Thursday, January 16, 2020

CALIFORNIA FAN PALM - GRACEFUL TREE - கலிபோர்னியா விசிறிப்பனை



கலிபோர்னியா விசிறிப்பனை 
சாலைகளுக்குஅழகு தரும் மரம்  


CALIFORNIA  
FAN PALM -  
GRACEFUL TREE


CALIFORNIA 
FAN PALM 
TREE


TREE OF
NORTH 
AMERICA

இந்தியாவில் பனைமரம் என்றால் அதற்கு உரியது தமிழ்நாடு.  அப்படி அமெரிக்காவிற்கு கலிபோர்னியா.  எனது அமெரிக்கப் பயணத்தில் மூன்று நாட்கள் லாஸ் ஏஞ்சல்ஸ்ல் தங்கி இருந்தேன்.


சென்னை மவுண்ட் ரோடில் இரண்டு பக்கமும் பனை மரங்கள் நட்டு வைத்தால் எப்படி இருக்கும். அப்படித் தான் அங்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முக்கிய சாலைகளில் எல்லாம் அழகுபடுத்துபவை பனை மரங்கள்தான்.


இங்கு பனைகள் எல்லாம் பாலைவனங்களை உதறிவிட்டு சாலைகளுக்கும் சோலைகளுக்கும் வந்துவிட்டன.  இன்று நகரங்களை அலங்கரிக்கும் புதுப்பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளன.


தே. ஞானசூரிய பகவான், போன்: + 91- 8526195370
Email: gsbahavan@gmail.com



தாவரவியல் பெயர்: வாஷிங்டோனியா பிலிபெரா(WASHINGTONIA FILIFERA)தாவரக்குடும்பம் பெயர்: அரிகேசி (ARICACEAE)தாயகம்: வட அமெரிக்காவின் தென் மேற்குப் பகுதிகள் மற்றும் பஜா கலிபோர்னியா (SOUTH WESTERN UNITED STATES AND BAJA CALIFORNIA)பொதுப் பெயர்கள்: டெசர்ட் பேன் பாம், கலிபோர்னியா பேன் பாம், கலிபோர்னியா பாம், பெட்டிகோட் பாம்,( DESERT FAN PALM, CALIFORNIA FAN PALM, CALIFORNIA PALM, PETTI COAT PALM, AMERICAN COTTON PALM, ARIZONA FAN PALM)


இன்றைக்கு நாம் பார்க்கப் போவது கலிபோர்னியாவின் விசிறிப் பனை மரம்.  இதப்பற்றி தெரிஞ்சிக்கறதுக்கு முன்னாடி பொதுவாக பனை மரங்களைப் பற்றி தெரிஞ்சிக்கலாம்.  

உலகத்தில் மொத்தம் 2500 வகையான பனைமரங்கள் இருக்கு.  அதில் பதினோரு வகையான பனை வகைகள் வட அமெரிக்காவில் இருக்கு.  அவற்றில் ஒன்றுதான் இந்த கலிபோர்னியா விசிறி பனை மரம்.  இதன் மட்டைகள் விசிறிபோல இருப்பதால் இதன் பெயர், விசிறிப்பனை.  இந்தப் பனைக்கு சொந்த மண், கலிபோர்னியா.

கலிபோர்னியா, அமெரிக்காவின் பெரிய விவசாய பூமி(CALIFORNIA LARGEST AGRICULTURAL ECONOMY)


அமெரிக்காவில் பசுபிக் பகுதியில் உள்ள மாநிலம் கலிபோர்னியா.  அதிக விவசாய உற்பத்தி செய்யும் மாநிலமும் இதுதான்.  உலகின் பெரிய மரங்கள் என்பது கலிபோர்னியாவின் செம்மரங்கள்தான்.  அதன் பெயர் செக்கோயா மரங்கள்.  சினிமா உலகின் தலைமைப் பீடம் என்று சொல்லும் ஹாலிவுட் இங்குதான் உள்ளது.  மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலம்.  லாஸ் ஏஞ்சல்ஸ் இருப்பதும் இங்குதான்.  சர்வதேச புகழ்பெற்ற நடிகர் அர்னால் ஸ்வாஸ்நேகர் கவர்னராக இருந்ததும் இங்கு தான்.

இந்தியாவிற்கு பனைமரம் என்றால் தமிழ்நாடு, அமெரிக்காவிற்கு கலிபோர்னியா (CALIFORNIA KNOWN FOR PALM TREES)


இந்தியாவில் பனைமரம் என்றால் அதற்கு உரியது தமிழ்நாடு.  அப்படி அமெரிக்காவிற்கு கலிபோர்னியா.  எனது அமெரிக்கப் பயணத்தில் மூன்று நாட்கள் லாஸ் ஏஞ்சல்ஸ்ல் தங்கி இருந்தேன்.  அங்கு பனை மரங்கள் இல்லாத ஒரு இடத்தைக் கூட நான் பார்க்கவில்லை.  இங்கு நான்கு வகைப் பனை மரங்கள் இருக்கின்றன.  சென்னை மவுண்ட் ரோடில் இரண்டு பக்கமும் பனை மரங்கள் நட்டு வைத்தால் எப்படி இருக்கும்? அப்படித் தான் அங்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முக்கிய சாலைகளில் எல்லாம் அழகுபடுத்துபவை பனை மரங்கள்தான்.

கலிபோர்னியாவை அழகுபடுத்தும் நான்கு வகைப் பனைகள் (FOUR BEAUTIFUL PALM TREES OF CALIFORNIA)


இங்கு நகரங்களில் பரவலாக நான்கு வகையான பனைமரங்கள் அழகுக்காக நட்டிருக்கிறார்கள்.  உயர உயரமான மரங்கள்.  ஒன்று கலிபோர்னியா விசிறிப்பனை.  இரண்டாவது மெக்சிகோவிற்கு சொந்தமான மெக்சிகன் விசிறிப் பனை, மூன்றாவது ஸ்பெயின் தேசத்தின் கேனரி தீவின் டேட் பாம், நான்காவது அதிகம் காணப்படும், தென் அமெரிக்காவின் குயின்பாம் (CALIFORNIA FAN PALM, CANARY ISLAND DATE PALM, AND QUEEN PALM).  இந்த நான்கில் கலிபோர்னியா பனையுடன் நெருக்கமான உறவுள்ளது மெக்சிகன் விசிறிப்பனை.  இதன் தாவரவியல் பெயர், வாஷிங் டோனியா ரொபஸ்டா (WASHINGTONIA ROBUSTA)

கலிபோர்னியா விசிறிப்பனை பாலைவனங்களில் பரவியிருக்கும் மரங்கள் (TREES SUITABLE FOR DESERTS)


இந்த மரங்கள் 100 அடி உயரம் வளரும்.  250 ஆண்டுகள் உயிருடன் இருக்கும்.  பாலை வனங்களில் ஒயாசிஸ் களில் இந்த மரங்கள் வளர்ந்துள்ளன.  கொலரோடோ பாலைவனம், மொஜாவ் பாலைவனம், சோனோரான் பாலைவனம், டெத்வேலி என்னும் மரணப் பள்ளத்தாக்கு மற்றம் புளோரிடா, ஹவாய், விர்ஜின் தீவுகள் இங்கெல்லாம் இந்த மரங்கள் அதிகம் இருக்கின்றன.

மரங்களின் வயது 250 ஆண்டுகள்(250 YEARS OLD TREES)


இந்த மரத்தின் பழங்களைப்.  பறித்து பச்சையாக சாப்பிடலாம்.  சமைத்தும் சாப்பிடலாம்.  அமெரிக்கப் பழங்குடிகள் இதில், பலவிதமான உணவுப் பொருட்களை தயாரித்து சாப்பிட்டார்கள்.  இதன் பழங்கள் அரை அங்குல அளவுதான் இருக்கும்.  பழங்களில் சதைப்பற்றும் மெல்லியதாக இருக்கும்.  கொட்டை பெரிதாக இருக்கும்.  இதன் பழங்கள், விதைகள், மற்றும் இலைகள்தான் அவர்களுக்கு பஞ்சகாலஉணவு.  ஆனால் நவீன நாகரீக உலகில் இவை நகரங்களில் குடியேறிவிட்டன.

இங்கு பனைகள் எல்லாம் பாலைவனங்களை உதறிவிட்டு சாலைகளுக்கும் சோலைகளுக்கும் வந்துவிட்டன.  இன்று நகரங்களை அலங்கரிக்கும் புதுப்பொறுப்பை ஏற்றுக் கொண்டள்ளன.

அரசு அதிகாரிகள் வேறு மரங்களை நட ஆர்வம் காட்டுகிறார்கள் (FORESTERS PREFER OTHER TREES)


லாஸ் ஏஞ்சல்ஸ் நகர வனத்துறை வல்லுநர்கள், பனைக்கு பதிலாக ஒக் மற்றும் சைகாமோர் மரங்களை நட பிரியப்படுகிறார்கள்.  கேட்டால், பனைமட்டைகளை பொறுக்கி எடுப்பதற்கு பாடாய்பட வேண்டி உள்ளது என்று சொல்லுகிறார்கள்.

லாஸ் ஏஞ்சால்ஸ் நகரில் மட்டை பொறுக்க மட்டும் ஆண்டுக்கு 4 லட்சம் டாலர் செலவாகிறது என்று கையைப் பிசைகிறார்கள், அரசு அதிகாரிகள்.  என்னதான் சொன்னாலும் சாலைகளில் பனை மரங்கள் வரிசை கட்டி நிற்பதன் அழகே அழகு.  மற்ற மரங்களைப்போல பனைமரங்கள் காற்றை சுத்தம் செய்யவில்லை.  குளிர்ச்சி தரவில்லை என்று குற்றம் சொல்லுகிறார்கள்.

இப்படி எதாச்சும் காரணம் சொல்லி இந்த அழகுப் பனைகளை மீண்டும் பாலை வனத்திற்குன் ஒதுக்கித் தள்ளி விடுவார்களோ? பனை மரங்களுக்கு பரித்து பேசு வார் எங்குமே இல்லை எனத் தோன்றுகிறது.


FOR FURTHER READINGON RELATED TOPICS


1. ஊமத்தை   ரேபிஸ் நோயை  கட்டுப்படுத்தும்  அரிய மூலிகை -    DATURA  A VALUABLE MEDICINE AGAINST RABIES – Date of Posting; 24.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/datura-best-traditional-herbal-tree.html

2. நீர் பார்க்காத  நான் பார்த்த  மொஜாவ்   பாலைவன  மரங்கள் -  WATER STARVING  TREES OF  MOJAVE  DESERT – Date of Posting; 17.01.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/water-starving-trees-of-mojave-desert.html

3. செக்கோயா  உலகின்  உயரமான   செக்கோயா மரம் -  KING SEQUOIA  WORLDS' TALLEST TREE – Date of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html


4. டவுக்ளஸ்  பிர் -  பிரபலமான   மின்சார மரம் DOUGLAS FIR - - UTILITY  POLE TREE  – Date of Posting; 16.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/douglas-fir-popular-utility-pole-tree.html

5. சில்க்பிளாஸ்- ஹாலிவுட் அழகுமரம்        -         SILK FLASS -   HOLYWOOD  BEAUTY  TREE  – Date of Posting; 15.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/silk-flass-holywood-beauty-tree.html


6. செடார்  எல்ம் - உறுதி மிக்க  பாறை மரங்கள் -   CEDAR  ELM - STRONG TIMBER TREE – Date of Posting; 14.01.2020 https://vivasayapanchangam.blogspot.com/2020/01/cedar-elm-strong-timber-tree.html

7. டெக்சாஸ் மவுண்டெய்ன் லாரெல்  ட்ரீ - அழகு மரம்      TEXAS MOUNTAIN LAUREL - AWESOME  TREE  – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-mountain-laurel-awesome-tree.html

8. சைனிஸ் பிஸ்டாச்சி  மிரட்டும்  அழகு மரம் - CHINESE PISTACHE -  TREE OF STUNNING  BEAUTY – Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chinese-pistache-tree-of-stunning-beauty.html

9. டெக்ஸாஸ் பெர்சிமான் - சிற்பமும் சிலையும் செய்ய ஏற்ற பழமரம் TEXAS PERSIMON -   EXCELLENT TIMBER TREE – Date of Posting; 11.01.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-persimon-excellent-timber-tree.html

10. சுமார்டு சிவப்பு ஒக் மரம் - கலக்கலான  வணிக மரம்       SHUMARD  RED OAK - TOP CLASS BUSINESS TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/shumard-red-oak-top-class-business-tree.html

11. சாவன்னா  ஹோலி - அழகான  காட்டுமரம்       -       SAVANNA    HOLY -   PRETTY  WILD TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/savanna-holy-pretty-wild-tree.html

12. ரீகல் பிரின்ஸ் ஒக்   -   மரங்களின்  சகல கலா வல்லவன் - REGAL PRINCE  OAK  A VERSATILE  TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/regal-prince-oak-versatile-tree.html

13. மக்னோலியா -  ஒரு மரமே  சிறு வனமாகும்  -  MAGNOLIA - ONE TREE  FOREST – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/magnolia-one-tree-forest.html


14. லைவ் ஒக் -  சமையல் எண்ணை    மரம்    LIVE OAK  -   COOKING OIL TREE  – Date of Posting; 09.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/live-oak-cooking-oil-tree.html

15. ஈஸ்டன் ரெட் செடார் வாசனைத்திரவிய மரம்    EASTERN  RED  CEDAR TREE OF PERFUMES – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/eastern-red-cedar-tree-of-perfumes.html

16. சிட்டல்பா சேம்பியன் ட்ரீ  அங்கீகரிக்கப்பட்ட   அழகு மரம் -  CHITALPA CHAMPION  A STUNNING BEAUTY – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chitalpa-champion-stunning-beauty.html

17. ஒசேஜ் ஆரஞ்சு    மண்ணரிப்பைத் தடுக்க    ரூஸ்வெல்ட்   அதிகம் நட்ட மரம்   -    OSAGE ORANGE     PET TREE OF ROOSEVELT – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html

18. பிக் டூத் மேப்பிள்  சக்கரை  மரம் -  BIG TOOTH MAPLE  SUGAR TREE– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-tooth-maple-sugar-tree.html

19. பால்ட் சைப்ரஸ்  பாரம்பரிய  மருத்துவ மரம் -  BALD CYPRESS  A TRADITIONAL  HERB  – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/bald-cypress-traditional-herb.html

20. புளு அட்லஸ் செடார்  தொழில் மரம் -  BLUE ATLAS CEDAR TREE OF INDUSTRIES – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/blue-atlas-cedar-tree-of-industries.html

21. அனாகேச்சோ ஆர்கிட்  அழகு பூமரம்” -   ANACACHO ORCHID  GRACEFULL  FLOWERING  TREE – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/anacacho-orchid-gracefull-flowering-tree.html

22. கிரேப் மிர்ட்டில்   நீண்ட பூங்கொத்து மரம்      CRAPE MYRTLE     GLAMOROUS     FLOWERING TREE – Date of Posting; 06.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html

23. மெக்சிகன் சைகாமோர் அழகிய மருத்துவ  மரம் -  MEXICAN SYCAMORE -   NICE LOOKING   TREE – Date of Posting; 16.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/mexican-cycamore-tree.html

24. ஜோஷுவா  அமெரிக்க  பூர்வகுடிகள் மரம் -  JOSHUVA  TREE OF AMERICAN  NATIVES – Date of Posting; 02.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/joshuva-tree-of-american-natives.html

25. பப்பாளி உடல் எடை  குறைப்பு மரம்  - PAPAYA  BODY WEIGHT REDUCING TREE – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/papaya-body-weight-reducing-tree.html

26. கார்டியா -  மரச்சாமான்  மரம்-    CORDIA   NICE WOOD WORK  TREE– Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/cordia-nice-wood-work-tree.html

27. பிக்சேஜ் எனும்  நோய் போக்கும்  உண்ணி மரம் - BIG SAGE  A  PLEASING HERB TOO– Date of Posting; 22.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-sage-pleasing-herb-too.html

28. டாக்வுட் ட்ரீ - மலேரியாவை  குணப்படுத்தும் மரம்  -  DOG WOOD  ANTI MALARIA  TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/dog-wood-anti-malaria-tree.html

29. சிவப்பு  மேப்பிள்  மலிவான  மரவாடி மரம் - RED  MAPLE    CHEAP TIMBER TREE  – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/red-maple-cheap-timber-tree.html

REFERENCES:
1.      WWW.EN.M.WIKIPEDIA.ORG / WASHING TONIA FILIFERA
2.      WWW.LAASSOBSECT.ORG/ A BRIEF HISTORY OF PALM TREES IN CALIFORNIA.
3.      WWW.SUNSET.COM/ 5 ICONIC PALM TREES FOR HOME GARDENS.
4.      WWW.SESERTUSA.COM / CALIFORNIA FANPALM.

புகைப்படங்கள்: லாஸ் ஏஞ்சல்ஸ், யூ.எஸ்.ஏ.


No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...