சிலோன் செர்ரி
மேஜை நாற்காலி மரம்
CEYLON CHERRY
TREE OF FURNITURES
தே. ஞானசூரிய பகவான், போன்: + 91-8526195370இEmail: gsbahavan@gmail.com
PRUNUS CEYLANICA
தாவரவியல்
பெயர்: புரூனஸ் செய்லானிகா
(PRUNUS CEYLANICA) தாவரக்குடும்பம்
பெயர்: ரோசேசி (ROSACEAE)
பொதுப்
பெயர்கள்: சிலோன் செர்ரி
(CELON CHERRY)
பல மொழிப் பெயர்கள்:
1.மலையாளம்: அட்டநாரி போங்கு, இரட்டாணி, முட்டக்கோன், நாய்கம்பகம், நாய்கம்பகம், ரெட்டியான் (ATTANARI BONGU, RATTANI, MUTTAKKON, NAI KAMBAGAM, NAI THAMBAGAM, PALANKACHI)
2.மராத்தி: டாகா, கவுலா, கோகல்(DHAKA, KAULA, KOGAL)
3.தமிழ்: ஆட்டன்ரி கோங்கு, முட்டைநாரி கோங்கு, பாலன்கச்சி (ATTANRI KONGU, MUTTAI NAARI
KONGU, PALANKACHI)
தெற்கு மற்றும் வடகிழக்கு இந்தியா (DISTRIBUTION IN SOUTH AND NORTH EAST INDIA)
தமிழ்நாட்டில், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், நாமக்கல்,
நீலகிரி, சேலம், தேனி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய
மாவட்டங்களில் காணப்படுகின்றன. கேரளாவில் இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, கொல்லம், கலப்புறம்,
பாயக்காடு, திருவனந்தபுரம், திருச்சூர் ஆகிய
மாவட்டங்களில் பரவியுள்ளது. கர்நாடகா
மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலங்களிலும் இந்த மரம் பரவலாகக் காணப்படுகிறது. அசாம்,
மேகாலயா ஆகிய வடகிழக்கு மாநிலங்களிலும் இந்த
மரங்கள் பிரபலமாக உள்ளன என்று
சொல்லுகிறார்கள்.
செர்ரி பிளம் பீச் மாதிரி மரங்கள்: (TREES LIKE CHERRY PLUM AND PEACH )
மரங்களையும், சிறு மரங்களையும்
உடையது புரூனஸ் என்னும் தாவரக் குடும்பம்.
இவற்றில் பெரும்பாலானவை நமக்குத் தெரிந்த பழவகை மரங்கள். செர்ரி,
பிளம்,
பீச்,
ஆப்ரிகாட், மற்றும் வாதாம்கொட்டை
(BADAM NUT) எல்லாமே இந்த புரூனஸ் வகையறாதான். இந்தத் தாவரக் குழுவில் சுமார் 430 வகையான தாவரவகைகள்
உள்ளன.
மரங்களும்
பட்டைகளும் (TREES AND BARKS)
முட்டைநாரி கோங்கு மரங்கள் பெரிய மரங்களாக வளரும். அதிகபட்ச உயரமாக 70 முதல் 80 அடி உயரம்வரை வளரும்;. மரத்தின் பட்டைகள் சாம்பல் நிறமாக இருக்கும். பட்டைகள் தானாக பெரும் செதில்களாக உறிந்து உதிரும்.
உட்புறப் பட்டை, பாதாம் கொட்டை மாதிரி வாசம் வீசும். அல்லது மூட்டைப்பூச்சியின் அந்த வாடை வீசும் ?
மேஜை நாற்காலி செய்ய ஏற்ற மரவகை (BEST FURNITURE WOOD)
இந்த
மரம் குறித்தத் தகவல்கள் அதிகம் கிடைக்கவில்லை.
ஆனால் இந்த மரம் அழிந்து வரும் மரவகை என ஸ்ரீலங்காவில்
அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இது
நிச்சயமாக ஒரு பயனுள்ள மரமாக இருக்க வேண்டும்.
அதிகமான உபயோகத்தினால் இந்த மரம் விரைவாக அழிக்கப்பட்டிருக்கும்.
இதன்
மரக்கட்டைகள் (TIMBER
WOOD) மஞ்சள் மற்றும் சிவப்பு நிறமாக
இருக்கும். சுமாரான தரம் உடைய மரம்தான்
என்கிறார்கள். ஆனால் அதிக அளவில் இவற்றை
மேஜை நாற்காலி வகையான மரச்சாமான்கள், பெட்டிகள், சட்டங்கள் தயாரிப்பு
மற்றும் விறகாகவும் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.
No comments:
Post a Comment