WEED, HELLS BELLS, THORN APPLE)


ஊமத்தை டாட்டுரா என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது.  இதில் ஒன்பது வகையான தாவர வகைகள் (SPECIES) உள்ளன.

படம் வரைந்து பாகங்களைக் குறியுங்கள்.


எல்லோருமே பள்ளிக் கூடத்தில் படிக்கும் போது, படம் வரைந்து பாகங்களைக் குறியுங்கள் என்று சொல்லி ஊமத்தம் பூக்களைத்தான் தருவார்கள்.  பார்த்து படம் வரைய சுலபமாக இருக்கும்.  ஒரு பூவில் அல்விவட்டம் எது? புல்லிவட்டம் எது? மகரந்தக் கேரங்கள் எவை? சூலகம் எது? மகரந்த சேர்க்கை என்றால் என்ன? மகரந்தத்தூள் என்பது எது? இதை யெல்லாம் விளாவாரியாக தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது ஊமத்தம் பூக்கள்தான்.


வெள்ளை ஊமத்தை மற்றும் கரு ஊமத்தை



கிராமங்களில் அதிகம் கண்ணில் அகப்படுவது வெள்ளை ஊமத்தைதான்.  வெள்ளாவில் வைத்து வெளுத்தது போல பூக்கள் வெளேர் என இருக்கும்.  இதில் கரு ஊமத்தை என்று ஒரு வகை உண்டு.  அது ரொம்ப விசேஷமானது.  அதை அதிகம் பார்க்க முடியாது.  அதன் தண்டுகள், இலை நரம்புகள், எல்லாம் அர்த்தியான கருநீல நிறத்தில் இருக்கும்.  ஆனாலும் அதனை கரு ஊமத்தை என்றுதான் சொல்லுவார்கள்.

ஊமத்தம் பூ, இலை, காய் எதைச் சாப்பிட்டாலும் புத்தி மாறிவிடும்.  பைத்தியம் புடிச்சிடும்…” என்று பெரியவர்கள் எச்சரிப்பார்கள்.

கிராமத்து சிறுவர்களின்
விளையாட்டுப் பொருட்கள் (DATURA – LEAVES  FLOWERS
AND FRUITS)


ஒரு காலத்தில் பழங்கள், காய்கள், பூக்கள்.  எல்லாம்தான் சிறுவர் சிறுமிகளின் விளையாட்டுப் பொருட்களாக இருந்தன.  ஊதாரணம், நுங்குக் காய் வண்டி, பனை இலைக் காற்றாடி, பூவரசம் பூவின் நாதஸ்வரம்பூவரசங்காய்களில் பம்பரம், கல்யாணமுருங்கையின் சூடுகொட்டை, பல்லாங்குழி விளையாட்டுக்கான புளிய முத்துக்கள், சிவப்பாய் கொட்டைகள், மற்றும் ஆமணக்கு விதைகள்.  இப்படி இந்தப் பட்டியல் நீளும்;.

ஊமத்தங்காய்களை உயரே தூக்கி எறிந்து விளையாடுவது ஒரு வித விளையாட்டு.  ஊமத்தங்காய்களின் மேற்புறம், சிறிய கூரிய முட்கள் இருக்கும்.  அந்தக் காய்களை மேலே எறிந்துவிட்டு உள்ளங்கையின் பின்புறம் வாங்கும் போது, புள்ளிகளாக ரத்தம் துளிர்க்கும்.  எல்லோரும் அதனை செய்ய மாட்டார்கள்.  கொஞ்சம் ஷோ காட்டும் பையன்கள் இந்த வீர சாகசத்தை செய்து காட்டுவார்கள்.  யாரும் இல்லாத சமயம் நான்கூட ஒரு நாள் இந்த வீர சாகசத்தைத் தனியாக நிகழ்த்திப் பார்த்தேன்.

பல மொழிப் பெயர்கள்:

1. தமிழ்: வெள்ளை ஊமத்தை, வெல்லம் மட்டை (VELLAI OOMATHTHAI, VELLAM MATTAI)
2.     மலையாளம்: உன்மத்தா (UNMATHA)3.     மணிப்புரி: சகோல் ஹிடாக் (SAHOL HIDAK)4.     சமஸ்கிருதம்: டாட்டுரா (DATURA)5.     ஹிந்தி: சபேத் டாட்டுரா (SAFED DATURA)


ஆண்டுச்செடிகள் மற்றும்
பல்லாண்டு செடிகள்
(DATURA - ANNUALS AND PERENNIALS)


வெண் ஊமத்தைச் செடிகள், ஆண்டுச் செடியாகவும், பல்லாண்டுச் செடியாகவும் வளரும்.  இதன் பூக்கள் பெரியதாக, வெண்மை நிற நாதஸ்வரம் போல இருக்கும், 12 முதல் 19 செ.மீ. நீளமாக இருக்கும்.  இதன் பழங்கள் முட்டை வடிவில் இருக்கும்.  பழங்களின் மேற்புறம் முட்கள் இருக்கும்.  அதிக பட்சமாக 5 செ.மீ. நீளம் இருக்கும்.  பழங்கள் கனிந்ததும் அவை வெடித்து விதைகளை வெளியேற்றும்.  இதன் பழங்களின் மீது வளைந்த கொக்கி போன்ற முட்கள், பிராணிகளின் உடலில், ரோமத்தில் ஒட்டிக் கொண்டு பல இடங்களுக்கும் பரவும்.

இந்திய செடியாக மாறிவிட்ட
அமெரிக்க செடி(DATURA AMERICAN PLANT
NATURALISED IN INDIA)


அமெரிக்கா, மெக்சிகோ, மற்றும் கவுட்டிமாலாவுக்கு சொந்தமான இந்த ஊமத்தை இந்தியாவில் அறிமுகமாகி ஏறத்தாழ இந்தியச் செடியாகவே மாறிவிட்டது.

ஊமத்தை  ரேபிஸ் நோயை கட்டுப்படுத்தும் அரிய மூலிகை -   DATURA  A VALUABLE
MEDICINE AGAINST RABIES


பல்லாண்டுகாலமாக, ஊமத்தை, பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  வேறிநாய்க் கடியினால் ஏற்படம் ரேபிஸ் என்னும் வெறிநோயை கட்டுப்படுத்தலாம்.  விவண்டு கடியினால் உடலில் சேரும் நச்சத்தன்மையை முறிக்கவும், இது பயன்பட்டு வருகிறது.  இதன் விதைகள் மற்றும் அனைத்துத் தாவரப் பகுதிகளிலும் இந்த சத்தி அபரிதமாக உள்ளது.  முள்ளை முள்ளால் எடுப்பது போல விஷத்தை வித்தால் முறிக்கும் முறை இது.  ஆனால் இது ஒவர் டோஸ் ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  அப்படி அதிகமானால், நேரெதிரான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

ல்லாவிதமான ஊமத்தை வகைகளும் மிகவும் நச்சுத்தன்மை உடையவை.  சில வகை ஊமத்தை வகைகள் பாலுணர்வுத் தூண்டியாகவும் (APHRODISIAC) பயனாகிறது.  ஊமத்தைச் செடிகளின் விதைகள் மற்றும் பூக்கள் மிகவும் நச்சுத்தன்மையுடையவை.

ஆயுர்வேதம், மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகள் மட்டுமின்றி நவீன மருத்துவ முறைகளிலிலும் ஊமத்தை பயன்படுகிறது.

இமையமலைப் பகுதியில்அதிகம் பரவியுள்ளது(FOUND MORE IN HIMALAYAS)


இந்தியாவில் இமையமலைப் பகுதியில் இது அதிகம் பரவியுள்ளது.  தற்போது ஊமத்தை உலகம் முழுவதும் காண்ப்படுகின்றன.  மெரிக்காவின் பாலைவனப் பகுதிகளில் இவை வளர்ந்துள்ளன.

கருஊமத்தை  திருமணஞ்சேரி திருத்தலத்தின் தலமரம் (BLACK DATURA IS THE STHALAVRIKSHAM)


சீனாவை சொந்த ஊராகக் கொண்டது கரு ஊமத்தை.  சீனாவின் முக்கியமான 50 மூலிகைகளில் ஒன்று இந்த கரு ஊமத்தை.  வெள்ளை ஊமத்தைப் போலவே இதுவும் காட்டுச் செடியாக வளர்ந்திருக்கும்.  இதன் தாவரவியல் பெயர் டேட்டுரா மெட்டல் (DATURA MATEL).

கருஊமத்தை திருமணஞ்சேரி திருத்தலத்தின் தலமரமாக உள்ளது.  திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவில் அப்பர் மற்றும் திருஞான சம்மந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம் இது.  இந்தத் தலம் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது.



FOR FURTHER READINGON RELATED TOPICS



1. நீர் பார்க்காத  நான் பார்த்த  மொஜாவ்   பாலைவன  மரங்கள் -  WATER STARVING  TREES OF  MOJAVE  DESERT – Date of Posting; 17.01.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/water-starving-trees-of-mojave-desert.html

2. செக்கோயா  உலகின்  உயரமான   செக்கோயா மரம் -  KING SEQUOIA  WORLDS' TALLEST TREE – Date of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html

3. கலிபோர்னியா  விசிறிப்பனை   சாலைகளுக்கு அழகு தரும் மரம்  -    CALIFORNIA    FAN PALM -    GRACEFUL TREE – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/california-fan-palm-graceful-tree.html

4. டவுக்ளஸ்  பிர் -  பிரபலமான   மின்சார மரம் DOUGLAS FIR - - UTILITY  POLE TREE  – Date of Posting; 16.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/douglas-fir-popular-utility-pole-tree.html

5. சில்க்பிளாஸ்- ஹாலிவுட் அழகுமரம்        -         SILK FLASS -   HOLYWOOD  BEAUTY  TREE  – Date of Posting; 15.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/silk-flass-holywood-beauty-tree.html


6. செடார்  எல்ம் - உறுதி மிக்க  பாறை மரங்கள் -   CEDAR  ELM - STRONG TIMBER TREE – Date of Posting; 14.01.2020 https://vivasayapanchangam.blogspot.com/2020/01/cedar-elm-strong-timber-tree.html

7. டெக்சாஸ் மவுண்டெய்ன் லாரெல்  ட்ரீ - அழகு மரம்      TEXAS MOUNTAIN LAUREL - AWESOME  TREE  – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-mountain-laurel-awesome-tree.html

8. சைனிஸ் பிஸ்டாச்சி  மிரட்டும்  அழகு மரம் - CHINESE PISTACHE -  TREE OF STUNNING  BEAUTY – Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chinese-pistache-tree-of-stunning-beauty.html

9. டெக்ஸாஸ் பெர்சிமான் - சிற்பமும் சிலையும் செய்ய ஏற்ற பழமரம் TEXAS PERSIMON -   EXCELLENT TIMBER TREE – Date of Posting; 11.01.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-persimon-excellent-timber-tree.html

10. சுமார்டு சிவப்பு ஒக் மரம் - கலக்கலான  வணிக மரம்       SHUMARD  RED OAK - TOP CLASS BUSINESS TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/shumard-red-oak-top-class-business-tree.html

11. சாவன்னா  ஹோலி - அழகான  காட்டுமரம்       -       SAVANNA    HOLY -   PRETTY  WILD TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/savanna-holy-pretty-wild-tree.html

12. ரீகல் பிரின்ஸ் ஒக்   -   மரங்களின்  சகல கலா வல்லவன் - REGAL PRINCE  OAK  A VERSATILE  TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/regal-prince-oak-versatile-tree.html

13. மக்னோலியா -  ஒரு மரமே  சிறு வனமாகும்  -  MAGNOLIA - ONE TREE  FOREST – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/magnolia-one-tree-forest.html


14. லைவ் ஒக் -  சமையல் எண்ணை    மரம்    LIVE OAK  -   COOKING OIL TREE  – Date of Posting; 09.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/live-oak-cooking-oil-tree.html

15. ஈஸ்டன் ரெட் செடார் வாசனைத்திரவிய மரம்    EASTERN  RED  CEDAR TREE OF PERFUMES – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/eastern-red-cedar-tree-of-perfumes.html

16. சிட்டல்பா சேம்பியன் ட்ரீ  அங்கீகரிக்கப்பட்ட   அழகு மரம் -  CHITALPA CHAMPION  A STUNNING BEAUTY – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chitalpa-champion-stunning-beauty.html

17. ஒசேஜ் ஆரஞ்சு    மண்ணரிப்பைத் தடுக்க    ரூஸ்வெல்ட்   அதிகம் நட்ட மரம்   -    OSAGE ORANGE     PET TREE OF ROOSEVELT – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html

18. பிக் டூத் மேப்பிள்  சக்கரை  மரம் -  BIG TOOTH MAPLE  SUGAR TREE– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-tooth-maple-sugar-tree.html

19. பால்ட் சைப்ரஸ்  பாரம்பரிய  மருத்துவ மரம் -  BALD CYPRESS  A TRADITIONAL  HERB  – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/bald-cypress-traditional-herb.html

20. புளு அட்லஸ் செடார்  தொழில் மரம் -  BLUE ATLAS CEDAR TREE OF INDUSTRIES – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/blue-atlas-cedar-tree-of-industries.html

21. அனாகேச்சோ ஆர்கிட்  அழகு பூமரம்” -   ANACACHO ORCHID  GRACEFULL  FLOWERING  TREE – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/anacacho-orchid-gracefull-flowering-tree.html

22. கிரேப் மிர்ட்டில்   நீண்ட பூங்கொத்து மரம்      CRAPE MYRTLE     GLAMOROUS     FLOWERING TREE – Date of Posting; 06.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html

23. மெக்சிகன் சைகாமோர் அழகிய மருத்துவ  மரம் -  MEXICAN SYCAMORE -   NICE LOOKING   TREE – Date of Posting; 16.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/mexican-cycamore-tree.html

24. ஜோஷுவா  அமெரிக்க  பூர்வகுடிகள் மரம் -  JOSHUVA  TREE OF AMERICAN  NATIVES – Date of Posting; 02.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/joshuva-tree-of-american-natives.html

25. பப்பாளி உடல் எடை  குறைப்பு மரம்  - PAPAYA  BODY WEIGHT REDUCING TREE – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/papaya-body-weight-reducing-tree.html

26. கார்டியா -  மரச்சாமான்  மரம்-    CORDIA   NICE WOOD WORK  TREE– Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/cordia-nice-wood-work-tree.html

27. பிக்சேஜ் எனும்  நோய் போக்கும்  உண்ணி மரம் - BIG SAGE  A  PLEASING HERB TOO– Date of Posting; 22.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-sage-pleasing-herb-too.html

28. டாக்வுட் ட்ரீ - மலேரியாவை  குணப்படுத்தும் மரம்  -  DOG WOOD  ANTI MALARIA  TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/dog-wood-anti-malaria-tree.html

29. சிவப்பு  மேப்பிள்  மலிவான  மரவாடி மரம் - RED  MAPLE    CHEAP TIMBER TREE  – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/red-maple-cheap-timber-tree.html

REFERENCES     

WWW.EN.WIKIPEDIA.ORG/ “DATURA MATEL”WWW.EN.WIKIPEDIA.ORG/”DATURA STRAMONIUM”WWW.EASYAYURVEDA.COM/”DATURA METEL”WWW.EUL.ORG/COMMON THORN APPLE.
 




No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...