இன்று ஒரு
குறுஞ்செய்தி
NEWS
TODAY
அடுத்த
நான்கு ஆண்டில்
மக்கள்
தொகையில்
சீனாவை முந்தும் இந்தியா !
INDIA VS CHINA
முக்கனிகள் உற்பத்தியில் உலகிலேயே இந்தியா
முதலிடம் வகிக்கிறது. மா பலா வாழை ஆகிய முக்கனிகளை உற்பத்தி அதிகம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. இவை தவிர
கொய்யா பப்பாளி எலுமிச்சை அத்துடன் மிளகாய் மிளகு மற்றும் சணல் உற்பத்தியிலும் முதல் இடத்தில் உள்ளது.
அத்துடன் தானிய உற்பத்தியில் உலகில் குறிப்பாக
கோதுமை மற்றும் அரிசி உற்பத்தியில் நாம்
சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாம் நிலையில் உள்ளோம். பால் இறைச்சி மற்றும் இதர கால்நடைப் பொருட்கள் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் ஐந்து நாடுகளில்
இந்தியாவும் ஒன்று.
உணவு தானிய
உற்பத்தியைப் பொருத்தவரை அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தில் நாம் இப்போது இருக்கிறோம். 2008 ஆம் ஆண்டில் ஒரு ஆய்வு செய்தார்கள் இந்த ஆய்வு முடிவுப்படி உணவு
தானிய உற்பத்தி அளவை விட மக்கள் தொகைப் பெருக்கம் மிக
வேகமாக பெருகி வருகிறது என்று சொல்கிறார்கள் நிபுணர்கள்.
காரணம்
2024 ம் ஆண்டு வாக்கில் நமது மக்கள் தொகை சீனாவைவிட அதிகரிக்கும் என்கிறார்கள்.
மேலும் நாம் பிரேசில் மற்றும் சீனாவைப் போல உற்பத்தியின் அளவை தீவிரப்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள்.
ஆக
நாம் மக்கள்தொகையில் மட்டுமல்ல உற்பத்தியிலும் இந்தியா சீனாவை முந்தவேண்டிய அவசியம்
தற்போது ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment