கொரோனா வைரஸ்சுக்குதடுப்பூசி தயார் -
CORONA VIRUS
VACCINE
FOR CONTROL
இன்று ஒரு
குறுஞ்செய்தி
NEWS
TODAY
கொரோனா வைரஸ்பாதிப்பு
6000 பேர்
உலகை மிரட்டும் கொரோனா வைரஸ்சுக்கு இதுவரை 132 பேர் சீனாவில் பலியாகியுள்ளனர். சீனாவில்
கிட்டத்தட்ட 6000 பேர் இன்று இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் அடுத்த பத்து இருபது நாட்களில் இதன் பாதிப்பு அதிகம் இருக்கும்
என்று சொல்கிறார்கள்.
தனி இடத்தில் வைத்து மருத்துவ
சிகிச்சை
அளிக்க வேண்டும்.
நெருக்கமான
தொடர்புகள், மனிதர்களுக்கிடையே இந்த வைரஸ் நோய் பரவ காரணமாகிறது. கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்ட நபர்கள் கடுமையான காய்ச்சலினால் பாதிக்கப்படுவார்கள். இப்படி பாதிக்கப்பட்ட நபர்களை
பாதிப்பு தெரிந்தவுடன் அவளை தனி இடத்தில் வைத்து மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.
கடுமையான காய்ச்சலும்
பலவீனமும்தான் அதன்
முக்கிய அறிகுறிகள்
கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
உடனடியாக கடுமையான காய்ச்சல் ஏற்படும். அவர்கள் மிகுந்த பலவீனமாக உணர்வார்கள். நடக்க பிடிக்க முடியாமல் சிரமப்படுவார்கள். இந்த வைரஸ் தாக்குதல் 10 முதல் 14 நாட்களுக்கு தீவிரமாக நீடிக்கும் என்று
தெரிகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த சீன அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சுற்றுலா பயணிகள்
தங்கள் சீன பயணத்தை
ரத்து செய்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல்
நடமாடும் மருத்துவமனைகள் அதாவது மேக்
ஷிப்ட் ஹாஸ்பிடல்ஸ் என்ற சிறப்பு ஏற்பாட்டினைச் செய்துள்ளது சீன
அரசு. சீனாவிற்குச் சென்று வரும் பயணிகள் உலகம் முழுவதுமே கடுமையான மருத்துவ சோதனைக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். அந்த வகையில் மும்பையில்கூட இரண்டு பயணிகள் கடுமையான
கண்காணிப்பில் உள்ளார்கள்
என தெரிகிறது. அதனால்
சீனாவிற்கு செல்ல இருந்த சுற்றுலா பயணீகள் தங்கள் பயணத்திட்டத்தை ரத்து செய்து வருகிறார்கள்.
யென் குவோக் யுங்க் –
தடுப்பு மருந்தினை
கண்டுபிடித்த
ஹாங்காங் நாட்டின் பேராசிரியர்
YUEN KWOK YUNGPROFESSOR OF HONGKONG UNIVERSITYFOUNDED A VACCINE FOR CORONA VIRUS
யென் குவோக் யுங்க்
(YUEN KWOK YUNG) என்ற ஹாங்காங் நாட்டின் பேராசிரியர்
ஒருவர் இதற்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து உள்ளார்கள். இவர் ஹாங்காங்
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். இதன்மூலம் இன்புளுயன்சா மற்றும்
கொரோனா வைரஸ் நோய்களை தடுக்கலாம்.
ஆனால் இதற்கு செய்ய வேண்டிய சோதனைகள் இன்னும்
பாக்கி உள்ளன அவற்றை உடனடியாக பயன்படுத்த முடியாது என்றும் சொல்கிறார்கள்.
தடுப்பூசி தயார்
என்கிறது சீனாCHINA
SAYS CORONA VIRUS
VACCINE
IS READY
சீன நாட்டு
ஆராய்ச்சியாளர்கள் இன்னும் ஒரு மாதத்தில் இதற்கான தடுப்பூசியை தயார் செய்துவிட முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
ஆனால் அதுவரை கொரோனா கம்முன்னு இருக்குமா என்று பொறுத்திருந்துதான்
பார்க்க வேண்டும்.
FOR FURTHER READING
No comments:
Post a Comment