ஊறுகாய்க்கு உகந்த மரம்
சிலோன் ஆலிவ் மரம்
CEYLON OLIVE
BEST PICKLE TREE
TREE OF
SRILANKA
தாவரவியல் பெயர்: எலியோகார்பஸ் செராட்டஸ் (ELAEOCARPUS SERRATUS)தாவரக்குடும்பம் பொய்: எலியோகார்ப்பேசி (ELAEOCARPACEAE - RUDRAKSH FAMILY)பொதுப் பெயர்கள்: சிலோன் ஆலிவ் ட்ரீ , ஒயில்ட் ஆலிவ் ட்ரீ (CEYLON LIVE TREE, WILD OLIVE TREE) தாயகம்: இலங்கை (SRILANKA)
பலமொழிப் பெயர்கள்:
1. தமிழ்:
காரை,
ஒலன் காரை, காரமரம், உலங்காரை, உத்ராட்சம் (KARAI, ULAN KARAI, KARAMARAM, UTTRATCHAM),
2.மலையாளம்:
அவி,
அவில், காரமாவு, நல்ல காரா, பெரின்காரா, பெருங்காரா, ருத்ராட்சா (AVI, AVIL, KARA MAVU, NALLA KARA,
PERIN KARA, RERUNG KARA, RUDRAKSHA)
3. தெலுங்கு:
அத்த குஞ்சி,
பீகாடா மரா, பீஐடா மரா (ATHTHA
KUNJI, PEECADA MARA)
4.அசாமிஸ்:
Nஐhல்
பாய்
(JOLBAI)
5.பெங்காலி: ஜால் பாய் (JALBAI)
6.மணிப்பூர்:
கோர்பான் (KORBAN)
இந்தியா, இந்தோசைனா, மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் இருக்கும் பழ மரம் இந்த சிலோன் ஆலிவ் மரம், ஆனால் இது பாரம்பரியமாக ஸ்ரீலங்காவிற்கு சொந்தமான
மரம்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது (NUTRITIOUS FRUIT)
இந்த ஆலிவ் மரத்தின்
பழங்கள் பசுமையாக இருக்கும். முட்டை
வடிவத்தில் இருக்கும். அது ஊட்டச்சத்து மிக்க பழம்.
அதுமட்டுமல்ல, அது மருத்துவ
குணங்கள் கொண்டதும் கூட. இந்த பழங்களில்
கூடுதலான மாவுச்சத்து மற்றும் சர்க்கரைச்சத்தும் அடங்கியுள்ளது. இது மலச்சிக்கலுக்கு அற்புதமான மருந்து. இந்த சிலோன் ஆலிவ் பழங்கள் ஸ்ரீலங்காவின்
பிரபலமான ஊறுகாய். 3
முதல் 5 விதைகள் உள்ள இந்தப் பழங்கள் உருண்டை மற்றும்
முட்டை வடிவத்தில் இருக்கின்றன. பழங்களில்
காவிநிற விதைகள் இருக்கும்.
மரங்கள் பரவியிருக்கும் இடங்கள் (DISTRIBUTION OF TREES)
இந்தியாவில் கர்நாடகா, கேரளா, மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, அஸ்சாம், மணிப்பூர், மற்றும் நேப்பாளம், பங்ளாதேஷ், ஸ்ரீலங்கா, இந்தோசைனா, மியான்மர், மலேசியா ஆகிய இடங்களிலும் இந்த மரங்கள் பரவியுள்ளன.
மரங்கள் நடுத்தர உயரமாக வளரும்
சிலோன் ஆலிவ் மரங்கள்
18 மீட்டர் வரை உயரமாக வளரும். பசுமை மாறாத இந்த மரங்கள், கடல்மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளில் வளரும். மரத்தின் பட்டைகள் வழுவழுப்பாக இருக்கும். காவி நிறமாக இருக்கும். பட்டை நீக்கினால் உட்புற மரம், அழகான ஆரஞ்சு நிறத்தில் தெரியும்.
வெண்மை நிற சிறிய பூக்கள் (SMALL WHITE FLOWERS)
பூக்கள் சிறியதாக
இருக்கும். வெண்மை நிறமாக இருக்கம். ஒற்றைக் கிளைகள் கொண்ட பூங்கொத்துக்களில் பூக்கும்.
இது உத்ராட்சம் அல்ல (THIS IS NOT RUDRAKSHAM)
சிலோன் ஆலிவ் மரம்
உத்ராட்சம் அல்லது ருத்ராட்சம் என்னும் தாவரவகையைச் சேர்ந்ததுதான். அந்த மரமும் இந்த தாவரக் குடும்பத்தைச்
சேர்ந்ததுதான். ஆனால் அதன் தாவரவியல்
பெயர் எலியோகார்யஸ் கேனிட்ரஸ் (ELEOCARPUS GANITRUS). இந்த
மரங்கள் பெரும்பாலும் இமயமலைப் பகுதிகளில் உள்ளன.
தென்னிந்தியாவில், இவை நீலகிரி, மைசூர் ஆகிய இடங்களில் மட்டும் உள்ளன.
தமிழ் பெயர்கள் (TAMIL NAMES)
தமிழில் இதற்கு பல
பெயர்கள் உண்டு. காரை, ஒலன் காரை, காரமரம், உலங்காரை, மற்றும் உத்ராட்சம் என்றும் சொல்லுகிறார்கள். “உத்தராட்சம்” என அழைத்தாலும் ருத்ராட்சம் என்பது வேறு மரம், இது வேறு மரம்.
ஆனால் இரண்டும் “எலியோகார்ப்பேசி” என்னும் ஒரே தாவரக்குடும்பத்தைச்
சேர்ந்தவை. அதனால் உத்ராட்சம் என்றதும் குழம்ப வேண்டாம்.
REFERENCES:
No comments:
Post a Comment