சைனிஸ் பிஸ்டாச்சி மிரட்டும் அழகு மரம்
CHINESE PISTACHE -
TREE OF STUNNING
BEAUTY
TREE OF CHINA
தே.ஞானசூரிய பகவான், போன்
+ 918526195370,
“பருப்பில்லாமல் கல்யாணமா” என்னும் தமிழ் பழமொழி போல சீனாக்காரர்கள், பிஸ்டாச்சியா இல்லாதப் பூங்காக்களா? என்கிறார்கள்.
அமெரிக்காவில் டெக்ஸஸ் மாநிலத்தில், டல்லஸ், நகரத்திற்கு வந்து சேர்ந்ததும் நான் பார்த்து மயங்கிய முதல் மரம் இதுதான்.
“பருப்பில்லாமல் கல்யாணமா” என்னும் பழமொழி போல சீனாக்காரர்கள், பிஸ்டாச்சியா இல்லாதப் பூங்காக்களா? என்கிறார்கள்.சாலைகளை அழகு படுத்த, நிழலுக்காக, தோட்டங்கள், பூங்காக்கள், வீடுகள் மற்றும் கட்டிட முகப்புகளை அழகுபடுத்த, அலங்கரிக்க உதவும் மரம்.
தாவரவியல் பெயர்: பிஸ்டாச்சியா சைனென்சிஸ் ( PISTACIA CHINENSIS)
தாவரக் குடும்பம் பெயர்: அனாகார்டியேசி (ANACARDIACEAE)
தாயகம்: மத்திய
மற்றும் மேற்கு சைனா, டைவான், பிலிபைன்ஸ் (CENTRAL
AND WESTERN CHINA, TAIWAN, PHILIPPINES)
பொதுப் பெயர்கள்:
சைனிஸ் பிஸ்டாச்சி, கிரீன் அல்மாண்ட், மேஸ்டிக் ட்ரீ, பிஸ்டாச்சியோ, பிஸ்டாச்சியோ நட்டரீ(CHINESE PISTACHE, GREEN ALMOND,
MASTIC TREE, PISTACHIO, PISTACHIO NUT TREE)
“உறுதியான மரம் சுலபமாய் வளருவதில்லை: வேகமாய்
விசும் காற்றிலும் தாங்கி வளர்வதே உறுதியானதாய் வளருகின்றது – ஜே. வில்லியர்ட் மேரியட்”.
சீனா, டைவான் மற்றும்
பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சொந்த மண்ணாகக் கொண்ட மரம் இந்த பிஸ்டாச்சி மரம். சிறிய இலை உதிர்க்கும் மரம். பல நிறங்களில் மாறும் இலைகளை உடைய மரம்.
இதன் பழங்களும் பச்சை, சிவப்பு, நீலம் என பல
வண்ணங்களில் காய்க்கும் மரம். சாலைகளை
அழகு படுத்த, நிழலுக்காக,
தோட்டங்கள், பூங்காக்கள், வீடுகள் மற்றும்
கட்டிட முகப்புகளை அழகுபடுத்த, அலங்கரிக்க உதவும்
மரம்.
வேம்பு போன்ற மரம்(RESEMBLES LIKE NEEM)
அமெரிக்காவில்
டெக்ஸஸ் மாநிலத்தில், டல்லஸ், நகரத்திற்கு வந்து சேர்ந்ததும் நான் பார்த்து
மயங்கிய முதல் மரம் இதுதான். இதன் இலைகள்தான் என்னை தூரத்தில் இருந்து பார்க்க நம்ம வேப்ப மரம் மாதிரியே
இருந்தது. மரத்தின் அருகில் சென்று ஒரு
இணுக்கு இலைகளைப் பறித்தேன்.
வேம்பு இலை மாதிரி
இருந்தாலும் அது வேம்பு இல்லை எனத் தெரிந்தது. வேம்பு இலைகளின் வாசம் இதில் இல்லை. சில நாட்கள் கழித்து போர்ட்வொர்த் நகரத்தில் இருக்கும் தாவரவியல் பூங்காவிற்கு
போனேன். அங்கு போன பின்னால்தான் இது
சீனாவின் பிஸ்டாச்சியா மரம் என்றும் தெரிந்து கொண்டேன்.
தினம் தினம், விட்டை விட்டு வெளியே
செல்லும் போதும் அந்த மரத்தைப் பார்த்துக் கொண்டே செல்வேன். ஒரு நான் பார்க்கிறேன். கொத்துக் கொத்தாகக் காய்கள். பட்டாணி மாதிரி காய்கள்,
ஆனால் அளவில் சிறிய பச்சைப் பட்டானி. சிpல நாட்களில் அவை காவி
நிறமாக மாறின. ஒரிறு நாட்களில் அவை நல்ல
சிவப்பாக மாறின. சில நீல வண்ணத்தில்
மாறின.
இலைகளும் நிறம்
மாறும்(LEAVES BECOME COLORFUL
DURING
FALL)
இப்போது அந்த மரம்
பச்சைப்பசேல் என பசுமை மாறா மரம் மாதிரி இருக்கிறது. வேப்பமரம் மாதிரி கிளைகள். தழையும் தாம்புமாக இருக்கிறது. ஆனால் இலை உதிர் காலத்திற்குள் இந்த இலைகள்
எல்லாமே நிறம் மாறும். மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்று நிறம்
மாறும்.
மரங்களை திட்டமிட்டு நடுகிறார்கள்
சாலை ஒரங்களில், சிறிய மற்றும்
நெடுஞ்சாலைகளில், குடியிருப்புகளில், கடை கண்ணிகளில், என்னென்ன மரங்களை
நடலாம், என தீர்மானத்து நட்டிருக்கிறார்கள். எந்த நாட்டு மரமாக இருந்தாலும் அவை
பொருத்தமானவைகளா? எனப் பார்க்கிறார்கள். அவை அழகானவைகளா? எனப்
பார்க்கிறார்கள். அழகு மரங்களா? மொத்த வடிவத்தில்
அழகு மரங்களா? எனப் பார்த்துப் பார்த்து நட்டிருக்கிறார்கள்.
நடுத்தரமான மற்றும் சிறிய மரம்(SMALL TO MEDIUM TREE)
20 முதல் 30 அடி உயரம் வளரும் நடுத்தரமான மரம். முழுமையான சூரிய வெளிச்சம் தெவைப்படும் மரம்.
வரட்சியைத் தாங்கி வளரும் மரம். பூக்கள்
ஏப்ரல் மாத வாக்கில் பூக்கும். ஆனால் அவை
பற்றி குறிப்பிடும்படி சொல்வதற்கன இந்த பிஸ்டாசியா மரங்கள் என்றால் அவ்றறின்
இலைகளும், பழங்களும்தான் வர்ன ஐhலம் காட்டும்.
வாசனையா? வாடையா (FRAGRANT LEAVES)
இதன் இலைகள்பற்றி
எழுதும் தாவரவியலாளர்கள், வாசனை உள்ள இலைகள் எனக்
குறிப்பிட்டுள்ளார்கள். நான் பார்த்தவரை இதன் இலைகளில் வாடை வருகிறது. வாசனை வரவில்லை. வாசனை வரும் ரகங்கள் தனியாக உள்ளதா? எனத் தெரியவில்லை.
வறட்சியைத் தாங்கி வளரும்(RESISTANT TO DROUGHT)
இந்த மரம் வறட்சியைத்
தாங்கி வளரம், கடினமான களிமண், நடுத்தரமான
இருமண்பாட்டு மண், லேசான மணல்சாரி மண் என பரவலான மண்ணிலும் சிரமமின்றி
வளரும். லேசான அமிலத்தன்மை முதல் மிகையான
உப்பு நிலத்திலும் வளரும். ஆனால்
கடலோரத்தில் சரிவர வளராது.
உள்ளுர் மரங்களுக்கு உதவி செய்யாது(INVASIVE TREE SPECIES)
கலிபோர்னியா
மாநிலத்தில் இதனை, உள்ளுர் மரங்களை வரை விடாத மரம் என்று வகைப்படுத்தி
உள்ளார்கள். இப்படிப்பட்ட மரங்களை “இன்வாசிவ் ஸ்பீசிஸ்” என்று சொல்லுகிறார்கள். பொதுவாக இப்படிப்பட்ட மரங்கள் வேகமான
வளரும். வேகமாகப் பரவும்.
சீனாவில் பயோடீசல்
தயாரிக்கிறார்கள் (BIODIESEL PRODUCTION)
பிஸ்டர்ச்சி மரங்கள்
ஏகப்பட்ட பழங்களை உற்பத்தி செய்யும்.
பிஞ்சுகள் பச்சை நிறமாக. இருக்கும்
பின்னர் சிவப்பு நிறமாக மாறும். கனிந்த
பழங்கள் நீல நிறமாக மாறும். ஒவ்வொரு
பழத்திலும் ஒவ்வொரு விதை இருக்கும் சீனாவில் இதன் விதைகளிலிருந்து பயோடீசல்
தயாரிக்கிறார்கள்.
மரச்சாமன்கள்
செய்கிறார்கள்
(ANY WOODEN ARTICLES)
இதன் மரத்தில்
மரவேலைகள் செய்கிறார்கள். மேஜை நாற்காலி
செய்கிறார்கள். இதர தட்டுமுட்டுச்
சாமான்கள் செய்கிறார்கள். இந்த மரக்
கட்டைகளிலிருந்து மஞ்சள்நிற சாயம் தயாரிக்கிறார்கள்.
“பருப்பில்லாமல் கல்யாணமா” என்னும் பழமொழி போல
சீனாக்காரர்கள், பிஸ்டாச்சியா இல்லாதப் பூங்காக்களா? என்கிறார்கள்.
நன்றி: (புகைப்படம்) சாக்சனி, குடியிருப்பு, டல்லஸ், யு.எஸ்.ஏ (SAXONY RESIDENTAL COLONY, DALLAS, USA)
“அன்று யாரோ ஒருவர் நட்ட மரத்தடியில் இன்று யாரோ ஒருவர் அதன் நிழலில் அமர்ந்துள்ளார்” - வாரன் பப்பெட்
BEAUTIFUL TREES I SAW IN USA
FOR FURTHER READING
ON RELATED TOPICS
1.
ஊமத்தை ரேபிஸ் நோயை
கட்டுப்படுத்தும் அரிய மூலிகை
- DATURA A VALUABLE MEDICINE AGAINST RABIES – Date of Posting; 24.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/datura-best-traditional-herbal-tree.html
2. நீர் பார்க்காத நான் பார்த்த
மொஜாவ் பாலைவன மரங்கள் -
WATER STARVING TREES OF MOJAVE
DESERT – Date
of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/water-starving-trees-of-mojave-desert.html
3.
செக்கோயா உலகின்
உயரமான செக்கோயா மரம் - KING SEQUOIA
WORLDS' TALLEST TREE –
Date of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html
4. கலிபோர்னியா விசிறிப்பனை
சாலைகளுக்கு அழகு தரும் மரம்
- CALIFORNIA FAN PALM - GRACEFUL TREE – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/california-fan-palm-graceful-tree.html
5.
டவுக்ளஸ் பிர் -
பிரபலமான மின்சார மரம் DOUGLAS
FIR - - UTILITY POLE TREE –
Date of Posting; 16.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/douglas-fir-popular-utility-pole-tree.html
6.
சில்க்பிளாஸ்-
ஹாலிவுட் அழகுமரம் - SILK FLASS -
HOLYWOOD BEAUTY TREE – Date of Posting; 15.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/silk-flass-holywood-beauty-tree.html
7.
செடார் எல்ம் - உறுதி மிக்க பாறை மரங்கள் - CEDAR ELM -
STRONG TIMBER TREE –
Date of Posting; 14.01.2020 https://vivasayapanchangam.blogspot.com/2020/01/cedar-elm-strong-timber-tree.html
8.
டெக்சாஸ் மவுண்டெய்ன்
லாரெல் ட்ரீ - அழகு மரம் TEXAS MOUNTAIN LAUREL - AWESOME TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-mountain-laurel-awesome-tree.html
09.
டெக்ஸாஸ் பெர்சிமான்
- சிற்பமும் சிலையும் செய்ய ஏற்ற பழமரம் TEXAS PERSIMON -
EXCELLENT TIMBER TREE –
Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-persimon-excellent-timber-tree.html
10.
சுமார்டு சிவப்பு ஒக்
மரம் - கலக்கலான வணிக மரம் SHUMARD RED
OAK - TOP CLASS BUSINESS TREE –
Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/shumard-red-oak-top-class-business-tree.html
11.
சாவன்னா ஹோலி - அழகான
காட்டுமரம் - SAVANNA
HOLY - PRETTY WILD TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/savanna-holy-pretty-wild-tree.html
12.
ரீகல் பிரின்ஸ்
ஒக் -
மரங்களின் சகல கலா வல்லவன் - REGAL
PRINCE OAK A VERSATILE
TREE – Date
of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/regal-prince-oak-versatile-tree.html
13.
மக்னோலியா - ஒரு மரமே
சிறு வனமாகும் - MAGNOLIA - ONE TREE
FOREST – Date
of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/magnolia-one-tree-forest.html
14. லைவ் ஒக் - சமையல் எண்ணை மரம்
LIVE OAK -
COOKING OIL TREE – Date of Posting; 09.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/live-oak-cooking-oil-tree.html
15.
ஈஸ்டன் ரெட் செடார்
வாசனைத்திரவிய மரம் EASTERN RED
CEDAR TREE OF PERFUMES –
Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/eastern-red-cedar-tree-of-perfumes.html
16.
சிட்டல்பா சேம்பியன்
ட்ரீ அங்கீகரிக்கப்பட்ட அழகு மரம் -
CHITALPA CHAMPION A STUNNING
BEAUTY – Date of
Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chitalpa-champion-stunning-beauty.html
17.
ஒசேஜ் ஆரஞ்சு மண்ணரிப்பைத் தடுக்க ரூஸ்வெல்ட்
அதிகம் நட்ட மரம் - OSAGE ORANGE
PET TREE OF ROOSEVELT
– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html
18.
பிக் டூத்
மேப்பிள் சக்கரை மரம் -
BIG TOOTH MAPLE SUGAR TREE– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-tooth-maple-sugar-tree.html
19.
பால்ட் சைப்ரஸ் பாரம்பரிய
மருத்துவ மரம் - BALD
CYPRESS A TRADITIONAL HERB – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/bald-cypress-traditional-herb.html
20.
புளு அட்லஸ்
செடார் தொழில் மரம் - BLUE ATLAS CEDAR TREE OF INDUSTRIES – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/blue-atlas-cedar-tree-of-industries.html
21.
அனாகேச்சோ
ஆர்கிட் அழகு பூமரம்”
- ANACACHO ORCHID GRACEFULL
FLOWERING TREE – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/anacacho-orchid-gracefull-flowering-tree.html
22.
கிரேப்
மிர்ட்டில் நீண்ட பூங்கொத்து மரம் CRAPE MYRTLE
GLAMOROUS FLOWERING TREE – Date of Posting; 06.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html
23.
மெக்சிகன் சைகாமோர்
அழகிய மருத்துவ மரம் - MEXICAN SYCAMORE -
NICE LOOKING TREE – Date of Posting; 16.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/mexican-cycamore-tree.html
24.
ஜோஷுவா அமெரிக்க
பூர்வகுடிகள் மரம் - JOSHUVA TREE OF AMERICAN NATIVES –
Date of Posting; 02.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/joshuva-tree-of-american-natives.html
25.
பப்பாளி உடல்
எடை குறைப்பு மரம் - PAPAYA BODY
WEIGHT REDUCING TREE –
Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/papaya-body-weight-reducing-tree.html
26.
கார்டியா - மரச்சாமான்
மரம்- CORDIA NICE WOOD WORK TREE–
Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/cordia-nice-wood-work-tree.html
27.
பிக்சேஜ் எனும் நோய் போக்கும்
உண்ணி மரம் - BIG SAGE
A PLEASING HERB TOO– Date of Posting; 22.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-sage-pleasing-herb-too.html
28.
டாக்வுட் ட்ரீ -
மலேரியாவை குணப்படுத்தும் மரம் - DOG
WOOD ANTI MALARIA TREE –
Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/dog-wood-anti-malaria-tree.html
29.
சிவப்பு மேப்பிள்
மலிவான மரவாடி மரம் - RED MAPLE
CHEAP TIMBER TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/red-maple-cheap-timber-tree.html
No comments:
Post a Comment