BLUE ATLAS
CEDAR - SHELTER BELT TREE
தாவரவியல் பெயர்: கிளாகா பெண்டுலா (GLAUCA PENDULA)தாவரக் குடும்பம் பெயர்: பைனேசியே (PINACEAE) தாயகம்: வடக்கு ஆப்ரிக்காவின் அட்லஸ் மலைத் தொடர் (ATLAS MOUNTAINS OF NORTH AFRICA)பொதுப் பெயர்கள்: வீப்பிங் புளு அட்லஸ் செடார் (WEEPING BLUE ATLAS CEDAR
செடார் மரங்களில்
பலவகை உண்டு. எல்லா செடார் மரங்களுமே ஊசிபோன்ற இலைகளை உடையவை. எல்லாமே பெரிய பெரிய மரங்கள். அதனால் பெரிய தோட்டங்கள், பெரிய பூங்காக்கள், பெரிய சாலைகள்
போன்றவற்றிலேயே நடலாம். வேலி மரங்களாக
நடலாம். காற்று தடுக்கும் மரங்களாக
நடலாம். ஆனால் இந்த புளு அட்லஸ் செடார்
மரம் அதிகபட்சமாக 12 அடி உயரம்தான் வளரும். பொதுவாக செடார் மரங்கள் எல்லாம், வேகமாக வளரும். பரவலான பருவநிலை, கால நிலை உள்ள
இடங்களில் எல்லாம் வளரும்.
செடார் மரவகைகள் (IMPORTANT CEDAR, TREES)
செடார் மரவகைகளில்
நான்கு வகைகளை முக்கியமானவை என்று வகைப்படுத்துகிறார்கள். லெபானான் செடார், அட்லஸ் செடார், டியோடர் செடார், சைப்ரஸ்செடார் என நான்கு
வகைகள். இவற்றில் டியோடர் செடார் என்பது
இமையமலையின் மேற்குச் சரிவுகளுக்குச் சொந்தமானவை. இவைத்தான் நாம் “தேவதாரு” மரம் என்று
சொல்லுகிறோம். இது உலகம் முழுவதும்
பரவியுள்ளது.
இந்த நான்குவகை
அல்லாமல் “சைபீரியன் செடார்” என ஒரு வகையும் சொல்லுகிறார்கள். அந்த மரங்கள் பைன்மர வகையைச் சேர்ந்தவை. உண்மையாக இவை செடார் மரவகைளை சேராதவை. இதன் தாவரவியல் பெயர் பைனஸ் சைபீரிகா (PINUS
SIBERICA)
இந்திய செடார் மரம் (INDIAN CEDAR TREE)
இமாலயன் செடார்
என்றும் டியோடர் செடார் எனவும் அழைக்கப்படும்.
செடார் மரவகை, இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், திபெத்து, நேப்பாளம் ஆகிய
நாடுகளைக் தாயகமாகக் கொண்டது. இந்த மரங்கள், 5000 அடி முதல் 11,000 அடி வரை உயரம் உள்ள
பகுதிகளில் வளரும்.
ஒரு வித்தியாசமான செடார் மரம்(A DIFFERENT CEDAR TREE)
இது ஒரு வித்தியாசமான
செடார் மரம். அழகு மரமாக வளர்க்க ஏற்ற
மரம். உயரமாக வளராத ஒரு சிறுமரம். இந்த மரம் இயற்கையாக மெல்ல வளரும். இதன் கிளைகள் கொடிபோன்று தவழ்ந்து வளரும். ஒட்டுமொத்தமாக இந்த மரத்தைப் பார்த்தால் ஒரு
நீர் ஊத்து போல தோற்றம் தரும்.
அதுமட்டுமல்ல இந்த மரத்தை எந்த வடிவத்திலும் மாற்றி அமைக்க முடியும்.
இந்த மரத்தின் இலைகள்
ஊசி இலைகள் போல இருந்தாலும் இதன் வண்ணம் கவர்ச்சிகரமானவை. நீலம்,
பச்சை,
மற்றும் வெள்ளை என அனைத்தும் சேர்ந்தது மாதிரியான நிறம். இலைகளுடன் சேர்த்து கிளைகளைப் பார்த்தால் பூச்சரம் போல தோன்றும். தனது கிளைகளைக் கொண்டே தன்னை அலங்கரித்துக்
கொள்ளும் மரம் இது.
எங்கு வளரும்?
( SUITABLE PLACE TO GROW)
முழுமையான சூரிய வெளிச்சம் இதற்குப் பிடிக்கும். நல்ல வடிகால் வசதி இதற்குப் பிடிக்கும். சுமாரான ஈரப்பசை இருக்கும் நிலவாகு
பிடிக்கும். இவை தவிர வெப்பமான தட்ப வெப்ப
நிலை பிடிக்கும். அத்தோடு வறட்சியைத்
தாங்கியும் விருப்பமுடன் வளரப்
பிடிக்கும். இது குறைந்தபட்சம் 3 அடி அதிகபட்சம் 12 அடி வளரும். இதனை வளர்ப்பது சுலபம் கவாத்து செய்ய வேண்டிய
அவசியம் இல்லை. நாம் விரும்பும் உயரத்தில்
பராமரிக்கலாம். நாம் விரும்பும் பரப்பளவில்
இதனை பராமரிக்கலாம். நாம் விரும்பும்
வடிவத்தில் பராமரிக்கலாம்.
நீல சடைச் செடார் மரம்( WEEPING BLUE DALLAS CEDAR)
இந்த அழகு மரத்தை
நான் முதல் முதலாக டல்லஸ் நகரத்தின் தாவரவியல் பூங்காவில்தான் பார்த்தேன். தொலைவிலிருந்து பார்க்கும் போதே அழகாய்த்
தென்பட்டது. இதனை நான் கொடி என்றே
நினைத்தேன். இதன் இலைகள் ஒரு வித்தியாசமான
வண்ணம் கொண்டது. சடை சடையாய் இலைகளுடன்
தொங்கும் இந்த மரத்திற்கு பெயர் வைக்கச் சொன்னால் நான் “சடைச் செடார்” மரம் எனது
வைப்பேன். மரத்தை நேரில் பார்த்தால்
நீங்களும் சரி என்பீர்;கள். இந்த
வீப்பிங் பூளு அட்லஸ் செடார் மரத்திற்கு நான் சூட்டி இருக்கும் நாமகரணம் “நீல சடைச்செடார் மரம்”. இந்தப் பெயரை அந்த மரத்தின் காதில் மூன்றுமுறை
சொல்லிவிட்டு வந்தேன்.
புதிய கன்றுகளை
உருவாக்கும் முறை(PROPAGATION)
செடார் மரக்கன்றுகளை உருவாக்குவது என்பது சுலபம். விதைகள் மூலம் கன்றுகளை உற்பத்தி
செய்யலாம். இளம் கன்றுகளை, எலிகள். அணில்கள் போன்றவற்றிலிருந்து
பாதுகாக்க வேண்டும். செடார் மரக்
கன்றுகளின் பட்டைகளை இந்தப் பிராணிகள் பிரியமாக சாப்பிடும். அவை
“சிவிங் கம்” மெல்லவது மாதிரி
மென்று சுவைக்கும். அதனால் இளங்கன்றுகளை அவற்றிலிருந்து பாதுகாக்க வேண்டுவது
அவசியம்.
மான்களால்
மேயப்படாத மரம்(DEER RESISTANT)
நம்ம ஊரில் மரம்
வளர்ப்பது என்றால் அது ஆடு மாடுகளால் மேயப்படாத மரமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அவற்றின் மேய்ச்சலிலிருந்து
மரக்கன்றுகள் தப்பிக்க முடியாது.
வெள்ளாடுகள். முன்னங்கால்களை மரங்களின் மீது ஊன்றி
மரங்களின். துளிர்ப்பகுதிகளை துவம்சம்
செய்வதை நான் பல முறைப் பார்த்திருக்கிறேன்.
கிட்டத்தட்ட 10 அடி உயரம் உள்ள இரண்டு ஈச்ச மரங்களின் ஊடாக ஏறி
ஒரு வெள்ளாட்டுக் குட்டி மேய்வது போல ஒரு வீடியோ படத்தைப் பார்த்தேன்.
அதனால் இந்தியாவில்
ஆடுகளை காடுகளின் எதிரி என்று சொல்லுவார்கள்.
அதுபோல மரக்கன்றுகளை விற்பனை செய்யும் “நர்சரி” வியபாரிகள்” இது மான்களால்
மேயப்படாதது என் கூட விற்பனை செய்கிறார்கள்.
அந்த வகையில் நம் நீல சடைச் செடார் மரமும் மான்களால்
மேயப்படாத மரம்.
இந்த மரங்கள் தேராக
நெட்டுக்குத்தாக வளர வேண்டும் என்றால் இளங்கன்றுகளாக
இருக்கும்போதே கொம்புகளைக் கொண்டு முட்டு (SUPPORT
STAKE) கொடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்த மரங்கள் தரையினில், பக்கவாட்டில்
தவழ்ந்து வளர ஆரம்பித்த விடும்.
ஆஸ்திரேலியாவில்
கர்ட்டன் பிக் ட்ரீ (CURTAIN
FIG TREE) என்று ஒரு மரம்
உள்ளது. மிகவும் பிரபலமான மரம். இது ஒரு அத்திமரம் அந்த ஒரு மரமே அந்த ஊரை
சுற்றுலாத்தலமாக மாற்றி உள்ளது. நம்ம
ஊரில் அதன் பெயர் கல் அத்தி மரம். சங்க
இலக்கியம் இதனை இச்சி மரம் என்கிறது.
அதுபோல கூட இந்த செடார் மரத்தை வளர்க்க முடியும்.
No comments:
Post a Comment